என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி பலி"

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் அடுத்த மேல்மொணவூர் பகுதியை சேர்ந்தவர் உமாநாத் (45) இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மேல்மொணவூர் மாரியம்மன் கோவில் எதிரேயுள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக உமாநாத் மீது மோதியது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கார் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் மேகநாதன். இவர் அரசு மருத்துவர் ஆவார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அறச்சலூரை அடுத்த ஓடா நிலை ஜெயராமபுரம் அருகே காரில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கார் எதிர்பாராத விதமாக ரோட்டின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மேகநாதன் உடல்நசுங்கி பலியானார்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறி்ந்த அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான மருத்துவர் மேகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் எதிர்பாராத விதமாக பிரியா மீது மோதியது.
    • பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி மறை மலை அடிகளார் வீதியை சேர்ந்தவர் பர்கத்துல்லா. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    பிரியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிரியா திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பு.புளியம்பட்டி வந்தார். இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சத்தியமங்கலம் சாலை அய்யப்பன் கோவில் அருகே ரோட்டை கடந்து சென்றார். அப்போது சத்தியமங்கலம் சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக பிரியா மீது மோதியது.

    இதில் பிரியா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்க த்தினர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் அன்னூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பு.புளி யம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மோகன்ராஜ் என்ப வரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் அம் பேத்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(48). கட்டிட தொழிலாளி.

    இவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையி லிருந்து சேலம் நோக்கி சென்ற கார் மூர்த்தி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி இறந்து விட்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடியை அடுத்த ராம நாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் ( வயது 34 ) . ஆவாரங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ( 24 ) .

    இவர்கள் இருவரும் நாட்டறம் பள்ளியில் உள்ள ஒரு ஹாலோ பிளாக் கம்பெனியில் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர் . பின்னர் மாலை 5 மணிக்கு நாட்டறம்பள்ளியில் இருந்து ராமநாயக்கன்பேட்டைக்கு பைக்கில் சென்றுள்ளனர்.

    புத்துக்கோவில் அருகே சென்றுகொண்டி ருந்தபோது பின்னால் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப் பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஜெயக்குமார் இறந்து விட்டது தெரிய வந்தது.

    மோகன் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×