என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    GOLD PRICE TODAY: புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.88,000-ஐ நெருங்குகிறது..!
    X

    GOLD PRICE TODAY: புதிய உச்சத்தில் தங்கம் விலை.. ரூ.88,000-ஐ நெருங்குகிறது..!

    • அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இரண்டாவது முறை உயர்ந்துள்ளது.

    சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    மாத இறுதி நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் விற்பனையானது.

    இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,890-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இரண்டாவது முறை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு காலை ரூ.30, மாலை ரூ.60 என ஒரே நாளில் ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கு விற்பனையாகிறது.

    அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.87,600க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×