என் மலர்
கோவில்கள்
ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மனிதன் முதலில் இயற்கை சக்திகளையே வழிபட்டான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அப்படி மனிதர்கள் வழிபட்ட முக்கியமான வழிபாடுதான் ‘சூரிய வழிபாடு.’ இது இந்துக்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சூரியனுக்கு, தமிழகத்திலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் தனிக்கோவில்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் என்ற இடத்தில் ஆற்றுப்படுகையில் அமைந்த சூரியனார் கோவில் குறிப்பிடத்தக்கது.
பூரிக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த சூரியன் கோவில், கடந்த காலங்களில் பராமரிப்பின்றியும், கடல் அலைகளின் சீற்றத்தாலும் பெருமளவு சிதிலமடைந்துவிட்டது. என்றாலும், மீதம் இருக்கும் ஆலயத்தின் வடிவமைப்பையும், சிற்ப வேலைபாடுகளையும், கலைநயத்தையும் காண கண் இரண்டு போதாது. இந்தக் கோவில், முதலாம் நரசிம்ம தேவன் என்பவரால், 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஆலயம் வித்தியாசமான கட்டமைப்பைக் கொண்டது. அது நமக்கு வியப்பையே மேலிட வைக்கின்றன. ஏனெனில் இந்தக் கோவிலுக்குள், எங்கும் தூண்கள் காணப்படவில்லை. ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இணைத்து கட்டியுள்ளனர்.
ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளியிருப்பது போன்று இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் 7 குதிரைகள் என்பது 7 நாட்களையும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக்கோவிலின் கோபுரம் சரியத் தொடங்கியதால் சூரியனாரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு, பூரியில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்தக் கோவிலுக்கு வரும் குழந்தை, இளைஞர், பெரியவர் என்ற மூன்று பருவத்தைச் சேர்ந்தவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில், தனித்தனியாக சிற்பங்கள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிக குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்காக ஊடல், கூடல், ஆடல் போன்ற சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வயதானவர்கள் கண்டுகளிக்க ஆன்மிக சிற்பங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் கோவிலின் அமைப்பு மூன்று பிரிவுகளாக இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி, மூலவர் சூரியநாதர் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாழிகை, நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் வகையில் நம் முன்னோர்களின் அறிவைக் கொண்டு இது சாத்தியமாகி இருக்கிறது. இந்தக் கோவிலின் தனித்தன்மையை உணர்ந்து, இதை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்திருக்கிறது, யுனெஸ்கோ அமைப்பு.
அமைவிடம்
ஒடிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கோனார்க்கை இணைக்கின்றன. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கோனார்க் செல்லலாம்.
பூரி ரெயில் நிலையத்தில் இருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், புவனேஸ்வர் ரெயில் நிலையத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தூரத்திலும் கோனார்க் உள்ளது.
புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் கோனார்க் உள்ளது. சென்னை, டெல்லி, ஐதராபாத், கொல்கட்டா, நாக்பூர் விமான நிலையங்களில் இருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் `சப்த விடங்க தலங்கள்' ஏழு இருக்கின்றன. இந்த 7 தலங்களிலும் இறைவன் சிவபெருமான், சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். இங்கு இறைவன் அருளிய தாண்டவங்கள் முக்கியத்துவம் பெற்றவையாக உள்ளன. ‘விடங்கம்’ என்றால் ‘உளியால் செதுக்கப்படாதது’ என்று பொருள். உளியால் வடிக்கப்படாத சிவலிங்கங்கள் இருக்கும் தலங்கள் ஏழும்தான் ‘சப்த விடங்க தலங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. அந்த சப்த விடங்க தலங்களையும், அதில் அருளும் தெய்வங்களையும், நடனங்களையும் இங்கே பார்க்கலாம்.
திருவாரூர் - வீதி விடங்கர் - அசபா நடனம்
திருநள்ளாறு - நகர விடங்கர் - உன்மத்த நடனம்
திருநாகைக்காரோகணம் - சுந்தர விடங்கர் - தரங்க நடனம்
திருக்காறாயில் - ஆதி விடங்கர் - குக்குட நடனம்
திருக்குவளை - அவனி விடங்கர் - பிருங்க நடனம்
திருவாய்மூர் - நீல விடங்கர் - கமல நடனம்
திருமறைக்காடு - புவன விடங்கர் - அம்சபாத நடனம்
அசபா நடனம் (திருவாரூர்)
கும்பகோணத்தில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள இறைவன் - வான்மீகிநாதர், தியாகராஜ பெருமான், இறைவி - கமலாம்பாள். இது சிதம்பரத்திற்கும் முந்தைய கோவில் என்று சொல்லப்படுகிறது. இங்குள்ள ஈசன் ‘வீதி விடங்கர்’ என்று அழைக்கப்படு கிறார். இத்தல இறைவன் ஆடிய தாண்டவம் ‘அசபா நடனம்’ எனப்படுகிறது. உயிரின் இயக்கமான மூச்சுக் காற்று, உள்ளும் புறமும் சென்று வருவது போன்ற உன்னதத்தை உணர்த்துவது இந்த நடனம் ஆகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைய, கடன் தொல்லை நீங்க, உடல் பிணி அகல, திருமண வரம் பெற, வேலை கிடைக்க, தொழில் விருத்தியாக, குழந்தை வரம் வேண்டி என பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர்.
உன்மத்த நடனம் (திருநள்ளாறு)
கும்பகோணத்தில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநள்ளாறு பிராணேஸ்வரி உடனாய தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோவில். இது சனீஸ்வர பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்குள்ள ஈசன் ‘நகர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘உன்மத்த நடனம்’ ஆகும். இது பித்தனைப் போன்று ஆடுவது ஆகும். சனி தோஷம் நீங்க இத்தல இறைவனை வழிபடலாம்.
தரங்க நடனம் (திருநாகைக்காரோணம்)
கும்பகோணத்தில் இருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநாகைக்காரோணம். இங்குள்ள ஆலய இறைவன் - காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர் என்றும், இறைவி - நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி என்றும் பெயர் பெற்றுள்ளனர். இங்குள்ள ஈசன் ‘சுந்தர விடங்கர்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் ஆடிய தாண்டவம் ‘தரங்க நடனம்.’ கடல் அலைகள் எழுவது போன்று ஆடுவது இதன் நடன முறையாகும். இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து வழிபட்டால், பாவங்களுக்கு மன்னிப்பும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.
குக்குட நடனம் (திருக்காறாயில்)
கும்பகோணத்தில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இங்குள்ள இறைவன் - கண்ணாயிரநாதர் என்றும், இறைவி - கயிலாயநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பிரம்மனுக்கு ஆயிரம் கண்களுடன் ஈசன் அருளிய தலம் இது. இங்குள்ள ஈசன் ‘ஆதி விடங்கர்’ எனப்படுகிறார். இவர் ஆடிய நடனம் ‘குக்குட நடனம்.’ கோழியைப் போல் ஆடுவது இதன் அசைவாகும். பாவங்கள், சாபங்கள் அகலவும், கண் சம்பந்தப்பட்ட நோய் சரியாகவும் இங்குள்ள இறைவனை வழிபடலாம்.
பிருங்க நடனம் (திருக்குவளை)
கும்பகோணத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பிரம்மபுரீஸ்வரர் கோவில். இறைவன் -பிரம்மபுரீஸ்வரர், இறைவி - வண்டமர் பூங்குழலம்மை. இங்குள்ள ஈசன் ‘அவனி விடங்கர்.’ இவர் ஆடியது ‘பிருங்க நடனம்.’ வண்டு மலருக்குள் குடைந்து செல்வதைப் போன்றது இந்த நடனம். நவக்கிரக தோஷங்களைப் போக்கிக்கொள்ள, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்யலாம்.
கமல நடனம் (திருவாய்மூர்)
கும்பகோணத்தில் இருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருவாய்மூர். இங்குள்ள இறைவன் - வாய்மூர்நாதர், இறைவி - பாலினும் நன்மொழியம்மை. பிரம்மன் மற்றும் சூரியன் சாபம் தீர்த்த தலம் இது. இங்குள்ள ஈசன் ‘நீலவிடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘கமல நடனம்.’ தாமரை மலர் அசைவது போன்றது இந்த நடனம். இத்தல இறைவனை வழிபட்டால், திருமணத் தடை நீங்கும். கல்வி மற்றும் செல்வம் பெருகும்.
அம்சபாத நடனம் (திருமறைக்காடு)
கும்பகோணத்தில் இருந்து 106 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருமறைக்காடு. இங்குள்ள இறைவன் - மறைக்காட்டுநாதர், வேதாரண்யேஸ்வரர்; இறைவி - யாழினும் இனிய மொழியாள், வேதநாயகி. அப்பரும் சம்பந்தரும் தங்கள் பாடல் களின் மூலம், கதவை திறந்தும், மூடியும் காட்டிய திருத்தலம். இத்தல ஈசன் ‘புவன விடங்கர்.’ இவர் ஆடிய நடனம் ‘அம்சபாத நடனம்.’ அன்னப்பறவை அடியெடுத்து வைப்பது போன்றது இந்த நடனம். இங்குள்ள மணிகர்ணிகை தீர்த்தம் மற்றும் ஆதி சேது கடல் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து வகை பாவங்களும் விலகி, புண்ணியம் வந்து சேரும். மன அமைதி, தொழில் விருத்தி, வேலைவாய்ப்பு ஆகிய வரங்களைப் பெற இங்குள்ள இறைவனை தரிசிக்கலாம்.
தத்தாத்ரேயர், பிரம்மன், திருமால், சிவன் மூவரையும் உள்ளடக்கிய இந்துக் கடவுள் ஆவார். தத்தாத்ரேயர் வழிபாட்டு தலங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இமயமலையில் ஆத்ரேய மலைப்பகுதியில் உள்ள குகைஒன்றில், தத்தாத்ரேயர் பல ஆண்டுகள் தங்கி தவமியற்றியதாக கூறப்படுகிறது. எனவே அந்தக் குகை `தத்தர் குகை’ என்று அழைக்கப்படுகிறது.
வடக்கே ஜூனகாட் செல்லும் வழியில் உள்ளது, கிர்நார் மலை. இந்த மலையின் உச்சியில் தத்தாத்ரேயர் சரண பாதுகை அமைந்துள்ளது. இந்த இடத்தை அடைவதற்கு மலையின் மீது 10 ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் உள்ள மிகப் பெரிய மலை உச்சி ஒன்றில் (கடல் மட்டத்திலிருந்து 5650 அடி உயரம்) தத்தாத்ரேயர் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள சன்னிதியின் உயரம் மொத்தமே இரண்டு அடிதான். அதனுள் மூன்று முக தத்தாத்ரேயர் சிலையும், அவரது பாதச்சுவடுகளும் உள்ளன.
தத்தாத்ரேயர் ஸஹ்ய மலையில் வெகுகாலம் தவமிருந்தார். அதுவே `தத்தஷேத்திரம்’ என்றும், தற்போது `மகாபலேஷ்வர்’ என்றும் விளங்கி வருகிறது.
குல்பர்காவுக்கு அருகே காங்காப்பூரில் மூன்று முகமுடைய தத்தாத்ரேயர் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவரை இங்குள்ள ஜன்னல் கதவைத் திறந்துதான் தரிசனம் செய்ய வேண்டும்.
மராட்டியத்தில் கிருஷ்ணா நதி தீரத்தில் அமைந்திருக்கும் நரசிம்ம வாடியில், தத்தாத்ரேயர் சன்னிதி உள்ளது. இங்குள்ள பாதுகைகளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் குருமூர்த்தி என்று கூறுவது, தத்தாத்ரேயரையே குறிக்கும். அங்கு தத்தகுரு ஆராதனை அதிக அளவில் உள்ளது.
ஆந்திராவில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஔதும்பரம் என்ற இடம் தத்தஷேத்திரமாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் தத்தகிரி குகாலயம் என்ற இடத்தில் தத்தாத்ரேயர் சிலை வடிவம் காணப்படுகிறது.
குடவாசல் எனும் புதுக்குடியில் தத்தகுடீரம் உள்ளது. இங்குள்ள தத்தர் ஆலயத்தில் தத்த பாதுகை, கார்த்தவீர்யார்ஜூன் சக்கரம் ஆகிய இரண்டிற்கும் தினந்தோறும் பூஜை நடைபெற்று வருகிறது.
உடையார்பட்டி என்ற இடத்தில் 16 அடி உயரத்தில் மிக எழில் வாய்ந்த தத்தாத்ரேயரின் சிலை உருவம் உள்ளது. இது `கந்தகிரி விஸ்வ ரூப தத்தர்’ என அழைக்கப்படுகிறது.
சுசீந்தரம் தாணுமாலயன் திருக்கோவில் தாணு, அயன், மால் - அதாவது சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் ஓர் உருவாக வீற்றிருக்கும் தலமாகும். இது ஒரு முக்கியமான தத்த ஷேத்திரமாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில். சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோவில். சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோவில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இந்தக் கோவில் கருதப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பார்கள். அந்த வரிசையில், திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் கால் வைத்தாலே முக்தி என்று சொல்லப்படுகிறது.
உலகில் முதன்முதலாக தோன்றிய சிவன் கோவில் இதுதான் என்றும், இங்குதான் முதன் முதலாக ஆருத்ரா தரிசனம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகங்கள் இருப்பதை காணலாம். ஆனால் நவக்கிரகங்களும் முழுமையாக அறியப்படாத காலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே வழிபாட்டில் இருந்தபோது உருவானதாக இந்தக் கோவிலைச் சொல்கிறார்கள். அதனால்தான் இங்கு நவக்கிரகங்களில், சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டும் காணப்படுகிறது.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். ருத்திரன் என்னும் சிவன், மங்கையான பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் என்பதாலேயே இது ‘உத்திரகோசமங்கை’ என்று பெயர் பெற்றது. `உத்திரம்' என்றால் `உபதேசிப்பது' என்று பொருள், `கோசம்' என்றால் `ரகசியம்' என்றும், மங்கை என்பது பார்வதியை குறிக்கும். பார்வதிக்கு வேதத்தின் ரகசியத்தை உபதேசித்த இடம் என்பதால் இப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயம் மிகவும் பழமையானது என்பதற்கு சான்றாக, இந்தக் கோவிலில் ராணவனின் மனைவியான மண்டோதரி வழிபாடு செய்திருக்கிறாள். மிகச்சிறந்த சிவ பக்தனையே திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பல காலம் காத்திருந்த அவள், தொடர்ந்து இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டிருக்கிறாள். இதையடுத்து ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம், இந்த ஆலயத்திலேயே, இறைவனின் முன்னிலையிலேயே நடைபெற்றதாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
இந்தக் கோவிலின் மூலவர் ‘மங்கள நாதர்.’ சுயம்பு மூர்த்தியான இவர் இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
அம்பிகையின் திருநாமம், ‘மங்கள நாயகி’ என்பாதாகும். ஆலய தல விருட்சம் ‘இலந்தை மரம்’ ஆகும். ஆலய தீர்த்தம் ‘அக்னி தீர்த்தம்.’ இந்த ஆலயத்தில் மாணிக்கவாசகர், வேதவியாசர், காகபுஜண்ட மகரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ஆகியோர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர். கோவிலின் முதல் பிரகார வாயு மூலையில், வள்ளி- தெய்வானை யுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரண்டாம் பிரகார வாயு மூலையில், வள்ளி-தெய் வானையுடன் ஆறுமுகமும், பன்னிரு கரமுமாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார்.
ஒரு முறை மகாவிஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடி முடியைக் காண முயன்று தோற்றுப்போயினர். ஆனால், முடியைக் கண்டதாக பிரம்மன் கூறிய பொய்க்கு, ``ஆமாம்'' என்று பொய் சாட்சி சொன்னது தாழம்பூ. இதனால் ‘`நீ என்னுடைய வழிபாட்டில் இருக்க மாட்டாய்’' என்று சாபமிட்டார் சிவன். எனவே பெரும்பாலான சிவாலயங்களில், தாழம்பூ கொண்டு ஈசனுக்கு வழிபாடு செய்யப்படுவதில்லை. ஆனால், திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் இறைவனுக்கு தாழம்பூவால் அர்ச்சனை, அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்கு இந்தக் கோவில், பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடிய யுகத்திற்கும் முற்பட்டது என்றும், பொய் கூறியவர்களையும் மன்னித்து அருளும் மனம் படைத்தவர் இத்தல மங்களநாதர் என்றும் சொல்கிறார்கள்.
இத்தலத்தின் நடராஜர் மரகதத்தால் ஆனவர். நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்திலேயே இருப்பார். திருவாதிரை திருநாளுக்கு முந்தைய தினம் சந்தனக் காப்பு களையப்பட்டு அபிஷேகம், ஆராதனை செய்யப்படும். அன்றைய தினம் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். பின்னர் மீண்டும் சாத்தப்படும் சந்தனக்காப்பு, அடுத்த திருவாதிரை திருநாள் வரை இருக்கும். சந்தக்காப்பு இல்லாத, அபிஷேகத்தை ஏற்றுக்கொள்ளும் மரகத நடராஜரை தரிசிக்க வேண்டும் என்றால், நாம் திருவாதிரை திருநாளுக்கு முந்தைய தினம் ஆலயத்திற்குச் செல்ல வேண்டியது அவசியம். இங்கு தினமும் மதியம் 12.45 மணி அளவில் மரகத லிங்கத்திற்கும், ஸ்படிக லிங்கத்திற்கும் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும். இதில் மரகத லிங்கம் மரகத நடராஜரையும், ஸ்படிக லிங்கம் மூலவரான மங்களநாதரையும் குறிக்கும்.
இந்தக் கோவிலில் தினமும் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் என்று ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகிறது. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணி, பகல் 12.30 மணி, மாலை 5.30 மணி என மூன்று முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஆலயம், தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
மதுரை - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்தை அடைவதற்கு 10 கிலோமீட்டர் முன்பாக வலதுபுறம் ஒரு பாதை பிரிந்து செல்லும். அது தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையாகும். இந்தச் சாலையில் 7 கிலோமீட்டர் சென்றால், உத்திரகோசமங்கை திருத்தலத்தை அடையலாம்.
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவஸ்தலம் பெயர் - அவிநாசி (திருப்புக்கொளியூர்)
இறைவன் பெயர் - அவிநாசியப்பர்
கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன. மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீகாலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர், அப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்; விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
திருப்புகழ் தலம்: அவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் உள்ளன. உற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் விளங்குகிறார். குமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் உள்ளது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்த ஆலயத்தின் மூன்று தீர்த்தங்கள் 1. காசிக் கங்கை(கிணறு), 2. நாககன்னிகை தீர்த்தம் (கிணறு) 3. ஐராவத தீர்த்தம் எனபனவாகும். தலமரமாக மாமரம் விளங்குகிறது. தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய கோவில் தேர்களில் அவிநாசிக் கோவில் தேரும் ஒன்றாகும்.
தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர்.
மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார்.
அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது. பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63 மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.
அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோவில்
அவிநாசி அஞ்சல்
அவிநாசி வட்டம்
திருப்பூர் மாவட்டம்
PIN - 641654
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப் பட்டுள்ளது.
கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில். இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.
கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார். பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது.
திருமணம்
திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.
இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.
புனித தீர்த்தங்கள்
இந்த கோவிலில் கருட பகவானால் கொண்டு வரப்பெற்ற கெடில நதியும், ஸ்ரீஆதிசேஷன் தன் வாலினால் அமைத்த சேஷக்கிணறும், பிரம்ம தீர்த்தம், பூ தீர்த்தம் மற்றும் லட்சுமி தீர்த்தம் என 5 வகை தீர்த்தங்கள் உள்ளன.
தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி உற்சவம்
திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகளிலும் வெகுவிமர்சையாக விழா நடந்து வருகிறது. அதிகாலையில் 2 மணிக்கு பெருமாள் விஷ்வரூப தரிசனம் நடக்கிறது. சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மாலையில் சாமி வீதி உலா நடைபெறும்.
தேசிகர் உற்சவம்
மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய விழாவாக தேவநாதசாமியின் பக்தராக இருந்து தியானம் செய்து முக்தி அடைந்த தேசிகர் மகா உற்சவம் நடக்கிறது. இந்த விழா வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது பின்னர் இரவு ஹம்ச வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
தினமும் காலை மற்றும் மாலையில் பல்லக்கு, தங்க விமானம், சூரிய பிரபை, யாளி வாகனம், பிள்ளைகிளை வாகனம், சந்திர பிரபை, மோகன அவதாரம், வெள்ளி சிம்ம வாகனம், வெண்ணைத்தாழி சேவை, யானை வாகனம், சூர்ணாஅபிஷேகம், தங்க விமானம், பேட்டை உற்சவம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெறுகிறது. பின்னர் வருகிற அக்டோபர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை தேசிகர் தேர் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் நவராத்திரி 9-ம் நாள் உற்சவ விழாவும் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
பிரம்ம உற்சவ விழாவின் முக்கிய விழாவாக வருகிற 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவோணம் நட்சத்திரத்தன்று தேசிகர் ரத்னாங்கி சேவை அவுசதகிரி மலையில் உள்ள ஹயக்ரீவர் சன்னதியில் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் தேசிகர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள், ராமன், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், தாயார் , பள்ளி கொண்டநாதர், ஆண்டாள், ஆழ்வார் உள்ளிட்ட பல்வேறு சாமி சன்னதிகளில் சென்று வழிபடுகிறார்.
பின்னர் மாலையில் சாமி வீதி உலா உற்சவம் தீர்த்தவாரி பெருமாள் தாயார் தேசிகருக்கு சாற்றுமுறை உற்சவம் நடக்கிறது. இதையடுத்து கண்ணாடி பல்லக்கில் தேசிகர் வீதி உலா நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து 9-ந்தேதி காலை, மாலை இருவேளையும் தேசிகர் பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. கடைசி நாள் உற்சவத்தில் தேசிகர் சாமி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.
நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள்
புரட்டாசி மாதம் வரக்கூடிய நான்கு சனிக்கிழமைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேவநாதசாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.
இதில் முதல் சனிக் கிழமை, 2-வது சனிக் கிழமை மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 3-வது சனிக்கிழமைகளில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.
திருவந்திபுரம் தேவநாதசாமி திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று கருதப்படுகிறார். எனவே திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுமட்டுமன்றி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளிலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இரவு கோவில் வளாகம் அருகே தங்கி விட்டு அதிகாலையில் பெருமாளை தரிசித்து செல்கின்றனர். புரட்டாசி மாதம் வரக்கூடிய அனைத்து சனிக்கிழமைகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
கோவில் நடை திறக்கும் நேரம்
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும். மற்ற மாதங்களில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு சாற்றப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாற்றப்படும்.
இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
ஸ்ரீ நாமகிரித் தாயாரின் சிறப்பு: இங்கு அமைந்துள்ள அரி நாமகிரித் தாயார் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஸ்ரீ நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி தாயாரை பூஜிக்க சகல செல்வங்களும், பில்லி, சூனியம் போன்றவை ஒரு மண்டல காலத்திற்குள் விலகும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்திருக்கோயிலின் பெயராலேயே திருவரைக்கல் எனப்படும் நாமக்கல் நாமகிரி என முன்பு புராணங்களில் கூறப்படுகிறது.
ஸ்ரீ நரசிம்மர் சிறப்பு: இத்திருக்கோயில் மலையின் மேற்கு புறம் குடவரையில் அமைந்துள்ளது. இங்கு வலது காலை தரையில் ஊன்றியும் இடது காலை மடி மீதும் வைத்து ஸ்ரீ நரசிம்மர் வீற்றிருக்கிறார். அருகில் பூஜக முனிவர்களான சநக சநந்தர்களும், சூர்ய சந்திரர்களும் கவரி வீச வலது புறம் ஈஸ்வரனும், இடதுபுறம் பிரம்மாவும் பகவான் இரணியனை அழித்த உக்கிரம் தீர வழிபடுகிறார்கள். ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்தால் மகிழ்ந்ததால் இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் என அழைக்கப்படுகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகியோர் ஒரே இடத்தில் அருள் பாலிப்பதால் மும்மூர்த்தி ஸ்தலம் என அழைக்கப்படுகிறது. இங்கு இரணியனை வதைத்த பின் ரத்தக்கரையுடன் கூரிய நகங்களுடன் பகவான் காட்சி தருகிறார். உலகில் சிவன் சில இடங்களில் மட்டுமே தலையில் பிறைச்சந்திரனுடன் காட்சி தருகிறார். அவற்றில் ஒன்று இத்திருத்தலம்.
தல வரலாறு : தேவ சபையில் சகல குணம் பொருந்தியவர் மகா விஷ்ணுவே என்ற கருத்து இருந்தது. அதனையொட்டி துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார். துர்வாச முனிவர் ராஜகோலத்தில் பிரம்மாவும், மஹாலட்சுமியும் தமஸா உலகின் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், பரமேஸ்வரியும் தோன்றியதாக கூறினார். மேலும் சரஸ்வதியை நான்முகனும், ஈஸ்வரியை ஈஸ்வரனும், லட்சுமியை மகாவிஷ்ணுவும் மணந்ததாக கூறினார். சகலவிதமான பொறுமையுடன் ராஜ கோலத்தில் பிறந்த மஹாலட்சுமியை வகித்து உலகத்தை காப்பாற்றி வருவதால் மகாவிஷ்ணுவே சிறந்தவராவார் எனக் கூறினார் துர்வாச முனிவர். இதைக் கேட்ட இந்திரன் இதனை பரீட்சை மூலம் அறிய நினைக்கிறேன் என்றார்.
பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்ய லோகம் சென்றார். அங்கு மகாவிஷ்ணு நித்திரையில் இருத்தார். துர்வாச முனிவரின் வேகத்தை கண்ட துவார பாலகர்கள் அவரைத் தடுக்கவில்லை. தான் வந்தும் மகாவிஷ்ணு நித்திரையில் இருப்பதைக் கண்டவுடன் மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல் சாந்தமுகத்துடன் முனிவரை பார்த்து தாங்கள் உதைத்ததால் மார்புபகுதி புனிதம் அடைந்ததாகவும் தங்கள் பாதம் வலிக்குமே எனக்கூறி முனிவரின் பாதத்தை வருடினார். உடனே துர்வாசர் தெளிவடைந்து மகாவிஷ்ணுவிடம் பிழை பொருந்தருளுமாறு கேட்டார்.
இட்டபணியை செய்யத்தவறிய துவார பாலகர்களை மூன்று பிறவிகள் எடுத்து (தமக்கு விரோதமாக) இருப்பிடம் அடைவீர் என தன்டனை கொடுத்தார். பகவானை பிரிய மனமற்ற துவார பாலகர்களை கட்டளைப்படி மூன்று பிறவிகள் விரோதமாக பிரிக்கிறோம். ஆனால் தங்களாலேயே மரணம் அடைய வேண்டும் என வேண்ட, இறைவனும் அவ்வாறே வரம் தந்தார். அவர்கள் அரக்கன் மதுகைடகர் போல் துவார பாலகர் இருவரும் இரணியகசிபு மற்றும் இரண்யாட்ஷன் ஆக பிரிந்து இரண்யாட்ஷன் பூமியை அபகரித்து பாதாளத்தில் ஒளிந்து கொள்ள மகாவிஷ்ணு யக்ஞவராக அவதாரம் எடுத்து வதம் செய்து பூமி தேவியை காப்பாற்றினார்.
இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரம சிவனிடமிருத்து 5௦ கோடி ஆட்களையும் தேவர், மானுடர், ஜலம், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு வேளைகளில் சாகா வரம் பெற்றார். பரமேஸ்வரனின் வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்விதயாகமும், பஜனைகளும் நடைபெறவில்லை. இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக இரண்யன் மகனாக பிறக்க கட்டளையிட்டார். கருவிலேயே நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனை தக்க வயதில் குருகுலத்திற்கு இராணியன் அனுப்பினான்.
இராணியன் கட்டளைப்படி இராணியாய நமக என ஆசிரியர் முதலடி போதிக்க அவன் "ஓம் நாமோ நாராயணாய நமக" எனக் கூறினான். அதன்படி இரணியனிடம் ஆசிரியர் கூற. பலவகைகளிலும் தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன். கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள் கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன காத்தன. இதனைக் கண்ட இரணியன் பிரகலாதனிடம், வேண்டுமானால் நாராயணனை எனக்கு காட்டு, எனக் கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான்.
அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்து நரசிம்மமூர்த்தி காட்சியளித்தார். அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனை தன் சிங்க நகம் போன்ற கூரிய நகத்தால் அவனை அழித்தார். அப்படியும் கோபம் அடங்காத ஸ்ரீ நரசிம்ம அவதார மூர்த்தியான ஸ்ரீமந் நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல பயந்தாள். பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, ஸ்ரீ நரசிம்மர் ராஜ்யபட்டாபிஷேகம் செய்து அருள்பாளித்தார் அவனும் அது முதல் பூஜித்து வரலானான்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
கோயில் முகவரி :
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,
நாமக்கல் - 637 403,
நாமக்கல் மாவட்டம்.
ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
சுவாமி : சப்தரிஷீஸ்வரர் (சிவன்)
அம்பாள் : பெரிய நாயகி, மகாலட்சுமி, பைரவி (காளி).
மூர்த்தி : தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிட்சாடனர்.
தலச்சிறப்பு : மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவாக எழுந்தருளியுள்ளார் சப்தரிஷீஸ்வரர். அழகிய சுயம்பு லிங்கம் மேற்கு பார்த்த சந்நதி. திருத்தவத்துறை நாதர் மற்றும் தேஜோவிடங்கர் ஆகிய திரு நாமங்களும் உண்டு. அம்பாள் மஹா சம்பத் கௌரி எனப்படும் பெரிய நாயகி கிழக்கு பார்த்து எழுந்தருளி, தனி சந்நதி கொண்டுள்ளார். மகாலட்சுமி, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், பைரவி எனப்படும் காளி ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் வீணையைக் கையிலேந்தி, சற்றே வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கின்றார் தட்சிணாமூர்த்தி. இவரை "வீணா தட்சிணாமூர்த்தி” என்றே தலபுராணம் குறிப்பிடுகின்றது. சிவன் இசையின் தலைவன். அதை உணர்த்தும் வகையில் அழகிய சடை முடியோடும், கைகளில் வீணையோடும், நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் தட்சிணாமூர்த்தி. இத்தல தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் செய்து, குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடக்கிறது. வினை தீர்க்கும் வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை வணங்கினால் வளங்கள் பலவும் பெறலாம்.
இங்கு சற்றே வித்தியாசமான கோணத்தில் நவகிரக சந்நிதி வடிவமைக்கப் பெற்றுள்ளது. இத்தலத்தில் சூரிய பகவானை நோக்கி நவகிரக சந்நிதி அமைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். தோஷங்களால் பாதிக்கப்பட்டோர் நெய் விளக்கேற்றியும், விசேஷ பூஜைகள் செய்தும், நவகிரக சந்நிதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் சகல தோஷங்களும் நீங்கப் பெறும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு : ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். சப்தரிஷிகள் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவர்கள் ஆவர்கள். சப்த ரிஷிகளின் ஆசிரமம் அருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே, தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. அந்த குழைந்தைக்கு பாலுட்டுமாறு தனது பத்தினியான அருந்ததியிடம் வசிஷ்டர் கூறினார்.
பூஜைக்கு மலர் பறிக்க சென்று கொண்டு இருந்ததால், அருந்ததி குழந்தைக்கு பால் கொடுக்கவில்லை. கோபம் கொண்ட வசிஷ்டர் தனது மனைவியை தனிமைப்படுத்தி தண்டித்தார். மற்ற ரிஷி பத்தினிகள் அனைவரும் அருந்ததியை சார்ந்தும், ரிஷிகள் வசிஷ்டரை சார்ந்தும் வாதிட்டார்கள். ரிஷி பத்தினிகளுள் ஒருவரான அருந்ததி குழந்தைக்குப் பால் கொடுக்க மறுக்கவே கார்த்திகை பெண்கள் அறுவரும் குழந்தைக்குப் பால் கொடுத்தனர். இச்செய்தியை ஏழு முனிவர்கள் கேட்டு மனைவிமார்களைச் சபித்து விட்டார்கள்.
குழந்தை ஆறுமுகனாக மாறி முனிவர்களைச் சபித்தார். இதனால் முனிவர்கள் தன் சாபம் நீங்கும் பொருட்டுத் இத்தலத்துக்கு வந்து தவம் செய்தனர். ஏழு ரிஷிகள் கடுந்தவம் புரிந்ததால், அவர்களுக்கு அருள் செய்ய தன் சிவப்பேரொளியில் அவர்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஈசன். தன் லிங்கத் திருமேனியில் ஏழு ரிஷிகளும் ஐக்கியமானதால், இத்தலத்திலுள்ள சிவலிங்கத் திருமேனியில் ஏழு புள்ளிகள் தோன்றின. மேலும் ஏழு ரிஷிகள் தவமிருந்த இடமே திருத்தவத்துறை ஆயிற்று. ஏழு முனிவருக்கும் அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத்தலத்துக்கு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
காஞ்சி மாவட்டம் திருப்போரூர் செம்பாக்கத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாலா ஒளஷத லலிதா திரிபுர சுந்தரி கோவில். இந்த கோவிலின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருபோரூர் (OMR) - செங்கல்பட்டு சாலையில் உள்ளது வட திருவானைக்கா என அழைக்கப்படும் செம்பாக்கம். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம் திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில் (ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயம் அருகில்) ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில் 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை
இந்த திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும் (இரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள் நவரத்தினங்கள் நமது உடம்பிலுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும் வளர்பிறை காலங்களில் மருந்து சாற்றப்பட்டு பலஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் ஏழரை ஆண்டுகள் உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, ஸஸ்த்திரம என்ற முறையில் அமையப்பெற்றவளாவாள்.
திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையாகியுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌத்தரய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள்.
மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும் என்றும் மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 முழுபுடவை அணிவிக்கப்படும் என்று பீடத்தின் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார். தினசரி பாதபூஜை உண்டு.
தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியாக அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல் இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் ஸ்ரீசக்ரசபை என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்வதாக ஐதீகம். ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மூம்மூர்த்தி சொரூபிணி.
ஒளஷத லலிதாவிற்கு நந்தவன புஷ்பங்கள் மட்டுமே சாற்றப்படுகிறது. பச்சை கற்பூர ஆரத்தி மட்டுமே. திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும். பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், மூலிகை பிரசாதம் வழங்கப்படும்
ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி
கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம். ஸ்ரீபாலா - அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள் வல்லவர்கெல்லாம் வல்லலளாய் ஆட்சி செய்வாள், அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் சித்தர் கருவூரார்.
சித்தமெல்லாம் சிவ மயமாய் திளைத்திருந்த ஆதி சக்தியின் அருளும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகையை ஆதிசக்தியின் அம்சம் தான் ஸ்ரீ பாலா தெய்வம் அவளையே போற்றி அகத்தியர், போகர், திருமூலர்,கெங்கனார், கரூரார் போன்ற சித்தர்கள் வணங்கி பூஜித்தனர். இந்த அம்சம் ஒரு சின்னஞ்சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சரியமான ஒன்று. நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில் வாலை வாலாம்பிகை என்றும் சித்தாந்தம் வணங்குகிறது.
சமஸ்கிருத்தில் பாலா என்றும் வேதாந்தம் இந்த குழந்தை தெய்வத்தை வணங்குகிறது. பல சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவமாக பட்டு பாவாடை சட்டையுடன் ரத்தினகரங்களுடன் நட்சத்திரங்களை பழிக்கும் முக்தியுடன் பக்தர்களை ‘வா’ என்று தாயுள்ளத்துடன் அழைத்து அருள்பாலிக்கிறார். பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்பாளுக்கும், மேலும் பள்ளியில் படிக்கும் 3 ஏழை குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை சட்டை மற்றும் அவரவர் வசதிற்கேற்ப கொலுசு கொடுத்தும் தங்களின் நேர்த்திகடன் நிறைவேற்றுக் கொள்கின்றனர். குழந்தைகளுக்கு பிரசாதமாக தேனைக் கொடுக்கின்றனர். இதனால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம்.
* ஆடி : மகா வாராகி ( ஆஷாட) நவராத்திரி உற்சவம் (ஆடி அமாவாசை திதி முதல் தசமி திதி) வரை
* புரட்டாசி : ஸ்ரீ சாரதா நவராத்திரி உற்சவம் (புரட்டாசி அமாவாசை திதி முதல் தசமி திதி வரை) விஜயதசமி அன்று காலை ஏககால இலட்சாரச்சனை
* தை : ஸ்ரீ இராஜ மாதங்கி நவராத்திரி உற்சவம் (தை அமாவாசை முதல் தசமி திதி வரை)
* பங்குனி : ஸ்ரீ லலிதா மஹா (வசந்த) நவராத்திரி மகோற்சவம்.
ஸ்ரீ வித்யா நவாரண மகாயாகம், திருக்கல்யாணம், ஸ்ரீ லலிதா பட்டாபிஷேகம், பண்டாசூரசம்ஹாரம், அற்புத திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி.
* மஹா சிவராத்திரி மகோற்சவம் ( Massi_4 Kala SiavaLinga Pooja)
பிரதி மாதம் பௌர்ணமியில், மாலை மகா அபிஷேக சர்வ அலங்காரம், பாலா உற்சவர் ஊஞ்சல் சேவை, நவஆவரண பூஜை, மூலிகை அம்பாளுக்கு 27 ஆர்த்தி திபாராதனை.
காலை 8 மணி முதல் 1 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 வரை.
அமைவிடம்:
திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.
ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,
திருப்போரூர் (OMR)- செங்கல்பட்டு சாலை,
செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா
காஞ்சிபுரம் மாவட்டம்-603 108.
தொடர்புக்கு: 9789921151 , 9445359228.
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம்.
இறைவன் பெயர் புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்
இறைவி பெயர் சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி
பாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் போற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது.
இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.
கோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார்.
லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின்றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.
கோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.
திருவிளையாடல்: திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்குரிய நிதிவசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள்.
அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திருவுளம் கொண்ட இறைவன் ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால் பூவணநாதரின் திருவுருவை வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள் அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த திருவுருவச் சிலையில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம் இத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
ஆலய முகவரி
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்பூவணம் அஞ்சல்
இராமநாதபுரம் மாவட்டம்
PIN - 623611

சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஸ்தல வரலாறு :
மதங்களைக் கடந்து எல்லா தரப்பு மக்களாலும் பூஜிக்கப்படும் மகான் சீரடி சாய்பாபா. பாபா யார்? அவரது பெற்றோர் யார்? அவரது பூர்வீகம் எதுப என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல், கேள்வியின் நாயகனாகவே வாழ்ந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தினார் பாபா. இன்று, பக்தர்கள் பலரது கண்கண்ட தெய்வமாக போற்றப்படுகிறார்.
சீரடி சாய்பாபா வாழ்ந்த சீரடியில் அமைந்துள்ள அவரது கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மராட்டிய மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ரகாதா தாலுகாவில் உள்ள சிறிய ஊர்தான் சீரடி. இங்குள்ள சாய்பாபாவின் நினைவிடத்திலேயே அவருக்கான கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தனது 16-வது சீரடி வந்து சேர்ந்த பாபா, அதன் பிறகு வேறு எங்கேயும் செல்லவில்லை.
அங்குள்ள `கண்டோபா’ என்ற மசூதியில் தான் தங்கியிருந்தார். பாபா நிகழ்த்திய முதல் அற்புதம், நானா சாஹேப் என்பவருக்கு குழந்தை பாக்கியம் அருளியதுதான். அதன் பிறகுதான் அவரது புகழ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இன்று உலகம் முழுக்க அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள்.
அதிசய வேம்பு :
பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தபோது பகல் வேளைகளில் அங்குள்ள வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் உள்ளது. இந்த மரத்தின் இலைகள் கசப்பு தன்மைக்கு மாறாக இனிப்பு சுவை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இந்த வேம்பு மரத்தை வலம் வந்து வழிபடுகிறார்கள்.
3 முறை அதை வலம் வரும் பக்தர்கள், அங்கு தரப்படும் தீர்த்தத்தை வாங்கி அருந்துகிறார்கள். தொடர்ந்து கோவிலுக்குள் பாபாவை தரிசிக்க செல்கிறார்கள். கோவிலுக்குள் பாபாவின் நினைவிடம் மீது திருக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார் சாய்பாபா. 5 அடி 5 அங்குலம் உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அற்புத கல் :
பாபா வாழ்ந்த காலத்தில் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி அவரை தேடி வரும் பக்தர்களுக்கு அவர் ஒரு கல் மீது அமர்ந்து கொண்டு அருளாசி தருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஷீலா என்று அழைக்கப்படும் அந்த கல், இன்றும் பாபா கோவிலில் அமைந்துள்ளது. பாபாவின் திருமேனி அமைந்துள்ள இடத்திற்கு அருகே இந்த கல் உள்ளது.
பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாபாவை தரிசித்த பிறகு, இந்த ஷீலா கல்லை வந்து வழிபடுகிறார்கள். அவ்வாறு வழிபட்டால் பாபாவே தங்களது குறைகளை நீக்கி விடுவார் என்று நம்புகிறார்கள். கோவில் வளாகத்தில் சாய்பாபா பயன்படுத்திய கிணறு உள்ளது. நாழிக் கிணறு என்று அழைக்கப்படும்.
அதிசய நந்தா தீபம் :
இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.
ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சத்ய நாராயண பூஜை :
இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.
திருவிழா :
குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.
பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.
எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்… என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.

இந்த கிணற்றில் இருந்த தண்ணீர் இரைத்து, தான் உருவாக்கிய நந்தவன பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தார் பாபா. அவர் தண்ணீர் இரைக்க பயன்படுத்தி ஓலையால் செய்யப்பட்ட பட்டை இன்றும் இங்கு பத்திரப்படுத்தி பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதே வளாகத்தில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் நந்தா தீபம் அதிசயமாக கருதப்படுகிறது. பாபா காலத்தில் ஏற்றப்பட்ட இந்த தீபம் இன்று வரையிலும் இடைவிடாது எரிந்து கொண்டிருக்கிறது. இந்த விளக்கிற்கு தினமும் கோவில் பூசாரிகள் எண்ணை ஊற்றுகிறார்கள். விளக்கின் திரியை மட்டும் அவர் மாற்றுவதில்லை.
ஒரே திரியிலேயே ஒளி வீசிக் கொண்டிருக்கிறது இந்த தீபம். கோவிலின் இன்னொரு பகுதியில் அருங்காட்சியகம் உள்ளது. அங்கு பாபா பயன்படுத்திய ஆடை, பல்லக்கு, கோதுமை அரைப்பதற்கு பயன்படுத்திய கல், பாத்திரங்கள் மற்றும் அவரது அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சத்ய நாராயண பூஜை :
இங்கு தினமும் காலை 7, 9 மற்றும் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் சத்திய நாராயண பூஜை புகழ் பெற்றது. திருமணமான 100 தம்பதியர் இதில் கலந்து கொள்வார்கள். இந்த பூஜையில் திருமணம் ஆன தம்பதியர் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் கிட்டும். தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தால் அதுவும் சுமூகமாக தீரும் என்பது நம்பிக்கை.
திருவிழா :
குரு பூர்ணிமா, ராமநவமி, விஜய தசமி விழாக்கள் இக்கோவிலில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. குருபூர்ணிமா அன்று சாய்பாபாவின் திருவுருவச் சிலை பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். தினமும் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடை இரவு 10 மணி வரையிலும் தொடர்ந்து திறந்திருக்கும்.
பாபா கேட்ட வெந்நீர் :
சீரடி சாய்பாபா உருவச்சிலையை கழுவி சுத்தம் செய்வதற்கு தேவையான வெந்நீரை, தமிழ் பேசும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொடுத்து வருகிறார்கள். இவர்கள் தந்த வெந்நீர் கொண்டு சாய்பாபா சிலையை கழுவிய பிறகே, சாதாரண தண்ணீரால் சிலை சுத்தம் செய்யப்பட்டு, பூஜையும் நடத்தப்படுகிறது.
எங்களுக்கு பெற்றோர், சாய்பாபா கோவில் அருகே அமைந்துள்ள சிறிய வீட்டில் வசித்து வந்தனர். ஒருநாள் இரவு, எனது தாயின் கனவில் தோன்றிய பாபா, தனது விக்ரகத்தை சுத்தம் செய்ய வெந்நீர் கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அன்று முதல் இப்போது வரை எங்களது குடும்பத்தினரே, பாபாவின் விருப்பப்படி அவரது திருவுருவச் சிலையை சுத்தம் செய்ய வெந்நீர் தந்து வருகிறோம்… என்கிறார். தற்போது மூன்றாவது தலைமுறையாக இக்கோவிலுக்கு வெந்நீர் தந்து வரும் பிச்சு என்கிற ராதாகிருஷ்ணன் அய்யர்.
ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருளபாலிப்பது இத்தலத்தில் மட்டும் தான்.
இறைவன் பெயர் - துயரந்தீர்த்தநாதர், பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி பெயர் - பூங்கொடிநாயகி, புஷ்பலதாம்பிகை
தல வரலாறு: உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது. சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி உமையம்மை பூமிக்கு வந்தார். அவர் இத்தலத்தில் தங்கியிருந்து சிவனை வணங்கி வந்தாள். இறைவன் உமையின் தவத்திற்கு மகிழ்ந்து அவளுக்கு காட்சி கொடுத்து தெட்சிணாமூர்த்தியாக உமாதேவியார் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார்.
அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரஸ்வதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள். அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார்.
அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான்). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது.
ஓமம் என்ற சொல் வேள்வியைக் குறிக்கும். வேள்விச்சிறப்புடைய ஊர் எனபதாலும் இத்தலம் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். திருநாவுக்கரசர் தனது பாடலில் இவ்வூரில் எப்போதும் ஹோமங்கள் நடந்து வந்தது என்றும், ஹோமப் புகையால் சூழப்பட்டதால் இவ்வூர் ஓமாப்புலியூர் என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரிதீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம்.. அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. வலமுடித்து உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதி. சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்புமூர்த்தியாக இறைவன் காட்சிதருகின்றார். சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத்திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப் பட்டுள்ளன.
இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையவர். இறைவன் சந்நிதியில் வலதுபுறம தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருளபாலிப்பது இத்தலத்தில் மட்டும் தான். இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம். இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஏனைய கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.
பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. மற்றவையாவன: பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்), கானாட்டம்புலியூர், எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர். இவற்றில் கானாட்டம்புலியூர் இத்தலத்திலிருந்து அருகில் உள்ளது. எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்கள். பெரும்பற்றப்புலியூர், ஓமாம்புலியூர், கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலம். இந்த ஐந்து தலங்களிலும் வியாக்ரபாத முனிவர் ஈஸ்வரனை வழிபட்டுள்ளார்.
இத்தலத்திற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவக்கரசர் பதிகம் ஒன்றும் உள்ளன. ஞானசம்பந்தர் பதிகத்தில் இத்தலம் "ஓமமாம்புலியூர்" என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பர் பாடலில் "ஓமாம்புலியூர்" என்று மருவி வருகிறது. இருவரும் தங்கள் பதிகங்களில் இத்தலத்தை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர். ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீஸ்வரர்.
இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில்
ஓமாம்புலியூர்
ஓமாம்புலியூர் அஞ்சல்
காட்டுமன்னார்குடி வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608306