search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy kills"

    சோளிங்கர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில் 16 வயது சிறுவன் பலியானார்.
    வாலாஜா:

    சோளிங்கர் அருகே உள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது.

    வாலாஜாவை சேர்ந்த சரவணன் (வயது 21), சதீஷ் (16) ஆகியோர் இன்று காலை அங்கு பணியில் இருந்தனர். அவர்கள் பட்டாசு பெட்டிகளை வேனில் இருந்து இறக்கி குடோனுக்குள் வைத்தனர்.

    அப்போது பட்டாசுகள் உரசி திடீரென வெடித்தன. குடோன் முழுவதும், தீப்பொறி ஏற்பட்டு அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறின. இதில் சரவணன், சதீஷ் இருவரும் மாட்டிக் கொண்டனர். அவர்களது உடலில் தீ பற்றியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து தீயை அனைத்தனர். இந்த விபத்தில் உடல் கருகிய சதீஷ் சம்பவ இடத்தில் இறந்தார்.

    சரவணணை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    புளியம்பட்டி அருகே டிராக்டர் மூலம் விவசாயி ஒருவர் எரு அள்ளிய போது விளையாடி கொண்டிருந்த 2 வயது மகன் டிராக்டரில் சிக்கி பரிதாபமாக இறந்தான்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள மேலபூவாணியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். விவசாயி. இவரது 2 வயது மகன் சந்திரசேகர். நேற்று சண்முகசுந்தரம் டிராக்டர் மூலமாக விவசாயத்திற்கு எரு அள்ளும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது குழந்தை சந்திரசேகர் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். சண்முகசுந்தரம் டிராக்டரை பின்னோக்கி எடுத்த போது எதிர்பாராத விதமாக குழந்தை சந்திரசேகர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கினான். இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இதுபற்றி புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சமபவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் செரீப். கூலி தொழிலாளி. இவருடைய மகன் ரியாஸ் (10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.

    நேற்று இரவு செரீப் வீட்டில் மின்சாரம் இல்லை. எனவே அருகில் உள்ள வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து இருந்தனர்.

    இன்று காலை சிறுவன் ரியாஸ் வீட்டில் இருந்த தனது சைக்கிளை எடுத்தாள். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து வந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக கைப்பட்டதால் மின்சாரம் தாக்கியது.

    சிறுவன் ரியாஸ் அலறியபடியே கீழே விழுந்தான். சத்தம் கேட்டு அவனை காப்பாற்ற முயன்ற ரியாசின் தாயாருக்கும் காயம் ஏற்பட்டது.

    மின்சாரம் தாக்கிய சிறுவன் ரியாசை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ரியாஸ் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மணல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). இவரது மனைவி ராமலட்சுமி (27).

    கணவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ராமலட்சுமி வேலைக்கு சென்று வந்தார். அப்போது தனது 2 மகன்களையும் தாய் வீட்டில் விட்டுச் செல்வார்.

    நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராமலட்சுமி மகன் ஆறுமுகம் (9) இல்லாததை கண்டு அவனை தேடினார். ஆனால் தகவல் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஊருக்கு ஓதுக்குப்புறமாக உள்ள சண்முகம் என்பவரது பம்புசெட் கிணற்றில் சிறுவன் ஆறுமுகம் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் குளிக்கச்சென்றபோது தவறி விழுந்து ஆறுமுகம் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×