search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pune railway station"

    • பயணிகள் முகத்தின் மீது ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ரெயில்வே போலீஸ்காரர் ஊற்றிய வண்ணம் செல்கிறார்.
    • பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி என்ற பயனர் டுவிட்டரில், 'ஆர்ஐபி மனிதநேயம், புனே ரெயில் நிலையம்' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் நடைமேடையில் உறங்கி கொண்டிருந்த பயணிகள் முகத்தின் மீது ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை ரெயில்வே போலீஸ்காரர் ஊற்றிய வண்ணம் செல்கிறார்.

    இதனால் ஒரு வாலிபர், முதியவர் உள்ளிட்ட பயணிகள் பதறி போய் எழுந்து பார்க்கின்றனர். அப்போது அந்த போலீஸ்காரர் எதுவும் நடக்காதது போல கடந்து செல்கிறார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் போலீஸ்காரரின் நடவடிக்கையை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர். நடை மேடையை ஆக்கிரமித்து பயணிகள் தூங்கியதால் அவர்களை அப்புறப்படுத்துவதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என கூறப்பட்டாலும் அவரது நடவடிக்கை மனிதாபிமானமற்ற செயல் என விமர்சித்தனர். பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது. இதற்கிடையே சம்பவம் தொடர்பாக புனே ரெயில்வே கோட்ட மேலாளர் இந்து துபே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நடை மேடையில் தூங்குவது என்பது நடந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். அதற்காக போலீஸ்காரரின் செயல் சரியானதல்ல. அவரிடம் பயணிகளை மரியாதையுடன் நடத்தும் படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்காக வருந்துகிறோம் என கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெயில்வே நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த பெரிய பேனர் சாலையில் விழுந்து பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. #Maharashtra
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகர் பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்துக்கு அருகே மிகப்பெரிய விளம்பர பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இன்று அதனை அகற்றும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது திடீரென அந்த பேனர் அருகே இருந்த சாலையில் விழுந்தது.
     
    அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்த பேனரால் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.



    இந்நிலையில், புனேவில் ரெயில் நிலையம் அருகில் பேனர் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஷம்ராவ் கசார் (40), ஷம்ராவ் காசர் (40), ஷிவாஜி பர்தேஷி (40), ஜாவித் கான் (40) ஆகியோர் பலியானது தெரிய வந்தது.

    இதில்  ஷிவாஜி பர்தேஷி மனைவியின் அஸ்தியை கரைத்துவிட்டு திரும்பியபோது விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், பேனர் விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Maharashtra
    ×