என் மலர்tooltip icon

    கோவில்கள்

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று.
    மூலவர்:வில்வாரண்யேஸ்வரர் (வில்வநாதர், திருக்கொள்ளம்பூதூருடையார்)
    அம்மன்/தாயார்:சவுந்தர நாயகி (அழகிய நாச்சியார்)
    தல விருட்சம்:வில்வம்
    தீர்த்தம்:பிரம்ம, அக்னி, கங்கா தீர்த்தம்
    ஆகமம்/பூஜை :காமிக ஆகமம்
    புராண பெயர்:கூவிளம்பூர், செல்லூர், திருக்களம்பூர்
    ஊர்:திருக்கொள்ளம்புதூர்

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 177 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 113வது தலம்.

    பிரம்மா தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபாடு செய்த தலங்களில் இதுவும் ஒன்று. தலவிருட்சம் வில்வம். கூவிளம் என்பதற்கு வில்வம் என்பது பெயர். கூவிளம்புதூர் என்ற பெயர் மருவி காலப்போக்கில் கொள்ளம்புதூர் ஆனது.

    பல சிவத்தலங்களை தரிசித்து பாடி வந்த ஞானசம்பந்தர், இத்தலம் வரும் போது வழியில் உள்ள வெட்டாறில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஓடம் ஓட்டுபவர்களால் ஓடம் செலுத்த முடியாமல் ஆற்றின் கரையிலேயே ஓடத்தை விட்டு சென்றனர். ஆனால் சிவனை தரிசிக்காமல் செல்ல கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார் சம்பந்தர். எனவே ஆற்றின் கரையில் இருந்த ஓடம் ஒன்றை அவிழ்க்க செய்து அதன் மீது தன் அடியவர்களுடன் ஏறினார். தமது நாவையே ஓடக்கோலாக கொண்டு, “கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டமாடிய நம்பனை யுள்கச் செல்வுந்துக சிந்தை யார்தொழ நல்கு மாறரு ணம்பனே’ எனும் திருப்பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடம் ஆற்றின் மறுகரையை அடைந்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பதிகங்ளை பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது.

    கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி 75 அடி உயரத்தில் 2 பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. உள்பிரகாரங்களில் பொய்யாத விநாயகர், வலம்புரிவிநாயகர், முருகன், ஆதிவில்வநாதர், கஜமுக்தீஸ்வரர், பஞ்சலிங்கம், கஜலட்சுமி ஆகிய சன்னதிகள் உள்ளன. பிரம்மா, அகத்தியர், அர்ச்சுனன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர். கோயில் மூன்றாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜசோழன் இவர்கள் காலத்தில் கட்டியிருக்க வேண்டும் என கல்வெட்டுகள் கூறுகிறது.

    பிரார்த்தனை

    சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபாடு செய்வது சிறப்பு. சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

    திருவிழா

    சித்திரை பிரமோற்சவம், கார்த்திகை பிரதோஷ நாளில் சுவாமி புறப்பாடு, சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்திபுறப்பாடு. நவராத்திரியில் அம்மன் புறப்பாடு. ஐப்பசி அமாவாசையில் திருஞான சம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர்பூஜை, தைப்பூசம்.

    திறக்கும் நேரம்

    காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு வில்வாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருக்கொள்ளம்புதூர், செல்லூர் – 613 705 குடவாசல் வழி, திருவாரூர் மாவட்டம்.
    போன்

    +91- 4366 – 262 239.
    இந்தக் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்தத் திருத்தலத்தில் நாம் வழிபடும் இறைவனின் பெயர் அவிநாசி அப்பர். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    அவிநாசி என்ற வார்த்தைக்கு ஒரு அற்புதமான பொருள் உண்டு. ‘விநாசம்’ என்றால் அழியக்கூடியது. ‘அவிநாசி’ என்றால் அழிவு இல்லாதது என்று பொருள். அழிவு இல்லாத திருக்கோவில் தான் இந்த அவினாசி. இந்தக் கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இந்தத் திருத்தலத்தில் நாம் வழிபடும் இறைவனின் பெயர் அவிநாசி அப்பர். இந்தக் கோவிலில் தேவி கருணாம்பிகை, அவிநாசியப்பருக்கு வலதுபுறம் இருப்பது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. தேவாரத் திருத்தலங்களுல் அவினாசி அப்பர் கோவிலும் அடங்கும்.

    சுந்தரர் தேவாரப் பாடலை பாடியது இத்தலத்தில்தான். மைசூர் மகாராஜா வம்சத்தை சேர்ந்தவர்கள் அரச பதவி ஏற்கும் போது, நேராக காசிக்குச் செல்வார்கள். காசியில் இருந்து பூஜை செய்த சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு, முதலில் அரண்மனைக்கு செல்ல மாட்டார்கள். அந்த சிவலிங்கத்தை அவிநாசியப்பர் திருக்கோவிலில் வைத்து பூஜை செய்து விட்ட பின்பு தான் அவர்கள் அரண்மனைக்கு எடுத்துச் செல்வார்கள். திறமையான நிர்வாகத்தை நடத்துவதற்கான அருளை இந்த அவிநாசியப்பர் அருளுகின்றார்.

    தல வரலாறு

    அவிநாசியப்பர் திருக்கோவில் குளத்தங்கரையில் சில அந்தண சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு சிறுவன் அந்தக் குளத்தில் நீந்தி விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்தச் சிறுவனின் தாய், தந்தை, நண்பர்களின் கண் முன்னே ஒரு முதலையானது அந்த சிறுவனை விழுங்கிவிட்டது. இந்த சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்தது. அந்த சமயத்தில் இறைவனின் நண்பனான சுந்தர மூர்த்தி நாயனார் அந்த ஊருக்கு வருகை தந்தார். இறைவனின் பாடல்களை பாடிக்கொண்டு அங்குள்ள அக்ரகாரம் உள்ளே நுழைந்தார்.

    வேத மந்திரங்கள் முழங்க ஒரு வீட்டில் பூணூல் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கு எதிர் வீட்டிலேயே ஒரு அழுகைக் குரல் கேட்டது. மூன்று வருடங்களுக்கு முன்பு தன் மகனை அந்த முதலைக்கு இறையாக கொடுத்த பெற்றோர்களின் அழுகை சத்தம் தான் அது. தன் மகன் உயிரோடு இருந்திருந்தால் தங்கள் வீட்டிலும் பூணூல் சடங்கு நடந்திருக்கும் என்று எண்ணி அழுது கொண்டிருந்தனர். இவர்களின் வேதனையை அறிந்த நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர், அங்கிருந்து நேராக அவிநாசியப்பர் கோவிலுக்கு சென்று பதிகம் பாடி அந்த குழந்தையை உயிரோடு மீட்டுத்தர வேண்டும் என்று, அந்த சிவனிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

    சுந்தரரின் வேண்டுதலுக்கு செவி கொடுத்த இறைவன், அந்த முதலைக்கு ‘ஐந்து வயது உடைய சிறுவன் மூன்று ஆண்டுகள் கழித்து எட்டு வயதில் எப்படி இருப்பானோ அந்த தோற்றத்திலேய அந்தப் பாலகன் முதலை வாயில் இருந்து வெளியில் வர வேண்டும்’ என்று கட்டளையிட்டார். அவிநாசியப்பரின் கட்டளைப்படி அந்த முதலையும் அந்த பாலகனை வெளியே விட்டு விட்டது. அந்த பாலகனை முதலை வாயிலிருந்து மீட்டுத் தந்தது இந்த கோவில். எமன் வாயில் சென்றவனை கூட இந்த தலம் மீட்டுத்தரும் என்பது இதன் பொருள். நீண்ட ஆயுளை கொடுக்கக் கூடியவன் அந்த அவிநாசியப்பர். சிவபெருமானுக்கு ‘ஆசுதோஷன்’ என்ற பெயரும் உண்டு. ஆசுதோஷன் என்றால் எளிதில் அருள் புரியக் கூடியவன் என்று பொருளாகும். அப்படிப்பட்ட இறைவன்தான் அவிநாசியப்பர்.

    பலன்கள்

    தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த கோவிலை சுற்றி வலம் வரும்போது சுவற்றில் கை வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். எல்லாத் தீமைகளும் நீங்கி, நவகிரக தோஷங்களும் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். ராகு காலத்தில் கருணாம்பாளுக்கு விளக்கேற்றி வழிபடும் போது நாம் நினைத்த காரியம் கைகூடும்.

    செல்லும் வழி

    கோவையில் இருந்து திருப்பூர் செல்லும் வழியில் அவிநாசி என்னுமிடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.
    வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.
    குறுங்காலீஸ்வரர் கோவில் - கோயம்பேடு
    இறைவர் திருப்பெயர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்.
    இறைவியார் திருப்பெயர் : தர்மசம்வர்த்தினி.

    ஸ்தல வரலாறு :

    சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் சரபேஸ்வரர்.

    சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

    சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.

    குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் - குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. இவ்வளவுக்கு பிறகு நாட்டு மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். ஒரு ஒற்றனை அழைத்தார். ‘நாடு நகரம் முழுவதும் சுற்றிவா, மக்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா” என்றார். புறப்பட்டு போன ஒற்றன் சில நாட்கள் கழித்து திரும்ப வந்தான். ‘சொல்….  மக்கள் என்ன நினைக்கிறார்கள்”  என்று கேட்டார்  ராமர்.

     ‘சுவாமி அது ஒரு துணி வெளுக்கும் தொழில் செய்யும் குடும்பம். மனைவி ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாக தன் கணவனைப் பிரிந்து வெளி இடத்தில் தங்க நேர்ந்தது. மறுநாள் காலையில் கணவனிடம் திரும்பி வந்தாள். அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.  அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர்  சேர்த்துக் கொணடது போல் உன்னை சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை” என்றான். குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க எண்ணி ராமர், தனது சகோதரன் லட்சுமணனை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வா” என்று கூறினார்.

    அன்று சீதை காட்டில்  விடப்பட்டார்.  அந்த காட்டில்  வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். நிஷ்டையில் இருந்த அவர் கானகத்தின் அசைவுகளைக் கொண்டே மனித சஞ்சாரம் நிகழ்ந்துள்ளதை அறிந்து கொண்டார்.  சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார்.  சீதையின் புதல்வர்களான லவன் - குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் - குசனும் தடுத்து நிறுத்தினர்.

    ‘இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள். ’அட அப்படியா? என்று ஆச்சரியப்பட்ட சகோதரர்கள், அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு,  குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர்.  அனுமான் வந்து விஸ்வரூபமாய் நின்றார். அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது.

    ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர்  அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர்.

    லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர்.

    தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர்  காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.

    சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.  இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.

    கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. கோயில் நந்தவனத்தில் இரு வில்வ மரங்களுக்கு இடையே வேப்ப மரம் ஒன்று பிணைந்து இணைந்து நிற்கின்றது. அரிய அமைப்பிலான இந்த விருட்சங்களை வழிபடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.

    சிறப்புக்கள் :

    வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.

    இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

    குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.

    காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.

    காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

    போன்:  +91-44 - 2479 6237

    அமைவிடம் மாநிலம் :

    சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. 
    திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் இருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோவிலையும் அடையலாம்.
    திருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் திருப்பூந்துருத்தி எனும் திருத்தலம் உள்ளது. இங்கிருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோயிலையும் அடையலாம்.

    ஒருகாலத்தில், பூபதிராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் வரகூர் என்றானது. அதாவது நாராயண தீர்த்தர் எனும் அடியவர், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார். அப்போது இந்த ஊருக்கு வரும் போது அவருக்கு வழி தெரியவில்லை. அந்த சமயத்தில், பெருமாள், வெண்பன் றியாக வந்து வழிகாட்டியதுடன் தன்னுடைய திருக்கோலத்தையும் காட்டியருளினார். வராகம் என்றால் பன்றி. இதையடுத்து இந்த ஊர், வராகூர் என்று அழைக்கப்பட்டு, பின்னர் வரகூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

    ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நாராயண தீர்த்தர். இசையில் பாண்டித்யம் பெற்றிருந்தார். அதேபோல், நாட்டியத்தையும் அறிந்தவராக இருந்தார். ஸ்ரீமத் பாகவத்தை எல்லோருக்கும் போதித்து வந்தார்.

    இல்லறத்தை விட்டார். துறவறம் மேற்கொண்டார். ஒருமுறை நாராயண தீர்த்தருக்கு தீராத வயிற்றுவலி வந்தது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் சென்றார். அங்கே, திருப்பதி தலத்தில், ‘திருவையாறுக்கு அருகில் பூபதிராஜபுரத்துக்குச் செல்வாயாக. உன் வயிற்று வலி தீரும்’ என அசரீரி கேட்டது.

    இதன் பின்னர், நடுக்காவிரி எனும் பகுதியை அடைந்தார். இனி எந்தப் பக்கம் செல்வது, எப்படிச் செல்வது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என அங்கே மரத்தடியில் இளைப்பாறினார்.

    சிறிது நேர இளைப்பாறலுக்குப் பின்னர், ஒரு அசரீரி கேட்டது. ‘விடியும்போது வெண்பன்றி ஒன்று உனக்கு முன்னே வரும். வழிகாட்டும்’ என கேட்டது. அதன்படி மறுநாள். விடிந்தது. வெண்பன்றி வந்தது. அந்தப் பன்றி செல்லும் வழியில், பன்றியைப் பின் தொடர்ந்து பயணித்தார் நாராயண தீர்த்தர்.

    ஒவ்வொரு கிராமமாகக் கடந்து வந்து, ஓரிடத்தில் பெருமாள் கோயிலுக்குள் சென்றது. அவரும் சென்றார். அங்கே அந்த வெண்பன்றி, சந்நிதிக்குள் சென்றது. மறைந்தது. அங்கே பெருமாள் தன் திருக்கோலத்தைக் காட்டியருளினார். நாராயண தீர்த்தரின் வயிற்று வலி காணாமல் போனது.

    சிலிர்த்துப் போன நாராயண தீர்த்தர், அங்கேயே, அந்தத் தலத்திலேயே தங்கினார். கிருஷ்ண பகவானின் லீலைகளை விவரிக்கும் வகையிலான ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் இசையும் நாட்டியமும் கலந்த நாடகத்தை அரங்கேற்றினார்.

    அதுமட்டுமா? இந்தத் தலத்தில் உறியடி உத்ஸவம் நடைபெறச் செய்தார்.

    வரகூர் எனும் அற்புதமான திருத்தலத்தில், கிருஷ்ண ஜயந்தியின் போது, இன்றைக்கும் கோலாகலமாக நடைபெறுகிறது உறியடி உத்ஸவம். அப்போது பத்துநாள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு விதமான கோலத்தில் காட்சி தருவார். உறியடி உத்ஸவத் திருநாளன்று, வெண்ணெய்த்தாழிக் கோலத்தில் பவனி வருவார். அருகில் உள்ள கடுங்கலாற்றங்கரையில் எழுந்தருள்வார். மூலவரின் திருநாமம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள்.

    அப்படி உறியடிக் கண்ணனாக பெருமாள் வீதியுலா வரும் வேளையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டே கோயிலை அடைவார்கள். சுற்றுவட்டார கிராம மக்களும் தஞ்சை, திருவையாறு, கண்டியூர் முதலான ஊர்களைச் சேர்ந்த மக்களும் வந்து விழாவில் கலந்துகொண்டு தரிசித்துச் செல்வார்கள்.
    வரகூரில் குடிகொண்டிருக்கும் பெருமாளின் திருநாமம் - ஸ்ரீவெங்கடேசப் பெருமாள். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவர். வரகூர் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் ஏராளம். உலகில் எங்கிருந்தெல்லாமோ வரகூர் பெருமாளை வந்து ஸேவித்தவண்ணம் உள்ளனர்.

    தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள், எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லையே என்று வருந்துவோர், வரகூர் பெருமாளை வந்து தரிசித்துச் சென்றால், விரைவில் குணமாகிவிடுவார்கள். கல்யாணக் கவலையால் கண்ணீர் விடுபவர்களுக்கு விரைவிலேயே திருமண பாக்கியத்தைத் தந்தருள்வார் வரகூர் பெருமாள்.
    இங்கே, பெருமாள் சந்நிதியில், வெள்ளிக்காப்பு வைத்து பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    திருச்சி கல்லணையில் வழியாகவும் வரகூர் திருத்தலத்தை அடையலாம்.
    உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு.
    இறைவர் திருப்பெயர்:     பிராணவரதேஸ்வரர்.
    இறைவியார் திருப்பெயர்:  மங்கள நாயகி.
    தல மரம்:  வெள்ளெருக்கு, கோங்கிலவு, கோங்கு
    தீர்த்தம் :  சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் , மங்கல தீர்த்தம்,காவிரி.

    தல வரலாறு

    முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மந்திரியொருவன் மன்னனின் வரிப்பணத்தைக் கொண்டு திருமங்கலக்குடியில் அருள்மிகு பிராணவரதேஸ்வரருக்கு கோயில் கட்டினான். அதையறிந்த மன்னன் சினமுற்று மந்திரியைச் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான். மந்திரியின் மனைவி அத்தலத்து மங்களாம்பிகையிடம் தனக்கு மாங்கல்யக் காப்பு தருமாறு நெஞ்சுருகி வேண்டினாள். மந்திரி அரசனிடம் தன் உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு வேண்டினான். மன்னன் உத்தரவு நிறைவேற்றப்பட்டு, மந்திரியின் உயிரற்ற உடலை எடுத்து வரும்போது திருமங்கலக்குடியை அடைந்ததும், மங்களாம்பிகை அருளாள் அவன் உயிர் பெற்றான். மங்களாம்பிகை மாங்கல்யக் காப்பு தந்தருளி ஆட்கொண்டாள். அது முதல் தன்னை வழிபடுவோர்க்கும் மாங்கல்ய பலம் அருளுவதாக அம்பிகை அருளினாள் என்பது வரலாறு.

    சிறப்புகள்

    இத்தலம் மங்கள விமானம், மங்களவிநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்னும் ஐந்து மங்களங்கள் இணைந்துள்ள தொடர்பால் பஞ்ச மங்கள க்ஷேத்திரம் என்று புகழப்படும் சிறப்புடையது.

    தல வரலாறு தொடர்பால் - திருமணத்தடை ஏற்படுகின்றவர்கள் இங்கு வந்து அம்பாளை அருச்சித்து வழிபடுகிறார்கள். மேலும், இவ்வரலாற்றையொட்டி "பிராணன் தந்த பிராணவரதேஸ்வரர், மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை" என்னும் மொழி மக்கள் வழக்கில் இருந்து வருகிறது.

    நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம் சூரியனார் கோயில்; அத்தோஷத்தை நீக்கியருளிய பெருமான் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள பிராணவரதேஸ்வரரேயாவார். ஆகவே திருமங்கலக்குடியை வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் சென்று வழிபட வேண்டும் என்பது மரபாக இருந்து வருகிறது.

    உள்சுற்றில் பதினோரு சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாகவுள்ளன.

    உடலில் வியாதியுள்ளவர்கள் இங்கு வந்து கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11 ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் சுவாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டு வந்தால் வியாதியிலிருந்து நீங்கப்பெருவர் என்பது வரலாறு. இன்றும் அவ்வாறு பலர் குணமடைந்து வருகிறார்கள்.

    இக்கோயிலில் சோழர், பல்லவர், விஜய நகர மன்னர்கள் காலத்திய 6 கல்வெட்டுக்கள் படியெடுக்கப்பட்டுள்ளன.

    அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - கதிராமங்கலம் - மயிலாடுதுறை பேருந்துச் சாலையில் திருமங்கலக்குடி உள்ளது. ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பேருந்துகளில் சென்று இவ்வூரை அடையலாம். தொடர்பு : 0435 - 2470480
    பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
    திருவிசலூர் எனும் திருவிசநல்லூரில் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலமாகும். பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

    ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர், சிறந்த சிவபக்தர். இவர் தினமும் காலையில் சிவயோகநாதரை வணங்குவது வழக்கம். ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினத்தன்று, தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்து பசிக்கு உணவு வேண்டி நின்றார். அவரை வாட்டமான முகத்தைக் கண்டு மனம் இரங்கிய வெங்கடேச தீட்சிதர், சிரார்த்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த உணவை, பசித்து வந்தவருக்கு வழங்கினார்.

    இதைக் கண்ட வேதியர்கள் சிலர், இப்படிச் செய்தது சாஸ்திர விரோதம் என்றும், இதற்கு பரிகாரமாக காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லையெனில் அவரை ஊரை விட்டு விலக்கி வைப்பதும், சிரார்த்தமும் செய்ய மாட்டோம் என்றனர்.

    வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள் அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே என்று வெங்கடேச தீட்சிதர் வருந்தினார். மனமுருகி ‘கங்காஷ்டகம்’ என்னும் துதி பாடினார்.

    அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கியது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரை வணங்கி, கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அந்தக் கிணற்றிலேயே நிலைத்தது. பின்னர் அந்தணர்கள் திதி கொடுத்தனர்.

    அன்றைய தினம் மாலை வேளையில் திருவிசநல்லூர் ஈசன் கருவறையில், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் ‘இன்று மதியம் ஸ்ரீதர வெங்கடேசன் வீட்டின் திதியில் உணவருந்தியதால் இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.

    தாழ்த்தப்பட்டவராக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் வீட்டிற்கு வந்து உணவருந்திச் சென்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த அனைவரும், அவரைப் போற்றிப் பணிந்தனர்.

    இந்த அற்புத நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று, ‘கங்கா பூஜை நீராடல்’ எனும் விழாவாக திருவிசநல்லூர் மகான் ஸ்ரீதர வெங்கடேச திருமடத்தில் நிகழ்கிறது. மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில்,‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்த கிணற்றிலுள்ள தீர்த்தம், எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே.

    இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள். பின்னர் கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். இது மிகப்பெரும் பாக்கியமாகும்.

    ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்றே’ என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

    திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் வீரசோழன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால் ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர் மகாலிங்க சுவாமியை தரிசிக்காமல் திரும்பியதை நினைத்து கவலையடைந்தார். அந்த கவலையில் உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார்.

    திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது?’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்! திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

    “அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண இரவு பூஜைக்கு உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல் இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக்கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்” என்றார் அர்ச்சகர்.

    பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார்.

    பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணிவிட்டு, விடிந்ததும் விடியாததுமாக அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார். அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது.

    அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, “சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!” என்று வருத்தப்பட்டார்.

    அர்ச்ககர் திகைத்தவாறே, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன். கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே” என்றார்.

    பேசியபடியே அவர் கோவில் கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது.

    அப்போதுதான் அர்ச்சகருக்குத் தெரிந்தது, ‘நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்குச் சென்று, பிரசாதம் உண்ணக்கொடுத்து அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே’ என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

    பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த மகான் ஸ்ரீதர வெங்கடேசர், திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார்.

    அமைவிடம் :

    கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்து உள்ளது. திருவிடைமருதூரில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் அமைந்து உள்ளது.
    கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.
    கொள்ளிடத்தின் வடகரையில், திருமழப்பாடி என்ற கிராமத்தில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது. முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும், வடகாவிரிக்கும் இடையில் இருந்த இவ்வூரில், மழவர்கள் என்ற பழங்குடியினர் வசித்து வந்தனர். இவர்களில் சிறந்த போர்வீரர்களின் சேனைகள் தங்கியிருந்த இடம் ‘மழவர்பாடி’ என்று அழைக்கப்பட்டது. இதுவே பின்னாளில் ‘திருமழப்பாடி’ என்று மருவியதாக சொல்கிறார்கள்.

    சிவபெருமான், இந்தத் தலத்தில் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்ததோடு, மழு என்னும் ஆயுதம் தாங்கி, நடனம் புரிந்த தலம் என்பதால் ‘மழுபாடி’ என்று பெயர் பெற்று, அதுவே தற்போது ‘திருமழப்பாடி’ என்று அழைக்கப்படுவதாகவும் புராணத் தகவல் ஒன்றும் இருக்கிறது.

    தல வரலாறு

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் சிலாத முனிவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாக குழந்தைப் பேறு இல்லை. இதையடுத்து சிவபெருமானை நோக்கி, புத்திரப்பேறு கிடைக்க வேண்டி தவம் இருந்தார், சிலாத முனிவர். அவர் முன்பாக தோன்றிய ஈசன், “நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய். அதற்காக யாகபூமியை உழும் போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை உன் மகனாக வளர்த்து வா. அவன் 16 வயது வரை உன்னுடன் இருப்பான்” என்று அருளினார்.

    அதன்படியே பூமியில் இருந்து பெட்டகத்தை கண்டெடுத்த சிலாத முனிவர், அதனுள் ஓர் அதிசய குழந்தையைக் கண்டார். அந்தக் குழந்தை நான்கு தோள்களும், மூன்று கண்களும், சந்திரனை அணிந்த முடியும் கொண்டு விளங்கியது. அப்போது ஒரு அசரீரி, “பெட்டியை மூடிவிட்டு மீண்டும் திற” என்று ஒலித்தது. சிலாத முனிவரும், பெட்டியை மூடி மீண்டும் திறந்தார். இப்போது முந்தைய வடிவம் நீங்கி, அதில் அழகிய ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு ‘செப்பேசன்’ என பெயர் சூட்டி வளர்த்தார். 14 வயதுக்குள் வேதங்கள் கற்றதோடு, அனைத்து கலைகளிலும் அக்குழந்தை சிறந்து விளங்கியது.

    மகன் வளர்ந்து வருவதை நினைத்து சிலாத முனிவருக்கு வருத்தம் உண்டானது. இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் செப்பேசன் நம்முடன் இருப்பான் என்று நினைத்து, முனிவரின் மனைவியும் துயருற்றார். இதையறிந்த செப்பேசன், ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவருக்கு ஈசன் தனது அருளாசியை வழங்கியதோடு, சிவகணங்களுக்கு தலைவராகும் பதவியையும், ஈசனின் வாசலில் இருந்து காவல் காக்கும் உரிமையையும் அளித்தார். இத்தகைய சிறப்புகளைப்பெற்ற இவரே, நந்தியம்பெருமான் ஆவார்.

    இதையடுத்து மற்றொரு சிறப்புமிகு நாளில், சிலாத முனிவர் தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்ய முன்வந்தார். இதற்காக திருமழப்பாடியில் ஆசிரமம் அமைத்து, தவமும், அறமும் செய்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசையை மணப்பெண்ணாக பேசி முடித்தார். இவர்களின் திருமணம் பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெற முடிவுசெய்யப்பட்டது. இதற்காக திருவை யாற்றில் இருந்து நந்தியம்பெருமான், குதிரை வாகனத்தில் திருமழப்பாடி புறப்பட்டார். தனது பக்தனுக்கு தானே முன்னின்று திரு மணம் செய்து வைப்பதற்காக ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி ஆகியோர் பல்லக்கில் திருமழப்பாடிக்குச் சென்றனர். திருமழப்பாடியில் உள்ள சுந்தராம்பிகை உடனாய வைத்திய நாதப் பெருமான் கொள்ளிடம் சென்று மங்கல வாத்தியங்கள் முழங்க ஐயாறப்பர், அறம் வளர்த்தநாயகி, நந்தியம்பெருமான் ஆகியோரை வரவேற்று கோவில் முன் அமைக்கப்பட்ட திருமண மேடைக்கு அழைத்து வந்தார். இதையடுத்து நந்தியம்பெருமானுக்கும், சுயம்பிரகாசைக்கும் வெகு சிறப்பாக திரு மணம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், நந்தியம்பெருமான்- சுயம்பிரகாசை திருமணம் திருமழப்பாடியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐயாறப்பரும், அறம் வளர்த்தநாயகி அன்னையும் கலந்து கொள்கிறார்கள்.

    இங்குள்ள வைத்தியநாதசாமி கோவில், கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தக் கோவிலில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. தல விருட்சமாக பனை மரம் இருக்கிறது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இதுவாகும். நடராஜர் சன்னிதிக்கு அருகே நடராஜர் மண்டபமும், வெளிப்பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் இருந்து தான் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    இந்தக் கோவிலின் நடராஜர் மண்டபம் அருகில் நந்திகேசுவரர், தனது மனைவி சுயம்பிரகாசையுடன் காட்சி தருகிறார். ஆண்டுதோறும் புனர்பூச நட்சத்திரத்தில் நந்தியம்பெருமானுக்கும், சுயம் பிரகாசைக்கும் வைத்தியநாதசாமி முன்னிலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.

    அமைவிடம்

    திருமழப்பாடி வைத்தியநாதசாமி கோவிலானது, புள்ளம் பாடிக்கு தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவையாறுக்கு வடமேற்கில் 15 கிலோமீட்டர் தூரத்திலும், அரியலூருக்கு தெற்கில் 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இந்த ஊருக்கு திருச்சி, லால்குடி, அரியலூர், திருமானூர் மற்றும் தஞ்சையில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருச்சி- விழுப்புரம் ரெயில் வழித்தடத்தில் அரியலூர், புள்ளம்பாடி ரெயில் நிலையங்களில் இருந்தும் இங்கு வரும் வகையில் போக்குவரத்து வசதி உள்ளது.

    திருமழப்பாடி ஆலய சிறப்பு

    தக்கன் தனது 27 பெண்களையும், சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால் சந்திரன் ரோகிணியிடம் மட்டும் அன்பு கொண்டிருந்தான். இதனால் மற்ற மனைவியர், தனது தந்தை தக்கனிடம் முறையிட்டனர். இதையடுத்து ‘எல்லோரிடத்திலும் அன்பு செலுத்தவில்லை எனில் எனது சாபத்திற்கு ஆளாவாய்’ என சந்திரனை தக்கன் எச்சரித்தான்.

    ஆனாலும் சந்திரன் முன்பு போலவே ரோகிணியிடம் மட்டும் அன்போடு பழகி வந்தான். இதனால் சந்திரன் தேய்ந்து போகும்படி தக்கன் சாபமிட்டான். அந்த சாபம் நீங்குவதற்காக இத்தலம் வந்து இறைவனை நினைத்து தவம் இருந்தான் சந்திரன்.

    இறைவன் சந்திரனின் முன்பாகத் தோன்றி, முற்றிலும் அழிந்துவிடாத வகையில் ‘தேய்வதும், வளர்வதுமான நிலையிலிருப்பாய்’ என்று சந்திரனுக்கு அருள்பாலித்தார். சந்திரனின் நோய் போக்கியதால், இத்தல இறைவன் வைத்தியநாதன் என்று பெயர் பெற்றார்.

    இதே போல், முனிவர் ஒருவரது சாபத்தால் திருமகளான லட்சுமிதேவிக்கு வெண்குஷ்ட நோய் ஏற்பட்டது. இதையடுத்து லட்சுமி தேவி இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி நோய் நீங்கப்பெற்றாள். சுந்தராம்பிகை அம்மன் சன்னிதிக்கு எதிரே, லட்சுமி தேவி நீராடிய குளம், ‘லட்சுமி தீர்த்தம்’ என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது. இந்த நீரை உடலில் தெளித்துக் கொண்டால் சரும நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது.
    புதியதாக திருமணமான தம்பதியரிடம், சில மாதங்களிலேயே கேட்கப்படும் கேள்வியாக இருப்பது, ‘ஏதாவது விசேஷம் உண்டா?’ என்பதுதான். இங்கு விசேஷம் என்பது புத்திர பாக்கியம். அந்த அளவுக்கு பிள்ளைப்பேறு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

    திருக்கடையூர் அபிராமி அன்னையை பாடும், அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணியில்லாத உடல், சலியாத மனம், அன்பகலாத மனைவி’ என்பதோடு சேர்த்து, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார். சந்தானம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும். எல்லாவற்றையும் சாதாரணமாக கேட்டவர், குழந்தைப்பேறு என்பதை மட்டும் தவறாமல் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதில் இருந்தே, அதற்கான முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ள முடியும்.

    அந்த வகையில் குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது. ஏனெனில் இந்தத் திருத்தல இறைவனை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது, தல புராணம்.

    திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் இருக்கின்றன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள, ஈசனின் ஊர்த்தவ நடனம் நடைபெற்றதும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் ஒன்றுதான். அந்த எல்லை தெய்வத்தின் பெயர், வடபத்திரகாளி அம்மன்.

    நாம் இங்கு காண இருப்பது மயிலாடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம். இங்கு வெளி சுற்று பிரகாரத்தில் தனி சன்னிதியில் புத்திரகாமேஸ்வரர் உள்ளார். இத்தல தீர்த்தம் ‘புத்திர காமேஸ்வர தீர்த்தம்’ ஆகும். காசியப முனிவரின் முதல் மனைவியாக அறியப்படுபவர் அதிதி தேவி. இவர் இந்த ஆலய தீர்த்தத்தில் நீராடி, வடாரண்யேஸ்வரரையும், புத்திர காமேஸ்வரரையும் வழிபாடு செய்ததன் பலனாகத்தான் புத்திர பாக்கியம் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்திரனும் கூட, தனது மகனான ஜெயந்தனை, புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடிதான் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

    பரதன் என்னும் சிவபக்தன் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தினான். ஒவ்வொரு ஆலயமாகச் சென்று இறைவனை வழிபாடு செய்யத் தொடங்கினான். ஒரு முறை திருத்துருத்தியில் உள்ள அமிர்த முகிழாம்பிகை உடனாய சொன்னவாறு அறிவார் திருக்கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தான். அந்த வழிபாட்டில் மகிழ்ச்சியடைந்த ஈசன், “பரதா! நீ அருகில் உள்ள திருவாலங்காடு திருத்தலம் சென்று, அங்குள்ள புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் பங்குனி மாத அமாவாசை நன்னாளில் நீராடு. அதோடு அங்கு வீற்றிருக்கும் வடாரண்யேஸ்வரரையும், புத்திரகாமேஸ்வரரையும் அபிஷேகம், அர்ச்சனை செய்து, பசு நெய்யை கருவறை தீபத்தில் சேர்த்து வழிபாடு செய். கண்டிப்பாக புத்திரபாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, ஆண்டு தோறும் வரும் பங்குனி மாத அமாவாசை தினத்தில், திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி எம்மை வழிபாடு செய்தால், மலடியும் குழந்தை பெறுவாள்” என்று அருளினார்.

    பரதனும் அவன் மனைவியும் அவ்வாறே பங்குனி அமாவாசை நாளுக்காக காத்திருந்து, திருவாலங்காடு வந்து புத்திர காமேஸ்வர தீர்த்தத்தில் நீராடி, அத்தல வழிபாட்டின் பயனாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றனர்.

    இத்தலத்தில் பழைய அம்மன், புதிய அம்மன் என இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. இங்கு உள்ள பழைய அம்மனின் சிலை சிறிது சேதமானதால், புதிய அம்மனை பிரதிஷ்டை செய்து உள்ளனர். புதிய அம்மனை பிரதிஷ்டை செய்த உடன் பழைய அம்மன் சிலையை அகற்ற முயன்றனர். அப்போது அம்மன் அசரீரியாக ‘உங்கள் வீட்டில் யாருடைய உடல் பாகமாவது சேதமாகி விட்டால், அவர்களை உங்கள் வீட்டை விட்டு அகற்றி விடுவீர்களா?’ என கேட்க, உடனே பழைய அம்மன் சிலையையும் அகற்றாமல் ஆலயத்திலேயே வைத்து விட்டனர்.

    இத்தல வண்டார்குழலி அம்பாள் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார். அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி நாட்களில் இத்தல அம்பாள் சன்னிதியில் கருவறை தீபத்தில் தூய பசுநெய் சேர்த்து, அம்பாளுக்கு குங்குமார்ச்சனை செய்து, அபிராமி அந்தாதி பாராயணம் செய்து வழிபட நாம் வேண்டிய கோரிக்கைகள் யாவும் விரைவில் நிறைவேறும்.

    பழைய வண்டார்குழலி அம்மன் அருகில், தனிச் சன்னிதியில் சரஸ்வதி உள்ளார். இத்தல சரஸ்வதி அம்மனுக்கு புனர்பூசம் நட்சத்திரம், பஞ்சமி திதி மற்றும் புதன் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து வழிபட்டுவர குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற்று விளங்குவர். இங்கு அம்பாளின் கடைக்கண் பார்வையில் விநாயகர், காவிரி அம்மன், வள்ளி -தெய்வானை உடனாய முருகர் சன்னிதிகளும் உள்ளன. உள்பிரகாரத்தில் பைரவர், அறுபத்து மூவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ளது திருக்குறுங்குடி திருத்தலம். இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது ஒரு மலைக்கோவில் ஆகும். நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என 5 திருக்கோலங்களில் இங்கு பெருமாள் எழுந்தருளியுள்ளார்.

    பாணர் குலத்தைச் சேர்ந்த தீவிர விஷ்ணு பக்தரான நம்பாடுவான் என்பவர், திருக்குறுங்குடி அடுத்த மகேந்திரகிரி மலையில் வாழ்ந்து வந்தார். யாழ் வாசிப்பதில் வல்லவரான அவர், ஒரு முறை கார்த்திகை மாத வளா்பிறை ஏகாதசி அன்று விரதம் இருந்து, திருக்குறுங்குடி நம்பியை தரிசிக்க வந்தார். வழியில் பிரம்ம ராட்சசன் ஒருவன், நம்பாடுவானை பிடித்துக் கொண்டு அவரை புசிக்கப் போவதாகக் கூறினான்.

    உடனே நம்பாடுவான், தான் நம்பிராயரை தரிசிக்கச் செல்வதாகவும், தரிசனம் செய்துவிட்டு வருகையில் தன்னை உணவாக்கிக் கொள்ளும்படியும் வாக்குறுதி கொடுத்து விட்டுச் சென்றார். பின்னர் மலைக்கு சென்று நம்பியை தரிசித்தார். அவர் பாடிய பாடலுக்கு மயங்கிய இறைவன், அவருக்கு காட்சியளித்து ஒரு பழத்தையும் அளித்தார். தரிசனம் முடிந்ததும், காட்டில் பிரம்ம ராட்சசன் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றார், நம்பாடுவான். வழியில் முதியவர் வடிவத்தில் வந்த இறைவன், நம்பாடுவானை வழிமறித்து, அந்தக் காட்டில் பிரம்ம ராட்சசன் வாழ்வதாகவும், அவ்வழியே செல்வோனை தின்றுவிடுவதாகவும் எச்சரித்தார்.

    ஆனால் நம்பாடுவான், பிரம்ம ராட்சசனுக்கு தான் கொடுத்து வாக்குறுதியை கூறி, அதை நிறைவேற்றவே தற்போது செல்வதாகச் சொல்லி வேகமாக நடந்தார். காட்டில் ஓரிடத்தில் பிரம்ம ராட்சசனைக் கண்ட நம்பாடுவான், தான் நம்பியை தரிசித்து தனது விரதத்தை முடித்து விட்டதாகவும், இப்போது தன்னை இரையாக்கிக் கொள்ளும்படியும் கூறினார்.

    ஆனால் பிரம்ம ராட்சசன் தன்னுடைய பசி அடங்கி விட்டதாகக் கூறி, நம்பாடுவானை உண்ண மறுத்து விட்டான். அப்போது நம்பாடுவான், நம்பியைப் பாடி பெற்ற பழத்தில் பாதியை பிரம்ம ராட்சசனுக்குக் கொடுத்தார். அதை உண்ட பிரம்ம ராட்சசன், சாபத்தால் தான் பெற்ற பிரம்ம ராட்சச வடிவில் இருந்து விமோசனம் பெற்று, தன் முற்பிறவி வடிவத்தைப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

    இந்த ஆலயத்தில் அருளும் நம்பிராயரை, நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். இத்தலத்து இறைவனே நம்மாழ்வாராக பிறந்ததாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

    இத்தலத்திற்கு மன்னன் ஒருவன் தரிசனம் செய்ய வந்த போது “கருடன் பறக்கும் இடத்திற்கு கீழே பூமியை தோண்டினால், தெய்வநாயகன் மற்றும் வரமங்கை ஆகியோரின் சிலைகள் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டது. அதன்படி குறிப்பிட்ட இடத்தை தோண்டியபோது, அந்த தெய்வ ரூபங்கள் கிடைத்தன. அவற்றை நாங்குனேரி வானமாமலை திருக்கோவிலில், அந்த மன்னன் பிரதிஷ்டை செய்ததாக கூறுகிறார்கள்.

    பெரிய பெரிய சிவாலயங்களில் விஷ்ணு இடம் பிடித்திருப்பதைப் போல, இத்திருக்கோவிலில் சிவனுக்கென்று தனிச் சன்னிதி உள்ளது. இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபிரானுக்கு ‘மகேந்திரகிரி நாதர்’ என்றும் ‘பக்கம் நின்ற பிரான்’ என்றும் பெயர்.

    நம்பிராயர் கோவிலில் தினசரி விஸ்வரூபம், காலசந்தி, உச்சி கால பூஜை, சாயரட்சை, அத்தாழம், அர்த்தசாமம் ஆகிய பூஜைகள் நடந்து வருகிறது. ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவம், கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி, நவராத்திரி விழா ஆகியவை சிறப்புமிக்கது. விழாவின் போது தினசரி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படும். திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு கருட சேவை நடத்தப்படுகிறது.

    அமைவிடம்

    திருநெல்வேலியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், வள்ளியூர் ரெயில் நிலையத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்குறுங்குடி திருத்தலம் உள்ளது.
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது அர்த்த நாரீசுவரர் திருக்கோவில். இது திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல்பெற்ற கொங்கு பகுதியில் அமைந்துள்ள ஆலயமாகும்.
    கோவில் விபரம் :
    மூலவர் - அர்த்தநாரீசுவரர்
    தாயார் - பாகம்பிரியாள்
    விருட்சம் - வன்னி, இலுப்பை
    தீர்த்தம் - தேவதீர்த்தம்

    இந்த ஆலயம் ஒரு மலை மீது அமைந்திருக்கிறது. அந்த மலை ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆண் போன்று தோற்றமளிக்கிறது. மறுபுறம் பெண் போல தோற்றம் தருகிறது.

    கோவில் வரலாறு

    கோவில் அமைந்திருக்கும் மலை சிவந்த நிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. இந்த மலைக்கு நாகமலை, உரசகிரி, தெய்வத்திருமலை போன்ற மற்ற பெயர்களும் உள்ளன.

    இந்த மலையேற உள்ள படிகளில் 60வது படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இருந்ததாம்.

    முதலிவுக்கு முன் செல்ல வேண்டிய கோவில் :

    இந்த ஆலயத்தில் சிவன் தனது உடலின் சரிபாதியை உமையவளுக்கு தந்து, அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருளக்கூடிய தலம் தான் திருச்செங்கோடு.
    அர்த்தநாரீஸ்வரர் மூலவராக அமைந்த கோவிலை வேறெங்கும் காண முடியாது. இந்தன் மூலம் இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய கணவன் - மனைவி இருவரும் சரிநிகர் சமானமானவர்கள் என்பதை இந்த சிவ பார்வையின் சேர்க்கை உணர்த்துகிறது.

    ஒருவரின் திருமண வாழ்க்கை எனும் இல்லற வாழ்வின் அடிப்படையே முதலிரவிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் தான் திருமணமான தம்பதிகள் தங்களின் முதலிரவைத் தொடங்குவதற்கு முன்னர் இல்லற வாழ்வின் சமத்துவத்தை புரிந்து கொள்ளும் பொருட்டு மதொரு பாகனைத் தம்பதியர் வழிபட்டு இறையருள் பெறுவதால், இல்லறத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கான சமத்துவத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

    இப்பகுதியில் உள்ள மக்கள் திருமணமானவுடன், முதலிரவுக்கு முன்பு மணமக்களை அழைத்துச் சென்று மாதொரு பாகனை தரிசித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
    சோழ வள நாட்டில் பாயும் காவிரியின் வடகரை திருத்தலங்களில் ஒன்று கீழை திருக்காட்டுப்பள்ளி. இங்கு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
    சோழ வள நாட்டில் பாயும் காவிரியின் வடகரை திருத்தலங்களில் ஒன்று கீழை திருக்காட்டுப்பள்ளி. இது வடகரை தலங்களில் 12-வது ஆலயம் ஆகும். இந்த திருத்தலத்திற்கு ‘ஆரண்யஸ்வரம்’ என்ற பெயரும் உண்டு. இங்கு ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன்- ஆரண்ய சுந்தரேஸ்வரர், இறைவி- அகிலாண்டநாயகி என்று அழைக்கப்படுகிறார்கள்.

    தல வரலாறு

    இந்திரன் ஒரு முறை, தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் தனது குருவாக அசுர குலத்தைச் சேர்ந்த விசுவரூபன் என்பவனைத் தேர்வு செய்தான். அவனை வைத்து ஒரு வேள்வியைச் செய்தான். ஆனால் விசுவரூபன் தேவர்கள் அழியுமாறு வேள்வி செய்தான். இதையறிந்த இந்திரன், விசுவரூபனைக் கொன்றான். விசுவரூபனின் தந்தையான துவஷ்டா என்பவர், தனது மகனின் இறப்பை அறிந்து வேதனை கொண்டார். இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார். அதில் இருந்து விருத்திராசூரன் என்ற அரக்கன் தோன்றினான். அவன் பல வரங்களைப் பெற்று தேவர்களை துன்புறுத்தினான். இந்திரனை வென்று, தேவலோகத்தைக் கைப்பற்றிக்கொண்டான்.

    அவன் உலகத்தில் உள்ள எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என்று வரம் பெற்றிருந்தான். இதனால் அதுவரை இருந்த ஆயுதங்களைத் தவிர்த்து, புதியதொரு ஆயுதம் ஒன்று தேவைப்பட்டது. இதற்காக ததீசி என்ற முனிவரின் முதுகு தண்டுவடத்தில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக் கொண்டு விருத்திரா சூரனை அழித்தான் இந்திரன். வேள்வியில் தோன்றிய விருத்திரா சூரனை அழித்ததால் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பல்வேறு தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டான். பின்னர் திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவனை வணங்கி தோஷம் நீங்கப்பெற்று, மீண்டும் தேவலோக ஆட்சியை கைப்பற்றினான்.

    ஆலய அமைப்பு

    இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம் காணப்படுகிறது. அதன் நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவலிங்கங்களை அடுத்து முருகப்பெருமான் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான், வள்ளி- தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலய தலவிருட்சம் பன்னீர் மரம். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், சண்டீஸ்வரர், சூரியன் திருமேனிகள் இருக்கின்றன. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்த கணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர் களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பானது. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம் என்று கூறுகிறார்கள். சுமார் 1000 ஆண்டு கள் பழமையான இந்த ஆலயம், சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆகும்.

    ஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரம்மேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள், 100 அசுவ மேத யாகம் செய்த பலனை அடைவார்கள். பிரம்மன் இத் தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சுக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் உள்ளிட்ட பத்து சிவலிங்க திருவுருவங்களை எழுந்தருளிவித்து வழிபட்டார்.

    ஆலயம் மகாமண்டபத்தின் இடது புறம் அன்னை அகிலாண்டநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். இறைவன் கருவறையில் சதுர பீட ஆவுடையாரின் மேல்திசை நோக்கி வீற்றிருக்கிறார். சிவ பெருமான் பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார். இந்த 12 ஆலய இறைவனும், ஏக காலத்தில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஒன்று சேருவார்கள். இவர்கள் அனைவரும் திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும், இத்தல இறைவனும் இறைவியும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான சம்பவமாகும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கீழை திருக்காட்டுப்பள்ளி திருத்தலம்.
    குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.
    சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

    தல வரலாறு:

    மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரம் நரசிம்மர். அவதாரத்திற்கு ஒரு திருமணம் என்ற முறையில் கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோருக்கு திருமணம் நடந்த இடம்தான் ராமகிரி. நரசிம்மர், ஸ்ரீதேவி, பூமாதேவியின் திருமணத்திற்கு சிவன், சக்தி, பிரம்மா, சரஸ்வதி மற்றும் அனைத்து தேவர்கள், அடியார்கள், ரிஷிகள் வந்து 15 நாள் முகாமிட்டு திருக்கல்யாண வைபவத்தை முடித்து வைத்துள்ளனர். இதற்கு அடையாளமாக சிவன், பிரம்மா சிலைகளும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது.

    வேட்டைக்கு போன ராஜா:

    பாண்டியப்பேரரசை ஆட்சி செய்த சந்திர சேகர பாண்டியன், புலிக்குத்தி சாமைய நாயக்கருக்கு பாண்டிய நாட்டின் வடபகுதியிலுள்ள தட்டை நாடு சீமையை ஆளும் உரிமையை கொடுத்துள்ளார். அப்படி சாமைய நாயக் கர் வம்சாவளியில் வந்த லண்டகதிரழகு சா மைய நாயக்கர், குஜி லியம்பாறை அருகே வசந்தகதிர்பாளையத்தில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்தார். அப்போது தொப் பையசாமி மலைப்பகுதியான சக்கர கிரி மலைப்பகுதிக்கு வேட்டையாட படை, பரிவாரங்களுடன் சா'மைய நாயக்கர் வந்தார். அவர் தற்போது கோயில் உள்ள இடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது, குடிக்க தண்ணீர் தேட, ஒரு சுனையிலிருந்து குளித்து விட்டு ராமணம்பிள்ளை என்ற பறவை தனது சிறகுகளை உலர்த்தும்பொழுது, 'ராமா, ராமா' என்று கத்தியது.

    அந்த சிறகிலுள்ள நீர்த்துளி மேலில் பட பக்கத்திலுள்ள புதரை விலக்கி, நீர் நிலையை பார்க்கும்போது, அந்த இடத்திலிருந்து முதுகில் ராமம் போட்ட கீரி ஒன்று ஓடியது. அக்கீரியை படை வீரர்களும் நாய்களும் விரட்டினர். உடனே அந்த கீரி கோயிலில் இருந்த இடத்திற்கு சென்றது. சிறிது நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அந்த கீரியானது திடீரென நாய்களை விரட்ட, நாய்கள் பயந்து ஓடியது. இதை பார்த்த ஆச்சரியமடைந்த வீரர்கள் நடந்ததை மன்னரிடம் கூறினர். ஆராய்ந்து விசாரித்தபோது, அந்த இடத்தில் கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருமணம் நடைபெற்ற இடம் என தெரிய வந்தது.

    ஆஞ்சநேயர் வரவேற்பு:

    திருமண விழாவை சிவ பெருமான், ஈஸ்வரி, பிரம்ம தேவர், சரஸ்வதி மற்றுமுள்ள அனைத்து தேவர்கள், ரிசிகள் மற்றும் எல்லோரும் வந்திருந்து 15 நாள் விழாவாக கொண்டாடினர். விழாவிற்கு வருபவர்களை வரவேற்க 4 திசைகளிலும் ஓடி, ஓடி ஆஞ்சநேயர் வரவேற்பு செய்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த இடத்தில் ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் கட்டி, வழிபட்டு வந்த இடம் என்றும், தற்சமயம் பராமரிப்பு இல்லாது போய் விட்டது என்றும் கேள்விபட்டு அரண்மனைக்கு சென்று விட்டார். அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றி, கோயிலை புதுப்பிக்கும்படி கூறினாராம்.

    உடனே சாமைய நாயக்கர் வனமாக இருந்த இந்த இடத்தை அழித்து, நரசிம்மருக்கும், ஸ்ரீதேவி, பூமாதேவி திருக்கல்யாண கோலத்தில் அமைந்தவாறு கோயில், கமலவல்லி தாயாருக்கு தனி சன்னதி, எதிர்சேவை கருடாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, முன்மண்டபம், மணி மண்டபம், துவஸ்தம்பம் அமைத்தார். வாகன அறை, மடப்பள்ளி, யாகசாலை அமைத்து மதில் சுவர் கட்டியும் ராஜகோபுரம் அமைத்துள்ளனர். கருடாழ்வாருக்கும், ஆஞ்ச நேயருக்கும் கோயிலுக்கு வெளியில் தனித்தனியாக கோயில் அமைத்துள்ளனர்.

    மங்கலம் கூடி வரும் :

    திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோ ஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்.

    இக்கோயில் லண்டக திரழகு சாமையநாயக்கர் ஆரம்பித்து அவர் மகன் குமரழகு சாமையநாயக்கர் கட்டி முடித்ததுடன், அவருடைய மனைவி சீலக்கம்மாள் சிலையும் அமைத்து, சீலக்கம்மாளின் இடது புஜத்தில் உள்ள கிளி வலது மார்பில் பால் அருந்துவது போலவும், தலையில் ஊற்றும் எண்ணெய் தொப்பூழ் வழி சொட்டி விளக்குக்கு எண்ணெய் வழங்கும்படி கலையழகுடன் அமைந்துள்ளது. இக்கோயில் வைணவ ஆகமப்படி வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் இருந்த சட்டத்திலான தேரை மாற்றி, ஆங்கிலேயர் காலத்தில் கோயில் தர்மகார்த்தாவான சோழ ப்ப நாயக்கர், திருவாரூர் தேர் போன்று அழகிய சிற்பங்களுடனும், கலை நயத்துடனும் பெரிய தேரை அமைத்துள்ளனர்.

    கோயில் அறநிலையத்துறை பொறுப்பில் இயங்குகிறது. பங்குனி மாதம் 10ம் நாள் பெரிய தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை தீபத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி விழா உள்ளிட்ட விஷேச நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நவராத்திரி விழாவில் 9 தினங்களும் கமலவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்தும், 10வது நாள் பெருமாள் விஷ்ணு துர்க்கை அவதாரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்து மகிசாசூரனை வதம் செய்யும் வைபவம் சிறப்பாக நடைபெறும்
    ×