என் மலர்
நீங்கள் தேடியது "வெளிநாட்டு பணம் பறிமுதல்"
- திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.5.5 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
- உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.5.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், மலேசியன் ரிங்கிட் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது
திருச்சி:
கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் கட்டுக்குள் வந்ததையடுத்து திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதையடுத்து கூடுதல் விமான சேவைகளும் தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவைகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானங்களில் சுங்கத்துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் தங்கத்தின் அளவும் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னையைச் சேர்ந்த சவுகத் சாதிக் (வயது 33) என்ற பயணி வந்தார். அப்போது அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.5.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், மலேசியன் ரிங்கிட் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் புறப்பட்ட தயாராக இருந்தது.
அதில் பயணம் செய்யவந்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஆண் பயணி ஒருவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணியை தனியாக அழைத்து விசாரித்தனர். அவரது பையை சோதனையிட்ட போது கட்டு, கட்டாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்தன.
மொத்தம் ரூ.97.46 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன. இது பற்றி பயணியிடம் விசாரித்த போது பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பணம் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று பயணியிடம் விசாரணை நடந்து வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் இலங்கை புறப்பட இருந்த பயணிகளை சுங்கத்துரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு வாலிபரின் பின்புற இடுப்பு பகுதி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அவரை தனியாக அழைத்து சென்று சோதித்தனர்.
அப்போது யூரோ நோட்டுக்களை இடுப்பில் சுற்றி வைத்து டேப் போட்டு ஒட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த வாலிபரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரது பெயர் சரவணன் (28). இலங்கையை சேர்ந்தவர்.
இதேபோல் நேற்று நள்ளிரவில் சிங்கப்பூர் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது யாசின் (33) என்பவர் தனது உள்ளாடைக்குள் ரியால், தினார், யூரோ நோட்டுக்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
இருவரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். அதனால் சந்தேகமடைந்து லிங்கேஸ்வரனை சோதனை செய்தபோது அவரின் கைப்பை, மற்றும் பேண்டில் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து இருந்தது தெரிந்தது.
அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.5½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லிங்கேஸ்வரனிடம் விசாரணை நடக்கிறது.
இதேபோல் சுமார் 86 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தி செல்ல முயன்ற இன்னொரு நபரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். #forexsmuggling #Delhiairport
கே.கே.நகர்:
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் கடத்தல் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்றிரவு திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த நசீர்கான் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர், ரூ.8.44 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பில், சவுதி ரியால் வெளிநாட்டு பணம் வைத்திருந்ததும், அதனை கடத்தி செல்ல முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் நசீர்கானிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






