என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் வங்கதேசம் தொடர்"

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 290 ரன்கள் குவித்தது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசமும், 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானும் வென்றன.

    இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹசன் தமிம் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 107 ரன்னில் அவுட்டானார். லிட்டன் தாஸ் 41 ரன்னும், சயிப் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் தவ்ஹித் ஹிருடோய் பொறுப்புடன் ஆடி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். சல்மான் ஆகா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர்106 ரன்னில் வெளியேறினார். சாத் மசூத் 38 ரன்னும், ஷஹீன் அப்ரிடி 37 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாகிஸ்தான் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இறுதியில், பாகிஸ்தான் 50 ஓவரில் 279 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை என கைப்பற்றி அசத்தியது.

    வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், நஹித் ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாஸ் சதாக் 75 ரன்னும், சல்மான் ஆகா 64 ரன்னும், முகமது ரிஸ்வான் 44 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை காரணமாக 32 ஓவரில் 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    இதனால் வங்கதேச அணி 23.3 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 41 ரன்னும், தவுஹித் ஹிருடோய் 28 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப், மாஸ் சதாகத் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம் பாகிஸ்தான் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-1 என சமனில் உள்ளது.

    • மிர்புரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 114 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது.
    • 2-வது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது.

    மிர்புர்:

    வங்க தேசத்துக்கு சென்றுள்ள ஷகீன் ஷா அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் மிர்புரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 114 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்தது. வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தானின் மோசமான ஸ்கோர் இதுவாகும். முகமது ரிஸ்வான், சல்மான் ஆஹா, ஹூசைன் தலாத் உள்ளிட்டோர் சொதப்பினர். வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் நஹித் ராணா 5 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. தொடரை வெல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்க இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் ஆயத்த மாகிறார்கள். ஆட்டம் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது.

    • பாகிஸ்தான் தரப்பில் சாஹிப்சாதா பர்ஹான் 63 ரன்கள் விளாசினார்.
    • வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சைம் அயூப் - சாஹிப்சாதா பர்ஹான் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய ஃபர்ஹான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். சைம் அயூப் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    அவரைத்தொடர்ந்து 63 ரன்களை எடுத்திருந்த பர்ஹானும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 5, ஹசன் நவாஸ் 33, ஹுசைன் தாலத் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.

    பின்னர் இணைந்த கேப்டன் சல்மான் ஆகா மற்றும் முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    • முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றியது.

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 47 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனை தொடர்ந்து ஃபஹீம் அஷ்ரஃப்- அப்பாஸ் அஃப்ரிடி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அப்பாஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். கடைசி வரை போராடிய ஃபஹீம் அஷ்ரஃப் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    • பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

    பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா, அகமது டேனியல், அப்பாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • வங்கதேச கடந்த வருடம் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.
    • இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    வங்கதேச கிரிக்கெட் அணி மே மாதம் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த தொடர் ஏற்கனவே நடைபெற இருந்தது. ஆனால், இரண்டு அணிகளுக்கும் அதிக அளவில் போட்டிகள் இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு வங்கதேச அணி பாகிஸ்தான் சென்றிருந்தது. அதற்கு முன் கடந்த வருடம் பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது.

    பைசாலாபாத், முல்தான், லாகூரில் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அந்த அணியின் முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினர்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஜோடி 240 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வங்கதேசம் முதல் இன்னிங்சில் இன்னும் 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
    • அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. லிட்டன் தாஸ் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். 7வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன், மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பாக ஆடிஅய் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்து அசத்தினார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்தார்.

    7-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில், முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டாகி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்தது.
    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து அடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டானார். ஷட்மன் இஸ்லாம் 93 ரன்னிலும், மெஹிதி ஹசன் 77 ரன்னிலும், லிட்டன் தாஸ் 56 ரன்னிலும், மொமினுல் ஹக் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 51 ரன் எடுத்தார்.

    வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி எளிதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது:

    ராவல்பிண்டி பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.

    முதல் இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய முடிவுஎடுக்கப்பட்டது. டிக்ளேர் செய்ததற்கான காரணம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.

    ஆனால் வங்கதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் ஒழுக்கத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    பந்துவீச்சிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    இந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடரை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    இந்த போட்டி முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூதை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி திட்டியதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே, பாகிஸ்தான்-வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக, பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி கூறுகையில், ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் சில குறை இருப்பதால் அதனை நிவர்த்தி செய்வதற்காக பயிற்சி செய்யப் போகிறார். மேலும், அவருக்கு தற்போது குழந்தை பிறந்திருப்பதால் அவர் குழந்தையுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நேரம் ஒதுக்கி கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கிய பாகிஸ்தான், 2-வது டெஸ்டில் அப்ரார் அகமத் என்ற லெக் ஸ்பின்னரையும், மிர் ஹம்ஸா என்ற வேகப்பந்துவீச்சாளரையும் சேர்த்துள்ளது.

    ×