search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "117 தொகுதிகள்"

    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் 15 மாநிலங்களில் உள்ள 117 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இந்நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மூன்றாவது கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்



    கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் 227 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த தேர்தலின் மிகவும் முக்கியமான வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உ.பி.யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களமிறங்குகிறார். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது அந்த மாநில காங்கிரசார் இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

    மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. #LokSabhaElections2019 #Wayanad #RahulGandhi
    ×