search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk volunteers"

    90 சதவீதம் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்று தினகரன் பேசினார். #dinakaran #admk #edappadipalanisamy

    பொள்ளாச்சி:

    முன்னாள் அமைச்சர் தாமோதரன் கடந்த சில நாட்களுக்கு முன் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.

    இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா பொள்ளாச்சி அருகே கோலார் பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு முன்னாள் அமைச்சர் தாமோதரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் அ.ம.மு.க.வில் இணைந்தனர். விழாவில் தினகரன் பேசியதாவது-

    தமிழகத்தில் ஜெயலலிதாவின் உண்மையான இயக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதை நிருபிக்கின்ற வகையில் 90 சதவீதம் தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து விலகி எங்கள் இயக்கத்தில் இணைந்த அனைவரையும் வரவேற்கிறேன். நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சண்முகவேல், முன்னாள் எம்.பி. சுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை, முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் செல்வி பத்மினி, ராஜ மாணிக்கம், பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. செயலாளர் மயில்சாமி, முன்னாள் நகர செயலாளர் வக்கீல் கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் டி.டி.வி. தினகரன் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது-

    எதற்காக இந்த கட்சி தொடங்கப்பட்டது என்று உங்களுக்கே தெரியும்.

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஆளும் கட்சி, எதிர் கட்சிகளை தோற்கடித்து குக்கர் சின்னத்தில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றோம்.

    நமது கட்சி நன்கு வளர்ந்து வருகிறது. தற்போது ஆட்சி துரோகிகள் கையில் உள்ளது. ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் தங்களது பதவியை மட்டும் காப்பாற்றி வருகிறார்கள்.

    அம்மாவின் கட்சியை காப்பாற்றி ஆக வேண்டும். அம்மாவின் இரட்டை இலை சின்னம் துரோகிகள் கையில் உள்ளது. தமிழகத்தில் தலை நிமிர்ந்து நிற்கவும், எந்த தேர்தல் வந்தாலும் சிறந்த ஆட்சி அமைந்திட குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    வெள்ளகோவில் பகுதியில் உள்ள வட்டமலை கரை ஓடை மூலம் 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசன வசதி பெறவும், வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள கோவிலில் ஒரு கல்லூரி தொடங்கப்படும்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார். #dinakaran #admk #edappadipalanisamy

    பாராளுமன்ற தேர்தலில் உற்சாகமாக பணியாற்றுவதற்காக அந்தந்த தொகுதியில் உள்ள தொண்டர்களை இன்ப சுற்றுலா அழைத்து செல்ல அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வை பலப்படுத்தவும், கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக இன்ப சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 5 ஆயிரம் அ.தி.மு.க.வினரை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். அவர்களை சொகுசு பஸ்களில் அழைத்துச்செல்லவும், ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி இருந்து குளித்து மகிழவும், உணவு, விருந்து உள்பட அனைத்துக்கும் அவரே ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    கரூர் பாராளுமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பித்துரை மணப்பாறை தொகுதியில் உள்ள தனது ஆதரவாளர்களை புதன்கிழமை குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச்செல்ல 6 பஸ்களை ஏற்பாடு செய்து இருந்தார். இந்த 2 நாள் சுற்றுலாவின் போது திருச்செந்தூர் கோவிலுக்கும் சென்று வந்தனர்.

    கரூர் தொகுதியில் உள்ள பஞ்சாயத்து அளவிலான அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் 200 பேரை, தம்பித்துரை இந்த மாதம் விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துச்செல்ல இருக்கிறார். வருகிற 21-ந்தேதி டெல்லி செல்லும் இவர்கள் ஆக்ரா மற்றும் அருகில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார்கள்.

    திருச்சி எம்.பி. குமார் தனது ஆதரவாளர்கள் 50 பேரை நேற்று டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.

    “நாங்கள் முதல் முறையாக விமானத்தில் செல்கிறோம். டெல்லியில் பாராளுமன்றம், மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு” செல்வோம். என்று அவர்கள் கூறினர்.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியத்தொடங்கியுள்ளன. எனவே, அ.தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்துவற்காக இந்த சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினால், அவர்கள் மூலம் பாராளுமன்ற தேர்தலுக்கு அ.தி.மு.க.வினரை தயார்படுத்த முடியும். அதற்காகவே இந்த சுற்றுலா ஏற்பாடு என்று கூறப்படுகிறது.

    இது போன்று அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வினரை உற்சாகப்படுத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் நடைபெறுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    ×