search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "between"

    • சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது.
    • கல்லூரி நிறுவனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் காம தேனு கலை அறிவியல் கல்லூரியில் புதிய கைப்பந்து ஆடுகளம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடை பெற்றது.

    பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினரும் கல்லூரியின் செயலருமான அருந்ததி தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக காமதேனு கல்வி குழுமத்தின் நிறுவனர் பெருமாள்சாமி கலந்து கொண்டு புதிய ஆடுகளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதனை தொடர்ந்து "காமதேனு டிராபி 2022" என்ற பெயரில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி கள் நடைபெற்றது.

    இதில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் கைப்பந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

    இறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தேர்வு பெற்றன. இதில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதல் இடத்தையும், கோவை ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அணி 2-ம் இடத்தையும், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை அறிவியல் கல்லூரி அணி 3-ம் இடத்தையும், கோவை குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4-ம் இடத்தையும் பெற்றது.

    வெற்றி பெற்ற அணி களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம், 3-ம் மற்றும் 4-ம் பரிசுகள் முறையே ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

    கல்லூரி நிறு வனத்தலைவர் பெருமாள்சாமி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி செயலர் அருந்ததி, இணைச் செயலர் மலர்செல்வி, கல்லூரி முதல்வர் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்தி பேசினர்.

    சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே சிறப்பு கட்டண ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 28-ந் தேதி (இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரெயில்(வ.எண்.06011) எழும்பூரில் இருந்து அடுத்த மாதம்(ஜூலை) 2-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

    மறுமார்க்கமாக, செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில்(06012), செங்கோட்டையில் இருந்து அடுத்த மாதம் 3-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு 28-ந் தேதி(இன்று) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை முன்னிட்டு, மின்சார ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    சென்னை:

    சென்னை கடற்கரை- வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதை முன்னிட்டு, மின்சார ரெயில் சேவையில் இன்று (ஞாயிற்றுக் கிழமை) சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக் கிழமை) மின்சார ரெயில் சேவையில் கீழ்க்கண்டவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு ஆவடி நோக்கியும், பிற்பகல் 1.05 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், பிற்பகல் 1.50 மணிக்கு பட்டாபிராம் நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    அதேபோல ஆவடியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து பகல் 12.35 மணிக்கு ஆவடி நோக்கியும், திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு மூர்மார்க்கெட் நோக்கியும், மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் நோக்கியும், திருவள்ளூரில் இருந்து காலை 11.05 மணிக்கு சென்னை கடற்கரை நோக்கியும் இயக்கப்படும் மின்சார ரெயில்களும் இன்று ரத்து செய்யப்படுகின்றன.

    திருவள்ளூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் பயணிகள் ரெயிலாக அங்கிருந்து பிற்பகல் 2.20 மணிக்கு பட்டாபிராம் நோக்கி புறப்படும்.

    கடம்பத்தூர்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும், ஆவடி- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும் வியாசர்பாடி ஜீவா- சென்னை கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, மூர்மார்க்கெட்டுக்கு மாற்று வழிப்பாதையில் செல்லும்.

    சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு திருத்தணி நோக்கியும், பிற்பகல் 2.30 மணிக்கு அரக்கோணம் நோக்கியும், பிற்பகல் 2.45 மணிக்கு சூலூர்பேட்டை நோக்கியும் புறப்பட வேண்டிய மின்சார ரெயில்கள் மூர்மார்க்கெட்டில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×