என் மலர்
கோவில்கள்
அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவன் பெயர்- திருத்தளிநாதர்
இறைவி பெயர்- சிவகாமி, சௌந்தர்ய நாயகி
தல வரலாறு: எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன், தலம் தோறும் எழுந்தருளி, தம்மை நாடி வருவோருக்கு அருள்பாலித்து வருகிறான். அத்தகைய அருள் சுரக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள ஸ்ரீ திருத்தளிநாதர் ஆலயம். திருத்தளிநாதர் இங்கு எழுந்தருள முக்கியக் காரணம் ஸ்ரீ மகாலட்சுமி ஆவார். ஈசனாகிய இறைவன் பல்வேறு தாண்டவங்களை நிகழ்த்தினான். அவற்றில் கௌரி தாண்டவமும் ஒன்று. அதனைக் காண விரும்பிய ஸ்ரீ மகாலட்சுமி இறைவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். அவருக்கு இறைவன் காட்சி தந்து, கௌரி தாண்டவம் ஆடிக்காட்டிய இடமே இவ்வாலயமாகும். அதனால் தான் திரு (மகாலட்சுமி) வழிபட்ட ஆலயம் என்னும் பொருள் தரும்படியாக இவ்வாலயம் 'திருத்தளிநாதர்' ஆலயம் என்று அழைக்கப்படுவதாகத் தலபுராணம் கூறுகின்றது. மேலும் வான்மீகி மகரிஷி இங்கு வந்து புற்று வடிவில் தவம் செய்து வழிபட்டதாகவும், அதனாலேயே இத்திருத்தலத்திற்கு "திருப்புத்தூர்" என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகின்றது.
பைரவர் சந்நிதி: இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் 2-வது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில், வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது.
இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் "யோக பைரவர்" என்று அழைக்கப்படுகின்றார். இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது.
சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம், வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி, சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டிற்காக பூஜை மணியடித்து விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்று தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்ரமானவராகக் கருதப்படுகிறார். உக்ரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.
யோக பைரவர் சந்நிதியை அடுத்து பிராகாரம் வலம் வரும்போது நாகேஸ்வரர் சந்நிதியும் உள்ளது. பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இத் திருத்தலத்தில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் பூஜித்து அருள் பெற்றிருக்கிறார்கள். இந்திரனின் மகன் ஜயந்தன் இங்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். இங்குள்ள ஸ்ரீ மகாலட்சுமியை வணங்குபவர்களுக்கு வளமும், நலமும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத் திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஸ்ரீ யோக நாராயணர் சந்நிதி. யோக நரசிம்மரை நாம் அறிவோம். யோக ஆஞ்சனேயரையும் அறிவோம்.
ஏன் யோக தட்சிணாமூர்த்தியையும் அறிவோம். ஆனால் ஸ்ரீமன் நாராயணனே யோக நிலையில் வீற்றிருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சமாகும். கோயிலுள் உள்ள நடராஐரின் உருவமும் சிவகாமி அம்மையின் அழகும் கண்டு இன்புறத்தக்கன. இங்கு நடராஐர் கெளரி தாண்டவ மூர்த்தியாக்க் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். அழகான சிற்ப வேலைப்பாடு அமைந்த ஐந்து இசைத் தூண்களூம் இங்குள்ளன. துர்க்கையும் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றாள். ஸ்ரீ விநாயகரும் வன்னி மரத்து விநாயகராக எழுந்தருளியிருக்கிறார். இங்கு யோக பைரவர், யோக நாராயணர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளதால் யோகத்துக்கும் தவத்துக்கும் இதுவோர் அற்புதமான திருத்தலமாக விளங்குகின்றது. இத்தலத்திலும் பிரான்மலையில் உள்ளது போலவே நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் உள்ளன.
திருப்புகழ் தலம்: இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் 2-ம் பிரகாரத்தில் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கோண்டு மயிலின் முன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.
பாண்டிய மன்னர்கள் பலரும் இத்தலத்திற்குத் திருப்பணி செய்துள்ளனர். மருதுபாண்டியர்களால் ஆராதிக்கப் பெற்ற தலம். பல்வேறு கல்வெட்டுக்களும் காணக் கிடைக்கின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் கொன்றை. தீர்த்தங்கள் திருத்தளி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்.

மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவன் பெயர் - ஏடகநாதேஸ்வரர்
இறைவி பெயர் - ஏலவார்குழலி, மாதேவியம்பிகை
மதுரையில் இருந்து வடக்கே வைகை நதியின் கரையோரம் அமைந்துள்ள சிவஸ்தலம் திருவேடகம். இங்கு வைகை நதி தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மா, பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது.
தல வரலாறு: மதுரையை அரசாண்டு வந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்தவன். அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்பவள். சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அணல் வாதம் புணல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று.
ஆனால் சம்பந்தர் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புணல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது.
மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற இந்த பாடல் பெற்ற ஸ்தலம்.

மதுரையில் இருந்து மேற்கே சுமார் 8 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 150 அடி உயரமுள்ள 7 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இறைவன் பெயர் - பரங்கிரிநாதர், பரங்குன்றநாதர், சத்தியகிரீஸ்வரர்
இறைவி பெயர் - ஆவுடை நாயகி
தலப் பெயர் காரணம்: பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார்.
சுமார் 1050 அடி உயரமுள்ள மலை அடிவாரத்தில் வடக்கு திசை நோக்கி அமைந்திருக்கும் இந்த அழகுமிக்க குடைவரைக் கோவில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்டு ஒரு பாடல் பெற்ற தலமாக இருந்தாலும், இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற காரணத்தினால் மிகவும் புகழுடன் விளங்குகிறது. மதுரையில் இருந்து மேற்கே சுமார் 8 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில் இதுவாகும். 150 அடி உயரமுள்ள 7 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது.
கோபுர வாயில் கடந்தவுடன் உள்ள மண்டபத் தூண் ஒன்றில் தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது போன்ற சிற்பம் நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. இம்மண்டபத்திலுள்ள பெரிய நந்தி, அருகில் மயில் மற்றும் மூஞ்சூறு வாகன சிலா உருவங்கள் மிகவும் கண்ணைக் கவரும் நிலையில் இருக்கக் காணலாம். பல படிக்கட்டுகளை ஏறி கோவில் கருவறையை அடையலாம். கருவறை ஒரு குடவரைக் கோவிலாக உள்ளது. இதில் இறைவன் பரங்குன்றநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
பரங்குன்றநாதர் மற்றும் பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோரை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் சிறப்பு நுழைவுக் கட்டணம் செலுத்தி அதற்கான தனி வழியில் சென்றால் தான் பார்க்க முடியும். மேலும் மற்ற 3 சந்நிதிகளையும் அருகிலிருந்து தரிசிக்க முடியும். இல்லாவிடில் இலவச தரிசனத்தில் சற்று தொலைவிலிருந்து மற்ற 3 சந்நிதிகளான விநாயகர், துர்க்கை, முருகர் ஆகியோரை மட்டுமே பார்க்க இயலும். குடவரைக் கோவிலின் அமைப்பு அவ்வாறு அமைந்துள்ளது.
முருகப் பெருமான் திருமணம்: முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் - தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் மார்க்கமாக சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 8-வது கிலோ மீட்டரில், சுத்தமல்லி விலக்கில் இருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் நல்லதாய் அம்மனை தரிசிக்கலாம்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை தன் ஆட்சியின் கீழ் அரசாட்சி செய்தவன், முதலாம் குலோத்துங்கச் சோழன். இவனது மகள் ‘சித்தவல்லி.’ மகளின் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்த குலோத்துங்கன், தன் ஆளுகையின் கீழ் இருந்த பல ஊர்களுக்கு தன் மகளின் பெயரைச் சூட்டி மகிழ்ந்தான். திருவிடைமருதூர், காஞ்சிபுரம் போன்ற ஊர்களின் அருகே சித்தவல்லி பெயரில் பல ஊர்கள் உள்ளன.
அப்படி திருநெல்வேலியை அடுத்த 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ‘சித்தவல்லி’ என்ற சிற்றூர் தான், தற்போது மருவி ‘சுத்தமல்லி’ என்றழைக்கப்படுகிறது. தந்தையின் ஆளுமைக்கு கீழ் உள்ள பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்த சித்தவல்லி, இந்தப் பகுதியின் இயற்கைச் சூழல் பிடித்து சில காலம் இங்கேயே தங்கியிருக்க முடிவு செய்தாள். மன்னனும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தான்.
தென்மேற்குப் பகுதிக்குச் சென்ற சித்தவல்லி, அங்கு அமைந்திருந்த சிவன் கோவிலில் கந்தர்வன் ஒருவன் வேள்வி செய்து கொண்டிருப்பதைக் கண்டாள். இளவரசிக்கு, தானும் சிவபெருமானை வழிபட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. இதுகுறித்துக் கந்தர்வனிடம் வினவினாள். கந்தர்வனும் ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிவருமாறு அவளுக்கு உபதேசித்தான். அதன்படியே சித்தவல்லியும் மந்திரத்தை ஓதி சிவபதம் அடைய முற்பட்டாள்.
இதற்கிடையில் குலோத்துங்கன், இலங்கையை ஆண்டுகொண்டிருந்த பாண்டிய மன்னனாகிய வீரபெருமானுக்கு, சித்தவல்லியை மணம் முடித்து கொடுக்க முடிவெடுத்தான். திருமணம் விமரிசையாக நடந்தது. காலம் செல்லச் செல்ல சித்தவல்லிக்கு, இல்லறத்தின் மீதான ஆர்வம் குறைந்தது. சிவ வழிபாடு செய்வதிலேயே காலத்தைக் கழிக்க விரும்பினாள். உடல் மீதான பற்று அவளுக்கு குறைந்துபோனது.
இதையறிந்த குலோத்துங்கச் சோழன், மனம் வருந்தினான். இருப்பினும் மகள் வழிபாடு செய்வதற்காக, பகவதீஸ்வரர் கோவிலை நிறுவித்தார். இந்தக் கோவிலிலேயே தங்கியிருந்து சிவபூஜை செய்து வந்தாள், சித்தவல்லி. நாளடைவில் அவளது, உடல் ஒளியையும், தெய்வீக சக்தியையும் அடைந்தது. உயிர் மறுமை இன்ப நிலைக்கு உயர்ந்தது.
சித்தவல்லியின் கனவில் தோன்றிய ஈசன், அவளது மன வலிமையை பாராட்டி, அவள் முக்தி நிலையை அடைவதற்கான வழியை கூறி மறைந்தார். இதையடுத்து தான தர்மங்கள் பல செய்து ‘நல்லதாய்’ என்றும் ‘சித்த வல்லி நாச்சியார்’ என்றும் பெயரைப் பெற்றாள். பின்னர் முடிவில் சிவபெருமான் அருளால், முக்தி கிடைக்கப் பெற்று தெய்வ நிலையை அடைந்தாள் என்கிறது இத்தல வரலாறு.
சுத்தமல்லியில் உள்ள பகவதீஸ்வரர் கோவிலில் குலோத்துங்க மன்னன், சித்தவல்லி நாச்சியார் சிலைகள் உள்ளன. இது சம்பந்தப்பட்ட கல்வெட்டுகளும் கோவிலில் காணப்படுகின்றன. இவளது தெய்வநிலைக்குக் காரணமான கந்தர்வன் வணங்கிய சிவன்கோவில், ஊருக்கு தென்மேற்கே ‘கந்தர்வேஸ்வரர் கோவில்’ என்ற பெயரில் உள்ளது. இதனை தவணைக் கோவில் என்றும் அழைப்பார்கள். தாமிரபரணியில் ‘கந்தர்வ தீர்த்தம்’ இருக்கிறது.
பகவதீஸ்வரர் கோவிலின் ஈசான மூலையில்தான், சித்தவல்லி நாச்சியார் என்னும் நல்லதாய் அம்மன் கோவில் உள்ளது. அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்துவதே உயர்வு. இவ்வாறு கட்டுப்படுத்தியவர்களில் சித்தவல்லியும் ஒருவர். உண்மையான சித்தி ‘ஞானசித்தி’யும், அறிவு சித்தியும்தான். ஞானத்தாலும் அறிவாலும் சித்தி பெற்றவர்களையே ‘சித்தர்’ என்பார்கள். இவ்வரிசையில் பெண் சித்தராக ‘சித்தவல்லி’யும் இடம் பெறுகிறார்.
சித்தவல்லி என்னும் நல்லதாய் நாச்சியார், கோடகன் கால்வாய் கரையில் வடக்குநோக்கி தண்ணீர் பாய்ந்தோடும் இடத்தில் வலப்புறக் கரையில் கம்பீரமாக உள்ளார். அவரை சுற்றி நீர் வளமும், வயல்கள் சூழ்ந்தும் பச்சை மற்றும் மஞ்சள் கம்பளம் விரித்தது போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாறி வர்ண ஜாலம் காட்டுகிறது. இவர் பார்வை பட்ட இடமெல்லாம் விளைச்சல்தான்.
இக்கோவிலுக்கு கொடை விழா இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஆடி மாதம் நடைபெறுகிறது. இவ்விழாவில் மிகவும் சிறப்பு பெற்ற நிகழ்ச்சி மதுகுடம் பொங்குதல். திருவிழாவின் முதல்நாள் குடத்தில் வைக்கப்படும் நவதானியங்களில் இருந்து எடுக்கப்பட்ட பால் பாதியளவு புதிய மண்குடத்தில் ஊற்றப்படும். அந்த பால் சூடு பண்ணாமலேயே பொங்கும். இதை மது குடம் பொங்குதல் என்று கூறுவார்கள்.
இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சூறை நடைபெறுகிறது. ஆடிமாதம் கடைசி ஞாயிறு அன்று அன்னாபிேஷகம் நடைபெறும். பவுர்ணமி தோறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மிகவும் சிறப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ராகுகால பூஜை நடைபெறும். இந்த பூஜையில் கலந்து அம்மனின் அபிஷேகம், அலங்காரம், பூஜையை கண்குளிர வேண்டி நின்றால் தடைப்பட்ட திருமணம் மற்றும் குழந்தைபேறு உள்பட கேட்டவரம் கிடைக்கிறது. இதனால் அம்மனை வணங்க பல்வேறு ஊரில் இருந்து மக்கள் வந்து காத்து கிடக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் மார்க்கமாக சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 8-வது கிலோ மீட்டரில், சுத்தமல்லி விலக்கில் இருந்து 1 கிலோமீட்டர் ஊருக்குள் சென்றால் நல்லதாய் அம்மனை தரிசிக்கலாம்.
முத்தாலங்குறிச்சி காமராசு

பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சாஸ்திரப்படி கோவில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோவில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோவில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்ட பாசுபதேஸ்வரர் கோவில் கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும்.
மூலவர் : பாசுபதேஸ்வரர்.
தாயார் : சத்குணாம்பாள், நல்லநாயகி.
தல விருட்சம் : மூங்கில்.
தீர்த்தம் : கிருபா தீர்த்தம்.
ஆகமம் : காமிய ஆகமம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.
புராண பெயர்ஃஊர் : திருவேட்களம்.
தல வரலாறு :
இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார்.
அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம், உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது, என சமாதானப்படுத்தி 'சற்குணா" (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார்.
சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
தலபெருமை :
அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார்.
அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.
தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
பிரார்த்தனை :
பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
மூலவர் : பாசுபதேஸ்வரர்.
தாயார் : சத்குணாம்பாள், நல்லநாயகி.
தல விருட்சம் : மூங்கில்.
தீர்த்தம் : கிருபா தீர்த்தம்.
ஆகமம் : காமிய ஆகமம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்.
புராண பெயர்ஃஊர் : திருவேட்களம்.
தல வரலாறு :
பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன், நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும், என்றார்.
அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது. கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம், உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது, என சமாதானப்படுத்தி 'சற்குணா" (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார்.
சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.
தலபெருமை :
அர்ஜுனன் தவம் செய்து, பாசுபதம் பெற்ற முதன்மைத் தலமாகக் கருதப்படுவது திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார்.
அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இத்தலத்தில் முருகப்பெருமான் பன்னிரு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் மயில் மீது கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.
தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
பிரார்த்தனை :
பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோவிலாகும்.
பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோவிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும்.
கோயில் அமைப்பு
இந்த சிவாலயம் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.
இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.
நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.
இறைவன், இறைவி
மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர்.
ஆழத்து விநாயகர்
முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
ஆகமக் கோயில்
சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார். இந்த லிங்கங்கள் கைலாசப் பிராகாரத்தின் வட மேற்கு பகுதியில் தனி சன்னதியில் அமைந்துள்ளன. இதில் தெற்கு வரிசையில் உள்ள லிங்கங்களில் நடுவில் விநாயகரும், மேற்கு வரிசையில் உள்ள லிங்கங்களின் நடுவில் வள்ளி தெய்வானையுடன் முருகனும் அருள்பாலிக்கின்றனர். 28 ஆகமங்களுக்குரிய பெயர்களான, காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், சூட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவாயம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திரஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், வாதுளேஸ்வரர் என்ற பெயர்கள் அவற்றுக்கு சூட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் காண இயலாத சிறப்பாகும். இக்கோயிலை ஆகமக்கோயில் என்றும் அழைப்பார்கள்.
கோயில் சிறப்பு
* இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
* இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.
* காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.
* 63 நாயன்மார்கள் சிலை காண்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது.
அருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில்
விருத்தாசலம்
விருத்தாசலம் அஞ்சல்
கடலூர் மாவட்டம்
PIN - 606001

திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
சனி ராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து பணி உயர்வு திருமண வாய்ப்பு குழந்தைப்பேறு வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற் பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோவில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.
அனுமன் வரலாறு :
அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது வானத்தில் தெரிந்த சூரியனைப் ‘பழம்’ என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் ‘அனுமன்’ என்று அழைக்கப்பட்டான். அனுமன் என்பதற்கு ‘வளைந்த தாடையை உடையவன்’ என்று பொருள்.
வளர்ந்து பெரியவனான அனுமன் சீதையைத் தேடி வந்த ராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் ராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை.
உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன் ராமனிடம் கொண்ட பக்தியும் வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.
அனுமன் சீதையை மீட்பதற்காக முதலில் ராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் ராவணனை அழிப்பதற்கான போரில் ராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது ராம பக்தியினாலும் தன்னலமற்ற சேவையினாலும் ராமாயண இதிகாசத்தில் ராமன் சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.
அனுமன் கோவில்கள் :
தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம் நாமக்கல் நங்கநல்லூர் தெய்வச்செயல்புரம் குலசேகரன்கோட்டை பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும் பல ஊர்களில் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோவில்களில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாக இருக்கிறது.
தல வரலாறு :
பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன் இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும் இங்கு தனக்குக் கோவில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவிலில் மூலவரான ஆஞ்சநேயர் ‘வணங்கிய நிலை’யில் 16 அடி உயஇஇஇஇஇரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரது மார்பில் சிவலிங்கம் உள்ளது. கால்களில் காலணி அணிந்து இடுப்பில் கத்தி சொருகியபடி கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று அவரது உருவம் வடிக்கப்பட்டிருக்கிறது.
நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்டது இந்தச் சிலை. அனுமனின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன். இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிக்கப்பட்டுள்ளது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் கல்வி செல்வம் ஆகியவற்றுடன் நீண்ட ஆயுள் கிடைக்கும். அனுமனின் வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. மேலும் இத்தல அனுமனை வழிபட்டால் சனி ராகு போன்ற கிரகங்களின் தோஷங்கள் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்தக் கோவிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோவிலின் மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன் நீலன் அங்கதன் குமுதன் சு கிரீவன் ஜாம்பவான் ஜிதன் ஜூவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோவில் வளாகத்தில் ராமர் சீதை லட்சுமணர் சிலைகளும் கோவிலின் சுற்றுப்பகுதியில் லட்சுமி சரஸ்வதி சிலைகளும் இருக்கின்றன.
ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும் சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோவிலின் எதிரில் உள்ள சிறு மலை என்றும் கூறுகின்றனர்.
சிறப்பு வழிபாடுகள் :
ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும் சனிக்கிழமைகளிலும் இங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம் ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனிக்கிழமை ராஜ அலங்காரம் இரண்டாவது சனிக்கிழமையில் செந்தூர அலங்காரம் மூன்றாவது சனிக்கிழமை பச்சை அலங்காரம் நான்காவது சனிக் கிழமை சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம் ஐந்தாவது சனிக்கிழமை பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடக்கிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம் 108 கலசாபிஷேகம் 7 வருணாபிஷேகம் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம் அதையடுத்து கருடர் வராகர் நரசிம்மர் ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.
அமைவிடம் :
திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளபட்டி. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுப்பட்டியில்தான் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கபிஸ்தலம் என்றழைக்கப்படும் கிருஷ்ணரின் ஷேத்திரமான கபிஸ்தலம் உள்ளது.
கபிஸ்தலம் (திருக்கவித்தலம்)
கோவிலின் பெயர் : கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், கபிஸ்தலம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : கஜேந்திர வரதன்
கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
தாயார் : பொற்றாமரையாள் (ரமாமண வல்லி)
விமானம் : ககநாகிருத விமானம்
தீர்த்தம் : கபிலதீர்த்தம், கஜேந்திர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள் : கஜேந்திரன் என்ற யானை, முதலை, சிறிய திருவடி
சிறப்புகள் : 108 திவ்ய தேசங்களில் இரண்டு விலங்கினங்களுக்கு காட்சி கொடுத்தது இங்கு மட்டும்தான்.
விப்ரசித்தி அரசருக்கும், சிம்ஹிகை என்ற அரசிக்கும் பிறந்தவர் ராகு. அசுர குலத்தைச் சேர்ந்த ராகுவுக்கும் அமுதம் குடிக்கும் ஆசை ஏற்பட்டது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் எப்போதும் யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். எனவே தேவர்கள் சாகாமலிருக்க பாற்கடலைக்கடைந்து அமுதத்தை உண்ண எண்ணினார்கள். பாற்கடலை ஆதிசேஷன் என்ற நாகத்தைக் கயிறாகக் கொண்டு கடைந்து கொண்டே வரும்போது அமுதமும் விஷமும் கலந்தே வந்தன.
மகா விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தேவர் களுக்கு அமுதத்தைக் கிண்ணத்தில் ஏந்தி கரண்டியால் கொடுப்பதற்காக தேவர்களை ஒருவரிசையாக அமரச் சொன்னார். இதை சூசகமாகக் கண்டு பிடித்த அசுரகுல ராகு, சூரிய சந்திரர்கள் மத்தியில் அமர்ந்து விட்டான். எல்லோரும் அமுதத்தை உண்டபின் சூரிய சந்திரன் அமுதம் உண்ட ராகுவை யாரெனக்கண்டு பிடித்து மகாவிஷ்ணு விடம் கூற அவர் அசுரனான ராகுவின் தலையைக் கையில் இருந்த கரண்டியால் வெட்டிவிட்டார்.
கரண்டியால் துண்டிக்கப்பட்ட பிறகும் இந்த இரண்டு முண்டங்ளும் அமுதம் உண்டதால் இறவாமல் உயிருடன் வாழத் தொடங்கின. தலைப்பாகம் ராகுவென்றும், உடல் பாகம் கேது என்றும் பெயர் பெற்றன.
அவன் அவசரப் பட்டுச் செய்த காரியத்தால் அரக்கர்களும் அவரை தங்களுடன் சேர்ந்துக் கொள்ளவில்லை. தேவர்களும் சேர்த்துக் கொள்ளவில்லை. அவன் க¬லையுடன் பிரம்மாவிடம் சென்றான். அவர் பாதங்களில் பணிந்து தன் நிலையை வருத்தத்துடன் சொல்லி உடலையும் தலையையும் ஒன்று சேர்க்கும்படி கேட்டுக் கொண்டான்.
பிரம்மா மனம் இரங்கினார். “கசியப முனிவரின் பேரனே, உன்முன்னோர்களின் காரணமாக உனக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் திருமால் உன் தலையைத் துண்டித்திருக்கிறார். அதை ஒன்று சேர்க்கும் வல்லமை எனக்கு இல்லை.
உன் உடலும் தலையும் பிரிந்து போகாமலிருக்க ஒரு வரம் அளிக்கிறேன். சூரியர் சந்திரர்களால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு எதிர் திசையில் நீங்கள் சஞ்சரித்து நவக்கிரகத்தில் ஒருவனாக இருப்பாய். உன் தலைப்பகுதி ஒரு பக்கமும் அதற்கு நேர் எதிர்ப் பக்கம் உடல் பகுதியும் இருக்கும். தலைப்பகுதி என்பது ராகு என்றும் உடல் பகுதி கேது என்றும் பெயர் பெறும். ராசி மண்டலத்தில் உங்களுக்குச் சொந்த ராசி இல்லாவிட்டாலும் நீங்கள் எந்த ராசியில் சஞ்சரிக்கிறீர்களோ அந்த ராசிக்கேற்ப பயன் அளிப்பவராவீர்கள். எல்லா கிரகங்களின் வல்லமையும் உனக்கு ஏற்படும். ஜாகத்தின் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப பயன் அளிப்பவராகவும் பழி வாங்கபவராகவும் செயல்படுவாயாக, உன்னை ராகு-கேது-சாயா கிரகம்-நிழல் கிரகம் என்ற பெயரால் அழைப்பர்.
உன்னைக் காட்டிக் கொடுத்து இந்த நிலைக்குள்ளாக்கிய சூரிய சந்திரரை மறைத்து ஒளிமங்கச் செய்து கிரகணதோஷம் ஏற்படுத்தக் கூடியவராக விளங்குவீராக என்றார்.அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றினார். கற்றறிவே இல்லாத சுவர்பானுவுக்கு நவக்கிரக பதவி அளிப்பது அவ்வளவு நல்லதல்ல. ராகு-கேது என்ற இரண்டு கிரகமாக அவன் சாஸ்திரஙக்ளையும் கற்க வழி செய்ய வேண்டும். கடக ராசியில் கேது, ரிக், யஜுர், சாம வேதங்களைக் கற்று ஞானகாரனாகவும் மகா ராசியில் ராகு தங்கி அதர்வண வேதத்தையும் கற்று போக யோககாரனாகவும் விளங்க அருள் புரிந்தார்.
நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள். ராகு தசை, கேது தசை காலங்களில் ஜாதகர் தம் முற்பிறவியின் பயனை அனுபவிக்கத் தவற மாட்டார். ஜாதகத்தில் ராகு-கேது கேடு செய்பவராக இருந்தால் அவர்களுக்குச் சாந்தி செய்தால் நன்மை கிடைக்கும். பரிகாரமாக அவர்களைப் பூசித்து வந்தால் நன்மை பல கிடைக்கும்.
ராகுவும், கேதுவும் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை விழுங்கி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை இடப்புறமாக சுற்றிக் கொண்டு வருவதாகவும், அவர்களால்தான் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன. ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ராகு கேதுக்கு இல்லமோ வாரமோ இல்லாததால் எந்தக் கிழமையும் அவர்களுக்கு ஏற்றது. நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முறையாக அந்தக் கிழமைகளில் நீராடி புளிப்பு அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். மந்தாரை மலர்கட்டி, மந்தாரை மலராலேயே பூஜிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பதும் அவசியமாகும். பிரசாதத்தை யாராவது ஒருவருக்கோ, பலருக்கோ கொடுத்து பூஜிக்கச் சொல்லவும். தாம்பூலம், தட்சிணை கொடுத்துநமஸ்காரம் செய்யவும்.
பொதுவாக, ராகு திசை நடைபெறும் காலத்தில் முற்பகுதியில் எல்லாவித செல்வங்களையும் வசதிகளையும் கொடுப்பார். ஆனால் பிற்பகுதியில் கொடுத்தவை அனைத்தையும் பறித்துக் கொள்வார். இதில் இருந்து விடுபட கபிஸ்தலம் சென்று கஜேந்திர வரதராஜ பெருமாளை வழிபட வேண்டும். அதுபற்றி காணலாம்...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கபிஸ்தலம் என்றழைக்கப்படும் கிருஷ்ணரின் ஷேத்திரமான கபிஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்தும் திருவையாறில் இருந்தும் பஸ் வசதிகள் உண்டு.
இக்கோவிலில் உள்ள மூலவரான கஜேந்திர வரதன் கிடந்த கோலத்தில் புஜங்க சயனமாக சேவை தருகின்றார். இவர் தனது பக்தனாக விளங்கிய கஜேந்திரன் என்ற யானைக்கும் ஆஞ்சநேயருக்கும் பிரதியட்சம் ஆனவர். தாயார் ரமாமணிவல்லி என்றழைக்கப்படும் பொற்றாமரையாள் ஆவார். திருமழிசையாழ்வார் ஒரு பாசுரத்தால் இக்கோவிலில் மங்களாசாசனம் செய்துள்ளார்.
வானர இனமாய் பிறந்திருந்தும் அனைத்து வல்லமைகளையும் கைவரப் பெற்று ஞானத்தில் தலைசிறந்த சிரஞ்சீவி பட்டம் பெற்ற ஆஞ்சநேயருக்கும் யானையாக பிறந்து பக்தியால் ஆழ்வாரின் அந்தஸ்தை அடைந்திட்ட கஜேந்திரனுக்கும் தன் கிடந்த கோல புஜங்க சயனத்தில் எம்பெருமான் பிரதியட்சமாக சேவை தந்த தலம் கபிஸ்தலம் ஆகும்.
அனுமனுக்கும் ஸ்ரீராமபிரானாக அருள் செய்த பெருமாள் கொடிய முதலையின் வாயில் சிக்கிக் கொண்டு பொய்கையில் நின்ற நிலையில் வானத்தை நோக்கி ஆதிமூலமே என்று கஜேந்திரன் என்ற அந்த யானை பிளிரி தன்னைச் சரண் அடைந்தபோது கருடன் மீதேறி பறந்து வந்து காத்து அருளினார். ஆதிமூலப் பெருமானாகிய ஸ்ரீநாராயணர் இத்தலத்தில் குரங்கான ஆஞ்சநேயருக்கும் யானைக்கும் கிடந்த கோல சேவையை அருளியிருக்கிறார்.
கபியான குரங்கிற்கு கிடந்த கோல சேவை கிடைத்த படியால் இத்தலம் கபித்தலம் என்ற பெயர் பெற்றது. யானையான கஜேந்திரன் பக்தியுடன் தான் பறித்து வந்து பூஜை செய்த தாமரையை பொற்றாமரையாள் என்ற பெயருடன் பெருமாளின் ஏகபத்தினியாக ரமாமணி வல்லியாக தாயார் பெரிய பிராட்டியார் இவ்விடத்தில் சேவை தந்தருளுகின்றார்.
இக்கோவிலில் புஷ்கரணி கஜேந்திர புஷ்கரணி மற்றும் கபில தீர்த்தம் ஆகியவை ஆகும். இக்கோவிலின் விமானம் கதநாக்ருதி விமான அம்சத்துடன் விளங்குகிறது.
செல்லும் வழி : பாபநாசம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோவிலின் பெயர் : கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், கபிஸ்தலம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : கஜேந்திர வரதன்
கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
தாயார் : பொற்றாமரையாள் (ரமாமண வல்லி)
விமானம் : ககநாகிருத விமானம்
தீர்த்தம் : கபிலதீர்த்தம், கஜேந்திர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள் : கஜேந்திரன் என்ற யானை, முதலை, சிறிய திருவடி
பாசுரங்கள் : 1

இது புதனுக்குரிய பரிகாரத் தலம். இங்கே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உகந்தது. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு நடத்தி, நல்லறம் காண்கின்றனர் திருப்புள்ளம்பூதங்குடி
கோவிலின் பெயர் : வல்வில் ராமன் திருக்கோவில், புள்ளப்பூதங்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : வல்வில் ராமன்
கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
தாயார் : பொற்றாமரையாள் (ஹேமாம்புஜ வல்லி)
விமானம் : சோபன விமானம்
தீர்த்தம் : ஜடாயு தீர்த்தம், கிருத்ர தீர்த்தம்
காட்சி கண்டவர்கள் : கிருத்ர ராஜன், ராமர்
பாசுரங்கள் : 10
சிறப்புகள் :
ஜடாயுவிற்கு இறுதிச் சடங்குகளைச் செய்த தலம், திருமங்கையாழ்வாருக்கு சங்கு சக்ரதாரியாக ராமர் காட்சி அளித்த தலம். சீதையைப் பிரிந்திருந்த நேரம் என்பதால் சீதை இல்லை, பூமாதேவி மட்டும் உள்ளார்.
செல்லும் வழி : சுவாமிமலை தாண்டி திருவைகாவூர் பாதையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
புதன் கிரகம் சந்திரனுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவர். சகல கலைகளிலும் வல்லவர். மகா ஞானியாக விளங்குபவர்.கிரகங்களிலே சுபக்கிரகர், தன்னை வழிபடுகிறவர்க்கு மிகுதியாக அறிவை கொடுப்பவர். ஞானகாரகர் இவர் வாக்குச் சாதுர்யம் அளிப்பவர். தீயகிரகங்களால் உண்டாகும் பீடைகளை நீக்கும் ஆற்றல் உடையவர், சாந்த குணமுள்ளவர்.
இவரது மனைவி இளை என்றம் புத்திரர் புரூரவர் என்றும் சொல்லப்படுகிறார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதாலும் பச்சை நிறப்பட்டு உடுத்துவதாலும் பச்சைக்கல் தரிப்பதாலும் பச்சைப் பயறு தானம் கொடுப்பதாலும் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் பண்ணுவதாலும் புதக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். புதன் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலி கிரகம் ஆகும். புத பகவானின் ஆதிக்கம் பெற்றவர்களில் பலர் திக்கித் திக்கிப் பேசுவார்கள். வைராக்கியம் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.
நல்ல கல்வியறிவும், வாக்கு வன்மையும் பெற்றவர்களாக இருப் பார்கள். நல்ல சிந்தனை சக்தியும், கலைத்திறனும், வாக்கு நாணயமும், இளமையான தோற்றமும், ஓவியக் கலை, சிற்பக்கலை போன்றவற்றில் தேர்ச்சியும் பெற்றி ருப்பார்கள். புதன் கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு 2, 6, 8, 10, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலன்களை அளிப்பான். இவை தவிர மற்ற ஸ்தானங்களில் சஞ்சரிப்பின் தீய பலன்களை அளிப்பான். புதன் தசை நடைமுறையில் இருக்கும் காலங்களில் கெடு பலன்கள் நடக்காமல் இருக்க, அதிதேவதையான மகா விஷ்ணுவை புதனன்று வழிபாடு செய்வது நல்லது. இதற்கு திருப்புள்ளம்பூதங்குடி தலத்துக்கு செல்ல வேண்டும்.
அது திரேதாயுகம். சக்ரவர்த்தித் திருமகன் ராமனின் மனைவி சீதையைக் கவர்ந்து சென்றான் இலங்கை அரக்கர் வேந்தன் ராவணன். அவன் தென்பகுதிக் காட்டைக் கடந்து சென்றபோது, அவனுக்குத் தடைபோட்டபடி துரத்தியது கழுகு வேந்தன் ஜடாயு. இருவருக்கும் நிகழ்ந்த சண்டையின் முடிவில், கழுகின் சிறகை வெட்டி வீழ்த்தினான் ராவணன். கீழே விழுந்த ஜடாயு, குற்றுயிரும் குலையுயிருமாக ராம நாமத்தைச் சொல்லி முனகியபடி காத்திருந்தது.
அதேநேரம், சீதையைத் தேடி தென்பகுதிக்கு வந்த ராமனுக்கு இந்த முனகல் சத்தம் கேட்டது. அப்போது ஜடாயுவை சிதைந்த கோலத்தில் கண்டனர் ராமனும் லட்சுமணனும். ராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும் தகவலைக் கூறி, அதைச் சொல்வதற்காகவே தாம் காத்திருந்ததாகக் கூறி உயிரை விட்டது ஜடாயு. இதனால் மிகவும் துயரம் அடைந்த ராம லட்சுமணர்கள் ஜடாயுவின் இறுதிச் சடங்கை நிறைவேற்ற எண்ணினர். இறுதிச் சடங்கை நிறைவேற்ற வேண்டுமாயின் தம்பதியாக இருந்து செய்ய வேண்டும் என்பதால், சீதை உடன் இல்லாத நிலையை எண்ணி மிகவும் வருத்தம் கொண்டார் ஸ்ரீராமர்.
மனதளவில் சீதையை உடன் இருத்தி ஈமக்கடன் செய்ய முயன்றார். ஆனால் அவருடைய நிலையை எண்ணி இரங்கினார் பூமிப் பிராட்டி. சீதாதேவி தன் அம்சம்தானே என்பதால், தாமே அருகில் இருந்து ஈமக் கடன் நிறைவேறத் துணை புரிந்தாள் பூமிப் பிராட்டி. அதனால் ஜடாயுவின் ஈமக் கடன்கள் நிறைவேறின. இந்த நிகழ்வினை நினைவுறுத்தும் வகையில் இங்கே தலம் அமைந்தது.
காஞ்சிபுரத்தருகே திருப்புட்குழி என்ற தலத்திலும் பெருமான் தம் மடியில் ஜடாயுவைக் கிடத்தி ஈமக்கடன் நிறைவேற்றிய கோலம் கொண்டார். இங்கே ராமபிரான் சயனக் கோலம் கொண்டது சிறப்பு. புள் எனும் பறவையாகிய ஜடாயுவுக்கு மோட்சம் அளித்த தலம் என்பதால், புள்ளங்குடி என்றும், திருப்புள்ளம் பூதங்குடி என்றும் ஆனது இந்தத் தலம்.
வல்வில் ராமன் என்ற பெயரில் பெருமான் இங்கே காட்சியளிக்கிறார். எப்போதும் உடன் இருக்கும் சீதாப்பிராட்டி உடன் இல்லை. கையில் தாம் வைத்திருக்கும் கோதண்ட வில்லே துணையாகப் பிடித்து தம் மனைவியைப் பிரிந்த ஏக்கத்தை ஒருவாறு போக்கிக் கொண்டார் பெருமான். எனவே இவர் இங்கே வல் வில் ராமன் எனப்பட்டார். இருப்பினும், ஜடாயுவுக்கு இறுதிக் கடன் முடிக்கும்போது, பூமிப் பிராட்டியே உடன் வந்தமர்ந்து, கடன் நிறைவேற்றத் துணைபுரிந்தார்.
கிருத்ர ராஜன் என்ற அரசன். இதயசுத்தியுடன் மனத்திலும் அறிவிலும் ஸ்ரீமந் நாராயணனை நினைந்து தவம் புரிந்தான். அவனது தவ வலிவுக்கு மெச்சிய ராமபிரான் இங்கே புஜங்க சயனத்தில் கிருத்ர ராஜனுக்கு காட்சி கொடுத்தார். அவனால் இந்தத் தலத்தின் தீர்த்தம் சீரமைக்கப்பட்டது. எனவே அவன் பெயரில் கிருத்ர தீர்த்தம் எனப் பெயர் பெற்றது. இங்கே பெருமான் தனக்கே பிரத்யட்சமாக தரிசனம் கொடுத்துக் கொண்டார் என்பது சிறப்பு. ஸ்ரீராமனாக மனித அவதாரம் எடுத்தாலும், ஸ்ரீமந் நாராயணன் இங்கே அவருக்கு மூல அவதார ரூபத்தைக் காட்டிக் கொடுத்தாராம். ஏற்கெனவே பரசுராமனை ஓர் இடத்தில் சந்தித்தார் ஸ்ரீராமன். பரசுராமனின் கர்வத்தை பங்கம் செய்தவர், இரு அவதாரங்களுமாய் சந்தித்ததற்கு சாட்சியானர்.
பரசுராம அவதாரத்தில், தந்தையாரின் வார்த்தைக்கு செவிமடுத்து, தாயைக் கொன்றார் ஆனாலும், தந்தையிடம் தாயை உயிர்ப்பித்துத் தரும்படி வரம் கேட்டுப் பெற்றார். அவ்வாறு, இந்த அவதாரத்தில், தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பளிக்கும் மகனாகத் தம்மை வெளிப்படுத்தினார் ஸ்ரீராமர். ராமன் தான் காட்டில் இருந்தபடியால் தம் தந்தையான ராஜா தசரதனின் ஈமச் சடங்குகளைச் செய்ய இயலாமல் போனது. ஆனால், தம் தந்தையாரின் இடத்தில் ஜடாயுவை வைத்து, தம் தந்தைக்குச் செய்வது போலே இங்கு ஜடாயுவின் ஈமக் கடனை நிறைவேற்றினார். ஜடாயுவின் இறுதிச் சடங்கு இங்கே புன்னை மரத்தடியில் நடந்ததாம்.
இங்கே தாயார் பொற்றாமரையாள். ஹேமாம்புஜவல்லி என்ற திருநாமங்களுடன் காட்சி தருகிறார். தாயாருக்கு தனி சந்நிதி உள்ளது. மூலவர் வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன். கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். இந்தத் தலம், பூதபுரி என்றும், திருப்புள்ளம்பூதங்குடி என்றும் அழைக்கப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசித் திருவிழா இங்கே சிறப்பு. பொதுவாக ஸ்ரீராமபிரானை நின்ற கோலத்தில் நாம் தரிசித்து மகிழலாம். திருப்புல்லாணி தலத்தில் தர்ப்ப சயனத்தில் காட்சி தரும் ஸ்ரீராமபிரானைப் போல் இங்கே, புஜங்க சயனக் கோலத்தில் ஸ்ரீராம பிரான் அருள்பாலிக்கிறார். சோழர்களால் கட்டப்பட்டது இந்தக் கோயில். இங்கே பெருமான் திருமங்கை மன்னருக்கும் காட்சியளித்தார். சங்கு, சக்கரத்துடன் சக்ரவர்த்தித் திருமகனாக, ஸ்ரீராமபிரான் காட்சி அளித்தார். திருமங்கையாழ்வார் இங்கே வந்த போது, இக்கோயிலில் வேறு ஏதோ பெருமான் இருப்பதாகக் கருதி, கோயிலையே கவனிக்காமல் சென்றாராம். அப்போது பெரிய ஒளி தோன்றி, அதிலிருந்து சங்கு சக்ர தாரியாக ஸ்ரீராமன் காட்சியளித்தார். இதைக் கண்ட திருமங்கை மன்னன், தாம் அறிய வேண்டியதை அறியாமல், எங்கோ சென்றேனே என வருந்தி, இத்தலப் பெருமான் மீது 10 பாசுரங்களைப் பாடினார்.
புதனுக்குரிய பரிகாரத் தலம். இங்கே பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உகந்தது. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு நடத்தி, நல்லறம் காண்கின்றனர். பதவி உயர்வு வேண்டி, இங்கே பிராகாரத்தில் உள்ள யோக நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர்.

தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும்.
காவிரியின் வடகரை தலங்களுள் 42–வது தலமாகத் திகழ்கிறது திருந்துதேவன்குடி. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இப்போது இல்லை. கோவில் மட்டும் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.
இறைவன் பெயர்: கற்கடேஸ்வரர்
இறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.
இக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதைக் கண்காணித்தபோது, நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வது கண்டு வியந்தான். மேலும், அகழியில் தன்னால் பயிரிடப்பட்ட தாமரை மலர்கள் தினமும் குறைவது கண்டு ஒருநாள் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன், லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.
நண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தரவனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.
கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவில் அமைப்பு
கோவில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு மண்டபமும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாளிக்கிறார்.
முன் மண்டபம் வழியே நுழைந்து உள்ளே சென்றவுடன், கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உள் பிராகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உள் பிராகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளனர்.
ஆலய முகவரி
அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில்,
நண்டாங்கோவில், திருந்துதேவன்குடி,
திருவிசலூர் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612 105.
எப்படிப் போவது?
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.

நாதன் கோவில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட (மங்களாசாசனம்) இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது.
கோவிலின் பெயர் : ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவில், நாதன்கோவில், கும்பகோணம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகரப் பெருமாள்)
கோலம் : மேற்குப் பார்த்த வீற்றிருந்த திருக்கோலம்
தாயார் : செண்பகவல்லித் தாயார்
விமானம் : மந்தார விமானம்
தீர்த்தம் : நந்தி தீர்த்த புஷ்கரணி
காட்சி கண்டவர்கள் : சிபி, நந்தி
பாசுரங்கள் : 10
சிறப்புகள் : காளமேகப் புலவர் பிறந்த ஊர். நந்தி இந்தத் தலத்தில் பெருமாளைக் குறித்து தவமியற்றியதாகச் சொல்லப்படுகிறது. பெருமாள் பஞ்ச ஆயுதங்களுடன் காட்சி அளிக்கிறார். ஐப்பசி மாத சுக்ல பட்சத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்தால் குழந்தைப்பேறு உண்டாகும்.
செல்லும் வழி : கும்பகோணத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது லட்சுமிக்கு முன்பு அமுதத்துடன் வெளிப்பட்டவன் சந்திரன். அமுதத்தை உண்ட தேவர்கள் மயக்கம் அடைந்தபோது தன் ஒளியை பாய்ச்சி அவர்களை விழிக்கச் செய்தவன் சந்திரன். சிவபிரானின் ஒரு கண்ணாக சந்திரன் வருணிக்கப்படுகிறார். சிவன் தன் உடலில் ஒரு பாதியை உமையவளுக்கு கொடுத்தான். அந்த உமையவள் கண் தான் சந்திரன். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் தாய்க்குக் காரக கிரகம் சந்திரன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஒருவர் எந்த ராசியில் பிறந்திருக்கிறார் என்பதை சந்திரனை வைத்துச் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் எந்த வீட்டில் (ராசியில்) அமர்ந்திருக்கிறாரோ, அதுவே அவர் பிறந்த ராசியாகும். அதாவது, அவர் பிறந்த நட்சத்திரம் அந்த ராசியில்தான் அமைந்திருக்கும். அத்திரி முனிவர்க்கும் அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். சந்திரன் விஷ்ணுவின் இதயத்திலிருந்து பிறந்தவர் என்றும் குறிப்புகள் உள்ளன.
தக்கன் தனது மகள்களான 27 பேரை (27 நட்சத்திரங்கள்) சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். அந்த இருபத்தேழு பெண்களில் ரோகிணி என்பவளிடத்தில் மட்டும் சந்திரன் அதிக அன்பு கொண்டிருந்தான். அதனால் தக்கன் கோபத்தில் சந்திரனுக்குச் சாபமிட்டான். அச்சாபத்தால் நாள்தோறும் தேய்பவனாகவும், சிவபெருமானது அனுக்கிரகத்தால் மீண்டும் வளர்பவனாகவும் சந்திரன் இருந்து வருகிறான்.
சந்திரன் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்கள் பெரும்பாலும் அழகாகத் தோற்றமளிப்பார்கள். அறிவாற்றல், தெய்வ பக்தி, தியாக உணர்வு போன்றவை இவர்களிடம் காணப்படும் சிற்றின்பத்தில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
கல்வித்துறை, மருத்துவத்துறை போன்றவற்றில் இவர்கள் சிறப்பாகப் பணியாற்றி ஏராளமாகச் சம்பாதிப்பார்கள். பன்னிரண்டு ராசிகளையும் சந்திரன் முப்பது நாட்களில் வலம் வருகிறார். ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் சஞ்சாரம் செய்கிறார். ஓர் ஆண்டில் பன்னிரண்டு முறை சந்திரன் 2,4,6,8,12 ஆகிய வீடுகளில் சஞ்சரித்தால் அது வேதையாகும். மேலும் ஜாதகத்தில் சந்திரன் தீமை செய்பவனாக இருந்தாலும் அவரை பூஜித்து அவருடைய கொடூரத்தைக் குறைப்பது நல்லது. அவரை பூஜிப்பது பரிகாரமாகும். இதற்கு நாம் செல்ல வேண்டிய தலம் நாதன்கோவில்.
இனி அந்த ஆலயம் பற்றி காணலாம்...
நாதன் கோவில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட (மங்களாசாசனம்) இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். இக்கோவிலின் மூலவர் ஜெகந்நாதன் (வீற்றிருந்த திருக்கோலம்) இறைவி செண்பகவல்லி ஆவார். இக்கோயிலின் தீர்த்தம் நந்தி தீர்த்த புஷ்கரிணி ஆகும். இக்கோயிலின் விமானம் மந்தார விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. காளமேகப் புலவர் பிறந்த ஊர். இத்திருக்கோயில் தட்சண ஜகந்நாதம் என்று அழைக்கப்படுகின்றது.
தல வரலாறு:
சிவபெருமானின் வாகனமாகவும், கயிலாய மலையில் வாயிற் போக்கனாகவும், பூதகணங்களின் தலைவராகவும் உள்ளவர் நந்தி தேவர். சிவ பக்தியில் சிறந்தவர் இவர். இவருடைய அனுமதி பெற்றுவிட்டுத் தான் சிவாலயங்களில் நாம் தரிசனம் செய்ய முடியும். கயிலை மலைக்குள் அனுமதி இல்லாமல் இராவணன் நுழைய முற்பட்டபோது அவனுக்கும், நந்தி தேவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது குரங்கு ஒன்றால் உன் நாடு இலங்கை அழிந்து போகும் என்று சாபமிட்டார். சிவனை அவமதிக்கும் வகையில் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அந்த யாக சாலையில் பூத கணங்களுடன் புகுந்து அதகளம் செய்தார். தட்சனின் தலை அறுபட்டு விழவும், யாகத்துக்கு துணை போன தேவர்கள் சூரபதுமனால் வதைபடவும் சாபம் கொடுத்தவர் நந்திதேவர் தான்.
இத்தகைய நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர் களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். அவர் துடித்துப் போனார். பலரிடமும் உபாயம் கேட்டார். எரிச்சல் தீரவில்லை. இறுதியில் சிவனிடம் இதைச் சொல்லி தீர்வு கேட்டார். அதற்கு இறைவன், ‘சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்’ என்றார்.
அதன்படி நந்தி தேவர் இங்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார்.அதன் பிறகு நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது. திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்றதும் இங்குதான். திருப்பாற்கடலில் பரந்தாமனின் பாதங்களையே பற்றி எந்நேரமும் அவரது திருவடியிலேயே இருந்த அன்னை, ஒளி வீசும் அவர் மார்பைப் பார்த்து ஒரு முறை பிரமித்தார். தான் எந்நேரமும் அங்கேயே வாசம் செய்யவேண்டும் என்று விரும்பினார். அதற்காக, செண்பகாரண்யம் எனப்படும் இந்த தலம் வந்து திருமாலை வேண்டி கடும் தவம் செய்தார். பாற்கடலில் திருமகளைப் பிரிந்து தனித்திருந்த திருமாலும் ஓர் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அலைமகளுக்குக் காட்சி அளித்தார். அன்னை மனம் மகிழ்ந்தாள். ‘உன் விருப்பப்படி நீ எம் மார்பில் இனி உறையும்‘ என்று ஆசிர்வதித்தார். கிழக்கு நோக்கி திருமகளை எதிர்கொண்டு ஏற்றமையால் இங்கு பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளி யுள்ளார்.
திருமாலைப் பிரிந்து தவம் இருந்து மீண்டும் தரிசனம் பெற்று இணைந்தமையால் திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும்.
சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார்.
சிறப்புகள்:
விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய்) நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவி லுக்கு பல அரிய திருப்பணி கள் செய்தார். ஒரு ராஜா அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்) கோலம் மிகவும் அழகானதாகும்.

திருஆதனூரில் உள்ளது ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் திருக்கோவில். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்..
கோவிலின் பெயர் : ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில், திரு ஆதனூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : ஆண்டளக்கும் ஐயன்
கோலம் : கிழக்குப் பார்த்த புஜங்க சயனம்
தாயார் : ரங்கநாயகி, கமலவாசினி, மந்திர பீடேஸ்வரி, பார்கவி
உற்சவர் : அழகிய மணவாளன் (ஸ்ரீரங்கநாதர்)
விமானம் : பிரணவ விமானம்
தல விருட்சம் : பாடலி, புன்னை
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி
காட்சி கண்டவர்கள் : காமதேனு, பிருகு முனிவர், அக்னி பகவான்
பாசுரங்கள் : 1
சிறப்புகள் : காமதேனு தவமியற்றிய தலம், இங்கு காமதேனுவின் புத்திரி நந்தினிக்கும் சிற்பங்கள் உண்டு. தலைக்குக் கீழே மரக்காலுடன் இடது கரத்தில் ஓலை மற்றும் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார் பெருமாள்.
செல்லும் வழி: சுவாமிமலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. புள்ளப் பூதங்குடிக்கு மிக அருகில் உள்ளது.
பிரம்மனால் உருவாக்கப்பட்ட சப்தரிஷிகளில் ஒருவர் ஆங்கரீசர். அவருடைய ஏழு பிள்ளைகளில் ஒருவர் பிரகஸ்பதி.சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்த அவர் பல யாகங்களைச் செய்து மிக உன்னதமான நிலையை அடைந்தார். இவருடைய தகுதியை எண்ணி இவருக்கு தேவ குரு பீடத்தை அளித்தார்கள். இந்திரன் முதலான தேவர்களின் சபையில் குருவாகவும் ஆலோசகராகவும் குருபகவான் திகழ்கிறார்.
நவக்கிரங்களில் குருவுக்குப் பிரதான இடம் அளிக்கப்படுகிறது. குருவின் 5, 7-ம் பார்வை சகல நலன்களையும் தருவதாகும். திருமணத்திற்கு குருபலம் வருவது முக்கியமாகக் கருதப்படுகிறது. குரு பார்வை பெற்றால்தான் திருமணம். குழந்தை செல்வம், சிறந்த பதவி, சொத்து, சுகம் கிடைக்கும். சாத்வீக குணமும் மஞ்சள் நிற மும் உடைய இவரைப் பொன்னான் என்றும் வியாழன் என்றும் அழைப்பார்கள். தயாள சிந்தை உடையவர்.
தன்னை வழிபடுகிறவர்களுக்குப் பிறரை வணங்காத உயர்வான பதவியையும் மதம் நீதி மனமகிழ்ச்சி புத்திரப்பேறு செல்வம் முதலியவற்றையும் கொடுப்பவர். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளியிருப்பவர் குரு பகவான். ரதத்தில் வில்லும், மீனும் அடையாளமாயிருக்கும். இவருக்கு உகந்த தானியம் கடலை, பிடித்த கல் புஷ்பராகம். பிடித்த மலர் முல்லை. சமித்து அரசு. இவருக்கு பிடித்த சுவை இனிப்பு. குரு பகவானை வழிபட்டால் புகழையும், கீர்த்தியையும் வாக்கு வன்மையையும் அளிப்பார்.
இந்த பலன்களை பெற நாம் திருஆதனூரில் உள்ள ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் திருக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.
திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலை திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த பணம் அனைத்தும் செலவாகி விட்டது. பணியாளர்களுக்கு கூலி கொடுக்கக்கூட அவரிடம் பணமில்லை. எனவே, தனக்கு பணஉதவி செய்யும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு அசரீரியாக ஒலித்த பெருமாள், கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி அங்கு வந்தால் பணம் தருவதாக சொன்னார். திருமங்கையாழ்வாரும் அங்கு சென்றார். அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு, கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார்.
அவர் திருமங்கையாழ்வாரிடம், “உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான். என்ன வேண்டுமென கேளுங்கள்’ என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னி டம் பணம் இல்லை என்று சொல்லிய வணிகர் தான் வைத்திருந்த மரக்காலைக் காட்டி “இம்மரக்கால் கேட்டதைத் கொடுக்கக்கூடியது. ரங்கநாதனை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் இம்மரக்கால் கொடுக்கும்” என்றார்.
திருமங்கையாழ்வார் பணியா ளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வணிகர், “மரக்காலில் தான் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் அம்மணல் பொன்னாகவும், ஏமாற்றியவர்களுக்கு அது மணலாகவுமே இருக்கும்‘ என்றார். திருமங்கையாழ்வாரும் சரியென ஒப்புக்கொள்ள நிறைய பேருக்கு மணலாகவே இருந்தது.
கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் தந்திரக்காரன் என எண்ணி அவரை அடிக்க பாய்ந்தனர். வணிகர் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். திருமங்கையாழ்வார் அவரை பின் தொடர்ந்து ஓடினார். நீண்ட தூரம் ஓடி வந்த வணிகர் இத்தலத்தில் நின்றார். அவரிடம் திருமங்கையாழ்வார் “நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?’ என்றார். மகாவிஷ்ணு, வணிகனாக வந்து அருளியது தானே என உணர்த்தி அவருக்கு காட்சியளித்தார். ஏட்டில், எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.
கருவறையில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நாபிக்கமலத்தில் பிரம்மாவுடன் பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கிறார். இவர் மரக்காலை தலைக்கு வைத்து, இடது கையில் எழுத்தாணி, ஏடுடன் காட்சி தருகிறார். இதனை உலகுக்கு படியளந்த பெருமாள் ஓய்வாக பள்ளி கொண்டிருக்கும் கோலம் எனவும் சொல்கிறார்கள். காமதேனு சுவாமியின் பாதத்திற்கு அருகில் அவரை வணங்கியபடி இருக்கிறாள். சிவன், பிரம்மாவின் ஒரு தலையை எடுக்க அந்த தலை அவரது கையுடனே ஒட்டிக்கொண்டது. சிவனால் தலையை தனியே எடுக்க முடியவில்லை. எனவே அந்த தலையை எரிக்கும்படி அக்னிபகவானிடம் கேட்டுக் கொண்டார் சிவன்.
ரமபதத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவிற்கு முன்புறம் இரண்டு தூண்கள் இருக்கும். ஜீவன்கள் மேலே செல்லும்போது, இந்த தூண்களைத் தழுவிக் கொண்டால் பாவங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்கும். அதேபோல் இத்தலத்தில் கருவறைக்கு முன்புறம் அர்த்த மண்டபத்தில் சுவாமியின் பாதம், தலைக்கு நேரே இரண்டு தூண்கள் இருக்கிறது.
இரட்டைப் படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்த தூண்களை பிடித்துக்கொண்டு சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், திருமணமாகாதவர்கள் தூண்களை தழுவி வணங் கினால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. 108 திவ்யதேசங்களில் இங்கும், ஸ்ரீரங்கத்திலும் இந்த தூண்கள் இருக்கிறது.
பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு, இந்திரனை பூலோகில் சாதாரண மனிதனாக பிறக்கும்படி சபித்தார். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான் இந்திரன். அப்போது மகாலட்சுமி “தான் பூலோகத்தில் பிருகு மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப்பெறும்” என்றார்.
அதன்படி மகாலட்சுமி பிருகுவின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தலத்தில் அவளை திருமணம் செய்து கொண்டார். இங்கு வந்த இந்திரன் பெருமாளையும், மகாலட்சுமியையும் வணங்கினான். மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார்.

அக்னி எவ்வளவோ முயன்றும் அவராலும் தலையை எரிக்க முடியாமல் போனதோடு பிரம்மஹத்தி தோஷமும் பிடித்துக்கொண்டது. அவர் இங்கு பெருமாளை வணங்கி சாபம் நீங்கப் பெற்றார். இவர் கருவறையில் சுவாமியின் பாதத்திற்கு அருகில் இருக்கிறார். அருகில் பிருகு மகரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோரும் இருக்கின்றனர்.