search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை
    X

    கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனை

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை சிவகங்ககை லெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அவர் குத்துவிளக்கேற்றி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-

    கோ-ஆப் டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து 87 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது.

    இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்க ளிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும்தான் முக்கிய காரணம் ஆகும்.

    உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளது. காஞ்சிபுரம் பட்டு சேலைகள், சேலம் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள் மற்றும் கோயம்புத்தூர் மென்பட்டு சேலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது.

    அரசுத்துறையின் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் கட்டாயம் கைத்தறி ஆடைகளை வாங்கும்போது உற்பத்தித்திறன் அதிகரிக்கும். அதேபோல் பொதுமக்களும் கைத்தறி ஆடைகளை பயன்படுத்தும்போது நெசவாளர்களின் பொருளாதார வளர்ச்சி அதிக நிலையை எட்டும்.

    தற்போது தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்படும் ஆடைகளில் அந்த பணியாளர்கள் பெயர் மற்றும் முன்அனுபவம் குறித்த பதிவுகளும் வெளிவருகின்றன. இதன்மூலம் ஆடை தயாரிப்பவருக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன் பொருட்களின் தரம் குறித்தும் மக்கள் எளிதாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம். ஒவ்வொருவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி தனது பங்களிப்பு நெசவாளர் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியன் (ரகம் மற்றும் பகிர்மானம்), மேலாளர் முல்லைக்கொடி (பொறுப்பு) மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×