search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anganwadi children"

    • தமிழகத்தில் உள்ள அங்கன்வாடியில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.
    • அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், குழந்தைகளின் வருகை மற்றும் கட்டமைப்புகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை யின்படி சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அங்கன்வாடியில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, தூத்துக்குடி டூவிபுரம் 5-ம் தெரு சங்கரநாராயணன் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் 51 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் பெட்டகங்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், குழந்தைகளின் வருகை மற்றும் கட்டமைப்புகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். 28 மையங்களில் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்ன லட்சுமி, கவுன்சிலர்கள் அதிர்ஷ்டமணி, ராம கிருஷ்ணன், சுரேஷ்குமார், கனகராஜ், பொன்னப்பன், சரவணகுமார், விஜயகுமார், எடின்டா, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஸ்டாலின், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ரமேஷ், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர மருத்துவர் அணி அமைப் பாளர் அருண்குமார், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருக இசக்கி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருண்சுந்தர், ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால் ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மார்கின் ராபர்ட், வட்டச் செயலாளர்கள் பாலு, கதிரேசன், சிங்கராஜ், பொன்னப்பன், மகளிர் அணி கவிதாதேவி, ரேவதி, பெல்லா, சந்தனமாரி, முன்னாள் கவுன்சிலர் ஜெயசிங் மற்றும் மணி, அல்பட், சுந்தர்ராஜ், பாஸ்கர், மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு கரும்பு, பச்சரிசி, நெய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக 5-வது வார்டு வேலாயுதபுரத்தில்அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில்உள்ள குழந்தைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. ஜோதி காமாட்சி வரவேற்று பேசினார். குமாரசாமி தலைமை தாங்கினார். முத்து மாரியப்பன், மாரிமுத்து, பால முரளி கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு கரும்பு, பச்சரிசி, நெய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜின்னா பேகம், 1-ம் நிலை, 2-ம் நிலை மேற்பார்வையாளர்கள் ராணி, விஜயா, பாலம்மாள், குழந்தைகள் நலப் பணியாளர் ஷபீனா, குழந்தைகள் நல உதவியாளர் யாஸ்மீன் கலந்து கொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.


    • வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.
    • குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு பணிகள் குறித்து திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆய்வு மேற்கொண்டார். பல்லடம் வடுகபாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் சேர்க்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், சித்தம்பலத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அவர்களை மகிழ்வித்தார்.

    இந்த ஆய்வின் போது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ஆண்டிப்பட்டி அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு மற்ற சமூகத்தினர் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். #AnganwadiCenter

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதில் திம்மரச நாயக்கனூர், பிள்ளை முகம்பட்டி, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

    50 குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி மையம் என்ற அடிப்படையில் இதனை 2 ஆக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து பிள்ளை முகம்பட்டியில் புதிய அங்கன்வாடி மையம் கடந்த 2015-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

    இந்த மையத்தில் பிள்ளை முகம்பட்டியைச் சேர்ந்த பாலகுரு என்பவர் அங்கன்வாடி பணியாளராகவும், பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சுப்பு லெட்சுமி சமையலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மையத்தில் மொத்தம் 54 குழந்தைகள் என்ற கணக்கில் 20-க்கும் குறைந்த அளவு குழந்தைகளே பயன்பெற்று வருகின்றனர்.

    தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பிள்ளை முகம்பட்டியில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையத்துக்கு இந்திராநகர் பகுதியில் வசிக்கும் மற்ற சமுதாயத்தினர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர்.

    குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மாவு, முட்டை ஆகிய பொருட்களை மட்டும் பெற்றுக் கொண்டு கல்வி பயில அனுப்புவதில்லை என்று அங்கன்வாடி பணியாளர் தெரிவித்துள்ளார்.

    குழந்தைகள் நலனுக்காக அரசு நிதியை செலவழித்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்துக்கு இந்திரா நகர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மையத்துக்கு மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாமரைச் செல்வியிடம் கேட்டபோது பிள்ளைமுகம் பட்டி அங்கன்வாடி மையத்தில் தீண்டாமை கொடுமை நடப்பது குறித்து எவ்வித புகாரும் வரவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #AnganwadiCenter

    ×