search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hari Kumar"

    • இந்தியா அதன் பாதுகாப்பு தேவைக்காக தொடர்ந்து பிற நாடுகளை சாரந்து இருக்க முடியாது.
    • 2047ம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையை தற்சார்பு கடற்படையாக மாற்றுவோம்.

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறியுள்ளதாவது: இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல சீனக் கப்பல்கள் இயங்குகின்றன 4 முதல் 6 வரை சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் சில உளவு கப்பல்கள் இயங்குகின்றன. சீன மீன்பிடிக் கப்பல்களும் இயங்குகின்றன. நாங்கள் அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.

    இந்திய பெருங்கடல் பகுதி இது ஒரு முக்கியமான பகுதி என்பதை நாங்கள் அறிவோம், அங்கு அதிக அளவு வர்த்தகம் நடைபெறுகிறது. கடல்சார் துறையில் இந்தியாவின் நலன்களைக் கவனிப்பதே எங்கள் வேலை. நம்பகமான பாதுகாப்பை வழங்குவதே எந்தவொரு ஆயுதப்படையினரின் பணியாகும்.

    இந்தியா அதன் பாதுகாப்பு தேவைக்காக தொடர்ந்து பிற நாடுகளை சாரந்து இருக்க முடியாது. சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்க முடியாது என்பதை காட்டுகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு எங்களுக்கு மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 2047ம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையை தற்சார்பு கடற்படையாக மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் கரம்பீர் சிங் இம்மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
    புதுடெல்லி:

    இந்திய கடற்படை தளபதியாக பதவி வகித்து வருபவர் கரம்பீர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி பொறுப்பேற்ற இவர், நவம்பர் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

    இந்நிலையில், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பிரபல நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் பிரபுதேவா ‘லட்சுமி’ படத்தை அடுத்து மற்றொரு நடன இயக்குனர் படத்தில் நடிக்க இருக்கிறார். #Prabhudeva
    சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், கே.ஈ.ஞானவேல்ராஜா. இவர் நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே படங்களை தயாரித்து வந்த ஞானவேல்ராஜா முதல் முறையாக ஆர்யாவை வைத்து, ‘கஜினிகாந்த்’ படத்தை தயாரித்தார்.

    அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, ‘தேள்’ என்ற படத்தை தயாரிக்கிறார். ‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.  

    பிரபுதேவா–ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில், ‘தேள்’ படத்தை தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது:–

    ‘‘ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனரை, இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் எதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நடனத்தில் அனுபவம் மிகுந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படத்தை கொடுக்க இருக்கிறார்கள். இது, எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.’’

    இவ்வாறு ஞானவேல்ராஜா கூறினார்.
    ×