search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleansing"

    • சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
    • ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    சரும பராமரிப்பில் பலரும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் ஃபேஷியல் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஃபேஷியல் செய்யும்போது சருமத்தின் இறந்த செல்கள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைக்கும். சருமத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து ஃபேஷியல் செய்துகொள்வது நல்லது. வீட்டிலேயே ஃபேஷியல் செய்துகொள்வதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

     க்ளென்சிங்

    ஃபேஷியலின் முதல் படி, க்ளென்சிங். ஒரு பவுலில் காய்ச்சாத சுத்தமான பாலை எடுத்துக்கொண்டு, அதில் பஞ்சை நனைத்து, முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்வது போன்று செய்யவும். இப்படி இரண்டு, மூன்று முறை முகம் முழுக்க மசாஜ் செய்தபடி அழுக்கை துடைத்து எடுக்கவும். தினமும் கூட பால் கொண்டு இப்படி க்ளென்ஸ் செய்யலாம். பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கும்.

     ஸ்கிரப்

    க்ளென்சிங் செய்து நான்கு நிமிடங்களுக்குப் பிறகு காட்டன் துணியைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுக்கவும். பின் ஸ்கிரப் செய்யவேண்டும். அதற்கு, பொடித்த சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றை எடுத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் பொடித்த சர்க்கரையுடன் 2, 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் அப்ளை செய்த பின், மென்மையாக தேய்த்து மசாஜ் செய்வது போல ஸ்கிரப் செய்யவும். கவனிக்க... சர்க்கரை சருமத்தை பதம் பார்த்துவிடாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். கண்ணின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டாம். கழுத்துக்கும் சேர்த்து ஸ்கிரப் செய்யலாம். ஸ்கிரப் செய்த பின்னர், மேலிருந்து கீழ்நோக்கித் துடைக்கவும்.

     மசாஜ்

    கடைகளில் ஃபேஷியல் க்ரீம் வாங்கிக்கொள்ளவும். அல்லது, இயற்கையான பொருளைக் கொண்டு செய்வதென்றால் நன்றாகப் பழுத்த பப்பாளியை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். க்ரீம்/பப்பாளியை முகம் முழுவதும், கண்ணுக்கு அடியில், கழுத்தில் என வட்டவடியில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்யவும். பின் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்யவும்.

    தாடைப் பகுதியில் 10 முதல் 20 முறை வரை மேல்நோக்கி மசாஜ் செய்யவும். கன்னம் பகுதியில் காதுவரை மசாஜ் செய்யவும். பின் மூக்கில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் செய்யவும். கண் பகுதிக்கு வட்ட வடிவில் நடுவிரல் கொண்டு மசாஜ் செய்யவும். பின், கண்களின் பக்கவாட்டுப் பகுதியான பொட்டுப் பகுதியில் விரல்களை வைத்து எடுக்கவும்.

     ஃபேஸ் பேக்

    மசாஜ் செய்த பின் முகத்தில் ஊடுருவக்கூடிய காட்டன் துணியான காஸ் (gauze) போடவும். அதன் மேல் பேக் போட வேண்டும். பேக் ரெடி செய்ய, நல்ல பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதனை மை போல அரைத்து எடுத்துக்கொண்டு, அதனுடன் தூய்மையான தேன் ஒரு டீஸ்பூன், ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதனை, முகத்தில் போடப்பட்டிருக்கும் காஸ் மீது அப்ளை செய்து கொள்ளவும்.

    முகம் முழுவதும் அப்ளை செய்த பின் அதன் மீது சில்வர் ஃபாயில் கொண்டு மூடிவிடவும், 10 நிமிடங்களுக்கு இந்த சில்வர் ஃபாயிலை எடுத்துவிட்டு, உள்ளிருக்கும் காஸ் துணியை நீக்கவும். முகத்தை துடைத்துக் கொள்ளவும். பின் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். முகம் அவ்வளவு மென்மையாக, பளிச்சென்று ஆனதை உணர்வீர்கள்.

    • பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான்.
    • வறண்ட சருமத்திற்கு ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது.

    சருமத்தில் 4 வகைகள் உள்ளன. சாதாரண சருமம், ஆயில் சருமம், வறண்ட சருமம், சென்சிட்டிவ் சருமம். ஒரு பழமொழி உண்டு `ஆல் த நேச்சுரல் புராடெக்ட்ஸ் ஆர் நாட் ஆல்வேஸ் குட்' உங்கள் சருமத்திற்கு பொருந்துகிற

    இயற்கை பொருள் என்னுடைய சருமத்திற்கு விஷமாக இருக்கலாம். இயற்கையான புராடெக்ட்களிலேயே இந்த நிலை இருக்கும்பட்சத்தில் காஸ்மெட்டிக், கெமிக்கல் எனில் இன்னும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்.

    பொதுவாகவே கிளென்சிங்கை பொருத்தவரை ஒரே புராடெக்ட்தான். இதனை எல்லா சருமத்திற்கும் பெரும்பாலான பார்லர்களிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு கிளென்சிங் முறை உள்ளது.

    உதாரணத்திற்கு ஃபேஸ் வாஷ்களே ஜெல் முறை எனில் வறண்ட சருமத்திற்கு, வேம்பு, ஆரஞ்ச் அடிப்படையாக கொண்ட ஃபேஸ் வாஷ் எனில் ஆயில் சருமத்திற்கு வேறு என பிரிப்பது போல் கிளென்சிங்கிலும் சருமத்திற்கு ஏற்ப மாறுபடும்.

    ஆனால் அந்த அளவிற்கு இங்கே மெனெக்கெடுகிறார்களா? என கவனிக்கவும். மேலும் அதீத வறண்ட சருமம் கொண்ட சருமத்திற்கு பொதுவாக ஆவிப்பிடிக்கும் முறை கொடுக்கக் கூடாது. காரணம் ஏற்கனவே வறண்ட சருமத்தின் துளைகள் திறந்து தான் இருக்கும் எனும்போது அதனை சரும இறுக்கத்திற்கான ஃபேஷியல்கள் தான் கொடுக்க வேண்டும். இதனால் முகம் இளமை பெற்று, சுருக்கங்கள் மறையும்.

    அதேபோல் ஆயில் சருமம் எனில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் ஃபேஷியல்களை கொடுக்க வேண்டும். இதனால் பருக்கள், வடுக்கள் மறையும்.

    இந்த கோல்டு, டைமண்ட் ஃபேஷியல்கள் எல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தங்கம் விற்கும் விலைக்கு எப்படி சரும காஸ்மெட்டிக்குகளில் பயன்படுத்த முடியும். எனவே இப்படியான மாய விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

    ஃபேஷியலின் சிறப்பே கொடுக்கப்படும் மசாஜ் மற்றும் க்ளீனிங் முறையில் தான் சிறப்பே உள்ளது. உங்கள் பிரச்சினை என்னவோ, சருமம் எப்படிப்பட்டதோ அதை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ஃபேஷியல் தேர்வு இருக்க வேண்டும். எந்த கிரீம்களும் சருமத்தின் இயற்கையான மெலனினை கட்டுப்படுத்தி உங்களை வெள்ளையாக்காது, எனவே சிவப்பு நிறத்திற்கு மயங்க வேண்டாம். ஆரோக்கியமான சருமம் தான் முக்கியம். அதற்கான ஃபேஷியல் எதுவோ அதை தேர்வு செய்யுங்கள்.

    • டபுள் க்ளென்ஸிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது.
    • பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம்.

    தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது. பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற யாருக்கு தான் விருப்பம் இருக்காது.!! பாலின வேறுபாடின்றி தற்போது அனைவருமே தங்கள் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

    கொரியன் பியூட்டி அல்லது கே-பியூட்டி எனப்படும் ட்ரெண்டானது பலரது சரும பராமரிப்பு வழக்கத்தை மாற்றி இருக்கிறது. டிரெண்டாக இருக்கும் கொரியன் பியூட்டி சரும பராமரிப்பு டிப்ஸ்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் பயனுள்ள அணுகுமுறையை வழங்குவதால் பிரபலமாக இருக்கின்றன.

    டபுள் க்ளென்ஸ்: டபுள் க்ளென்சிங் என்பது கொரியன் பியூட்டி நடைமுறையில் முக்கிய நடைமுறையாக இருக்கிறது. உங்கள் சருமத்தில் உள்ள அழுக்கு, மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீன் அனைத்தையும் அகற்ற இரண்டு வெவ்வேறு க்ளென்சர்களை பயன்படுத்துவதே டபுள் க்ளென்சிங் ஆகும். இந்த டிப்சை பின்பற்றும் போது சருமத்தில் இருக்கும் மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீனை நீக்க எண்ணெய் சார்ந்த க்ளென்சரை முதலில் பயன்படுத்த வேண்டும். சருமத்தில் இருக்கும் மீதமுள்ளவற்றை அகற்ற இரண்டாவதாக நீர் சார்ந்த க்ளென்சரை பயன்படுத்த வேண்டும்.

    எக்ஸ்ஃபோலியேட்: எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீங்கி நமக்குபளபளப்பான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கிறது. இருப்பினும், அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்வது சருமத்தை சேதப்படுத்த கூடும் ஜென்ட்டிலாக எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும், அதே சமயம் அடிக்கடி செய்ய கூடாது. வாரத்திற்கு அதிகபட்சம் 2-3 முறை எக்ஸ்ஃபோலியேட் செய்வது நல்ல பழக்கமாக இருக்கும்.

    தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்: வெயில் காலமோ, மழை காலமோ அல்லது பனி காலமோ கிளைமேட்டை பொருட்படுத்தாமல் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க, தினசரி சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். 30 அல்லது அதற்கு மேற்பட்ட எஸ்.பி.எப். கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

    போதுமான தூக்கம்: பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு தினசரி போதுமான இரவு தூக்கம் அவசியம். போதுமான அளவு தூங்காத போது, உங்கள் உடல் அதிக கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. கார்டிசோல்என்பது நம் சருமத்தில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகியவற்றை உடைக்க கூடிய மன அழுத்த ஹார்மோன் ஆகும். எனவே தினசரி இரவு முதல் காலை வரை 7-8 மணிநேரம் நிம்மதியாக தூங்குவதை இலக்காக கொள்ளுங்கள்.

    ×