என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Jayaram"

    • எத்தனை கோவில்கள் இருந்தாலும், சபரிமலை ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான இடம்.
    • சில விஷயங்களைப் பற்றி விசாரிக்க என்னை அழைத்தார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்க முலாம்கள் பராமரிப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்ட போது, தங்கம் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் கோவிலின் முன்னாள் தேவசம்போர்டு அதிகாரிகள், பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற உன்னிகிருஷ்ணன் போற்றி, கர்நாடக நகை வியாபாரி கோவர்த்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. பராமரிப்பு பணிக்கு கொண்டு சென்ற துவார பாலகர் சிலைக்கு சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் ஜெயராம் கலந்து கொண்டதாகவும், அவரது வீட்டிற்கு துவார பாலகர் சிலைகளை கொண்டு சென்று வழிபாடு செய்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது.

    சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் போது, வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் ஐஸ்வர்யம் பொங்கும் என கூறப்பட்டதால் அந்த வழிபாட்டை செய்ததாகவும், தங்கம் திருட்டுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜெயராம் கூறினார். இதற்கிடையில் தங்கம் கடத்தல் விவகாரத்தில் கருப்பு பணம் புழக்கம் இருந்ததா? என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணையில் இறங்கியது. அவர்கள் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு, பிப்ரவரி 17-ந் தேதி (இன்று) கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியது.

    இதனை தொடர்ந்து இன்று நடிகர் ஜெயராம் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    "எத்தனை கோவில்கள் இருந்தாலும், சபரிமலை ஒவ்வொரு இந்தியனுக்கும் புனிதமான இடம். இங்கு ஏதேனும் கொள்ளை நடந்திருந்தால், அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது ஒவ்வொரு மலையாளியின் பொறுப்பாகும். கடந்த 38 ஆண்டுகளாக, கேரளாவில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நான் முதலில் அழைக்கப்பட்டிருக்கிறேன். நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அப்படித்தான் இங்கும் சென்றேன்."

    நான் 50 வருடங்களாக சபரிமலைக்குச் சென்று வருகிறேன், உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும். சில விஷயங்களைப் பற்றி விசாரிக்க என்னை அழைத்தார்கள். அதன்படி நான் ஆஜராகி உள்ளேன். எல்லாம் அழகாக முடிவடையட்டும். சிக்கிக் கொள்ள வேண்டியவர்கள் சிக்கிக் கொள்ளட்டும். ஐயப்பன் அவர்களை சும்மா விடுவாரா. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.

    • காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணியை காதலித்து வந்தார்.
    • கடந்த மே மாதம் ஜெயராம் மகள் திருமணம் நடந்தது.

    நடிகர் ஜெயராம் -நடிகை பார்வதி ஆகியோரது மகனான காளிதாஸ் ஜெயராம் மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ராயன் படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்திருந்தார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவ கதைகள் தொடரில் காளிதாஸ் நடித்த திருநங்கை கதாபாத்திரம் அதிக வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணி காளிங்கராயனை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் குருவாயூர் கோவிலில் இன்று காலை நடந்தது.

    காளிதாஸ் ஜெயராம் சிவப்பு நிற வேஷ்டி, தங்க ஜரிகையுடன் கூடிய துண்டு அணிந்திருக்க, மணமகள் தாரிணி தங்கநிற எம்பிராயிடு செய்யப்பட்ட சிவப்பு நிற சேலை மற்றும் துளசி மாலைஅணிந்து இருந்தார்.

    மந்திரங்கள் முழங்க இருவருக்கும் கோவிலில் திருமணம் நடந்தது. திருமண விழாவில் மத்திய மந்திரியும் நடிகருமான சுரேஷ் கோபி, கேரளா சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் குடும்பத்தினர் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த மே மாதம் இதே குருவாயூர் கோவிலில் ஜெயராம் மகள் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×