என் மலர்
நீங்கள் தேடியது "தேள்"
- பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர்.
- வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கொடுமுரு 7-வது மலையில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. தெலுங்கு மாதத்தின் 3-வது திங்கட்கிழமையான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தனர்.
பக்தர்கள் மலை இடுக்குகளில் உள்ள தேள்களை தேடிப்பிடித்து நூல்களில் மாலையாக கட்டினர். பின்னர் வெங்கடேஸ்வர சாமிக்கு அணிவித்து பூஜை செய்து வழிபட்டனர்.
தேள்களைப் பிடித்து மாலையாக கட்டும் பக்தர்களுக்கு தேள் கொட்டவில்லை. பொதுவாக பக்தர்கள் சாமிக்கு பட்டு வஸ்திரம் மலர் மாலை மற்றும் ஆபரணங்களை அணிவித்து பூஜைகள் செய்வது வழக்கம்.
ஆனால் இந்த வெங்கடேஸ்வர சாமிக்கு தேள் மாலை அணிவித்தால் வேண்டிய வரங்களை நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம். இதேபோல் சில பக்தர்கள் தேள்களை பிடித்து தங்களது முகம்,தலை, கைகளில் வைத்து நூதன முறையில் வழிபட்டனர்.
- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது.
தேள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட பெண் பயணி விமான நிலையத்தில் திரையிறங்கியதும் அவரை மருத்துவர் பரிசோதனை செய்தார். பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
"கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் AI 630-இல் பயணித்த பெண்ணை தேள் கொட்டியது. இதுபோன்ற சம்பவம் அரங்கேறுவது மிகவும் அரிதான ஒன்று ஆகும்," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் தேள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விமானத்தில் வேறு ஏதேனும் பூச்சிக்கள் நுழைவதை தடுக்கும் வகையில், புகை போடப்பட்டது. இதோடு விமானத்தின் உணவு துறையிடம் அவர்களது பகுதியை முழுமையாக சோதனை செய்ய ஏர் இந்தியா வலியுறுத்தியது.
உணவு பொருட்களால் தேள் விமானத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்பதால், அந்த பகுதியில் தேவைப்படும் பட்சத்தில் புகை போடவும் வலியுறுத்தி இருக்கிறது. முன்னதாக பறக்கும் விமானத்தில் பல்லி மற்றும் ஊர்வனங்கள் நுழைந்த சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.







