search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NGT order"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஆலை நிர்வாகம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. #Sterlite #TNgovt #SC
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் சமீபத்தில்  உத்தரவிட்டது. அந்த ஆலைக்கு தேவையான மின்சாரத்தை வழங்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய தீர்மானித்துள்ள தமிழக அரசு இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கூடாது என தூத்துக்குடிக்கு உட்பட்ட பல பகுதிகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம் வழங்க கூடாது என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேரணியாக சென்றனர்.



    இந்நிலையில், ஸ்டெர்லைட்  ஆலையை  நிர்வகிக்கும் வேதாந்தா குழுமத்தின்  சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு தொடரவுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்களது கருத்தை அறியாமல் சுப்ரீம் கோர்ட் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அந்த கேவியட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  #Sterlite #TNgovt #SC
    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #Sterlite #NGTPanel
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்தது. தமிழக அரசு கூறுவதுபோல் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

    இந்த குழு ஆலையை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தது. வாய்மொழியாகவும், எழுத்துப் பூர்வமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் வரும் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்’’ என சிறப்புக் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.



    இந்த மனு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவிற்கு நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  நவம்பர் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #NGTPanel
    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. #Sterlite #SterliteCase #NGT
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது.  இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், இது போன்ற விசாரணை ஆணையம் அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Sterlite #SterliteCase #NGT
    ×