என் மலர்
நீங்கள் தேடியது "பூக்கி"
- நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
- இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பரிமாணங்களில் பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி தற்போது 'பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
'சலீம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தை இயக்குகிறார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'மனசு வலிகிது' வெளியாகி உள்ளது. இப்பாடல் காதலில் ஏற்பட்ட பிரிவை மையமாக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை விஜய் ஆண்டனியும், கரேஸ்மா ரவிச்சந்திரனும் இணைந்து இசையமைத்து பாடியுள்ளனர்.
- விஜய் ஆண்டனி பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
- 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ வைரலாகி வருகிறது
விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
பூக்கி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது. திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்
இந்நிலையில், இப்படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக இணையத்தில் வைரலாகி வரும் Husky டேன்ஸை விஜய் ஆண்டனி ரீக்ரியேட் செய்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
'வெடி' படத்தில் இடம்பெற்ற 'இச்சு இச்சு' பாடலுக்கு, Husky நாய் நடனமாடுவது போன்ற AI வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
பூக்கி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது. திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். படத்தின் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.






