என் மலர்
நீங்கள் தேடியது "Ayya Vaikunder Padhi"
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
- சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா கடந்த 17-ந் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தலைமை பதி தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் திருக்கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம், அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழா நாட்களில் தினமும் சிறப்பு பணிவிடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 24-ந்தேதி அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடுதல் வைபவம் நடந்தது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,
25-ந்தேதி இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான 26-ந்தேதி இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனியை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கீழரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக தேர் சென்றது.
வடக்கு வாசல் முன்பு தேர் வந்ததும் பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, பழம் சுருள் வழங்கினர். தேரோட்ட விழாவில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் சாமித்தோப்பு பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து இழுக்கப்பட்ட தேர் மாலையில் திருநிலையை அடைந்தது.
இன்று இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து திருக்கொடி இறக்கியதும் அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பு போதிப்பும், சிறப்பு வேண்டுதலும் நடைபெறுகிறது.
விழாவில் அனைத்து சிறப்பு பணிவிடைகளையும் தலைமை குரு பால.பிரஜாபதி அடிகளார் தலைமையில் குருமார்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் செல்ல வடிவு, ஜனா. யுகேந்த், ஜனா. வைகுந்த், நேம்ரிஷ் செல்லா, அம்ரிஷ் செல்லா, கவுதம் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
- ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஸ்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் பவனி நடைபெற்றது.
- தேரோட்டத்தை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கடற்கரை யில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடித்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
வாகன பவனி
11 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் காலை யில் உகப்படிப்பு, பணிவிடை, பால் அன்னதர்மம், மதியம் உச்சி படிப்பு,பணிவிடை, அன்னதர்மம், மாலையில் உகப்படிப்பு பணிவிடை, அன்ன தர்மம் நடைபெற்றது.
விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஸ்பம், மயில், அன்னம், சர்ப்பம், கருடன், குதிரை, ஆஞ்சநேயர், இந்திரன் ஆகிய பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி நடைபெற்றது.
தேரோட்டம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது.தேரோட்டத்தை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.தொடர்ந்து தேரானது பதியைச்சுற்றி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டர்.
தேரோட்டத்தில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், அவதாரப்பதி சட்ட ஆலோசகர் சந்திர சேகர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தொழில் அதிபர் அன்பழகன், ராம கிருஷ்ணன், பாதயாத்திரை குழு தலைவர் ஆதிநாரா யனன்,பன்மொழி காளி யப்பன், சிதம்பரபுரம் ராஜ சேகர், நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகள்
விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி ஆகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் ராமையா நாடார் இணைத் தலைவர்கள் பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.






