என் மலர்
கிரிக்கெட் (Cricket)

PAKvBAN | 2வது ஒருநாள் போட்டி: வங்கதேசத்தை பந்தாடி தொடரை சமன் செய்தது பாகிஸ்தான்
- டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டாக்கா:
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவரில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மாஸ் சதாக் 75 ரன்னும், சல்மான் ஆகா 64 ரன்னும், முகமது ரிஸ்வான் 44 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை காரணமாக 32 ஓவரில் 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது.
இதனால் வங்கதேச அணி 23.3 ஓவரில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 41 ரன்னும், தவுஹித் ஹிருடோய் 28 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஹாரிஸ் ராப், மாஸ் சதாகத் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரில் 1-1 என சமனில் உள்ளது.






