search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "caveat"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. #Sterlite #TNgovt #SC
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில்  உத்தரவிட்டது. அந்த ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ள தமிழக அரசு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தூத்துக்குடிக்கு உட்பட்ட பல பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கூடாது என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேரணியாக சென்றனர்.



    இந்நிலையில், ஸ்டெர்லைட்  ஆலையை  நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின்  சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு தொடரவுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்களது கருத்தை அறியாமல் சுப்ரீம் கோர்ட் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  #Sterlite #TNgovt #SC
    18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படலாம் என்பதால் அதிமுக கொறடா இன்று உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். #MLAsDisqualificationCase #SupremeCourt #CaveatPetition
    புதுடெல்லி:

    தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 18 பேரின் தகுதிநீக்கத்தை உறுதி செய்தது.



    இதனால் 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். மேல்முறையீடு குறித்து 18 பேரிடமும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,  தகுதிநீக்கம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 பேர் மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கேவியட் மனுவில் கூறியுள்ளார். #MLAsDisqualificationCase #SupremeCourt #CaveatPetition
    ×