என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Covai Selvaraj"

    • திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு
    • அதிமுக கம்பெனியாக மாறி விட்டதாக பேட்டி

    அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ், ஒபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அவர் அறிவித்தார். திராவிட பாரம்பரியமுள்ள கட்சியிலேயே சேருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த கோவை செல்வராஜ்,  திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், இலவச பேருந்து பயண சலுகை, கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி உள்ளிட்ட திட்டங்கள் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மின்சார தட்டுப்பாடு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக தற்போது கம்பெனி போல் மாறி விட்டதாகவும், திமுக அரசை விமர்சிக்க அதிமுகவினருக்கு தகுதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    • ஆரோக்கியராஜா ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பன்னிமடை அருகே உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ராஜா (வயது 45). ஐ.டி. ஊழியர். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஆரோக்கிய ராஜா குன்னூரில் உள்ள தனது அக்கா மகள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். செல்லும் வழியில் அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமா ஜார்ஜ் பாலன் என்பவரது வீட்டிற்கு சென்றார்.

    அவர் வளர்த்து வரும் ஆடுகள் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. எனவே ஆடுகளை தேடி ஜார்ஜ் பாலன் வெளியே சென்றார். அவருடன் ஆரோக்கிய ராஜாவும் சென்றார். கல்லாறு ரெயில்வே பாலத்தில் ஆடுகளை தேடி கொண்டு இருந்த போது 30 அடி பள்ளத்தில் ஆரோக்கிய ராஜா தவறி விழுந்தார்.

    இதில் அவரது விலா எலும்பு உடைந்தது. உயிருக்கு போராடிய ஆரோக்கிய ராஜாவை அவரது மாமா மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஆரோக்கிய ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெற்றோர் வேறு கல்லூரியில் சேர்க்காததால் வேதனை
    • வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை,

    கோவை பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள டி.காளிபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.

    இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு அந்த கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை.

    எனவே அவர் தனது பெற்றோரிடம் வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். ஐ.டி. சேர்க்குமாறு கடந்த 2 மாதங்களாக கூறி வந்தார்.

    பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வந்ததால் மாணவி சேர நினைக்கும் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருந்ததால் அதே கல்லூரியிலேயே படிக்குமாறு மாணவியிடம் கூறி வந்தனர்.

    இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவே தனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×