என் மலர்

  நீங்கள் தேடியது "attempts suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காளிமுத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காவ லாளியாக வேலை பார்த்து வந்தார்.
  • காளிமுத்துவும், அவரது மனைவி பிரியாவும் வாயில் இருந்து நுரை தள்ளியபடி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

  கோவை,

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 57). இவரது மனைவி பிரியா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

  காளிமுத்து கோவில்பா ளையம் அருகே உள்ள பண்ணாரியம்மன் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது குடும்பத்தினரும் இங்கேயே வசித்து வந்தனர்.

  சம்பவத்தன்று வீட்டில் இருந்த காளிமுத்துவும், அவரது மனைவி பிரியாவும் வாயில் இருந்து நுரை தள்ளியபடி அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

  இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காவலாளி காளிமுத்துவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரை கடந்த 23-ந் தேதி முதல் வேலையை விட்டு நிறுத்தி உள்ளனர். மேலும் அவர் குடும்பத்துடன் குடியிருந்து வரும் வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த காளிமுத்து மனைவியுடன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. விஷத்தை குழம்பில் கலந்து 2 பேரும் சாப்பிட்டுள்ளனர். இதில் தான் அவர்கள் மயங்கி விழுந்தது தெரியவந்தது.

  இது குறித்து கோவில்பா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
  • உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டார்

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவரது மனைவி லட்சுமி (வயது 52). இவருக்கு வேப்பந்தட்டை- ஆத்தூர் சாலையில் விவசாய நிலம் உள்ளது. அங்கு இவருக்கும் மற்றொருவருக்கும் பாதை தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக வருவாய் துறையினர் அளப்பதற்கு சென்று உள்ளனர்.அப்போது லட்சுமி வழக்கு நிலுவையில் உள்ளதால் தங்களது நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயற்சி செய்தார். அவரை அருகே இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

  பின்னர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணனிடம் பாதை பிரச்சினை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் நிலம் அளப்பதை ஒரு மாத காலம் தள்ளிப்போட வேண்டும் எனக்கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு தாசில்தார் மற்றும் வருவாய் துறையினர் ஒப்புதல் தெரிவித்தனர். பின்னர் அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லட்சுமியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான ராஜசிம்ஹா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். #TeluguFilmDirector #Rajasimha #attemptssuicide

  மும்பை:

  தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றியுள்ளவர் ராஜசிம்ஹா. நடிகை அனுஷ்கா நடித்த ருத்ரமாதேவி படத்திற்கு வசனம் எழுதியவர் இவர் தான். நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடித்து வெளியான 'ஒக்க அம்மாயி' திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

  அந்த படத்தை தொடர்ந்து ராஜசிம்ஹா தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில காரணங்களால் அது தடைபட்டு உள்ளது.

  இந்நிலையில் இயக்குனர் ராஜசிம்ஹா, மும்பையில் அதிக அளவில் தூக்கி மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

  போலீசார் நடத்திய விசாரணையில் சினிமாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 'ராஜசிம்ஹா' மன அழுத்தத்தில் இருந்ததாகவும். இதனால் திடீர் என இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவந்து உள்ளது. #TeluguFilmDirector #Rajasimha #attemptssuicide
  ×