என் மலர்
நீங்கள் தேடியது "CSK Vs MI"
- டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
- கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
16-வது ஐ.பி.எல்.20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 7 ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 6-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ள நிலையில், டிக்கெட் வாங்குவதற்காக நேற்று நள்ளிரவு முதல் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் குவிந்த வண்ணம் உள்ளனர்.
டிக்கெட்டுகளை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் ஆன்லைன் மூலம் காலை 9.30 மணி முதல் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது
- மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் CSK - MI அணிகள் மோதும் முதல் போட்டிக்கான சிறப்பு போஸ்டரை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
அதில், இப்போட்டி எல் கிளாசிகோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரு அணிகளும் வென்ற கோப்பைகள் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
- மார்ச் 22-ம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கவுள்ளது
- மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
மார்ச் 22-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.
இந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணியின் முதல் போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இப்போட்டியில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
இந்நிலையில் சென்னை, மும்பை அணிகள் மோதும் முதல் போட்டியில், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சீசனில் மும்பை அணி 3 போட்டிகளில் மெதுவாக பந்து வீசயதற்காக ஹர்திக் பாண்ட்யாவிற்கு 30 லட்சம் அபராதமும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.