search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai student"

    போலீஸ் இன்ஸ்பெக்டர் 4 மணி நேரம் நிற்கவைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TNPolice
    சென்னை:

    சென்னை சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஜெயகரன் வாசுதேவன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 17 வயதில் சிறுமி உள்ளார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு தாயின் 2-வது கணவரான ஜெயகரன் வாசுதேவன் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே ஜெயகரன் வாசுதேவன், ‘ஆன்லைன்’ மூலம் போலீசாருக்கு தனது மனைவி மோசடி செய்ததாக புகார் அளித்தார். இது தொடர்பாக அப்போது புழல் போலீசில் இன்ஸ்பெக்டராக இருந்த நடராஜன் விசாரணை நடத்தினார். அவர், விசாரணைக்காக போலீஸ் நிலையம் வந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரது தாயும் தங்களுக்கு தொல்லை தரும் 2-வது கணவர் ஜெயகரன் வாசுதேவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்ககோரி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நேற்று வழக்கு தெடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் வருகிற 10-ந்தேதி விசரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    கோர்ட்டில் சிறுமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விசாரணைக்காக சென்றபோது நீ அழகாக இருக்கிறாய் என்று இன்ஸ்பெக்டர் நடராஜன் என்னை அழைத்தார். நான் பயந்து தூரமாக நின்றேன். அப்போது என் கையை பிடித்து இழுத்தார். நான் சத்தம் போடுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் இது போலீஸ் ஸ்டேசன் யாரும் இங்கு வரமாட்டார்கள் என்றார். அப்போது ஜெயகரனும் பக்கத்தில் இருந்தார்.

    நான் அவமானத்தால் கண் கலங்கி உருகிப்போய் விட்டேன். அந்த இடத்திலேயே இறந்துவிடலாம் என்று தோன்றியது. நீயும் உன் அம்மாவைப் போல் இரண்டு, மூன்று திருமணம் செய்துகொள்ள ஆசையா? அதற்கு நான் ‘ஓகே’ வா என்று கூறி என்னை நான்கு மணி நேரம் நிற்க வைத்து உற்று பார்த்தார்.

    நான் கூறியதை போல் செய்தால் உன்னை மட்டும் விட்டுவிடுகின்றேன் என இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகளால் பேசினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 26.11.18 அன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மனுவில் சிறுமி கூறியிருப்பதாவது:-

    எனது தாய்க்கும் ஜெயகரன் என்பவருக்கும் கடந்த 5.10.2017 அன்று வடபழனி கோயிலில் 2-வது திருமணம் நடைபெற்றது. என் அம்மா மீது அன்பாக இருப்பதை போல் நடித்து எனக்கு அவர் பாலியல் ரீதியாக நிறைய துன்புறுத்தல்களை செய்து வந்தார். எனது சிறிய ஆடைகளை ஆன்லைனில் வாங்கிக் கொடுத்தார். என்னை தீய எண்ணத்துடன் பார்த்து வந்தார்.

    செல்போனில் ஆபாச படங்களையும் காட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் எனது தாயை அடிக்கவும், துன்புறுத்தவும் ஆரம்பித்தார்.

    கடந்த செப்டம்பர் மாதம் எங்கள் மீது ஜெயகரன் வாசுதேவன் ஆன்லைனில் புகார் செய்திருப்பதாகவும் அதனால் எங்களை விசாரணைக்கு வரவேண்டும் என்று என்னையும், எனது தாயையும் இன்ஸ்பெக்டர் நடராஜன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தார்.

    அப்போது அவர் இரட்டை அர்த்தங்களினால் என்னிடம் ஆபாச வார்த்தைகள் பேசினார். நான் அழுத போதும் என்னை விடவில்லை. என்னையும் தாயையும் மாலை 6.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் சட்டத்துக்கு முரணாக வைத்தார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வழக்கு தொடர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான இன்ஸ்பெக்டர் நடராஜன் தற்போது வேறு ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    கோர்ட்டில் வழக்கு உள்ளதால் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. #TNPolice
    டெல்லியில் நடந்து வரும் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். #Chess #Gukesh #Grandmaster
    சென்னை:

    சர்வதேச ஓபன் செஸ் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள சென்னை மாணவர் டி.குகேஷ் நேற்று முன்தினம் தனது 9-வது சுற்று ஆட்டத்தின் மூலம் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 12 வயது 7 மாதம் 17 நாட்களில் குகேஷ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை தனதாக்கி இருக்கிறார். இதன் மூலம் குறைந்த வயதில் கிராண்ட்ஸ்மாஸ்டர் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    இதற்கு முன்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவரான பிரக்ஞானந்தா 12 வயது 10 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று இருந்ததே சாதனையாக இருந்தது. அதனை குகேஷ் தகர்த்து புதிய சாதனை படைத்தார்.

    கடந்த 2002-ம் ஆண்டில் உக்ரைன் வீரர் செர்ஜி கர்ஜாகின் 12 வயது 7 மாதத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதே உலக அளவில் சாதனையாக உள்ளது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்ற 2-வது வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். குகேசின் தந்தை ரஜினிகாந்த், தாயார் பத்மா ஆகியோர் டாக்டர்கள் ஆவர்.

    இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்து இருக்கும் குகேஷ் அளித்த பேட்டியில், ‘கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அளவில் இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை எட்டிய செர்ஜி கர்ஜாகின் சாதனையை தகர்க்க முடியாமல் போனது லேசான ஏமாற்றம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார். #Chess #Gukesh #Grandmaster

    கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரி தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.
    கோவை:

    கோவை தடாகம் ரோட்டில் அரசு தொழில் நுட்ப கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கைக்கான மாநில அளவிலான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    இந்த தர வரிசை பட்டியலை அரசு தொழில் நுட்ப கல்லூரி முதல்வரும், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாணவர் சேர்க்கை செயலாளருமான கே. தாமரை வெளியிட்டார்.

    இதனை ஒருங்கிணைப்பாளர் புருசோத்தமன் பெற்று கொண்டார்.

    இதில் எம்.சி.ஏ. பிரிவில் சென்னை மாணவி நித்யா 70.333 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். சென்னை மாணவர் ஹரீஷ் 67. 667 மதிப்பெண்ணுடன் 2-ம் இடமும், ராகுல் பாபு 61.667 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பிடித்தனர்.

    எம்.பி.ஏ. பிரிவில் சென்னை மாணவி கார்த்திகா 80.667 மதிப்பெண்ணுடன் முதலிடமும், பாளையங்கோட்டை மாணவி ரேஷ்மி 80.000 மதிப்பெண்ணுடன் 2-வது இடமும், ஈரோடு மாணவி கார்த்திகா 78.333 மதிப்பெண்ணுடன் 3-வது இடமும் பிடித்தனர்.

    எம்.சி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 25-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 1,552 மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.

    எம்.பி.ஏ. படிப்பிற்கான கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 6,255 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    டான்செட் தேர்வு எழுதி விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு கடைசி நாளில் கலந்தாய்வு நடக்கிறது.
    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டைவிட்டு வெளியேறி மாயமான மாணவி கோட்டீஸ்வரியை போலீசார் பீகார் ஓட்டலில் இருந்து மீட்டனர்.
    அம்பத்தூர்:

    சென்னை நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (வயது 19). இவர் ஏற்கனவே ஒரு முறை நீட் தேர்வு எழுதியதில் மதிப்பெண் அடிப்படையில் பல் மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான இடம் கிடைத்தது.

    அதை ஏற்காத அவர் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது மீண்டும் நீட் தேர்வு எழுதினார். ஆனால் கடந்த முறையை விட இப்போது குறைவான மதிப்பெண்களே கிடைத்தது.

    இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி திடீரென்று மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர் தலைமை செயலக காலனி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தார். கோட்டீஸ்வரி மாயமான போது தனது பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தார். அதில் ‘நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன். என்னை யாரும் தேட வேண்டாம்’ என்று கூறி இருந்தார்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்ட்ரலில் இருந்து ரெயிலில் ஏறி எங்காவது சென்றிருக்கலாம் என்று தெரிய வந்தது. அதன்படி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மாணவி கோட்டீஸ்வரி பீகாரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பீகாருக்கு சென்றனர். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த கோட்டீஸ்வரியை மீட்டனர்.

    ரஷியாவில் நடந்து வரும் உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    சென்னை:

    உலக அளவிலான ‘கிக் பாக்சிங்’ விளையாட்டு போட்டி ரஷியாவில் அனப்பா நகரில் நடந்து வருகிறது. இதில் 55 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 80 கிலோவுக்கு கீழ் உள்ள எடைப் பிரிவில் சென்னை மாணவர் ஏ.பி.வசீகரன் பங்கேற்றார். இவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

    இதேபோல் 75 கிலோ எடை பிரிவில் அருண் தனுஷ்க் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். தங்கப்பதக்கம் வென்ற வசீகரன் சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.

    நாளை சென்னை திரும்பும் வீரர்களுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    ×