என் மலர்
நீங்கள் தேடியது "தங்கம் விலை உயர்வு"
- வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத காளையாய் துள்ளிக்குதித்து எகிறி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,460-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,680-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தக்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.1,00,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.12,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1160 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டியதால், பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் இன்று காலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 213 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலை ரூ. 3 உயர்ந்த நிலையில் இன்று மாலை மேலும் ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.215-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. ஒரு சவரனுக்கு நேற்று ரூ.560 குறைந்தது. அதன்படி சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ11 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.89 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.1,360 குறைந்தது.
அதேபோல், இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று உயர்ந்தது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,250-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ரூ.90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ரூ.11,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. காலையில், கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 164 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, வெள்ளியின் விலை மாலையில் கிராமுக்கு மேலும் ஒரு ரூபாய் உயர்ந்த நிலையில் ரூ.165க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கத்தின் முதலீட்டு தேவை வலுவாக இருந்துள்ளது.
- பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் முதலீட்டு வாங்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் தங்கத்தின் தேவை 16 சதவீதம் குறைந்துள்ளது. தங்கம் விலை வரலாற்று உச்சத்தைத் தொட்டதால் நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் மந்தமானது.
அதன் தரவுகளின்படி, 2-ம் காலாண்டில் தங்கத்தின் மொத்த தேவை கடந்தாண்டின் 248.3 டன்னிலிருந்து 209.4 டன்களுக்கு குறைந்தது. இது 16 சதவீதம் குறைவாகும். ஆனால், விலை அடிப்படையில் தேவையின் மதிப்பு 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,03,240 கோடியாக உயர்ந்தது (கடந்த ஆண்டு ரூ.1,65,380 கோடி). உலகின் 2-வது பெரிய தங்க நுகர்வோர் சந்தையாக உள்ள இந்தியாவில் தங்க நகை தேவை 31 சதவீதம் குறைந்து 171.6 டன்னிலிருந்து 117.7 டன்களாக வீழ்ந்தது. எனினும், நகை வாங்குதலின் மதிப்பு சுமார் ரூ.1,14,270 கோடியில் நிலைத்திருந்தது. ஏனென்றால் வாங்குபவர்கள் உயர்ந்த விலைக்கு வாங்கவும் தங்களை தயார்படுத்தி கொண்டனர்.
மாறாக, தங்கத்தின் முதலீட்டு தேவை வலுவாக இருந்துள்ளது. தங்கத்தின் மீதான முதலீடு 20 சதவீதம் அதிகரித்து 91.6 டன்களாகவும், மதிப்பில் 74 சதவீதம் உயர்ந்து ரூ.51,080 கோடியில் இருந்து ரூ.88,970 கோடியாகவும் உயர்ந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்தது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால் முதலீட்டு வாங்குதல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க இறக்குமதி 37 சதவீதம் குறைந்து 308.2 டனிலிருந்து 194.6 டன்களாகவும், மறுசுழற்சி 7 சதவீதம் குறைந்து 21.8 டன்களாகவும் சரிந்தது. மொத்தமாக, 2025-இல் தங்க தேவையை 600-700 டன் என மதிப்பிடப்படுகிறது. முதல் 9 மாதங்களில் தேவை 462.4 டனாக இருந்தது. உலகளவில் இதற்கு எதிராக, 2-ம் காலாண்டில் தங்க தேவை 1,313 டனாக உயர்ந்தது. இதுவே இதுவரை பதிவான மிக உயர்ந்த அளவாகும்.
- தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும்.
- தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும்.
சென்னை:
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. நேற்று முன்தினம் வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயருமா? அல்லது ஏற்ற-இறக்க நிகழ்வு தொடருமா?, விலை குறையும் இந்த நேரத்தில் தங்கத்தின் மீது முதலீடு மேற்கொள்வது சரியாக இருக்குமா? என்ற கேள்வி பலருடைய மனதிலும் ஓடும்.
இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
தங்கம் விலை அதிகரிக்கும்போது, ஒருநேரத்தில் மிதமான நிலைக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு இடைவேளைதான் இந்த விலை குறைவு. இது பின்னர் மீண்டும் வேகம் எடுக்கும்.
தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) 4,100 டாலர் என்ற அளவில் இருக்கிறது. இது விரைவில் 4,500 டாலர் முதல் 4,800 டாலர் வரை செல்ல வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு 2 முதல் 3 மாதங்கள் காலம் எடுக்கும்.
ஆகவே தங்கம் விலை நிச்சயம் உயரும். அதே சமயம் ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்துக்கு கீழ் குறைய வாய்ப்பே கிடையாது.
பொருளாதார சூழ்நிலை, பிரிக்ஸ் நாடுகளின் சில முன்னேற்பாடுகள், அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள், கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், அமெரிக்க டாலர் மதிப்பு சரிவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் பெடரல் வங்கியில் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் நவம்பர் மாதம் குறைந்தால், முதலீட்டாளர்கள் அதில் இருந்து பணத்தை எடுத்தும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
அப்படி பார்க்கையில் தங்கத்தின் தேவை வருங்காலங்களில் அதிகரிக்கும். தங்கத்தை பொறுத்தவரையில் நீண்டகால முதலீட்டாகவே பார்க்கவேண்டும். குறுகியகால முதலீட்டுக்கு தங்கம் ஏற்றது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள்.
- உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
தங்கம் விலை இந்த அளவுக்கு உயரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படியாக செல்லும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது தொடர்பாக, பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஒரு பொருளின் விலை உயர்வுக்கு தேவை, வினியோகம் ஆகிய இந்த இரண்டும் முக்கிய காரணியாக இருக்கிறது. ஆபரணமாக தங்கம் இருந்த வரை ஒரு மதிப்பு இருந்தது. தங்கம் முதலீட்டு பொருளாக மாறியதோடு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு இடையே வர்த்தகத்துக்கும் முக்கிய பொருளாக மாறிய பிறகு அதன் மதிப்பு அப்படியே பல மடங்கு உயர்ந்துவிட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் எல்லா நாட்டின் அரசாங்கங்களும் சேர்ந்து 1,000 டன் தங்கத்தை வாங்கியிருப்பதாக உலக தங்க கவுன்சில் சொல்கிறது. அந்தவகையில் கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரம் டன் தங்கத்தை வாங்கியுள்ளனர். ரிசர்வ் வங்கிகள் வாங்கும் தங்கம் நேரடியாக 'கஜானா'வுக்கு சென்றுவிடும். ஏற்கனவே தங்க வினியோகம் பாதிப்பு இருக்கும் இந்த நேரத்தில், இப்படி கஜானாவில் தங்கத்தை வாங்கிவைப்பதால் மேலும் வினியோகம் பாதிக்கிறது. குறுகியகாலத்தில் இப்படி தங்கத்தை மொத்தமாக இவர்கள் வாங்கிவைத்ததன் விளைவால் தங்கம் ஏறிவிட்டது.
எந்த ஒரு பொருள் விலை ஏறி, இறங்கினாலும் அதன் மீது வர்த்தகம் செய்ய விரும்புவார்கள். பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்தவர்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கி வைக்கும் (இ.டி.எப்.) வர்த்தகத்தையும் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது படுவதாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே போகிறது.
தங்கம் விலை குறையுமா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. விலை குறைந்தால் சாதாரண மக்களும் வாங்க தயாராக இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. குறைந்ததும் அதுசார்ந்த பொருட்களை வாங்க மக்கள் எப்படி சென்றார்களோ? அதேபோல் தங்கத்தையும் வாங்குவார்கள். அப்படியாக தங்கத்துக்கான ஆதரவு முழுவதுமாக இல்லாமல் போகும் என்ற நிலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றார்.
- தங்கம் விலை காலை, மாலை என இரு வேளையும் உயர்ந்து வருகிறது.
- காலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற-இறக்கத்தில் காணப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக தினமும் காலை மற்றும் பிற்பகலில் தங்கம் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. இதனால் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களாக விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.
இன்று காலை கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று மாலை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.75 அதிகரித்து, கிராம் ரூ.11,500க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,000க்கு விற்பனையாகிறது.
இன்று காலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் தற்போது மேலும், ரூ.600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது.
- சமீப காலங்களில் டங்ஸ்டன் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.
சென்னை:
ஆபரணங்கள் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றுவது தங்கமே. தமிழர் மரபிலும், இந்திய கலாசாரத்திலும் தங்கம் செல்வச்சின்னமாகவும், முதலீட்டாகவும், குடும்ப மரபின் அடையாளமாகவும் இடம்பிடித்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டிருப்பதால், சாதாரண மக்களுக்கு தங்க நகைகள் எட்டாக்கனியாகி விட்டன.
கடந்த 1970-ம் ஆண்டு ரூ.3.32க்கு விற்ற ஒரு கிராம் தங்கம் விலை தற்போது ரூ.11 ஆயிரத்து 500-ஐ தொட்டு இருக்கிறது. அதனால் ஏழை-எளிய மக்களால் தங்கத்தை வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எனவே விஞ்ஞானிகள் தங்கத்திற்கு மாற்றான விலை குறைவான ஒரு உலோகத்தை கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இது தொடர்பாக 4 உலகளவிலான ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில் உள்ள தகவல்களில் 5 மாற்று உலோகங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு:-
பிளாட்டினம்:- தங்கத்தை விட அரிதானதும், விலை உயர்ந்ததுமாக இருந்தாலும், பிளாட்டினம் நகைகளின் பிரகாசம் தனித்தன்மை பெறுகிறது. தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாது, நீடித்த தன்மை அதிகம். ஆனால் இது தங்கத்தை விட விலை உயர்வாக இருந்தாலும், மக்களுக்கு முதலீடாகவும் இருக்கும்.
பல்லேடியம்:- பிளாட்டினத்துடன் ஒருமித்த பண்புகள் கொண்டது. வெள்ளை நிறத்தோற்றம், எடை குறைவாக இருப்பதால் மோதிரங்கள், சங்கிலிகள் போன்றவற்றுக்கு ஏற்றது.
டைட்டானியம்:- இது மிகவும் இலகுவானாலும், வலிமை மிகுந்தது. ஒவ்வாமை ஏற்படாததால், நகைகளில் அதிகம் பயன்படுத்தலாம்.
டங்ஸ்டன்:- மிக வலுவானது; கீறல் எளிதில் வராது. சமீப காலங்களில் ஆண்கள் மோதிரங்களுக்கு அதிகம் தேர்வு செய்யப்படுகிறது.
வெள்ளி:- எளிமையான விலை காரணமாக பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், விரைவில் கருமை படர்வது ஒரு சவால்.
அதேபோல் தங்கத்தின் சிறப்பே அது பொன்னிறமாக மின்னுவதுதான். எனவே 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்', டைட்டானியம் போன்ற மலிவு உலோகங்களுக்கு தங்க நிறம் தரும் டைட்டானியம் நைட்ரேட் பூச்சு போட்டு, உண்மையான தங்கம் போல தோற்றமளிக்க முடியும். வெள்ளி தங்கக்கலவையை நானோ அளவில் வடிவமைத்து, தேவையான வண்ணத்தையும், பிரகாசத்தையும் உருவாக்கலாம். இதனால், கலைரீதியான பல நிற ஆபரணங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
தோலில் ஒவ்வாமை ஏற்படுத்தாத டைட்டானியம், நையோபியம் போன்ற உலோகங்களை அடிப்படையாகக் கொண்டு நகைகள் தயாரிக்கலாம்.. இது தவிர ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் தங்கம் தொடர்பான முயற்சிகளும் நடந்து வருகின்றன. இது உண்மையான தங்கத்துடன் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும், உற்பத்தி செலவு அதிகமுள்ளதால், வணிக ரீதியில் இன்னும் அமல்படுத்தவில்லை.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
தங்கம் என்பது நம் பாரம்பரியம், நம்பிக்கை, முதலீடு ஆகியவற்றின் சின்னமாக இருப்பதால் அதை முற்றிலும் மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால், தினசரி அணிவதற்கான ஆபரணங்களில் டைட்டானியம், பல்லேடியம், பிளாட்டினம், டங்ஸ்டன் போன்ற உலோகங்களும், தங்கம் போல் தோற்றமளிக்கும் பூச்சுகளும் வருங்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே வருங்காலத்தில் நம்முடைய நகைக்கடைகளில் தங்கம் மட்டுமல்லாது, விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் புதிய உலோகங்களும் பிரகாசமாக காட்சி அளிக்க போகிறது. எனவே தங்கம் இல்லாவிட்டாலும், அதற்கு இணையான வேறு ஆபரணங்களும் சந்தைக்கு வர இருக்கின்றன.
- தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர்
- தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது தொடுத்துள்ள வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது ஏராளமானோர் முதலீடு செய்து வருகின்றனர். இது தங்கத்துக்கான தேவையை அதிகரிக்க செய்துள்ளது.
இதன் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89 ஆயிரத்து 480-க்கும், கிராம் ரூ.11 ஆயிரத்து 185-க்கும் விற்பனையானது.
புதிய உச்சமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.11,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.120உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,080
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
- ஒரு சவரன் தங்கம் விலை காலையில் ரூ.800 உயர்ந்தது.
- தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.800 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.680 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
- தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1400 உயர்ந்தது
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை உயர்ந்த நிலையில் தற்போது மீண்தும் தங்கம் விலை உயர்ந்தது.
ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.520 உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது.
இன்று காலை ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,00க்கு விற்பனையாகிறது.
- அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
- இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இரண்டாவது முறை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
மாத இறுதி நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது.
இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இரண்டாவது முறை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு காலை ரூ.30, மாலை ரூ.60 என ஒரே நாளில் ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனையாகிறது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,600க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
- அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும்.
சென்னை:
மண்ணில் போட்டதும், பொன்னில் போட்டதும் வீணாகாது என்பார்கள். அதனை மெய்யாக்கும் வகையில் தங்கத்தின் விலை விண்ணை முட்டி சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் தற்போது 890 டன் அளவு தங்கம் கையிருப்பு இருக்கிறது. அதேபோல இந்திய குடும்பங்களிடம் 25 ஆயிரம் டன் வரை தங்கம் இருக்கும் என்று உலக தங்க கவுன்சில் கூறுகிறது.
அதன் இப்போதைய மதிப்பு ரூ.190 லட்சம் கோடி இருக்கும். உலகிலேயே அதிக மக்கள் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் எது என்றால் அது இந்தியாதான். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு ஐசிஇ-360 என்ற சர்வேயில் இந்தியாவில் 87 சதவீத வீடுகளில் தங்கம் இருக்கிறது என்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த சமயத்தில் ஒரு வீட்டில் 10 கிராமம் 22 காரட் தங்கம் இருந்திருந்தால், அதன் அன்றைய மதிப்பு வெறும் ரூ.28 ஆயிரத்து 560 தான். ஆனால் இன்றைய அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 700 ஆகும்.
இதுகுறித்து தங்க கவுன்சில் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறும்போது, இந்தியாவில் 2021-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 62 சதவீத குடும்பங்கள் தொடக்கநிலை நடுத்தர குடும்பங்கள். அதாவது ஏழைகளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். எனவே இவர்களது வீடுகளில் குறைந்தது ஒரு பவுன் தங்கம் என்ற அளவிலாவது இருக்கும்.
அந்த அடிப்படையில் இந்த 62 சதவீத குடும்பங்களும் லட்சாதிபதி என்ற நிலையை எட்டி உள்ளனர். அதேபோல் 125 பவுன், அதாவது 1,000 கிராம் தங்கம் வைத்திருந்த லட்சாதிபதி குடும்பங்கள் எல்லாம் இப்போது கோடீஸ்வர குடும்பங்களாக உயர்ந்துள்ளனர். மேலும் ஏழை குடும்பங்களில் காதில் போட்டிருக்கும் கம்மல், தோடு என்ற சிறிய தங்க நகை ஆபரணமாக இருந்தாலும், அவர்களுக்கு அதன் மூலம் நல்ல லாபம் கிடைத்து இருக்கிறது. தங்கம் விலை உயர்வு ஏழைகளை லட்சாதிபதிகள் ஆகவும், லட்சாதிபதிகளை கோடீசுவரர்களாகவும் மாற்றி இருக்கிறது என்றனர்.
தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல. அது இந்திய குடும்பங்களின் உறுதியான நம்பிக்கை, மரபின் அடையாளம், எதிர்கால பாதுகாப்பு ஆகும். எனவே எவ்வளவு விலை தங்கம் வந்தாலும், நமது கலாசார நிகழ்வுகளுடன் அது தொடர்பில் இருப்பதால் விற்பனை குறையாது என்பது மட்டும் உறுதி.






