என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனர் விழுந்து விபத்து"

    • பேனர் விழுந்ததில் அவர் அருகிலிருந்த கழிவுநீர் வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து படுகாயம் அடைந்தார்.
    • விஜய் ரசிகர் மன்றத் தலைவர் கில்லி செல்வா, கார்த்திக், அருண்ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி அரியாங்குப்பம் சோலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தனசேகரன். 64 வயதான இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்ட்ரோலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

    இவர் நேற்று முன் தினம் அரியாங்குப்பம் அடுத்த மாஞ்சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

    அப்போது, ஆர்.கே.நகர் தபால்காரர் வீதியில் அனுமதியின்றி விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்த 'ஜனநாயகன்' பட டிஜிட்டல் பேனர் பலமான காற்றால் சாலையில் சரிந்து விழுந்தது.

    அந்த சமயம் சாலையில் பைக்கில் சென்ற தனசேகரன் மீது பேனர் விழுந்ததில் அவர் அருகிலிருந்த கழிவுநீர் வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து தனசேகரனின் மகன் ராஜராஜன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேனர் தடைச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அருந்ததிபுர விஜய் ரசிகர் மன்ற தலைவர் கில்லி செல்வா என்கிற செல்வகணபதி (26 வயது), சண்முகம் நகரை சேர்ந்த கார்த்திக் (24 வயது), அருண்ராஜ் (19 வயது) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மூவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில்வே நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த பெரிய பேனர் சாலையில் விழுந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. #Maharashtra
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது திடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.
     
    அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த பேனரால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.



    இந்நிலையில், புனேவில் ரெயில் நிலையம் அருகில் பேனர் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷம்ராவ் கசார் (40), ஷம்ராவ் காசர் (40), ஷிவாஜி பர்தேஷி (40), ஜாவித் கான் (40) ஆகியோர் பலியானது தெரிய வந்தது.

    இதில்  ஷிவாஜி பர்தேஷி மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பியபோது விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், பேனர் விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Maharashtra
    ×