search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் பலி
    X

    ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் பலி

    ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் மணல் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35). இவரது மனைவி ராமலட்சுமி (27).

    கணவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ராமலட்சுமி வேலைக்கு சென்று வந்தார். அப்போது தனது 2 மகன்களையும் தாய் வீட்டில் விட்டுச் செல்வார்.

    நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ராமலட்சுமி மகன் ஆறுமுகம் (9) இல்லாததை கண்டு அவனை தேடினார். ஆனால் தகவல் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஊருக்கு ஓதுக்குப்புறமாக உள்ள சண்முகம் என்பவரது பம்புசெட் கிணற்றில் சிறுவன் ஆறுமுகம் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் குளிக்கச்சென்றபோது தவறி விழுந்து ஆறுமுகம் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×