என் மலர்

  நீங்கள் தேடியது "Chennai Harbour"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களின் தரவுகள் மூலம் தமிழகத்துக்கான வானிலை கணிக்கப்படுகிறது.
  • இதில் சென்னை துறை முகத்தில் உள்ள ரேடார் பிரதான ரேடாராக உள்ளது. இது ‘எஸ்’ பேண்ட் வகையைச் சேர்ந்ததாகும்.

  சென்னை:

  தமிழகத்தில் மழை பற்றிய தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

  இந்த மழை பற்றிய தகவல்களை கணிக்க பயன்படுவதில் ரேடார் முக்கிய பங்கு வகிக்கிறது.

  மழை மேகங்களின் தன்மை, மேகங்களின் நகரும் திசை, மேகங்கள் கொடுக்க வாய்ப்புள்ள மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது.

  இந்த ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின்காந்த அலைகள் மூலமாக கிடைக்கும் தரவுகள் மூலம் குறுகிய கால வானிலை முன்னறிவிப்பு, தற்போதைய மழை நிலவரம் போன்றவற்றை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது.

  இதன் மூலம் மாநகராட்சி, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அரசு துறைகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் இந்த வானிலை எச்சரிக்கை அறிவிப்பை கேட்டு அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிட்டு வருகிறார்கள்.

  வானிலை தொடர்பான ரேடார் படங்கள் வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. http://mausam.imd.gov.in என்ற இணைய தளத்தில் இதை பொதுமக்கள் பார்த்து வருகிறார்கள்.

  தற்போது சமூக வலைதளங்கள் அதிகரித்துள்ளதால் ரேடார் படங்களை பயன்படுத்தி தனியார் வானிலை ஆர்வலர்கள் வானிலையை கணித்து பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்றவற்றில் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

  இதன் மூலம் பொதுமக்கள் மத்தியிலும் வானிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய இணைய தளத்தில் ரேடார் படங்களை பொதுமக்களே நேரடியாக பார்த்து தற்போதைய வானிலையை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.

  சென்னை துறைமுகம், பள்ளிக்கரணை, ஸ்ரீஹரிகோட்டா, காரைக்கால் ஆகிய 4 இடங்களில் உள்ள ரேடார்களின் தரவுகள் மூலம் தமிழகத்துக்கான வானிலை கணிக்கப்படுகிறது.

  இதில் சென்னை துறை முகத்தில் உள்ள ரேடார் பிரதான ரேடாராக உள்ளது. இது 'எஸ்' பேண்ட் வகையைச் சேர்ந்ததாகும். இந்த ரேடார் சுமார் 400 கிலோ மீட்டர் சுற்றளவு வரை மழை மேகங்களை கண்காணிக்கும் திறன் உடையது. இந்த ரேடார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

  இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் பழுதடைந்தது. இந்த ரேடாருக்கான உதிரி பாகங்கள் கிடைக்காததால் பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுமார் 4 ஆண்டுகளாக இந்த ரேடார் செயல்படாமல் இருந்தது.

  இதை பழுது பார்ப்பதா? அல்லது புதிதாக வாங்குவதா? என்று டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய தலைமையகம் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரேடாரை பழுது பார்ப்பதும் தள்ளிப் போடப்பட்டது.

  எனவே தற்போதைய மழை நிலவரங்களை வானிலை ஆய்வு மையமும், பொதுமக்களும் அறிவதில் சிக்கல் ஏற்பட்டது. பல நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கு பலத்த மழை பெய்தது.

  இந்த நிலையில் சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள ரேடாரை பழுது பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த ரேடார் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

  ×