என் மலர்
கோவில்கள்
திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படும் ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத காரியமாகவும் உள்ளது. ஏழை எளியவர்கள் அவ்வளவு தூரம் சென்று இறைவனை தரிசித்து வருவது என்பது சாத்தியமில்லைதான். அதற்காக உருவானவையே ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்ற ஐந்து சிவாலயங்கள். குரோசம் என்பதற்கு இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் என்று பொருள்.
தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, மனிதர்கள் பயன்பெறுவதற்காக அம்பெய்தி உடைத்தார், ஈசன். அந்த அமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி, ஐந்து தலங்களாக மாறியது. இந்த ஐந்து ஆலயங்களே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே இந்த ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
சிவசைலம்
தென்காசி மாவட்டத்தில் உள்ளது ஆழ்வார்குறிச்சி. இங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரமகல்யாணி உடனாய சிவசைல நாதர் கோவில் உள்ளது. கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இந்த ஊர், முன்காலத்தில் கடம்ப வனமாக இருந்திருக்கிறது. நந்திகேஸ்வரர், எழுந்து நிற்கும் தோரணையில் காட்சி தருகிறார். பரமகல்யாணி அம்மன் நான்கு கரங்களுடன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரை நான்கு புறம் இருந்து தரிசிக்கும் வகையிலான தனிச் சிறப்பு கொண்டது இந்த ஆலயம். திருநெல்வேலியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிவசைலம் திருத்தலம்.
ஆழ்வார்குறிச்சி
திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, ஆழ்வார்குறிச்சி. இங்கு வன்னீஸ்வரர் திருக் கோவில் உள்ளது. அக்னி பகவான் வழிபாடு செய்த இறைவன் என்பதால், இத்தல மூலவர் ‘அக்னீஸ்வரர்’, ‘வன்னியப்பர்’, ‘வன்னீஸ்வரர்’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். மூலவரின் சன்னிதி முன்பாக உள்ள தூணில், கர்ப்பமான நிலையில் ஒரு பெண் தெய்வம் அருள்கிறது. சுகப் பிரசவம் ஏற்படவும், விரைவில் திருமணம் நடைபெறவும், காலசர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் நீங்கவும் இந்த பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். பாப நாசத்தில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
பாபநாசம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம் என்ற ஊர். இங்கு உலகம்மை உடனாய பாபநாசநாதர் கோவில் இருக்கிறது. இறைவன் ‘பாபநாசநாதர்’ என்றும், அம்பாள் ‘உலகம்மை, விமலை’ என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். தேவர்களின் தலைவனான இந்திரனின் பாவங்களை எல்லாம் போக்கி அருளிய இறைவன் என்பதால், இவருக்கு இந்தப் பெயர் வந்தது. தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன. நவ கயிலாயங்களில் முதல் தலமாக விளங்கும் இந்த பாபநாசம், சூரிய பகவானுக்குரியதாகத் திகழ்கிறது.
கடையம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கடையம். இங்கு நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இறைவனின் திருநாமம் ‘வில்வவனநாதர்.’ “காணி நிலம் வேண்டும் பராசக்தி..’ என்று பாரதியார் வேண்டிய சக்தியாக, இந்த ஆலயத்தில் அருளும் நித்யகல்யாணி அம்மன் திகழ்கிறார். சிவபெருமான், பிரம்மதேவனுக்கு வில்வ பழத்தை வழங்கினார். அதை மூன்றாக உடைத்த பிரம்மன், ஒரு பாகத்தை கயிலாய மலையிலும், மற்றொரு பாகத்தை மேரு மலையிலும், இன்னொரு பாகத்தை துவாத சாந்த வனத்திலும் நட்டார். மூன்றாவது பகுதியை பிரம்மன் நட்ட, துவாத சாந்த வனத்தில்தான், வில்வவனநாதர் கோவில் இருக்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும். அதை உடைத்துப் பார்த்தால், அதன் உள்ளே சிவலிங்க பாணம் போன்று விதை இருப்பதை காணலாம் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கோவில் கதவில், ராமரின் தந்தையான தசரதனால், சிரவணனன் கொல்லப்பட்ட காட்சிகள் சிற்பகமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ராமாயணத்தோடு தொடர்புடைய நிறைய சிற்பங்களும் காணப்படுகின்றன. திருநெல் வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலும் கடையம் உள்ளது.
திருப்புடைமருதூர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக் கோவில். இத்தல இறைவனின் புராணப் பெயர், ‘புடார்க்கினியீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம், கோமதி அம்மன். மூலவரின் திருமேனி மீது காயம்பட்ட வடு உள்ளது. இதனால் சுயம்புவாக தோன்றிய இந்த மூலவரின் மீது சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்கிறார்கள். அபிஷேகம் எதுவும் கிடையாது.
“நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார். அந்த சாய்வு நிலையிலேயே மூலவரை நாம் தரிசிக்கலாம். தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, செவிசாய்த்து கேட்பவர் என்பதாகவும் இதனை பொருள் கொள்ளலாம்.

பட்டீசுவரர் கோவில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பேரூரில் அமைந்து இருக்கும் ஒரு இந்து சைவ சமய கோவில் ஆகும்.
கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "பேரூர் " என்னும் பாடல்பெற்ற ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற இவ்வாலயம், மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு "நடராஜப்பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு....
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற இக்கோவில் கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது.
இக்கோவில் கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் அருணகிரிநாதர், கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடப்பெற்றதாகும். இங்கு சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன் பச்சை நாயகி அம்மன் துணையுடன் அருள்பாலிக்கிறார். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இத்திருக்கோவிலின் தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.
இத்திருக்கோவிலின் புராதனப் பெயர் பிப்பலாரண்யம் (பிப்பலம் = அரச மரம்; ஆரண்யம் = காடு).மேலும், காமதேனுபுரி, பட்டிபுரி,ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.
வரலாறு
இக்கோவில் கரிகால் சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோவிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோவிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோவிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோவிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன.
இக்கோவிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.
பெயர் காரணம்
ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத் தொழிலினிடையே சோர்வுற்றுக் கண்ணயர்ந்து விட்டார். இதை அறிந்த திருமால் காமதேனுவை அழைத்து “நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத்தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அதன்படி காமதேனுவும் இமயமலையில் அருந்தவமிருந்ததராம். ஆனால் சிவபெருமான் அருள் சித்திக்கவில்லை.
அச்சமயம் நாரத முனிவர் தஷிணகைலாயம் பற்றிச்சொல்ல, காமதேனுவும் கன்றுடன் அந்த இடத்தை அடைந்தது. அங்கே ஆதிலிங்க மூர்த்தியாகக் காஞ்சி நதிக்கரையில் இருந்த சிவபெருமானுக்கு தினமும் பாலபிஷேகம் செய்து தவமிருந்தது. ஒரு நாள் காமதேனுவின் கன்றான பட்டி, அந்த ஆதிலிங்க மூர்த்தியின் மேல் கவிந்திருந்த புற்றை விளையாட்டாய்க் குலைத்து விட்டது. கன்றின் குளம்படி சிவபெருமானின் திருமுடியில் அழுந்தப் பதிந்து விட்டது.
பதறிப்போன காமதேனுவின் வருத்தத்தைப் போக்கும் விதமாக, சிவபொருமான் தோன்றினார். “பார்வதி தேவியின் வளைத் தழும்மை என் மார்பகத்தில் ஏற்றது போல் உன் கன்றின் குளம்படித் தழும்பையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன்” என்று ஆறுதல் கூறினார். “இது முக்தி தலம் என்பதால், நீ வேண்டும் சிருஷ்டி ரகசியத்தை இங்கே அருள முடியாது. அதை திருக்கருவூரிலே அருளுகிறேன். இங்கே நீ தொடர்ந்து தவமிருந்து எனது நடன தரிசனத்தைக் காணலாம். உன் நினைவாக இத்தலம் பட்டிபுரம் காமதேனுபுரம் என்று வழங்கப்படட்டும். எனக்கு பட்டிநாதர் என்ற ஒரு திருப்பெயரும் இவ்வூரில் வழங்கட்டும்” என்று அருளினார்.
இந்த புராணத்தை மெய்ப்பிக்கும் வகையில் சிவலிங்கத்தின் திருமுடியில் குளம்படித் தழும்பை இன்றும் காணலாம். இந்நிகழ்வின் காரணமாக இக்கோவிலில் இருக்கும் இறைவன் பட்டீசுவரர் என்றே அழைக்கப்படுகிறார்.
பாடல் பெற்ற தலம்
இத்தலம் தேவாரம் போன்ற சமய இலக்கியங்களிலும் பல வரலாற்று இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் மூலமாக இத்தலத்தை பற்றிய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தகவல் கிடைக்கின்றன. சோழர்களின் பூர்வ பட்டையம் இவ்வாலயத்தின் வரலாற்றையும் இத்தலத்தில் வாழ்ந்த மக்களை பற்றியும் தகவல்களை கொண்டுள்ளது. இக்கோவிலுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
சிறப்பு
இக்கோவிலில் பல்வேறு கோபுரங்களும் மண்டபங்களும் உள்ளன. இக்கோவிலின் மண்டபம் ஒன்றில் செய்யப்பட்ட நடராஜர் சிலை உள்ளது. அம்மண்டபத்தின் தூண்களில் அழகிய சிற்பங்களும் அதன் மேற்கூரையில் கல்லால் ஆன சங்கிலியும் அமைந்துள்ளன.
இக்கோவிலில் பட்டி விநாயகர் சன்னிதியும், அரச மரத்தடியில் அரசம்பலவாணர் (சிவபெருமான்) சன்னிதியும் அமைந்துள்ளன. அந்த அரச மரத்தின் அடியில் சிவபெருமான் தாண்டவமாடியதாக நம்பப்படுகிறது. இக்கோவில் பிறவாப்புளி (புளியமரம்) மற்றும் இறவாப்பனை (பனைமரம்) ஆகியவற்றை தல விருட்சமாகக் கொண்டுள்ளது.
வழிபாட்டு நேரம்
இத்திருக்கோவிலை அனைத்து நாட்களிலும் வழிபடலாம்.
காலை : 05:30 முதல் 01:00 வரை
மாலை : 04:00 முதல் 09:00 வரை

இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது.
இந்திய மண்ணில் இந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத கலைப்படைப்பாக இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ கம்பீரமாக வீற்றிருக்கிறது. என்னதான் நாம் நவீன உபகரணங்களையும் தொழில் நுட்ப உத்திகளையும் பயன்படுத்தி வானுயர்ந்த கட்டிடங்களை நகர்ப்பகுதிகளில் உருவாக்கியுள்ளபோதிலும் நம் முன்னோர்களின் ரசனைக்கும் கட்டிடக்கலை நுணுக்கங்களுக்கும் இணையாக ஒரு கட்டுமானப்படைப்பை - மனித அறிவும் ஜனநாயகமும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்ட கடந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் - உருவாக்கவேயில்லை என்பதுதான் உண்மை.
அந்த உண்மைக்கான நிகழ்காலத்தின் பதிலாகத்தான் இந்த ‘அக்ஷர்தாம் கோவில்’ உருவாகியிருக்கிறது என்றால் மிகையில்லை. வெகு தூரம் கடந்து போய்விட்ட இந்திய மண்ணின் மஹோன்னத கோவிற்கலை பாரம்பரியத்தை நினைவூட்டுவதுபோல், இந்த பிரம்மாண்ட ஆலய வளாகம் இந்தியாவின் தலைநகரில் எழுப்பப்பட்டிருக்கிறது. இது அரசாங்க அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒரு சாதனை என்பதும் வியப்பூட்டும் மற்றொரு அதிசயமாகும்.
இந்திய மண்ணின் பாரம்பரிய கோவிற்கலை மரபையும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் இந்த மஹோன்னத கோவில் வளாகத்தை உருவாக்குவதற்கு 5 வருடங்கள் பிடித்துள்ளன. ‘போச்சனஸ்வாமி ஷீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா’ எனும் ஆன்மீக மடத்தின் குருவான ‘பிரமுக் ஸ்வாமி மஹராஜ்’ என்பவரது நோக்கம் மற்றும் வழிகாட்டலில் இந்த கோவில் உருவாகியிருக்கிறது. 3000 தன்னார்வ கரசேவகர்களையும் உள்ளடக்கிய 11000 கலைஞர்களின் கூட்டு உழைப்பில் இந்த ‘அக்ஷர்தாம் கோவில் வளாகம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு நவம்பர் 6ம் நாள் இக்கோவில் திறக்கப்பட்டிருக்கிறது. வாஸ்து சாஸ்திரம் மற்றும் பஞ்சரத்ர சாஸ்திரம் போன்ற பாரம்பரிய இந்திய கட்டிடக்கலை தத்துவ மரபுகளை பின்பற்றி இந்த கோவில் வடிவமைப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் ஒட்டுமொத்த வளாகமும் 5 முக்கியமான தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
வளாகத்தின் நடுவே இதன் பிரதான அமைப்பு வீற்றிருக்கிறது. 141 அடி உயரத்தில் காட்சியளிக்கும் இந்த கோவில் வளாகமானது அலங்கார நுணுக்கங்கள் கொண்ட 234 தூண்கள், 9 அலங்கார மாடகோபுரங்கள், 20 நாற்கர விமானக்கூரைகள், ஒரு பிரம்மாண்ட கஜேந்திர பீடம் மற்றும் தெய்வங்கள், ரிஷிகள், பக்தர்கள், யோகிகள் ஆகியோரை குறிக்கும் 20000 சிற்பங்கள் மற்றும் சிலைகள் போன்றவற்றை தன்னுள் கொண்டுள்ளது. இளஞ்சிவப்பு மணற்பாறைகள் மற்றும் வெள்ளை சலவைக்கல் இரண்டையும் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் உலோகக்கட்டமைப்புகளோ கான்கிரீட் கலவையோ பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க நம் முன்னோர்களின் படைப்பைப்போன்றே உருவாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் நமது சம கால கலைஞர்கள் ஜெயித்தார்களா என்பது பற்றி நீங்கள் நேரில் இந்த கோவிலைப்பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரலாம். கோவில் வளாகத்தில் உள்ள ‘சஹஜாநாத் பிரதர்ஷன்’ எனும் கூடத்தில் இயந்திரபொம்மைகள், தத்ரூப காட்சி மாதிரிகள் போன்றவற்றை பயன்படுத்தி ஸ்வாமிநாராயணனின் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகசமாதானம், ஒற்றுமை, கருணை, தொண்டு போன்ற மானுட அம்சங்களை வலியுறுத்துவதுடன் ஒப்பற்ற மஹாசக்தியை (கடவுள்) முன்னிலைப்படுத்துவதாகவும் இந்த சித்தரிப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கோவில் வளாகத்தில் ‘நீலகண்ட கல்யாண யாத்ரா’ எனும் விசேஷமான ஆவணப்படம் ஒரு பிரம்மாண்ட திரையில் (85’ X 65’) பக்தர்களுக்காக திரையிடப்படுகிறது. இமாலயம் தொடங்கி கேரளக்கடற்கரை வரை இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மீக புனித்தலங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள், கலாச்சாரம், திருவிழாக்கள் போன்றவற்றை படம் பிடித்து தொகுத்து இந்த சிறப்பான ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
விரிவான உள்ளடக்கத்துடன் இதே படத்தின் சர்வதேச திரைவடிவமும் ‘மிஸ்டிக் இந்தியா’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்ஷர்தாம் கோவிலில் படகுச்சவாரி எனும் புதுமையான அனுபவத்திற்கான ஒரு உன்னத வளாகம் ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதி அற்புதமான கற்பனையில் உதித்த ஒரு படைப்பாக்கம் என்றே இந்த வளாகத்தை சொல்லலாம். இந்த வளாக அமைப்பில் பார்வையாளர்கள் படகில் நகர்ந்தபடியே நிஜக்காட்சியை பார்ப்பது போன்று தத்ரூபமான காட்சித்தோற்ற அமைப்புகளை கரைப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.
இந்திய மரபின் சில அடிப்படையான அம்சங்கள், வாழ்க்கைக்காட்சிகள் போன்றவற்றை சித்தரிக்கும் நுணுக்கமான (இன்ஸ்டலேஷன் பாணி) காட்சி அமைப்புகள் இங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவை பார்வையாளர்களை நிஜமாகவே இன்னொரு யுகத்துக்குள் கால இயந்திரம் போன்று இழுத்துச்செல்கின்றன. குருகுலக்கல்வி, யோகக்கலை போன்றவை இந்திய பாரம்பரிய கல்வி முறையின் அங்கமாக இடம் பெற்றிருந்ததை விளக்கும் தத்ரூப காட்சிகள் நம் முன்னே வெளிச்சத்துடன் உயிர் பெறுவது பரவசமூட்டும் அனுபவமாகும்.
பார்வையாளர்கள் இருட்டிலும், காட்சிகள் நுணுக்கமாக வெளிச்சப்படுத்தப்பட்டும் இருக்குமாறு அற்புதமான தொழில்நுட்பத்துடன் இந்த படகுச்சவாரி வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. படகுச்சவாரி என்பதற்கு பதிலாக ‘கால இயந்திர சவாரி’ என்றே இந்த அனுபவத்தை சொல்லலாம் என்பதை நேரில் புரிந்து கொள்வீர்கள். அக்ஷர்தாம் வளாகத்தின் யக்ஞபுருஷ் குண்டம் மற்றும் அதிலுள்ள இசைநீரூற்று மற்றொரு சிறப்பம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. வேதகால யாக குண்டம் மற்றும் நவீன இசை நீரூற்று அமைப்பு இரண்டையும் கலந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
புராதன கால படிக்கிணறு போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த குண்டம் அல்லது கிணறு உலகிலேயே மிகப்பெரிய படிக்கிணறாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மாலை நேரங்களில் இந்த குண்டத்தின் இசை நீரூற்று இயக்குவிக்கப்படுகிறது. வண்ண விளக்குளால் ஜொலிக்கும் இந்த அதிஉயர நீரூற்றுகள் மாயாஜாலம் போன்று பார்வையாளர்களை திகைக்க வைத்துவிடுகின்றன. மேலும், எட்டு இதழ்களுடன் கூடிய தாமரை மலர் போன்ற வடிவமைப்பு இந்த படிக்கிணறின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அக்கால இந்திய கணிதத்தத்துவங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்த ‘எண்கோண’ தத்துவப்படி இந்த தாமரை மலர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷர்தாம் கோவில் வளாகத்தின் மற்றொரு அம்சமாக இதன் உள்ளே ‘பாரத் உபாவன்’ அல்லது ‘பாரத தோட்டம்’ எனும் அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனுள்ளே குழந்தைகள், பெண்கள், சுதந்திரப்போராட்ட வீரர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் இந்திய பிரபல்யங்களின் சிலைகள் காணப்படுகின்றன.
இவை தவிர அக்ஷர்தாம் கோவிலில் யோகி ஹிருதய் கமால், நீலகண்ட அபிஷேக், நாராயண் சரோவர், பிரேம்வதி அஹர்கிருஹ் மற்றும் ஆர்ஷ் சென்டர் போன்ற இதர முக்கிய அம்சங்களும் உள்ளன. தலைநகருக்கு விஜயம் செய்யும் இந்தியப்பயணிகள் அனைவரும் மறக்காமல் தரிசிக்கவேண்டிய அற்புத ஸ்தலம் இந்த அக்ஷர்தாம் கோவிலாகும்.

அரசன்குடி சிவன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தலச்சிறப்பு : அரசன்குடி சிவன் கோவில் 2000 ஆண்டுகள் பழமையானது. திருச்சியின் மற்றுமொரு சிறப்பு கல்லணை. நதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.
காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகால் பெருவளத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவிதமான ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது. புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும்.
தல வரலாறு : கரிகாலன் கல்லணை கட்டிக்கொண்டு இருக்கும் பொது அணை சரியாக நிற்காமல் உடைந்து விழுந்து கொண்டே இருந்தது அப்போது மன்னன் இருந்த ஊர் தான் அரசன்குடி. அரசன் இவ்வூரில் தங்கியிருந்த போது சிவன் அரசன் கனவில் வந்து தனக்கு இவ்வூரில் கோவில் எழுப்பி வழிபாடு செய்துவிட்டு கல்லணை கட்ட தொடருமாறு கூறினார். சிவன் சொன்னபடி அரசனும் இவூரில் ஒரு திருத்தலம் எழுப்பி சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை முடித்தார். அரசன்குடியில் இருந்து சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை பார்த்துக் கொண்டதால் இவ்வூர் அரசன்குடி என பெயர் பெற்றது. இத்திருக்கோயில் அரசன்குடி சிவன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் மன்னன் சிவனை வழிபடுவது போன்ற சிற்பங்களும் உள்ளது.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.
கோவில் முகவரி :
அரசன்குடி சிவன் கோவில்,
அரசன்குடி,
கல்லணை அருகில்,
திருச்சி மாவட்டம்.

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான இது, நிலத்தைக் குறிப்பதாகும். இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார்.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்சபூத தலங்களுள் ஒன்றான இது, நிலத்தைக் குறிப்பதாகும். இந்தக் கோவிலின் மூலவராக சிவபெருமான் லிங்க உருவில் வீற்றிருக்கிறார். ‘ஏகாம்பரநாதர்’ என்பது இவரது பெயர். அம்பாளின் திருநாமம், ‘காமாட்சி அம்மன்’ என்பதாகும். கருவறையில் உள்ள மூலவர் லிங்கத்தை ‘பிருத்வி லிங்கம்’ என்று அழைப்பார்கள். இந்த லிங்கம், மண்ணால் ஆனது. சுயம்பு லிங்கம். எனவே இந்த லிங்கத்திற்கு அபிஷேகங்கள் கிடையாது. மாறாக, லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்குத்தான் அபிஷேகங்கள் அனைத்தும் செய்யப்படுகின்றன.
மற்ற சிவாலயங்களைப் போல, இங்கு அம்மனுக்கு என்று தனியாக சன்னிதி கிடையாது. காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை காஞ்சி காமாட்சியே, அனைத்து சிவாலயங்களுக்குமான தேவி என்பதால், அங்குள்ள சிவாலயங்கள் எதிலுமே அம்பாளுக்கு என்று தனியாக சன்னிதி அமைக்கப்படுவதில்லை. தவிர விநாயகர், முருகன், போன்ற தெய்வங்களுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.
முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் தல விருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் தல விருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம் ஆகும். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.
தலவரலாறு
ஒரு முறை கயிலாயத்தில் இருந்தபோது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். ஈசனுக்கு ஒரு நொடிதான் என்றாலும் அது மனிதர்களுக்கு பல நூற்றாண்டு காலம் என்பதால், அதுவரை உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. இதைக்கண்டு பார்வதிதேவி வருத்தம் அடைந்தார். அவர் தன்னுடைய இந்த பாவத்தைப் போக்க, தவம் மேற்கொள்ள எண்ணினார். அதன்படி காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் அமைத்து பூஜித்தார்.
பார்வதியின் தவத்தை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவபெருமான், கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதிக்கு அருள்புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் ‘பிருத்வி லிங்கம்.’
அதாவது தற்போதைய மூலவர். அம்மன் அருளும் காமகோட்டமே, காமாட்சி அம்மன் கோவிலாகத் திகழ்கிறது. பார்வதி கட்டித் தழுவியதால் ஏகாம்பரநாதர் கோவிலின் மூலவர் லிங்கம் ‘தழுவக் குழைந்தார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது ‘உன்னைப் பிரியேன்’ என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர், இந்தத் தலத்தில் பதிகம்பாடியதன் மூலமாக திரும்பப் பெற்றார்.
ஆலய அமைப்பு
சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலயம், கி.பி. 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோவிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் ‘திருக்கச்சிஏகம்பம்’ என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது.
இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான ராஜகோபுரம், 58.5 மீட்டர் உயரமும், ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவ ராயர் (கி.பி 1509) காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னைக்கு அருகாமையில் இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 72 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் உள்ளது. சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஞ்சிபுரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில் இருக்கிறது, திருமுருகன்பூண்டி என்ற திருத்தலம். இங்கு திருமுருகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருமுறை பாடல்கள் இடம்பெற்ற இந்தக் கோவில், மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளிப்புறம் கொங்குநாட்டு தலங்களின் சிறப்புக்கு உரித்தான வகையில், கருங்கல்லால் ஆன தீப ஸ்தம்பம் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு மற்ற கோவில் களைப் போல நுழைவு கோபுரம் என்று எதுவும் இல்லை.
நான்கு புறமும் உயர்ந்த மதில்களை அரணாகக் கொண்டு, சுமார் 1 ஏக்கர் பரப்பரளவில் இந்தக் கோவில் இருக்கிறது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் காணப்படுகின்றன. கோவிலில் மூலவராக வீற்றிருக்கும், திரு முருகநாதர், சிவலிங்க வடிவில் மேற்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் வழிபடுவதற்கு முன்பாக, ‘மாதவிநாதர்’ என்று அழைக்கப்பட்ட இத்தல இறைவன், முருகப்பெருமான் பூஜித்து வழிபட்ட பிறகு ‘திருமுருகநாதர்’ என்று பெயர் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.
ஆலயத்தின் உள் பிரகாரத்தில் நிருதி விநாயகர், சண்முகர், துர்க்கை, பைரவர், சனீஸ்வரர் மற்றும் நவக் கிரக சன்னிதிகள் உள்ளன. மூலவர் சன்னிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் முருகன் ஆறு முகங்களுடன் காட்சி தருகிறார். இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சன்னிதி அமைந்துள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் கேது சன்னிதி இருக்கிறது. கேது கிரகம் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கின்றனர்.
சேரமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருட்களுடன், சிவ யாத்திரையை மேற்கொண்டார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். அப்போது சுந்தரரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், தன்னுடைய பூதகணங்களை அனுப்பி, சுந்தரரிடம் இருக்கும் பரிசுப் பொருட்களை கொள்ளையடிக்கும்படி கூறினார். சுந்தரர் திருமுருகன்பூண்டி அருகே வந்தபோது பூதகணங்கள், திருடர்கள் வேடத்தில் வந்து அவரிடம் இருந்த பரிசுப் பொருட்களை பறித்துச் சென்றனர். இதனால் கவலை அடைந்த சுந்தரர், திருமுருகன்பூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார்.
இறைவன் நேரில் தோன்றி கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீண்டும் சுந்தரரிடம் ஒப்படைத்தார். இதனை விளக்கும் வகையில் இக்கோவில் மண்டபத்தில் வில் ஏந்திய வேடுவன் கோலத்தில் சிவபெருமான் சிற்பமும், பரிசுப் பொருட்களை பறிகொடுத்த சுந்தரர் கவலையுடன் இருப்பது போன்றும், பின்னர் ஈசனால் பரிசுப்பொருட்களை திரும்ப பெற்று மகிழ்வாக இருப்பது போன்றும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இழந்த பொருளை மீண்டும் பெற்றிட பரிகாரத் தலமாக திருமுருகன் பூண்டி தலம் விளங்குகிறது.
கோவிலின் உள்ளே சண்முக தீர்த்தமும், ஞான தீர்த்தமும் காணப்படுகின்றன. சித்த பிரமை பிடித்தவர்கள் இங்கு தங்கி நீராடி சுவாமியை வழிபட்டால் அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது நம்பிக்கை. இங்கு மாசி மாதம் பெருந்திருவிழா நடக்கிறது. கார்த்திகை, சஷ்டி, விசாகம், பிரதோஷம், ஆடி அமாவாசை மற்றும் தமிழ் மாதம் முதல் திங்கள் அன்று ருத்ராபிஷேகம், சூரசம் ஹாரம், பங்குனி உத்திரம் ஆகிய முக்கிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
திருப்பூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் திருமுருகன்பூண்டி திருக்கோவில் அமைந்திருக்கிறது. இங்கு செல்ல திருப்பூரில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் இருக்கின்றன.
நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
சுவாமி : அருள்மிகு வைத்தியநாத சுவாமி.
அம்பாள் : அருள்மிகு தையல் நாயகி.
மூர்த்தி : பஞ்சமூர்த்திகள், முத்துக்குமார சுவாமி, அங்காரகன் (செவ்வாய்) தன்வந்திரி, ஜடாயு பத்ரகாளி, அறுபத்து மூவர்.
தீர்த்தம் : சித்தாமிர்த தீர்த்தம்.
தலவிருட்சம் : வேம்பு மரம்.
தலச்சிறப்பு : சடாயு என்னும் புள் (பறவை), இருக்கு வேதம் (ரிக்குவேதம்), முருகவேல், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கியதால் இத்தல நாயகர் புள்ளிருக்குவேளூர் எனவும் திருபுள்ளிருக்குவேளூர் என தனிச் சிறப்புடனும் அழைக்கப்படுகின்றார். உயிர்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் பொருட்டு, உமை தையல் நாயகியாய்த் தைல பாத்திரமும், சஞ்சீவியும் வில்வ மரத்தடி மண்ணும் கொண்டுவர இறைவன் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளிய தலம்.
இன்றும் நோய் தீர்க்கும் தலமாக அமைந்து உள்ளதால் பக்தர்கள் கார்த்திகை தோறும் இங்கு பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். இங்கு உள்ள செல்வ முத்துக்குமார சுவாமி மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் ஆவார். கார்த்திகை தோறும் இவருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. சந்தனக் குழம்பு, மண் உருண்டை, சித்தாமிர்தம் ஆகியன நோய் தீர்க்கவல்லன, நவக்கிரகங்களில் இது செவ்வாய்க்கு உரிய தலம் ஆகும். இங்கு உள்ள இத்திருக்குளத்தில் குளித்தெழுந்தால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். இத்தலத்தில் அடி வைப்பதால் பில்லி சூனியம் முதலானவையும் கூட அகலும் என்பர்.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது. அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது. வைத்தீசுவரன் கோயில் சென்று ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்து விட்டு வைத்தியநாத சுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதை அடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது. இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது.
வழிபட்டோர் : இராமர், ஜடாயு, சுப்பிரமணியர், சூரியன், அங்காரகன், தன்வந்தரி.
பாடியோர் : திருஞானசம்பந்தர், அப்பர், காளமேகப் புலவர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வடுகநாத தேசிகர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை, அர்த்தசாம பூஜையின் போது செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனைப் புனுகு காப்பு தரிசனம் என்பர்.
கோவில் முகவரி :
அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவில்,
வைத்தீஸ்வரன் கோவில் - 609 117,
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்.
தொலைபேசி எண் : 04364 - 279423.
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை, வெள்ளிசபை, ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து சபைகள் உள்ள திருத்தலங்களை சிறிய குறிப்பாக பார்க்கலாம்.
வெள்ளி சபை : சிவபெருமானின் திருவிளையாடல்கள் பெரும்பாலும் நடைபெற்ற இடமாக மதுரை திருத்தலம் திகழ்கிறது. மீனாட்சி அம்மனின் அரசாட்சியும், அருளாட்சியும் நிறைந்திருக்கும் மதுரையில்தான் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயம்தான் நடராஜரின் திருநடனம் கண்ட ‘வெள்ளி சபை’யாக திகழ்கிறது. இதனை ‘வெள்ளியம்பலம்’, ‘வெள்ளி மன்றம்’ என்றும் அழைப்பார்கள். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், தன் பக்தனான பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, வலது காலை ஊன்றி, இடது காலை தூக்கி நடனம் புரியும் நிலையில் காட்சி தருகிறார். இங்கு இறைவனின் நடனம் ‘சந்தியா தாண்டவம்’ என்று அழைக்கப்படுகிறது. பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு, தில்லையில் காட்டியதுபோலவே இங்கும் இறைவன் தனது திருநடனத்தை காட்டி அருள் செய்தார்.
சித்திர சபை : தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் அமைந்திருக்கிறது, குற்றாலநாதர் திருக்கோவில். இது அகத்திய முனிவர் வழிபாடு செய்த திருத்தலம் ஆகும். இங்கு சிவபெருமான் நடனம் புரிந்த இடம், ‘சித்திர சபை’ என்று வணங்கப்படுகிறது. இங்கு எமனை காலால் எட்டி உதைத்த ஈசன் தன் மனைவி பார்வதியுடன், மார்கண்டேயருக்கு அருளியபடி சித்திர வடிவில் காட்சியளிக்கிறார். இங்கு இறைவன் ஆடிய நடனத்திற்குப் பெயர் ‘திரிபுர தாண்டவம்’ என்பதாகும். இந்த தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மதேவன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாக கருதப்படுகிறது. அந்த இடமே சித்திர சபை. இதனை ‘சித்திர அம்பலம்’, ‘சித்திர மன்றம்’ என்றும் அழைப்பார்கள்.
பொற்சபை : கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது, திருமூலட்டநாதர் ஆலயம். இப்படிச் சொன்னால் பலருக்கும் தெரியாதுதான். சிதம்பரம் நடராஜர் கோவில் என்று சொன்னால்தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இங்கு அருள்பாலிக்கும் ஆடல் அரசனான நடராஜர் வீற்றிருக்கும் இடமே, ‘பொற்சபை’ என்று அழைக்கப்படுகிறது. இதனை ‘பொன்னம்பலம்’, ‘கனக சபை’, ‘பொன் மன்றம்’ என்ற பெயர்களாலும் அழைப்பார்கள். இறைவன் தனது திருநடனத்தை, பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு காட்டி அருளிய தலம் இதுவாகும். இந்த தலத்தில் நடராஜர், தனது இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி நடனம் ஆடுகிறார். இத்தல இறைவன் ஆடும் நடனம் ‘ஆனந்தத் தாண்டவம்’ ஆகும்.
தாமிர சபை : திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான திருத்தலங்களில் ஒன்று, காந்திமதி உடனாய நெல்லையப்பர் திருக்கோவில். இங்கு நடராஜர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘தாமிர சபை’ என்று பெயர். இதற்கு ‘தாமிர அம்பலம்’, ‘தாமிர மன்றம்’ என்ற பெயர்களும் உண்டு. இந்த சபையில், இறைவன் தன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இந்த நடனத்திற்கு ‘திருத் தாண்டவம்’ என்று பெயர்.
ரத்தின சபை : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது, வடாரண்யேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் காளியுடன் போட்டி நடனம் ஆடிய சிவபெருமான், முடிவில் தன்னுடைய ஒரு காலை தலைக்குமேல் தூக்கி ஆடி, காளிதேவியை வெற்றிகொண்டார் என்று தல புராணம் சொல்கிறது. இந்த ஆலயத்தின் இறைவன் - வடாரண்யேஸ்வரர், இறைவி - வண்டார்குழலி அம்மை. இங்கு இறைவன் நடனம் ஆடிய இடம் ‘ரத்தின சபை’ எனப்படுகிறது. ‘ரத்தின அம்பலம்’, ‘மணி மன்றம்’ என்ற பெயர்களும் இதற்கு உண்டு. இங்குள்ள இறைவன் எட்டு கரங்களுடன், வலது காலை தரையின் ஊன்றி இடது காலால் காதணியை மாட்டும் தோரணையில் காட்சியளிக்கின்றார். காரைக்கால் அம்மையார், தன் தலையால் நடந்து சென்று, இங்குள்ள நடராஜரின் திருவடியில் அமர்ந்து, அனுதினமும் அவரது திருநடனத்தைக் காணும் பேறு பெற்றார். இங்கு இறைவன் ஆடும் நடனம் ‘ஊர்த்துவ தாண்டவம்’ என்று போற்றப்படுகிறது.
திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ‘ஆதி அண்ணாமலையார்’ கோவில்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்திற்கு முன்பாக அமைந்த, அதாவது ஆதியில் அண்ணாமலையார் திருக்கோவிலாக இருந்த ஆலயம், திருவண்ணாமலை திருக்கோவிலில் இருந்து, கிரிவலம் வரும் பாதையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அடி அண்ணாமலை என்ற ஊரில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ‘ஆதி அண்ணாமலையார்’ என்பதாகும். இறைவியின் திருநாமம் ‘உண்ணாமுலையாள்’. பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்த மூலவர், இந்தக் கோவிலில் அமைந்திருப்பது சிறப்பானது. நால்வர்களில் ஒருவரான மாணிக்கவாசகர், திருவெம்பாவை பாடிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது.
அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவே. அதாவது ஆதி திருத்தலம். அதனால், ‘ஆதி அண்ணாமலையார் திருக்கோவில்’ என போற்றப்படுகிறது. ‘அணி அண்ணாமலை’ என்றும் சொல்வார்கள். படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வரும், சனகாதி முனிவர்களில் ஒருவருமான சனகரிடம், “வேறெங்கும் களைய முடியாத பாவங்கள், அணி அண்ணாமலையார் திருக்கோவிலில் களையப்படும்” என்று கூறியதாக, புராணத் தகவல் சொல்கிறது. ‘அணி’ என்ற சொல் ‘அழகை’ குறிக்கின்றது.
தலவரலாறு
ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மனும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் சிறந்தவர் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். தங்கள் தொழிலையும் மறந்து தர்க்கத்தைத் தொடர்ந்தனர். இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான், அவர்கள் முன்பாகத் தோன்றினார். “என்னுடைய அடி அல்லது முடிகளில் ஏதாவது ஒன்றை, யார் முதலில் கண்டு திரும்புகிறார்களோ அவரே சிறந்தவர்” என்று கூறினார். இருவரும் ஒப்புக்கொண்டனர்.
மகாவிஷ்ணு, சிவபெருமானின் அடியைக் காண வராக உருவம் தாங்கி, பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மதேவன், ஈசனின் முடியைக் காண அன்னப் பறவை வடிவம் எடுத்து மேல்நோக்கி பறந்து சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது, சிவபெருமானின் சிரசில் இருந்து விழுந்த தாழம்பூ, கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. தாழம்பூவைக் கண்ட பிரம்மன், அதனிடம் தான் ஈசனின் திருமுடியைக் கண்டதாக சொல்லும்படி கூறினார். அதே சமயம் பெருமாள் திரும்பி வந்து, தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மனோ, தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் உரைத்தார். அவருக்கு தாழம்பூ சாட்சி கூறியது.
அனைத்தும் அறிந்த சிவபெருமான், செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்மதேவருக்கும், தாழம்பூவுக்கும் சாபம் வழங்கினார். பிரம்மனுக்கு பூவுலகில் திருக்கோவில் எதுவும் இருக்காது எனக் கூறினார். பொய் சாட்சி உரைத்த தாழம்பூவை சிவபூஜையில் இருந்து நீக்கினார்.
பிரம்ம தேவருக்கும், பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில், மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். ‘அடி முடி காணா அண்ணாமலையார்’ என போற்றப்படுகிறார். சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்மதேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியை இன்றும் நாம், ஆதி அண்ணாமலையார் திருக்கோவிலில் மூலவராக தரிசிக்கலாம்.
அடி அண்ணாமலை கோவிலின் சிறப்புகள்
அண்ணாமலையார் கோவிலின் ஆட்சிக்குட்பட்ட 3 கோவில்களில் ஒன்றாக விளங்கும் அடி அண்ணாமலை. அண்ணாமலையார் கோவிலுக்கும் முந்தியதும் என்றும், ஆதி அருணாசலம் என்ற பெயருடையது என்றும் கருதப்படுகிறது. திருவண்ணாமலை நகரின் வடமேற்கு திசையில் உள்ள இந்த திவ்விய தலம், முன்னொரு காலத்து பிரம்ம தேவர் தம்மாற் படைக்கப்பட்ட திலோத்தமை மீது கொண்ட அதிமோகத்தினால் எங்கும் ஓடி திரிந்து தன்னிடத்திலே வந்து அங்கு எழுந்தருளும் சிவபெருமானை தரிசிக்கப் பெற்று அவர் அருளால் தங்கிச் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜிக்கப்பட்டு மகிமை வாய்ந்தது. கிழக்கே திருமாலால் வழிபடப்பெற்ற மூர்த்தி அண்ணாமலை நாதர் எனவும் மேற்கே அவரால் வழிபடப் பெற்ற மூர்த்தி அடி அண்ணாமலை நாதன் எனவும் வழங்கப்படுவதாக புராணம் கூறுகிறது.
கிரிவலத்தின் 9 கி.மீட்டர் தொலைவில் மலையின் மேற்கு பகுதியில் உள்ள இச்சிற்றூரில் சிவபெருமானுக்கு அடி அண்ணாமலை என்றும் இப்பெரிய கோவிலும் மாணிக்க வாசகப் பெருமானுக்கு ஒரு கோவிலும், மாரியம்மன் கோவில் ஒன்றும், இரு குளங்களும் உள்ளன. திருநாவுக்கரசின் தேவாரத்தில் 7 பாடல்கள் அடி அண்ணாமலையை குறிப்பிடுகின்றன. மாணிக்க வாசகப்பெருமான், திருவெண்பாவை பாடிய இடத்திலேயே அவருக்கு கோவில் அமைத்து இருக்கிறது என்பர்.
இக்கோவில் அருகே உள்ள குளம் திருவெம்பாவையில் “பைங்குவளை” எனத் தொடங்கும் பாடலில் பொங்குமடு (மடுகுளம்) என்று குறிப்பிட்டு இருக்கிறது. அடி அண்ணாமலையில் புதையுண்ட நகரத்தின் சின்னங்கள் கிடைக்கின்றன.கார்த்திகை தீப நாளில் அண்ணாமலையார் கோவிலில் நிகழ்வது போன்ற சிறப்புகள் அடி அண்ணாமலை கோவிலிலும் நடைபெறுகின்றன. அண்ணாமலையார் கோவிலில் இருந்து இந்த கோவிலுக்கு சுரங்கப்பாதை இருப்பதாக சொல்வார்கள்.
கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் இந்த சுப்பிரமணியர் கோவில் உள்ளது. மேலும் இது குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ளது. இந்தக்கோவிலுக்கு புராண வரலாறு ஒன்று உள்ளது. அதாவது முருகக் கடவுள் போரில் தாரகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்த பிறகு தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ குமார பர்வதாவுக்கு வந்தார்.
அவரை இந்திரன் மற்றும் தேவர்கள் வரவேற்றனர். மேலும் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொள்ளும்படி இந்திரன் வேண்டுகோள் விடுக்க முருகப்பெருமான் சம்மதம் தெரிவித்தார். அதன்படி முருகர்-தெய்வானை திருமணம் நடந்தது. அப்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மற்றும் தேவர்கள் அங்கு கூடினர். பல்வேறு புனித நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது.
இதேப் போல் சிவ பக்தரும், நாகர்களின் தலைவரான வாசுகி தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக குக்கே சுப்பிரமணியர் கோவிலில் உள்ள பிலாத் வாரா குகையில் தவம் இருந்தது. இதைத் தொடர்ந்து சிவனின் ஆணையை ஏற்று வாசுகியை இந்த தலத்தில் தனது பரமபக்தராக தன்னோடு இருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார். இதனால் இங்கு வாசுகிக்கு பூஜை செய்தால், அது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாகவே கருதப்படுகிறது. இந்த கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது.
வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் இங்கு நிறுவப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் குமாரதாராவில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது. இந்தக்கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘உருளு சேவை' என்னும் நிகழ்ச்சி சிறப்பம்சம் ஆகும்.
சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தலமாக விளங்குவது சீர்காழியாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தலமாக விளங்குவது சீர்காழியாகும். சிதம்பரத்திற்குத் தெற்கே தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்தில் உள்ள மலைக்கோவில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டைநாதர் காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென தனிக்கோவில் உள்ளது.
சட்டைநாதர் அத்திமரத்தால் அமைந்த திருமேனி ஆதலால் இதற்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே பூசப்படுகிறது. தேங்காயை உடைக்காமல் முழுக் காயாகவே நிவேதனம் செய்கின்றனர். பின்னர் அந்தக் காயை கீழ்தளத்தில் அமைந்த பலி பீடத்தில் படையலிட்டு அதனை உடைக்கின்றனர். அப்படி உடைக்கப்பட்ட தேங்காயினை வீட்டிற்கு எடுத்து வருவதோ, சமையலுக்குப் பயன்படுத்துவதோ கூடாது. அந்தத் தேங்காயைச் சிறு துண்டுகளாக்கியோ அல்லது பூவாகத் துருவல் செய்தோ அங்கேயே பச்சையாகவே தானும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர வேண்டும் என்பது ஐதீகம்.
சில சிறப்பு நாட்களில் சட்டநாதருக்கு வடை மாலைகள் சாத்தப்படுவதும் உண்டு. சட்டநாதருக்காக வேண்டிக் கொள்ளும் அபிஷேகம் யாவும் இவருக்கு எதிரே முதல் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் உள்ள பலி பீடங்களுக்கே செய்யப்படுகின்றன.
சட்டநாதருக்கு ஒவ்வொரு வாரமும் செய்யப்படும் நள்ளிரவு பூஜை விசேஷமானதாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை பலி பீடத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சட்ட நாதருக்குச் சிறப்பு பூஜைகளும் செய்யப்படுகின்றன.
இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் (இதனை யோக ஸ்தானம் என்றும் அழைக்கின்றனர்) கருவறையுடன் கூடிய சிறிய சந்நிதி ஒன்று காணப்படுகிறது.
இதன் பிரகாரச் சுவரில் எட்டு முனைகளிலும் எட்டு மாடங்கள் அமைக்கப்பட்டு அஷ்ட பைரவர்கள் அமைக்கப்பட்டுள்ளனர். இங்கு பைரவர் ஸ்ரீ விமானத்திலிருப்பதால் ஆகாச பைரவர் என்றும், எப்போதும் மகிழ்ச்சியுடன் ஊஞ்சலில் ஆடிக் கொண்டே இருப்பதால் மகா ஆனந்த பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த வலம்புரி மண்டபம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூஜையின் போது மட்டுமே திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ஏனைய வேளைகளில் இது மூடப்பட்டே இருக்கும்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது, திருவேட்டக்குடி. இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே அமைந்துள்ளது, திருவேட்டக்குடி. இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இவர் ‘திருமேனியழகர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமம் ‘சாந்தநாயகி’ என்பதாகும். சவுந்திரநாயகி என்ற பெயரும் அம்பாளுக்கு உண்டு.
தல வரலாறு
சிவனால் முதலில் படைக்கப்பட்டவர் திருமால். இவர் தன் பங்கிற்கு பிரம்மாவைப் படைத்தார். பிரம்மன் இந்த அண்டசராசரங்களையும், அதில் உள்ள உயிர்களையும் படைத்தார். அதைத் தொடர்ந்து உருவான உயிர்கள் அனைத்தும் தங்களின் இனத்தைப் பெருக்கி, தங்கள் வாழ்வை வாழத் தொடங்கின. இப்படி அவரவர் தங்கள் பணிகளைத் தடையின்றி மேற்கொள்வதைக் கண்ட சிவபெருமான், தனது இருப்பிடமான கயிலாய மலைக்குச் சென்று யோக நிஷ்டையில் அமர்ந்தார். அந்த யோக நிஷ்டையால் தன் உடலும், உணர்வும் அசைவற்று போன நிலைக்குச் சென்றார். இந்த அகிலமே ஈசனின் அசைவில்தான் எனும்போது, அந்த ஈசன் அசைவின்றி போனால் என்ன ஆகும்?.. ஆம்.. ஈசன் அசைவற்றுப் போனதால், உலகத்தின் இயக்கமும், உயிர்களின் இயக்கமும் செயலற்றுப்போயின. விஷ்ணு, பிரம்மாவால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதனைக் கண்டு பிரம்மனும், விஷ்ணுவும் அதிர்ச்சியடைந்தனர். இருவரும் சிவபெருமானிடம் சென்று, யோக நிலையை கைவிட்டு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டினர். சிவபெருமானும் அவர்களது கோரிக்கையை ஏற்று யோகநிலையை கைவிட்டு அவர்களுக்கு அருள்புரிந்தார். அக்கணமே பிரம்மாவும், திருமாலும் தத்தம் செயல்திறனை மீண்டும் பெற்றனர். உலக உயிர்களும் உயிர்பெற்று பல்கி பெருகி வளரத் தொடங்கின. சிவனின் இந்த அற்புதத்தை அருகில் இருந்து கண்டு வியந்த பார்வதிதேவி ‘‘அண்ட சராசரங்களும், அதில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயக்கமாக இருப்பது யார்?’’ என்று கேட்டார்.
அதற்கு ஈசன், “நான் தான்” என்று பதிலளித்தார். அதனை ஏற்காத பார்வதிதேவி, “இது உண்மையாயின் சற்றுநேரம் தாங்கள் மூச்சை அடக்கி சும்மா இருங்கள், பார்க்கலாம்” என்று கூற, சிவபெருமானும் அப்படியே செய்தார். இதனால் உலக உயிர்கள் அனைத்தும் மூச்சு விட முடியாமல் திணறின. அதை உணர்ந்த ஈசன், உடனடியாக தன்னுடைய மூச்சை வெளியிட, உயிர்கள் அனைத்தும் மீண்டும் புத்துயிர் பெற்றன.
பின்னர் தம்மை சோதித்து, உயிர்களுக்கு துன்பத்தை விளைவித்த பார்வதியை நோக்கி, “உயிர்களுக்கு துன்பம் விளைய காரணமாக இருந்த நீ, பூலோகத்தில் பிறப்பாய். மீனவ குலத்தில் பிறந்து என்னை நினைத்து தவம் செய்து, மீண்டும் கயிலாயம் வந்தடைவாய்” என்றார். அதன்படி பார்வதிதேவி, புன்னை வனமாக இருந்த திருவேட்டக்குடி என்ற இத்தலத்தில், குழந்தை வடிவில் கிடந்தார். அவ்வழி வந்த மீனவர் ஒருவர் குழந்தையை பரிவோடும் பாசத்தோடும் எடுத்துச் சென்று வளர்த்தார். பருவ நிலையை அடைந்த பார்வதி, சிவபெருமானை நினைத்து சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து வந்தார்.
இதற்கிடையில் சோமுகன் என்ற அசுரன், பிரம்மாவிடம் அரிய வரங்களைப் பெற்றதன் காரணமாக தேவர்களை துன்புறுத்தி வந்தான். ஒரு கட்டத்தில் பிரம்மனிடம் இருந்தே வேதங்களை திருடிச் சென்று, கடலுக்குள் ஒளித்து வைத்து விட்டான். இதையடுத்து மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் எடுத்து, கடலுக்குள் இருந்த அரக்கனை அழித்து, வேதங்களை மீட்டுக் கொடுத்தார். அரக்கனை வதம் செய்த பிறகும் கூட விஷ்ணுவின் ஆவேசம் குறையவில்லை. அவர் மீன் உருவத்தில் இருந்தபடியே கடலை கலக்கினார். இதனால் கடலுக்குள் இருந்த பிற உயிரினங்கள் துன்பம் அடைந்தன. உலகமே நடுநடுங்கியது.
இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள் அனைவரும், கயிலாயம் சென்று சிவனிடம் இதுபற்றி முறையிட்டனர். சிவபெருமான் அவர்களுக்கு அபயம் அளித்ததுடன், மீனவ உருவம் எடுத்து, கடலை கலக்கிய பெரிய மீனை பிடித்து தரைக்கு கொண்டு வந்து போட்டார். ஈசனின் கரம் பட்டதும் மீனாக இருந்த பெருமாள், சுய உரு பெற்று வைகுண்டம் சென்றடைந்தார்.
பின்னர் மீனவர் வடிவில் இருந்த ஈசன், புன்னை வனக்காட்டில் தவம் மேற்கொண்டிருந்த பார்வதியைக் கண்டு, தன்னுடைய சுய உருவத்தைக் காட்டி அருளினார். தன்னை வணங்கி நின்ற பார்வதியிடம், “வேண்டிய வரம் கேள்” என்றார் ஈசன்.
அதற்கு பார்வதி, “இறைவா.. நான் நிறுவி வழிபட்ட இந்த லிங்கத்தில், தாங்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள வேண்டும்” என்று வேண்டினாள். இறைவனும் அப்படியே அருள் செய்தார். பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், தீர்த்த யாத்திரை மேற்கொண்ட தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆலய அமைப்பு
ஆலயத்தின் முகப்பில் கிழக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாசலைக் கடந்து உள்ளே சென்றதும், விசாலமான முன் மண்டபம் காணப்படுகிறது. அதில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், பலி பீடம், நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் சுந்தர விநாயகர் சன்னிதியும், மேற்குச் சுற்றில் வள்ளி-தெய்வானை உடனாய முருகப்பெருமான் சன்னிதியும், புன்னை வனநாதர் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் இருக்கிறது. வடக்கு நோக்கியபடி பூரணை - புஷ்கலை உடனாய ஐயனார், தெற்கு நோக்கிய நிலையில் சண்டிகேஸ்வரர் ஆகியோர் காணப்படுகின்றனர்.
புன்னை வன நாதர் சன்னிதியின் முன்புறம் இடதுபுறத்தில் சம்பந்தரும், வலதுபுறத்தில் தனி சனி பகவானும் இடம் பிடித்துள்ளனர். வடகிழக்கில் நவக்கிரகங்களின் சன்னிதி உள்ளது. அதனை யொட்டி அலங்கார மண்டபமும் நால்வர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன. கருவறையின் தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரும் உள்ளனர். கருவறையில் மூலவர் திருமேனியழகர் என்கிற சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் ருத்ராட்ச பந்தலின் கீழ் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். உயரமான பாணத்துடன் தீபாராதனை ஒளி திருமேனியில் தெளிவாகத் தெரிகின்றபடி காட்சி அளிக்கிறார். அம்பாள், சாந்தநாயகி என்ற பெயரில் தனி சன்னிதியில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.
இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
காரைக்காலுக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தூரத்தில் திருவேட்டக்குடி உள்ளது. பொறையாறு - காரைக்கால் சாலையில் வரிச்சிகுடி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே 2 கிலோமீட்டர் சென்றால், திருவேட்டக்குடியை அடையலாம்.