கோவையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி

பெற்றோர் வேறு கல்லூரியில் சேர்க்காததால் வேதனை வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி
Published on

கோவை,

கோவை பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் அருகே உள்ள டி.காளிபாளையத்தை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.

இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு அந்த கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை.

எனவே அவர் தனது பெற்றோரிடம் வேறு ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். ஐ.டி. சேர்க்குமாறு கடந்த 2 மாதங்களாக கூறி வந்தார்.

பெற்றோர் இருவரும் கூலி வேலை செய்து வந்ததால் மாணவி சேர நினைக்கும் கல்லூரியில் அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருந்ததால் அதே கல்லூரியிலேயே படிக்குமாறு மாணவியிடம் கூறி வந்தனர்.

இதன் காரணமாக மாணவி மிகுந்த மனவே தனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறுது நேரத்தில் மயங்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com