search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை ஆய்வு மையம்"

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று முதல் 22-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இன்று முதல் 20-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும். சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வரும் 18-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 16, 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 18-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 19, 20-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 18-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    • அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் 17-ந்தேதி வரை 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று முதல் வரும் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    16-ந்தேதி மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 5 தினங்களுக்கு, தமிழகம் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி - 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

    அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளைகளில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    குமரிக்கடல், தமிழக கடலோர பகுதிகளில் 17-ந்தேதி வரை 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2° - 3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    09.06.2024 முதல் 13.06.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்ப நிலையில், பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    நாளை முதல் 11-ந்தேதி வரை அதற்கடுத்த நான்கு தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்ப நிலை 2° -3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    09.06.2024 முதல் 11.06.2024 வரை: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை.
    • சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, எழும்பூர், பெரம்பூர், கெளத்தூர், வியாசர்பாடி, மாதவரம், புழல், அரும்பாக்கம், அண்ணாநகர், சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மேலும், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், சென்னை திருவொற்றியூர், எண்ணூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், கரூர், திருச்சி,நாகர்கோவில், திருப்பத்தூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கரூரில், குளித்தலையை சுற்றியுள்ள பகுதிகளான ராஜேந்திரம், மருதூர், வதியம், அய்யர்மலை, தோகைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

    இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் 2வது நாளாக கொட்டி தீர்த்த கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும், சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, மயிலாடுதுறை, வேலூர், புதுக்கேட்டை, சிவகங்கை, சேலம், திருப்பூர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

    • ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • 9-ந்தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அந்தவகையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடப்படுகிறது.

    நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (வியாழக்கிழமை) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ. வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    9-ந்தேதி வரை தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    7-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் / இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
    • வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழகம், புதுவையில் இன்று எந்த ஒரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

    இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

    தமிழ்நாட்டில் அதிகமாக வெப்பம் பதிவான இடங்கள்

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.8, கரூர் பரமத்தி - 97.7, மதுரை விமான நிலையம் - 94.46, பாளையங்கோட்டை - 97.88, தஞ்சாவூர் - 96.8

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 68.9, ஊட்டி - 67.28, வால்பாறை - 78.8

    • இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.
    • சென்னையில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

    இந்த வாளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.

    அதேபோல 5-ந்தேதியை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லில் ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதன் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் அதிகளவு மழை பொழிவை வழங்கும் தென்மேற்கு பருவமழை, கேரளாவில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இதன் காரணமாக, கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    சென்னையிலும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த கோடை வெப்பம், நேற்று சற்று தணிந்தே காணப்பட்டது. மாலை நேரங்களில் மேகமூட்டங்கள் தென்பட்டன. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செ.மீட்டர், கடலூர் மாவட்டம் தொழுதூரில் 8 செ.மீட்டர், கோவை மாவட்டம் வால்பாறை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தலா 6 செ.மீட்டர் மழை பதிவானது.

    இதற்கிடையே தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், வருகிற 5-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதேபோல் சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகிற 5-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து, ஜூன் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், தெற்கு அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வஙகக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, லட்சத்தீவு பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

    • மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது
    • தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் முழுவதும் இன்று 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 108.5 டிகிரி வெயில் கொளுத்தியது.

    ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

    இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வடஇந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இனிவரும் நாட்களில் தமிழகத்தில் வெப்பநிலை 2-3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவான இடங்கள்

    திருத்தணி - 108.5, மீனம்பாக்கம் - 107, வேலூர் - 107, மதுரை விமான நிலையம் - 104, நுங்கம்பாக்கம் - 104, பரங்கிப்பேட்டை - 104, மதுரை நகரம் - 104, புதுச்சேரி - 104, ஈரோடு - 104, நாகப்பட்டினம் - 103, கடலூர் - 103, திருச்சி - 102, தஞ்சாவூர் - 102, தொண்டி - 101, திருப்பத்தூர் - 101, காரைக்கால் - 101, கரூர் பரமத்தி - 100, தூத்துக்குடி - 100 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

    குன்னூர் - 76.64, கொடைக்கானல் - 71.6, ஊட்டி - 72, வால்பாறை - 78

    ×