search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "advertising banner"

    • குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தந்து விளம்பர பதாகை வைத்து தெரியப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா தொடர் பான முன்னேற்பாடு பணி–கள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வானமாமலை மண்டபத்தில் கலெக்ர் ஜெயசீலன் தலை–மை–யில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு சீனிவாசபெருமாள் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்திட ஒவ் வொரு துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண் டிய முன்னேற்பாடு பணி–கள் குறித்தும், எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக விரிவான ஆலோசனை நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண் டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா வரு–கின்ற 22-ந்தேதி சனிக்கி–ழமை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்ப–டுகிறது.

    தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெ–றும் தேரோட்டங்கள் தங்கு–தடையின்றி, விபத்துகள் இன்றி சிறப்பாக நடைபெ–றுவதை உறுதிபடுத்தும் வித–மாக தமிழக அரசு அறி–வித்துள்ள தேரோட்ட வழி–பாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய அலுவலர் கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்க–ளுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற் பாட்டுப்பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள–வும், மேலும், போக்குவரத் தினை ஒழுங்குபடுத்தும் பணியிலும் காவல் துறையி–னரும், அவர்களுக்கு துணை–யாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாண–வர்களும், ஊர்க்காவல் படையினர், சாரணர்களும் கூட்ட நெரிசலை ஓழுங்கு–படுத்தும் பணியில் ஈடுப–டவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலை ஒழுங் கு–படுத்த காவல்துறை–யினர் மாற்றுப்பாதை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும். குற்றங்களை தடுக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்கா–ணிக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. வருகின்ற பொது மக்கள் மற்றும் பக்தர்க ளுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளை சிறப்பான முறையில் செய் திடவும், நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக தேர் வலம் வரும் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்குகள் அமைத்திடவும், லாரிகள் மூலமும், தண்ணீர் பந்தல் அமைத்தும் சுகாதாரமான குடிநீர் விநியோகிக்கப்பட–வுள்ளது.ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சி மூலம் தற்காலி–கமாக கழிப்பறை, நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட தேவையான நடவ–டிக்கைகளை மேற்கொள்ள–வும், உணவு விடுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்கள் பயன்ப–டுத்தப்படுகிறதா என்பத–னையும் ஆய்வு செய்ய–வேண்டும். குடிநீர் வசதி, சுகாதார வளாகம், தற்கா–லிகமாக கழிப்பறை, நடமா–டும் கழிப்பறை வசதி போன்ற வசதிகள் எந்தெந்த இடங்களில் அமைக்கப்பட் டுள்ளது என்பதை பொது–மக்கள் எளிதாக தெரிந்து–கொள்ளும் வண்ணம் விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

    இப்பணிகளை ஸ்ரீவில்லி–புத்தூர் நகராட்சி ஆணையா–ளர் மேற்கொள்ள அறிவு–றுத்தப்பட்டுள்ளது. தீய–ணைப்பு வண்டிகளுடன் முன்னெச்சரிக்கை நடவ–டிக்கையாக தயார் நிலையில் இருக்கவு உத்தரவிடப்பட் டுள்ளது.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று எந்த நேரத்திலும் முதலுதவி சிகிச்சை அளித்தி–டும் வகையில் மருத்துவர் குழுவினர் போதிய மருந்து–கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்கவும், ஆம்பு–லன்ஸ்சுகளும் தயார் நிலை–யில் வைக்கவும், கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூரக் கொட்டகையிலும் தற்காலிக முதலுதவி சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, போதிய மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்கவும் அறிவு–றுத்தப்பட்டுள்ளது.

    ஆடிப்பூரத் தேர்த்திரு–விழா அன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்கு–வரத்துக் கழக மண்டல போக்குவரத்து அலுவலர், பொது மேலாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் மேற் கொள்ளவேண்டும். வெளி–யூர் பேருந்துகள் நிறுத்துவ–தற்கு வசதியாக தற்காலிக பேருந்துநிலையம் அமைக் கப்பட உள்ளது.

    தேரோட்ட தினத்தன்று சாலையின் குறுக்கே செல் லும் மின் கம்பிகளும், தொலைபேசி இணைப்பு–களும் தற்காலிகமாக தேரோட்டம் முடியும் வரை அகற்றப்பட்டு தேரோட்டம் முடிந்த உடன் சரிசெய்யவும், இப்பணிகளுக்கு உரிய ஏற்பாடுகளை மின்சார வாரிய ஊழியர்களும், தொலை தொடர்புத்துறை ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநா–தன், நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, தக்கார் ரவிச் சந்திரன் உட்பட பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண் டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் நடவடிக்கை எடுக்கபடும் என கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்
    • விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முறையாக முன் அனுமதி பெற வேண்டும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பர பதாகைகள் வைப்பதற்கு முறையாக முன் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறாமல் பதாகைகள் வைக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள், விளம்பர பதாகை நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும்.

    2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35-ன் படியும், திருத்தப்பட்ட 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படியும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 17-0-ன்படி அகற்றப்பட வேண்டும். அதேபோல் உரிமக்காலம் முடிந்த பின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-பி-ன்படி அகற்றப்பட வேண்டும்.

    மேற்படி பிரிவுகள் 117-0, 117-பி ஆகியவற்றின்படி, விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்ற தவறினால் அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றிவிடும். பின்பு அதற்கான செலவினம் பிரிவுகள் 117-0, 117-பி மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கலெக்டர் கற்பகம் எச்சரித்துள்ளார்.

    விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. #ChennaiCorporation #Banner #Advertising
    சென்னை:

    விதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ஓராண்டு ஜெயில் தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள (கோட்டம் 1 முதல் 200 வரை) பகுதிகளில் தனிநபர்கள், கோவில் திருவிழா, பொது நிகழ்ச்சிகள் சம்பந்தமாகவும், அரசியல் கட்சிகள் சார்பாகவும் விளம்பர பேனர் வைக்க சட்டவிதிகளின்படி முறையாக விண்ணப்பம் அளித்து பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும்.

    விதிகளுக்கு மாறாகவும், அனுமதி பெறாமலும் பேனர் வைத்தால் அவை உடனடியாக அகற்றப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஓராண்டு ஜெயில் அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் அனுமதி பெற்று 6 நாட்களுக்கு மட்டுமே பேனர் வைக்க வேண்டும். 6 நாட்களுக்கு பின்பு விளம்பர அமைப்பாளர்களே அவற்றை அகற்ற வேண்டும்.

    அனுமதி வழங்கப்படும் பேனர்களின் கீழ்பகுதியில் அனுமதி வழங்கப்பட்ட எண், அனுமதி நாள், அனுமதிக்கான காலஅவகாச நாள், அச்சகத்தின் பெயர் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட அளவு (நீளம், அகலம்) ஆகியவற்றை தவறாது குறிப்பிட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் அத்தகைய விளம்பர பேனர்களும், விளம்பர தட்டிகளும் விதிமீறலாக கருதப்பட்டு, அவை உடனடியாக அகற்றப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், விளம்பர பேனர்கள் வைக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்

    ஒவ்வொரு விண்ணப்பதாரரும் படிவம் 1-ஐ பூர்த்திசெய்து அனுமதிகோரும் நாளுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தடையின்மை சான்று, அமைக்கப்பட உள்ள இடம் தனியார் கட்டிடமாகவோ, அரசு நிறுவனம் சார்ந்த கட்டிடமாகவோ இருந்தால் அவர்களிடம் இருந்து அதற்கான தடையின்மை சான்று, பேனர் வைக்கும் இடத்திற்கான வரைபடம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஒவ்வொரு பேனருக்கும் அனுமதி கட்டணம் ரூ.200-க்கான வரைவோலை (டி.டி.) மற்றும் காப்பீட்டு தொகை ரூ.50-க்கான வரைவோலையை (டி.டி.) ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி என்ற பெயரில் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    விளம்பர பேனர்கள் நடைபாதை ஓரமாக வைக்க அனுமதி வழங்கும் பட்சத்தில் இருபுற சாலையின் நடுவில் பேனர் அமைக்கக்கூடாது. 10 அடிக்கும் குறைவாக நடைபாதை இருக்கும் சாலைகளின் 2 புறங்களும் பேனர் வைக்க அனுமதி வழங்கப்படமாட்டது. நடைபாதைகளின் குறுக்காகவோ அல்லது சாலையின் குறுக்காகவோ வைக்க கூடாது. நடைபாதை அல்லது சாலைக்கு இணையாக வைக்க வேண்டும்.

    கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள், ஆஸ்பத்திரிகள், கல்வெட்டுகள், சிலைகள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் சாலை சந்திப்பு அல்லது சாலையின் ஓரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் பேனர் வைக்க கூடாது.

    பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி பெறப்பட்டு வைக்கப்படும் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வைக்க வேண்டும்.

    அனுமதி இல்லாமல், விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ChennaiCorporation #Banner #Advertising 
    ×