என் மலர்
நீங்கள் தேடியது "இலங்கை பொருளாதார நெருக்கடி"
- பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளது.
- ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதந்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இலங்கை:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உணவு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் விலையேற்றமும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து உள்ளது.
இலங்கையில் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்வதால் வாழ்க்கையை நடத்த முடியாத சூழலில் மக்கள் உள்ளனர். இதனால் இலங்கை தமிழர்கள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீப காலமாக இலங்கையில் இருந்து இளைஞர்கள் அதிகளவில் வெறியேறி வருவதாக தெரிய வந்துள்ளது. இலங்கையை விட்டு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி வருவதாக நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர்கள், இளம்பெண்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலைக்காக ஒரு சிலர் மட்டுமே வெளிநாடுகளுக்கு சென்று வந்த நிலையில் தற்போது தினமும் நூற்றுக்கணக்கானோர் வெளியேறுகிறார்கள். பரபரப்பாக இயங்கும் ஒரு இடமாக கட்டுநாயக்க விமான நிலையம் மாறியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாராளுன்றத்தில் தயாசிறி ஜெயசேகர பேசும்போது:-
பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளது. ஜூன் மாத பணவீக்கம் மட்டும் 54 சதவீதமாக உள்ளது. பண வீக்கத்தில் ஜிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை தற்போது 2-வது இடத்தில் உள்ளது.
ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதந்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
தற்போது தனிநபர்கள் 20, 50 மற்றும் 100 ரூபாய் நாணயத்தாள்கள் மூலம் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.
எதிர்காலத்தில் 5 ஆயிரம் ரூபாய் நோட்டு கூட மதிப்பும் இல்லாமல் போகலாம்.
பண வீக்கம் 54 சதவீதமாக இருக்கும்போது வங்கி வட்டி விகிதம் 20 முதல் 54 சதவீதம் வரை இருக்கும்போது ஒரு நாடு எப்படி செயல்பட முடியும் என்றார்.
- பிரதமர் ரணில் விக்மரசிங்கே வீட்டு முன்பு பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.
- இலங்கை பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவிகளில் இருந்து விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகியதையடுத்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் பதவி விலகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கே வீட்டு முன்பு மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இலங்கை பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
- இலங்கையில் அரசியல் குழப்பம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
- தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் வந்திருப்பது தெரியவந்தது.
ராமேசுவரம்:
இலங்கையில் அரசியல் குழப்பம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் சமீபத்தில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.
இதைத்தொடர்ந்து நடுத்தர மற்றும் ஏழை-எளிய மக்கள் அங்கு வாழ முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் தாய் நாட்டுக்கு வர விரும்புகின்றனர்.
கடந்த 5 மாதங்களில் கடல் வழியாக படகுகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி வந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் இலங்கையை சேர்ந்த மேலும் 8 பேர் வந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றி மீனவர்கள் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இலங்கையில் இருந்து வந்த 8 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் யாழ்பாணம் வாழ்வெட்டிதுறை பகுதியை சேர்ந்த லவேந்திரன் (வயது 24), அவரது மனைவி சசிகலா (23), அவர்களது குழந்தை சதீஷ், இன்னொரு குடும்பத்தை சேர்ந்த செல்வராஜ் விஜய காந்த் (33), மற்றொரு குடும்பத்தை சேர்ந்த கமலாராணி (42), அவரது மகன்கள் சங்கரன் (19), ஸ்ரீராம் (14), மகள் நிலானி (9) என்பது தெரியவந்தது. அவர்கள் இலங்கை மீனவர்களிடம் பேசி அவர்களது பைபர் படகுகள் மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இதற்காக படகு உரிமையாளர்களிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, இலங்கையில் தற்போது சரியாக வேலை கிடைப்பதில்லை. அப்படியே சில நேரம் வேலை கிடைத்தாலும் அதன் மூலம் கிடைக்கும் கூலி பணத்தை கொண்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியவில்லை. எனவே அங்கேயே இருந்தால் நாங்கள் உணவு கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும் என்ற நிலையில் தமிழகத்திற்கு வந்துள்ளோம். எங்களது மறுவாழ்வுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கடந்த 5 மாதங்களில் இலங்கையில் இருந்து 104 பேர் படகுகள் மூலம் தமிழகம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்னிய செலாவணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
- நேற்று முதல் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்து உள்ளது.
கொழும்பு :
இலங்கை அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னிய செலாவணி இல்லாததால் புதிதாக எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஆர்டர்களை கொடுக்க முடியவில்லை.
அத்துடன் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களுக்கும் பணம் கொடுக்க முடியவில்லை. ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளுக்காக 800 மில்லியன் டாலர் அளவுக்கு பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது. அத்துடன் இறக்குமதி ஆர்டர் கொடுக்கப்பட்ட எரிபொருளுக்காக 587 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்துள்ளார். பணத்தை தேடுவது ஒரு சவாலாக இருப்பதாக கூறிய அவர், அது மிகப்பெரும் சவாலாக உருவெடுத்து இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.
நாடு முழுவதும் பெட்ரோல்-டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், 40 ஆயிரம் டன் டீசலுடன் முதல் கப்பல் வருகிற 8-ந்தேதி இலங்கை வந்து சேரும் என அவர் கூறினார். அத்துடன் பெட்ரோல் கப்பல் ஒன்று 22-ந்தேதி வருவதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு பெட்ரோல்-டீசல் வழங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்ந்து கடனுக்கு வழங்குவதற்கு தயாராக இல்லை. எனவே அன்னிய செலாவணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது.
இப்படி எரிபொருள் இறக்குமதிக்காக அன்னிய செலாவணி அதிக அளவு தேவைப்படுவதால் அதை ஈட்டுவது குறித்து அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரு பகுதியாக வெளிநாடுவாழ் இலங்கை மக்களிடம் மீண்டும் உதவிகளை கேட்டு உள்ளது. அந்தவகையில் தாயகத்தில் உள்ள தங்கள் உறவுகளுக்கு பணம் அனுப்பும் வெளிநாடு வாழ் இலங்கையர்கள், அந்த பணத்தை வங்கிகள் மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.
சுமார் 20 லட்சம் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் பணியாற்றுவதாக கூறிய மந்திரி விஜேசேகரா, அவர்கள் முறைசாரா நிறுவனங்கள் மூலம் பணத்தை அனுப்பாமல், வங்கிகள் மூலமாக அனுப்பி அரசுக்கு உதவ வேண்டும் என அறிவுறுத்தினார். பெட்ரோல்-டீசல் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் பல துறைகள் முடங்கி உள்ளன. குறிப்பாக பள்ளிகள் மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது வருகிற 8-ந்தேதி வரை மூடப்பட்டு உள்ளன.
மேலும் நேற்று முதல் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்து உள்ளது. இலங்கையில் நீடித்து வரும் இந்த மின்வெட்டு காரணமாக தொழில்துறை முடங்கி பொருளாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுவதால் தனியார் வாகன ஓட்டிகள் பெட்ரோல்-டீசல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அவர்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. குருணகேலா மாவட்டத்தில் இவ்வாறு எரிபொருளுக்காக காத்திருந்த ஓட்டுனர் ஒருவரை ராணுவ அதிகாரி ஒருவர் கடுமையாக உதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த ராணுவ அதிகாரி மீது விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில் விமான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அன்னிய செலாவணி பற்றாக்குறை காரணமாக, இலங்கைக்கான இருக்கை எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் குறைத்து விட்டன. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் 53 சதவீத அளவுக்கு இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால், ஏற்கனவே தள்ளாடி வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை மேலும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு உள்ளது.
- 6-ந்தேதி அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம், விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது.
- இலங்கையில் பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொழும்பு :
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாங்க முடியவில்லை. இதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் இலங்கை மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டது. அதை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அவசியம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களை இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இன்னும் பல எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருகிறது. இந்தநிலையில், எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையால், இலங்கை பாராளுமன்றத்தின் அலுவலக நாட்களும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த வாரம், 3 நாட்கள் மட்டும் பாராளுமன்றம் செயல்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. வருகிற 6-ந்தேதி, அத்தியாவசிய பொது சேவைகள் சட்டம், விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது. அதே நாளில், தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆகஸ்டு மாதம் வரை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை ரூ.885 கோடி செலுத்த வேண்டி இருப்பதாக இலங்கை மின்துறை மந்திரி காஞ்சனா விஜேசேகரா தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) முதல் பல்வேறு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அந்த பணத்தை தர வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தநிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டால், இலங்கையில் பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. அரசு பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்கு இந்த விடுமுறை பொருந்தும். இதனால் வீணாகும் பள்ளி நேரம், அடுத்த கோடை விடுமுறை காலத்தில் ஈடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- எரிபொருள் நெருக்கடி, இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- அத்தியாவசிய தேவைக்கு கூட எரிபொருள் கிடைப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொழும்பு :
இலங்கையில் எரிபொருளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. ஆனால் அத்தியாவசிய தேவைக்கு கூட எரிபொருள் கிடைப்பது இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொழும்புவில் அதிபர் அலுவலகம் முன்பு ஆசிரியர்களும், மருத்துவ பணியாளர்களும் போராட்டம் நடத்தினர். இலங்கையில் இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் நாடே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களும், மருத்துவ ஊழியர்களும் அரசு மீதான கோபத்தை வெளிப்படுத்தினர்.
கொழும்பு இலங்கை தேசிய மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜெயந்தா பந்தாரா பேசுகையில், நாட்டின் சுகாதாரத்துறை 90 சதவீதம் முடங்கிவிட்டதாக குற்றம் சாட்டினார். நோயாளிகள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழக்கும் சோகம் ஏற்படுவதாக மருத்துவமனை பணியாளர் குற்றம் சாட்டினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை அரசால், நாட்டை முடக்கத்தான் முடியும் என ஆதங்கத்தை தெரிவித்தார். அரசு, பொதுப்போக்குவரத்து இயங்கும் என கூறப்பட்டிருந்தாலும், பல இடங்களில் பல இடங்களில் பேருந்துகள் இயங்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. ஏற்கெனவே உணவுப்பற்றாக்குறை நிலவும் சூழலில், இப்போதைய எரிபொருள் நெருக்கடி, இலங்கை மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- வருகிற ஜூலை 22-ந்தேதி தான் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வந்தடைய உள்ளது.
- எனவே மக்கள் பொறுமை காக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவித்து வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு அவர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.
பற்றாக்குறை காரணமாக தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு வருகிற 10-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வினியோகிக்கப்படுகிறது.
இதனால் இலங்கையில் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி இருக்கிறது. இந்த நிலையில் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,
இலங்கையில் எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவே முடியாது. அந்தளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. வருகிற ஜூலை 22-ந்தேதி தான் பெட்ரோல் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வந்தடைய உள்ளது. எனவே மக்கள் பொறுமை காக்க வேண்டும்.
வருகிற 11-ந்தேதி முதல் 15-ந்தேதிக்கு இடைப்பட்ட கால பகுதியில் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று வருகிறது. இலங்கை பெட்ரோலிய கூட்டமைப்பிடம் 11 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலே கையிருப்பில் உள்ளது.
5 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு குறைவான பெட்ரோலே கையிருப்பில் உள்ளது. ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் 35 ஆயிரத்து 300 மெட்ரிக் டன் பெட்ரோல் தாங்கிய கப்பல் இலங்கைக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலங்கையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று விட்டது.
- எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்நிய செலாவாணி இருப்பு குறைந்ததால் இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது.
தட்டுப்பாடு காரணமாக, அத்தியாவசிய பணிகள் தவிர தனியார் வாகனங்களுக்கு பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு வருகிற ஜூலை 10-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இலங்கையில் வாகன போக்குவரத்து முற்றிலும் நின்று விட்டது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவிடம் இருந்து உதவிகள் பெற்று வந்த நிலையில் மற்ற நாடுகளிடம் எரிபொருள் வாங்க இலங்கை முயற்சித்து வரு கிறது. குறிப்பாக ரஷியா விடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்தது.
இதற்காக 2 அமைச்சர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தள்ளுபடி விலையில் கூடுதல் கச்சா எண்ணை வாங்க பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தொலைபேசியில் பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மகிந்தனானந்த அருத்கமகே கூறும் போது,
அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அப்போது ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வது குறித்து கலந்துரை யாடப்படும்.
கத்தாரில் இருந்து எரிபொருளை பெறுவதற்கு எரிசக்தி அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்தியாவும் மிகவும் நம்பிக்கையான நிலையில் உள்ளது.
வருகிற 10-ந்தேதி முதல் எரிபொருள் வினியோகம் வழக்கம் போல் நடைபெறும் என்றார். மேலும் அவர் கூறும் போது, கோத்தபய ராஜபக்சே மிக விரைவில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பயணம் செய்ய உள்ளார்.
இலங்கைக்கு தேவையான எரிபொருளை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த பயணம் அமைய உள்ளது என்றார்.
- கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- ஜுலை 10-ம் தேதி வரை நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது.
கொழும்பு :
அன்னியச் செலாவணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை தவித்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இலங்கையில் ஜூலை 10-ம்தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று முதல் ஜுலை மாதம் 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் ஜுலை 10-ம் தேதி வரை நகர்புற கல்வி நிலையங்கள் இயங்காது என்றும் ஏனைய அனைத்து சேவைகளும் முடக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வந்தடைந்தது.
- ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா கடனுதவி, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் அமெரிக்காவும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று கொழும்பு வந்தடைந்தது. இதில் ஆசியாவுக்கான கருவூலத்துறை துணை உதவி செயலாளர் ராபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உள்ளிட்டோர் அடங்குவர்.
இந்நிலையில், அமெரிக்க உயர்மட்டக் குழுவினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று சந்தித்தனர். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும், எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு திட்டமிடுவது குறித்தும் விவாதித்தனர்.
மேலும், இலங்கையின் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து அமெரிக்க குழுவினர் ஆலோசனை நடத்துகின்றனர்.
- அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வருகிறது.
- ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா கடனுதவி, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த வரிசையில் அமெரிக்காவும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று கொழும்பு வருகிறது.
ஆசியாவுக்கான கருவூலத்துறை துணை உதவிச்செயலாளர் ராபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழுவினர் 29-ந்தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்பட அரசு உயர்மட்ட தலைவர்களை அவர்கள் சந்தித்து பேசுகின்றனர். அத்துடன் அந்நாட்டின் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அமெரிக்க குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும், எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு திட்டமிடுவது குறித்தும் விவாதிக்க உள்ளனர். இதேபோல் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.