என் மலர்

  நீங்கள் தேடியது "Mercedes Benz"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெர்சிடிஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புது எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் ஆகும்.

  மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய EQB மாடல் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் EQC காரின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. இது இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகமாக இருக்கிறது.

  மெர்சிடிஸ் நிறுவனத்தின் GLB எஸ்.யு.வி.-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய EQB மாடலில் எலெக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் முற்றிலும் வித்தியாசமான வீல்கள் மற்றும் பின்புற டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் பின்புறம் ஃபுல்-விட்த் லைட் பார் உள்ளது.


  இந்த கார் 250, 300 மற்றும் 350 என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 300 மற்றும் 350 மாடல்களில் ஆல் வீல் டிரைவ் வசதி மற்றும் ஒவ்வொரு ஆக்சில்களிலும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் EQB 250 மாடல் ஒற்றை மோட்டார் செட்டப், 188 ஹெச்.பி. பவர், 385 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் கொண்டுள்ளது.

  300 மற்றும் 350 மாடல்களின் ஆல் வீல் டிரைவ் மாடல்களில் உள்ள மோட்டார் 225 ஹெச்.பி பவர், 390 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. மூன்று வேரியண்ட்களிலும் 66.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இவற்றில் எந்த வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கி அசத்தி இருக்கிறது.
  • முன்னதாக மற்றொரு மாடலும் இதே போன்று ஆயிரம் க.மீ. ரேன்ஜ் வழங்கி இருந்தது.

  மெர்டசிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் EQXX கார் மாடலை கொண்டு தனது முந்தையை சாதனையை முறியடித்து இருக்கிறது. முன்னதாக விஷன் EQXX மாடல் முழு சார்ஜில் 1000 கி.மீ. சென்ற நிலையில் தற்போது இதே கார் 1,202 கி.மீ. சென்று சாதனை படைத்து இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் பிராக்லீயில் உள்ள எஃப்1 பந்தய களத்தில் நடைபெற்றது.


  இதை அடுத்து சில்வர்ஸ்டோன் எப்1 பந்தய களத்திலும் இந்த கார் சோதனை நடைபெற்றது. அதில் இந்த கார் 1202 கி.மீ. சென்று அசத்தியது. முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் ஸ்டட்கர்ட்டில் இருந்து கேசிஸ் பகுதிக்கும் அதன் பின் யூரோடனலில் இருந்து கலாய்ஸ் பகுதிக்கும் சென்றது. லண்டனில் இந்த கார் ஃபோல்க்ஸ்டோனில் துவங்கி பிராக்லி வரை கடக்கப்பட்டது.

  2030 ஆண்டிற்குள் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற முடிவு செய்து உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் தனது பேட்டரி பேக்கில் இருந்து முடிந்த வரை ஒவ்வொரு வாட் திறனையும் உறிஞ்சுவதற்கான பணிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கிராண்ட் டூரிங் அனுபவம் எலெக்ட்ரிக் யுகத்திலும் தொடரும் என்றே தெரிகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் கார்களை ரிகால் செய்வதாக அறிவித்து உள்ளது.
  • சர்வதேச சந்தையில் சுமார் பத்து லட்சம் கார்களை மெர்சிடிஸ் பென்ஸ் ரிகால் செய்வதாக அறிவித்தது.

  மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் 2 ஆயிரத்து 179 கார்களை இந்திய சந்தையில் இருந்து ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் செய்யப்படும் கார்கள் 2005 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் GL மற்றும் ML கிளாஸ் எஸ்.யு.வி. மற்றும் R கிளாஸ் எம்.பி.வி.க்கள் ஆகும்.


  வாகனத்தின் பிரேக் பூஸ்டரில் துருப் பிடித்து இருக்கலாம் என்றும், இது பிரேக்கிங்கின் போது அசௌகரியம் அல்லது ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாகவே கார்கள் ரிகால் செய்யப்படுகின்றன. சில நாட்களுக்கு முன் உலகம் முழுக்க சுமார் பத்து லட்சம் கார்களை ரிகால் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. அப்போதும் இதே காரணத்தை மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் தனது வாகனங்களை ரிகால் செய்ய முடிவு செய்து இருக்கிறது.
  • இதில் மூன்று கார் மாடல்கள் இடம்பெற்று உள்ளன.

  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2004 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று கார் மாடல்களை உலகம் முழுக்க ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இவற்றில் 2nd Gen மெர்சிடிஸ் பென்ஸ் ML கிளாஸ் W164, 1St Gen GL கிளாஸ் X164 மற்றும் R கிளாஸ் W251 போன்ற மாடல்களின் 9 லட்சத்து 93 ஆயிரத்து 407 யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.


  கார்களின் பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள கோளாறு காரணமாக இத்தனை யூனிட்கள் ரிகால் செய்யப்படுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்து இருக்கிறது. "பாதிக்கப்பட்ட கார்களின் சில யூனிட்களில், பிரேக் பூஸ்டர் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும் பகுதியில் துரு ஏற்பட்டு இருக்கலாம் என கண்டுபிடித்து இருக்கிறோம்," என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

  தற்போது பாதிக்கப்பட்டு இருக்கும் கார் மாடல்கள் இந்திய சந்தையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றையும் ரிகால் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்யும் என்றே தெரிகிறது. எனினும், இதுபற்றி மெர்சிடிஸ் பென்ஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


  மெகர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் காரை அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய பென்ஸ் கார் விலை ரூ. 79.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. 

  புதிய 2021 மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

   மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ்

  புதிய மெர்சிடிஸ் கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அகலமான ஏர் இன்டேக், 19 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஏ.எம்.ஜி. மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.


  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புத்தம் புதிய ஏ45 எஸ் ஏ.எம்.ஜி. மாடலை இந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புது காருக்கான டீசரை மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டு உள்ளது. 

  டீசரில் 2021 மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலின் வெளிப்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் இருக்காது என தெரியவந்துள்ளது. இந்த கார் சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. புதிய ஏ.எம்.ஜி. மாடலில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், அகலமான ஏர் இன்டேக், 19 இன்ச் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன. 

   மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ்

  புதிய மெர்சிடிஸ் ஏ.எம்.ஜி. ஏ45 எஸ் மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 416 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

  இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz #ElectricCar  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேகமாக இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் கார் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாரிஸ் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இ.க்யூ.சி. எஸ்.யு.வி. கார் தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்.யு.வி. மாடலை தழுவி உருவாகி வருகிறது.

  இ.க்யூ.சி. எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. கார் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகலாம். எனினும் சரியான வெளியீடு பற்றி தற்சமயம் எவ்விதல தகவலும் வழங்க இயலாது என மெர்சிடிஸ் பென்ஸ் நிர்வாக இயக்குனர் மார்டின் ஸ்குவென்க் தெரிவித்தார். 

  தற்சமயம் எங்களது இலக்கு பி.எஸ். VI ரக விதிமுறைகள் தான். இதைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டோ அல்லது உள்நாட்டில் உருவாக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.   2025 ஆம் ஆண்டு வாக்கில் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் 25 சதவிகித பங்கு வகிக்க மெர்சிடிஸ் பென்ஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும். 

  சர்வதேச சந்தையில் இந்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகிறது. இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பின் இந்திய ஆலையில் உருவாக்கப்பட்டு பின் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 

  புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ.க்யூ.சி. எஸ்.யு.வி. இரு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் 80kWh பேட்டரி பேக் மூலம் இயங்குகிறது. இந்த மோட்டார் 402 பி.ஹெச்.பி. மற்றும் 765 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

  புதிய இ.க்யூ.சி. மாடல் மணிக்கு 0 - 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 நொடிகளில் செல்லும் என்றும் அதிகபட்சம் மணிக்கு 180 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்கும். இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிலோமீட்டர் வரை செல்லும். #MercedesBenz #ElectricCar
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் மூன்றாம் தலைமுறை சி.எல்.எஸ். 4-டோர் கூப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. #MercedesBenz


   
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய சி.எல்.எஸ். 4-டோர் கூப் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆடம்பர கார் மாடலின் துவக்க விலை ரூ.84.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் துவங்குகிறது.

  புதிய பென்ஸ் சி.எல்.எஸ். கார் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடியோ ஏ7, பி.எம்.டபுள்யூ. 6 சீரிஸ் கிரான் கூப் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெல்லிய வடிவமைப்பில் கவர்ச்சிகர நான்கு கதவுகள் கொண்ட கூப் மாடலில் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், ஃபிரேம்லெஸ் கதவுகள் வழங்கப்பட்டுள்ளது.

  மெர்சிடிஸ் பென்ஸ் சி.எல்.எஸ். மாடலில் புதுவித ஹெட்லேம்ப்கள் மற்றும் முற்றிலும் புதிய கிரில் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. பின்புறம் டெயில் லேம்ப் கிளஸ்டர், கிடைமட்டமாக வைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள் மற்றும் சிறிய ஸ்டபி பூட் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5-ஸ்போக் 18 இன்ச் வீல்கள் சில்வர் நிற ஷேட் கொண்டிருக்கிறது.  காரின் உள்புற கேபினில் அழகிய வடிவமைப்பு மற்றும் உயர் ரக மரத்தாலான டேஷ்போர்டு, நான்கு ஜெட் டர்பைன் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய ஸ்கிரீன்களில் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று டிஜிட்டல் டேஷ்போர்டு போன்று செயல்படுகிறது.

  புதிய சி.எல்.எஸ். ஐந்து பேர் அமரக்கூடிய வாகனம் என்றாலும், நான்கு பேர் வரை பயணிக்கக்கூடியதாக இருக்கிறது. பொனெட்டில் புதிய சி.எல்.எஸ். மாடலில் பி.எஸ். VI ரக 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 242 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 9-ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. 

  இந்த கார் 6.2 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், அதிகபட்சம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல்களின் விலை மாற்றப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MercedesBenz


  இந்தியாவின் பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமாக அறியப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்துகிறது.

  நிர்வாக கட்டண செலவீனங்கள் அதிகரித்திருப்பதே திடீர் விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களில் யூரோவுக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஐந்து சதவிகிதம் வரை குறைந்திருப்பதும், ரெபோ கட்டணம் கடந்த சில மாதங்களில் 0.5 சதவிகிதம் வரை அதிகரித்து இருக்கிறது.

  இவை அனைத்தும் மெர்சிடிஸ் இந்தியா தனது வாகனங்களின் விலையை உயர்த்த காரணமாக தெரிவித்துள்ளது. 

  செலவீன கட்டணங்கள் விலை உயர்வு மற்றும் ஃபோரெக்ஸ் கட்டணங்கள் எதிர்பார்த்தபடி இல்லாதது போன்றவை விலை உயர்வுக்கு காரணமாக அமைந்து விட்டது என மெர்சிடிஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ரோலாண்ட் ஃபோல்ஜர் தெரிவித்தார்.

  இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் எங்களுக்கு குறைவான நடவடிக்கைகளில் நிலைமையை கட்டுக்குள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மாடல்களின் விலை மாற்றம் செய்வதே தீர்வாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள சக்கன் தயாரிப்பு ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்துக்கு ஏற்ப வரும் ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக இந்தியா உருவெடுக்கலாம் என்பதால் மெர்சிடிஸ் பென்ஸ் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

  இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் கம்பஷன் இன்ஜின்களுக்கான தயாரிப்பு பணிகளை பூனேவில் உள்ள சக்கன் ஆலையில் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தை நிறைவேற்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

  மேலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மின்சார கார்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. இவ்வாறு குறைக்கப்படும் பட்சத்தில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்தலாம். இத்துடன் இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவாக இருக்கும்.


  கோப்பு படம்: மெர்சிடிஸ் பென்ஸ் EQ கான்செப்ட்

  அடுத்த ஆண்டு வாக்கில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய பிரான்டு EQ என்ற பெயரில் சர்வதேச சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த பிரான்டு ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை வெளியிட தயார் நிலையில் இருக்கிறது. EQ பிரான்டு மாடல்கள் முழுவதும் எதிர்கால பேட்டரி-எலெக்ட்ரிக் கார்களாக இருக்கும் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

  இதன் பிளாட்ஃபார்ம் புதிய ஒற்றை வடிவமைப்பை சார்ந்து இருக்கும் என்றும், இதே போன்ற வடிவமைப்பு அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. எனினும் புதிய மாடல்களில் சில வேறுபாடுகள் மற்றும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
  இந்தியாவில் அதிவேக எஸ்-கிளாஸ் மாடலை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் AMG S 63 கூப் என அழைக்கப்படும் புதிய மாடல் ஸ்போர்ட் தோற்றம், அதிவேக செயல்திறன், பெஸ்போக் லக்சரி அம்சங்களை கொண்டுள்ளது. 

  இதே போன்ற அம்சங்கள் நிறைந்த பென்ட்லி அல்லது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனங்களின் விலை உயர்ந்த மாடல்களுக்கு மாற்றாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை தேர்வு செய்யலாம். இந்தியாவில் ரூ.2.55 கோடி முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே விலைக்கு கிடைக்கும் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய பென்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

  இந்த மோட்டார் முந்தைய இன்ஜின்களை விட 35 பிஹெச்பி வரை கூடுதல் திறன் கொண்டிருக்கிறது. 4-வீல் டிரைவ் மற்றும் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருப்பதால், வழக்கமான பென்ஸ் AMG கார்களை விட அதிவேகமாக செல்லும் திறன் பெற்றிருக்கிறது.   சூப்பர்கார் போன்று புதிய பென்ஸ் மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் படி லாக் செய்யப்பட்டுள்ளது. லாக் செய்யப்படாத பட்சத்தில் டியூனிங்-க்கு ஏற்ப மேலும் அதிவேகமாக செல்லும்.

  இத்துடன் AMG சிலிண்டர் மேனேஜ்மென்ட் சிலிண்டர் டி-ஆக்டிவேஷன் சிஸ்டம், AMG ஸ்பீடு சென்சிட்டிவ் ஸ்டீரிங், AMG ரைடு கன்ட்ரோல் பிளஸ் சஸ்பென்ஷன் மற்றும் வேரியபிள் டேம்ப்பர் கன்ட்ரோல், AMG டைனமிக் செலக் டிரைவிங் மோட்கள்: கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் பிளஸ் மற்றும் இன்டிவிஜூவல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

  பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஏர்பேக்ஸ், ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல், இஎஸ்பி மற்றும் ரேடர் சார்ந்த லேன் ஹோல்டு, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பிளைன்ட் ஸ்பாட் வாரனிங் அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp