search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 thousand"

    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை அடைந்த கேரள மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். #NEETExam
    திருவனந்தபுரம்:

    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவேதனை அடைந்த கேரள மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பயலூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), விவசாயி. இவருடைய மனைவி மல்லிகா (41). இவர்களுடைய மகள் சவுமியா (19). மருத்துவ படிப்பு படிக்க விரும்பிய சவுமியா நடந்து முடிந்த ‘நீட்‘ தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதியிருந்தார். இதில் அவர் தோல்வி அடைந்ததால் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை நாராயணன் தனது மனைவியுடன் கடைவீதிக்கு சென்று இருந்தார். மாலை 6 மணியளவில் அவர்கள் திரும்பி வந்தபோது சவுமியா வீட்டில் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அலறினார்கள். இதையடுத்து, அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சவுமியாவை மீட்டு கொல்லங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ‘நீட்‘ தேர்வில் தோல்வி அடைந்ததால் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற முடியாததால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூரை சேர்ந்த மாணவி கிருத்திகாவின் மருத்துவ செலவுக்காக தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது.
    சென்னை:

    தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்றிருந்த நல்ல மதிப்பெண்கள் பயனற்றுப் போய், ‘நீட்’ தேர்வு எழுதி வெற்றி பெற முடியாததால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற விழுப்புரம் மாவட்டம் மேல்சேவூரை சேர்ந்த மாணவி கிருத்திகாவின் மருத்துவ செலவுக்காக அவருடைய தந்தை வி.கமலக்கண்ணனிடம் தி.மு.க. சார்பில் ரூ.50 ஆயிரத்தை கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.பொன்முடி எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ×