கோவில்பட்டியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பொங்கல் தொகுப்பு

ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. குழந்தைகளுக்கு கரும்பு, பச்சரிசி, நெய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக 5-வது வார்டு வேலாயுதபுரத்தில்அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில்உள்ள குழந்தைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. ஜோதி காமாட்சி வரவேற்று பேசினார். குமாரசாமி தலைமை தாங்கினார். முத்து மாரியப்பன், மாரிமுத்து, பால முரளி கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு கரும்பு, பச்சரிசி, நெய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் தாஜின்னா பேகம், 1-ம் நிலை, 2-ம் நிலை மேற்பார்வையாளர்கள் ராணி, விஜயா, பாலம்மாள், குழந்தைகள் நலப் பணியாளர் ஷபீனா, குழந்தைகள் நல உதவியாளர் யாஸ்மீன் கலந்து கொண்டனர். முடிவில் முருகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com