என் மலர்
நீங்கள் தேடியது "break house lock"
கோவை:
கோவை உடையாம்பாளையம் அருகே உள்ள ராம் கார்டனை சேர்ந்தவர் மருதாச்சலம். இவரது மனைவி சரண்யா (வயது 33). இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.
இரவு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த சரண்யா வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அறையில் இருந்த பீரோவை திறந்தது கிடந்தது. பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல் உள்பட 12 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சரண்யா பீளமேடு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.






