search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Co-Optex"

    • கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கம் கைத்தறி ரகங்க ளின் விற்பனையை அதிக ரிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுப டியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் ராமநாத புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்தி ரன் இன்று காலை குத்து விளக்கேற்றி முதல் விற்ப னையை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.21.59 லட்சம் ஆகும். இந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விழா வில் வர்த்தக மேலாளர் கே.சங்கர், மேலாளர் ஆர்.மோகன்குமார், விற்பனையாளர் ஆர்.பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக ஆர்கானிக் புடவை ரகங்கள், காஞ்சீபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்பு வனம் பட்டு, கோவை மென்பட்டு, கண்டாங்கி சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், திண்டுக்கல், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், சுடிதார் ரகங் கள், நைட்டிகள், குர்த்தீஸ்கள் கண்ணை கவரும் வண்ணங் களில் வாடிக்கையாளர்க ளுக்கான கொண்டு வரப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி பண்டிகையின்போது சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது.
    • கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 87 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து வருகிறது.

    மேலும் தனது வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகின்றது

    இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடி வமைப்புடன் கூடிய கோவை மென் பட்டு புடவைகள், காஞ்சிபுரம்,ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள்,பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக வந்துள்ளன.

    தென்காசி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த தீபாவளி 2021-ம் ஆண்டு பண்டிகை காலத்தில் தென்காசி விற்பனை நிலையத்தில் ரூ. 40.65 லட்சம் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் "கனவு நனவு திட்டம்" என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

    இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20 சதவிகித அரசு தள்ளுபடி யுடன் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நெல்லை மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் ரகம் மற்றும் பகிர்மானம் பொறுப்பு அன்பரசு, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பூமா, தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, அரசு அலுவலர்கள் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை சிவகங்ககை லெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அவர் குத்துவிளக்கேற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

    கோ-ஆப் டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து 87 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.

    இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்க ளிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.

    உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

    அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகளை வாங்கும்போது உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதேபோல் பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும்போது நெசவாளர்களின் பொருளாதார வளர்ச்சி அதிக நிலையை எட்டும்.

    தற்போது தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்படும் ஆடைகளில் அந்த பணியாளர்கள் பெயர் மற்றும் முன்அனுபவம் குறித்த பதிவுகளும் வெளிவருகின்றன. இதன்மூலம் ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம். ஒவ்வொருவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி தனது பங்களிப்பு நெசவாளர் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் (ரகம் மற்றும் பகிர்மானம்), மேலாளர் முல்லைக்கொடி (பொறுப்பு) மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×