search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஈத்தாமொழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
    X

    ஈத்தாமொழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

    ஈத்தாமொழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ. 10 பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ராஜாக்கமங்கலம்:

    ஈத்தாமொழியை அடுத்த தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ஜெயசெல்வி (வயது 35).

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று இருந்தனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் இருந்தவர்கள் வேலைக்கு செல்வதை நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால் உள்ளூர் கொள்ளையர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கொள்ளையன் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடத்தில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×