என் மலர்
கோவில்கள்
திருச்சி இம்மாநகரின் கம்பீர வரவேற்பு அடையாளமாக உள்ளது திருச்சி மலைக் கோட்டை. இம்மலையின் மத்தியில் உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குக் கீழே அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில்.
இறைவன் தான் படைத்த எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுவான். அதுவும் அவர்களுக்கு துணை யாரும் இல்லை. தன்னையே நம்பியிருக்கிறார்கள் என்னும் போது, ஓடோடி வந்து உதவி புரிவான். அப்படி ஒரு திருவிளையாடலை ஈசன் நடத்திய இடம்தான், திருச்சி தாயுமானவர் திருக்கோவில்.
காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர் ரத்தின குப்தன் என்ற வணிகன். இவருக்கு அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. ரத்தினாவதி என்ற பெயரில் வளர்ந்து வந்த அந்தப் பெண், பருவம் அடைந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து திருச்சிராப்பள்ளியில் இருந்த தனகுப்தன் என்ற வணிகனுக்கு தன் பெண்ணை சிறப்புற திருமணம் செய்து கொடுத்தனர். ரத்தினாவதி தனது கணவருடன், திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் தெற்கு வீதியில் அமைந்த ஒரு இல்லத்தில் வாழ்ந்து வந்தனர்.
தாய் வரத் தாமதம் :
சிவ பக்தையான ரத்தினாவதி, தினந்தோறும் சிவ பெருமானை வழிபட்டு வந்தாள். இந்த நிலையில் ரத்தினாவதி கருவுற்றாள். சில மாதங்கள் சென்ற நிலையில் அவளது கர்ப்ப காலம் முடிந்து, பேறு காலம் வந்தது. ரத்தினாவதியின் தாயார், தன் மகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். எனவே, பேறு காலத்தில் தேவைப்படும் காய மருந்து, தைலம் போன்ற பொருட் களுடன் பூம்புகாரில் இருந்து, காவிரியின் வடகரை வழியாக திருச்சியை நோக்கி பயணித்தார். பல ஊர்களைக் கடந்து வரும்போது, பலத்த மழை கொட்டியது. பெரு மழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. சரியான பாலங்கள் அந்த நாளில் இல்லை. வெள்ளப்பெருக்கால் படகு சவாரியும் நின்று போனது. ஆகவே ரத்தினாவதியின் தாயாரால் அக்கரைக்கு செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய பேறு காலத்தின்போது, தாயார் அருகில் இருக்க வேண்டும் என்று எண்ணிய ரத்தினாவதி, அவரது வருகைக்காக காத்திருந்தாள். பல நாட்கள் ஆகியும் தாய் வராததால் வருத்தம் அடைந்தாள். அவளது மனம் தாயின் வருகைக்காக ஏங்கியது. தாயின் துணை இல்லாததால், தான் தினமும் வழிபடும் திருச்சி செவ்வந்திநாதரையும், மட்டுவார் குழல் அம்பாளையும் நினைத்து பிரார்த்தித்து வந்தாள்.
பக்தையின் மன வருத்தம் :
பக்தையின் மன வேதனையைப் பொறுக்க முடியாத ஈசன், ரத்தினாவதியின் தாய் போன்ற நரைத்த தலை, தளர்ந்த நடை என்று, கையில் கோலூன்றியபடி, பேறு கால மருந்து பொருட்களுடனும், தாய் வீட்டுச் சீருடனும் அங்கு வந்து சேர்ந்தார். தன் தாயின் வருகையைக் கண்டு ரத்தினாவதி மனம் மகிழ்ந்தாள்.
தாயைப் போல் வந்த இறைவனும், ரத்தினாவதிக்கு தைலம் தடவி, மருந்து போன்றவற்றைக் கொடுத்து பேறு கால உதவிகள் அனைத்தையும் செய்தார். ஒரு நாள் ரத்தினாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாயுமான இறைவன், ரத்தினாவதிக்கும், அவள் பெற்ற குழந்தைக்கும் வேண்டிய பணிவிடைகளைத் தாயாகவும், தாதியாகவும் இருந்து செய்து வந்தார். குழந்தையை தினமும் குளிப்பாட்டி, தொட்டிலில் இட்டு, கண்ணும் கருத்துமாக காத்து வந்தார். குழந்தை பிறந்து 7 நாட்கள் கடந்துவிட்டன.
அப்போது இயற்கையின் சூழல் மாறிவிட்டது. புயல், மழை நின்று, ஆற்றில் வெள்ளப்பெருக்கும் குறைந்து விட்டது. இதனால் ரத்தினாவதியின் உண்மையானத் தாயார், அவளது வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘ஏற்கனவே வீட்டில் தன்னுடைய தாய் இருக்கும் நிலையில், வந்திருப்பது யார்?’ என்று குழம்பிப்போனாள் ரத்தினாவதி. அவனது கணவன் தனகுப்தனும் திகைத்துப் போய் நின்றான். அப்போது தாயுமானவராக வந்த இறைவன் மறைந்து, ரிஷப வாகனத்தில் அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தார்.
தாயாக மாறிய தாயுமானவர் :
உலகமெங்கும் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தியுள்ள சிவபெருமான், இந்தத் திருத்தலத்தில் தாயாக வந்து தங்கியிருந்து, ஒரு மானுடப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தது அதிசயத்திலும் அதிசயம். யாருக்கும் கிடைக்காத பாக்கியமல்லவா இது. என்ன புண்ணியம் செய்தாலோ அந்தப் பெண்.
காவிரியின் தென்கரையில் சிறு குன்றின் மீது குடியிருந்து மலைக்கொழுந்து ஈசர் என்றும், சாரமா முனிவரால் செவ்வந்தி நந்தவனம் அமைக்கப்பட்டு, அந்தக் பூக்களை விரும்பிச் சூடிக்கொண்டதால் ‘செவ்வந்திநாதர்’ என்றும் அழைக்கப்பட்டு வந்த இத்தல ஈசன், இந்த நிகழ்வுக்குப்பிறகு ‘தாயுமானவர்’ என்றே அழைக்கப்படலானார்.
சாரமான முனிவரை, உறையூர் சோழ மன்னன் உதாசீனப்படுத்தினான் என்பதற்காக, மேற்குப்புறமாக திரும்பி உறையூரில் மண் மழையைப் பெய்ய வைத்து மன்னனுக்கு தண்டனை கொடுத்த இறைவன், தன் பக்தையான ரத்தினாவதிக்கு தாயாக வந்து தலைப்பிரசவம் பார்த்தார் என்று சொல்லும்போது, இறைவன் தனது பக்தர்களுக் காக எதையும் செய்வார் என்பது புரிகிறது.
ஆலய அமைப்பு :
மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை முகட்டில் உச்சிப்பிள்ளையாரும் வீற்றிருக்க, மலையின் இடையில் தாயுமானவர் திருக்கோவில் அமைந்துள்ளது. படி ஏறிச் சென்றால் அங்கு பெரிய லிங்கத் திருமேனியுடன் சுயம்புவாய் எழுந்துள்ள இறைவன் மேற்குப் பார்த்த சன்னிதியில் இருந்து அருள்புரிகிறார். திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், ஐயடிகள் காடவர்கோனும், பிற்காலத்தில் தாயுமான அடிகளும் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இந்த ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற 69-வது திருத்தலமாக திகழ்கிறது.
இத்தல அம்பாள் ‘மட்டுவார் குழல் அம்மை’ என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் கிழக்கு பார்த்தபடி தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட முருகப்பெருமானும், எட்டு முனிவர்களுக்கு உபதேசம் செய்யும் ஆதிகுருவாக தட்சிணாமூர்த்தியும் வீற்றிருக்கிறார்கள். ஆலய மண்டபங்களில் சிற்பங்களும், ஓவியங்களும் சிரித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடைவரைக் கோவில், ஒரு கலைக்கோவில் மட்டுமல்ல, பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.
கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக, இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள். குழந்தை பிறந்தவுடன் வாழைத்தார்களைக் கொண்டு வந்து சுவாமிக்கு காணிக்கை செலுத்தி, வாழையடி வாழையாக தங்கள் வம்சம் விருத்தியாக வேண்டும் என்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்தக் கோவிலுக்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள், திருஞான சம்பந்தர் அருளிய பதினோரு பதிகங்களையும், திருநாவுக்கரசர் வழங்கி, இருப்பில் உள்ள நான்கு திருக்குறுத்தொகை பதிகங்களையும் வீட்டில் இருந்தபடியே படித்து வந்தால் நல்லபடியாக பிரசவம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தமிழ்நாட்டின் முக்கிய நகரமாகவும், மத்திய நகரமாகவும் விளங்கும் திருச்சிராப்பள்ளிக்கு நாம் வழி சொல்ல தேவையில்லை. நகரத்துக்கு வந்ததும் உயர்ந்து நிற்கும் மலைக்கோட்டைக்கும், அதில் உள்ள தாயுமான சுவாமி கோவிலுக்கும் அடையாளம் சொல்லவும் அவசியம் இல்லை.
திருவிழா :
திருச்சி தாயுமானவர் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் நடக்கும் வசந்தப் பெருவிழாவில் ஐந்தாம் நாள் ‘செட்டிப்பெண் மருத்துவம்’ என்ற நிகழ்ச்சி நடக்கிறது. குழந்தையைக் கையில் ஏந்தியபடி ரத்தினாவதியும், சுவாமி- அம்பாளும் திருவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு காட்சி தருகிறார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து, பூவாளூர் என்ற கிராமத்திற்கு புலம் பெயர்ந்துள்ள ரத்தினாவதியின் வம்சாவழியினர் இந்தத் திருவிழாவை விமரிசையாக நடத்துகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டங்களில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் முதலாவதாக அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம், ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி திருத்தலத்தைப் பற்றி பார்ப்போம்.
தல மூர்த்தி : கள்ளபிரான் (ஸ்ரீ வைகுண்டநாதர்)
தல இறைவி : வைகுந்த நாயகி (கள்ளர்பிரான் நாச்சியார் , சோரநாத நாயகி)
தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்
கிரகம் : சூரிய ஸ்தலம்
தலவரலாறு:
கோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத நூல்களை அபகரித்துச் சென்றான். இதனால் பிரம்மனின் படைப்புத் தொழில் பாதிக்கப்பட்டது. பிரம்மா மனம் வருந்தி, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி தாமிரபரணி ஆற்றங்கரையில் தவமிருந்தார். இதனைக் கண்ட பெருமாள், பிரம்மனுக்கு காட்சி தந்தார். பிரம்மனின் வேண்டுதலை ஏற்று கோமுகாசுரனை அழித்து வேத சாஸ்திரங்களை மீட்டுத் தந்தார். பிரம்மனின் வேண்டுகோளின்படி இங்கேயே வைகுண்டநாதர் என்ற பெயருடன் எழுந்தருளினார். பிரம்மனும் தாமிரபரணி தீர்த்தத்தினை எடுத்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்வித்த காரணத்தாலும், நதிக்கரையில் கலசத்தை நிறுவியதாலும் கலச தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்பு இக்கோயில் வழிபாடுகளின்றி, பூமிக்குள் புதையுண்டு கிடந்தது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் மறைந்திருந்தது. இச்சமயத்தில், அரண்மனை மாடு, மேய்ச்சலுக்கு செல்லும் போது தினமும், அங்குள்ள ஒரு புற்றின்மேல் பாலை சுரந்துகொண்டு இருந்தது. இதனை அறிந்த பாண்டிய மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்தார். அங்கே சுவாமி சிலை இருப்பதைக் கண்டு, புதையுண்டு கிடந்த திருக்கோயிலையும் புனர் நிர்மாணம் செய்து நாள்தோறும் பெருமாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தார். பாண்டிய மன்னர் பால் அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்தமையால் பெருமாளுக்கு பால் பாண்டி என்ற பெயரும் உண்டானது.
தல பெருமை:
நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். கையில் தண்டத்துடனும், ஆதி சேஷனைக் குடையாகவும் கொண்டு நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, கோயிலின் கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கால கட்டிடக் கலையின் நேர்த்தி இதன் மூலம் நமக்குத் தெரிய வருகிறது.
தலச்சிறப்பு:
வைகுண்டநாதப் பெருமாளின் பக்தர் காலதூஷகன் என்ற திருடன். இந்த காலதூஷகன் பல இடங்களில் திருடியவற்றில் பாதியை கோயில் சேவைக்கும், மீதியை மக்கள் சேவைக்கும் செலவிட்டான். ஒருமுறை மணப்படை என்ற ஊரில் அரண்மனைப் பொருள்களை திருடச்சென்ற போது காலதூஷகனின் ஆட்கள் அரண்மனை காவலர்களிடம் பிடிபட்டார்கள்.
அவர்கள் மூலம் காலதூஷகனின் இருப்பிடம் அறிந்த காவலர்கள், அவனை சிறை எடுக்கச் சென்றனர். அப்போது தானே திருடன் வடிவில் வைகுந்தப் பெருமாள் அவர்களுடன் அரண்மனைக்குச் சென்றார். அவரை விசாரித்த அரசரிடம், வயிற்றுக்கு இல்லாத குறைதான் திருடினேன் எனவும், நாட்டில் ஒருவனுக்கு உணவு, பொருள் பற்றாக்குறை என்றால் அதற்கு, அந்நாட்டை ஆளும் மன்னன் சரியான விதத்தில் அரசாளவில்லை என்றுதான் அர்த்தம். எனவே தான் திருடியதற்கு மன்னனே காரணம் என்று தைரியமாக கூறினார்.
இவ்வாறு தன் முன் நின்று ஒரு திருடனால் தைரியமாக பேச முடியாது என்பதை உணர்ந்த மன்னன், வந்திருப்பது பெருமாளே என அறிந்தார். தான் செய்த தவறையும் உணர்ந்தார். பெருமாள் திருடனது வடிவில் வந்தாலும் அனைவரையும் மயக்கும் அழகிய தோற்றத்தில் இருந்த படியால் அன்று முதல் கள்ளபிரான் என்று அழைக்கப்பட்டார்.
தை முதல் நாள் அன்று கள்ளபிரானை 108 போர்வைகளால் போர்த்தி, கொடிமரத்தை சுற்றி வந்த பின் பூஜை செய்து, ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தை கலைப்பர். 108 திவ்ய தேசங்களிலும் உள்ள அனைத்துப் பெருமாளும் இந்த தினத்தில் கள்ளபிரானாக பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம்.
அமைவிடம்:
ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலிருந்து 1 km தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 30 km தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே, பெண்கள் இங்கு இருமுடி கட்டிச் செல்வார்கள்.
மூலவர்: பகவதி அம்மன்
தல விருட்சம்: வேம்பு
புராணப் பெயர்: மந்தைக்காடு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கேரள பாணியில் ஓடு வேய்ந்த மேற்கூரையுடன் கூடிய எளிமையான ஆலயம் இதுவாகும்.
இந்த ஆலயத்தை கேரளப் பகுதியை ஆட்சி செய்த மார்த்தாண்டவர்மன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.
இந்த ஆலயம் ‘பெண்களின் சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப்போலவே, பெண்கள் இங்கு இருமுடி கட்டிச் செல்வார்கள்.
கருவறைக்குள் தரையில் பதிக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தின் மேல்தான் புற்று வளர்ந்திருக்கிறது. இது தொடர்ந்து வளர்ந்துகொண்டே செல்வதாக சொல்லப்படுகிறது.
கருவறையில் 15 அடி உயரம் வளர்ந்து, மேற்கூரையை முட்டி நிற்கும் புற்றுதான், பகவதி அம்மனாக வழிபடப்படுகிறது.
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் மூலவர் முன்பாக, வெண்கலச் சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச் சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதி அம்மன் அருள்கிறார்.
இத்தல அம்பாளுக்கு, காலை வேளையில் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்னைக்கு புட்டமுது பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
பச்சரிசி மாவு, சர்க்கரை, வெல்லம் கொண்டு ‘மண்டையப்பம்’ செய்து அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்தால் தலைவலி குணமாகும் அதிசயம் நிகழ்கிறது.
இங்கு நடைபெறும் மாசி மாத திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கன்னியாகுமரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கிறது.

நாரதர் தங்கி வழிபட்டதன் காரணமாக, சதுர்முகன்புரி என்ற இந்த ஊர் ‘நாரதர் பூண்டி’ என்று வழங்கப்பட்டு, பின்னாளில் ‘நார்த்தாம்பூண்டி’ என்று மாறியிருக்கலாம் என்கிறது ஊர் வரலாறு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது நார்த்தாம்பூண்டி என்ற ஊர். இந்த திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.
ஒரு பிரளய காலத்தின்போது, இந்த பிரபஞ்சம் அனைத்தும் அழிந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் திருமால், ஆலிலை மீது குழந்தை கண்ணனாக மிதந்து வந்தார். மீண்டும் இந்த பிரபஞ்சத்தை உருவாக்க நினைத்த அவர், தன்னுடைய நாபிக்கமலத்தில் (தொப்புள்) இருந்து பிரம்மனை உருவாக்கினார். அவருக்கு படைப்பு தொழில் புரியும் சக்தியையும் வழங்கினார். அந்த தொழிலை ஏற்ற பிரம்மா, நாராயணருக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகம் வந்து ஒரு கோவிலை அமைத்து வழிபட்டார். அந்த ஆலயமே ‘திருவுந்திப்பெருமாள்’ திருக்கோவில். ‘உந்தி’ என்பது வயிறைக் குறிக்கும். பிரம்மன் வெளிப்பட்ட பகுதி என்பதால், இந்த பெருமாளுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆரம்ப காலத்தில் இந்த ஊர், பிரம்மனின் நான்கு முகத்தைக் குறிப்பிடும் வகையில் ‘சதுர்முகன்புரி’ என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதன்பிறகே ‘நார்த்தாம்பூண்டி’ என்ற பெயர் வந்திருக்கிறது. அதற்கான காரணத்தையும் பார்ப்போம்.
ஒரு முறை சாபத்தின் காரணமாக, பிரம்மனின் மகனான நாரத முனிவர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அந்த சாபம் தீர, அவர் திருவுந்திப் பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, திருமால் நாரதருக்கு காட்சிகொடுத்தார். மேலும் அவரது சாபத்தையும் நீக்கி அருளினார். நாரதர் தங்கி வழிபட்டதன் காரணமாக, சதுர்முகன்புரி என்ற இந்த ஊர் ‘நாரதர் பூண்டி’ என்று வழங்கப்பட்டு, பின்னாளில் ‘நார்த்தாம்பூண்டி’ என்று மாறியிருக்கலாம் என்கிறது ஊர் வரலாறு.
பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆண்ட சம்புவராயர் காலத்தில், இங்கு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் சில படையெடுப்பு காரணமாக கோவில் சிதிலமடைந்தது. அதன்பிறகு பெருமாளுக்கு புதிய கோவில் கட்டப்பட்டது. அப்போது ஸ்ரீதேவி - பூதேவி உடனாய பெருமாள் சிலை புதியதாக அமைக்கப்பட்டது. அதற்கு கல்யாண வெங்கடேசப் பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது. இரண்டு பெருமாள்கள் அருளும் இந்த ஆலயம் மிகவும் சிறப்புக்குரியதாக விளங்குகிறது.
இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.
அமைவிடம்
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.

இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இது இருக்கிறது. இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். கோவிலின் தல விருட்சமாக கொடிமுல்லை இருக்கிறது. கோவிலின் தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, இந்திர தீர்த்தம், பொற்றாமரை என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறது. புராணகாலத்தில் இவ்வூர் கருப்பறியலூர், கர்மநாசபுரம் என அறியப்பட்டது. தேவாரம் பாடல் பெற்ற சிவதல தலமாக இக்கோவில் இருக்கிறது.
தல புராணங்களின் படி இலங்கை வேந்தன் இராவணனின் மைந்தன் மேகநாதன் தேவலோக வேந்தனான இந்திரனை வெற்றி கொண்டு மேகநாதன் என்கிற பெயர் பெற்றான். ஒரு முறை படிக விமான பறந்து கொண்டு கொண்டிருந்த போது அந்த விமானம் தடை ஏற்பட்டு யே நின்று விட்டது. இதை கண்ட இந்திரஜித் விமானத்திற்கு கீழே பார்த்தபோது இத்தல சிவபெருமானின் கோபுரத்தின் மீது பறந்ததால் தான் இத்தடை ஏற்பட்டது என எண்ணி வருந்தினான். பிறகு தலத்தில் இறங்கி, இக்கோவிலின் குளத்தில் நீராடி தனது தவறை உணர்ந்து சிவபெருமானை வழிபட அந்த தடை நீங்கியது.
பிறகு அவனின் விமானம் தடையில்லாமல் பறக்க ஆரம்பித்தது. இக்கோவிலின் சிவலிங்கத்தின் அழகில் மயங்கிய மேகநாதன், இந்த சிவலிங்கத்தை பெயர்த்து இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அந்த முயற்சியில் தோல்வியுற்று மயங்கி விழுந்தான். இதைக் கேள்விப்பட்ட இலங்கை வேந்தன் இராவணன் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானிடம் தன் மகனின் தவறுக்கு வருந்தி அவனை மன்னிக்குமாறு வேண்டினான். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் இந்திரஜித்தின் குற்றத்தை பொறுத்து அருள் புரிந்ததால் “குற்றம் பொறுத்த நாதர்” என்கிற பெயர் இத்தல சிவ பெருமானுக்கு ஏற்பட்டது.
சித்திராங்கதன் எனும் மன்னன் தனது மனைவி சுசீலை உடன் இத்தலத்திற்கு வந்து குழந்தை பாக்கியம் வேண்டி வழிபட்டான். அதன்படியே அவனுக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று. இத்தலத்தில் சூரிய பகவான் வழிபட்டதால் இத்தலம் தலைஞாயிறு எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் செய்யப்படும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என பிரம்மதேவன் வசிஷ்டருக்கு கூறினார். இதனால் வசிஷ்டர் இங்கே சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு மெய்ஞ்ஞானம் பெற்றார். 72 ரிஷிகள் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதாக தல புராணங்கள் கூறுகின்றது. இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது அவர்கள் சிவனின் பாதத்தில் சேர்ந்துவிடுவார்கள் என்றும், மீண்டும் பிறவாமை பேறு கிடைத்து விடுவதாக ஐதீகம் அதனால் தான் இத்தலம் கருப்பறியலூர் என அழைக்கப்படுகிறது. அனுமனின் தோஷத்தை நீங்கிய தலம் இதுவாகும்.
இக்கோவிலின் இறைவன் சிவபெருமானின் லிங்கம் ஒரு சுயம்பு மூர்த்தியாகும். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார். சீர்காழி சட்டை நாதர் கோவில் அமைப்பை போலவே இக்கோவிலும் மலைக்கோவில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இத்தலத்தை மேலைகாழி என அழைக்கின்றனர். கோவிலின் முதல் தளத்தில் உமாமகேஸ்வரர், இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் விட்டிருக்கிறார்
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
கோவில் நடை திறப்பு
காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவிலின் நடை திறந்திருக்கும்.
கோவில் முகவரி
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில்
தலைஞாயிறு
நாகப்பட்டினம் மாவட்டம் - 614712

14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது.
மூலவர் - ஸ்தலசயனப்பெருமாள்
தாயார் - நிலமங்கைத் தாயார்
தலவிருட்சம் - புன்னை மரம்
தீர்த்தம் - புண்டரீக புஷ்கரணி
திருவிழா - வைகுண்ட ஏகாதசி
ஊர் - மகாபலிபுரம்
மாவட்டம் - காஞ்சிபுரம்
திருத்தலங்களில் 63-வது தலமாக புகழ்பெற்று விளங்குகிறது மாமல்லபுரம். 14-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் விஜயநகர மாமன்னர் பராங்குசன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்துள்ளான். இக்கோவில் கட்டப்பட்டு சுமார் 700 ஆண்டுகள் கடந்து போய்விட்டது.
பல்லவ மன்னர்கள் தங்களது ஆட்சி காலத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக அமைந்துள்ள கடற்கரை கோவிலை கட்டினார்கள். இந்தக் கடற்கரை கோவிலில் அப்போது ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து, பூஜை வழிபாடுகள் நடந்து வந்தன. மாமல்லபுரம் பகுதியில் இயற்கை சீற்றங்களினாலும், கடல் கொந்தளிப்பாலும், ஆங்காங்கே உள்ள கோவில்கள் சிதிலமடைந்து வந்த நிலையில், ஊரின் மையப்பகுதியில், ஸ்ரீதலசயன பெருமாளுக்கு பராங்குச மாமன்னர் இந்தக் கோவிலைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
வைகானச ஆகம முறைப்படி பிள்ளைலோகம் ஜீயர் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்றளவும் நான்கு காலபூஜைகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயத்தில் தலசயன பெருமாள் படுத்த நிலையில் தனது காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி இருவருடன் கருவறையில் காட்சி தருகிறார். 12 ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் இங்கு தோன்றியதால், பூதத்தாழ்வார் அவதரித்த ஸ்தலம் என்ற புகழும் இந்த ஆலயத்திற்கு உண்டு.
கோவில் சிறப்பு
இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இல்லாமல், படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார். ஆனால் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள அரிய காட்சி வேறு எங்கும் காண முடியாத அதிசய காட்சியாகும். மானிடராகப் பிறந்தவர்கள் இந்தப் பெருமாளை ஒரு முறையாவது தரிசித்தால் முக்திப்பேறு கிட்டும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும் என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் இக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு வழிவகுக்கின்ற தலம் ஆகும்.
கோவில் அமைப்பு
படுத்த நிலையில் பெருமாள் (விஷ்ணு) காட்சி அளிக்கும் தலங்களில் இதுவும் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. 14-ம் நூற்றாண்டில் பராங்குச மன்னன் கட்டிய காலத்தில் தென்னிந்திய கட்டிடக் கலைக்கு பெயர் சேர்க்கும் விதத்தில், இந்தக் கோவிலில் கருங்கல் தூண்கள் (ஸ்தூபிகள்) அமைத்து கட்டப்பட்டது. 12 ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. குறிப்பாக பூதத்தாழ்வார் இந்தக் கோவிலில் அவதரித்தது விசேஷம் ஆகும். கடந்த காலத்தில் 1957-ம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன்பிறகு 1997-ல் தமிழக அரசின் கட்டுமான கழகம் மூலம் ஒரு சிற்பியைக் கொண்டு, வைணவ ஆகம முறைப்படி பழைய கோபுரத்தை இடித்து, தமிழக கட்டிடக்கலைக்கு பெயரும், புகழும் சேர்க்கும் விதத்தில், தரைமட்டத்தில் இருந்து புதிதாக கோபுரம் கட்டி வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காஞ்சீபுரம் தலைநகராகவும், மாமல்லபுரம் துறைமுகப்பட்டினமாகவும் விளங்கிய காலத்தில் மல்லாபுரி என்ற பெயரோடு விளங்கிய இந்த ஊர் பிற்காலத்தில் மாமல்லபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கடற்கரை கோவிலை மையமாக வைத்தே ஊரின் மத்திய பகுதியில் இக்கோவில் (தலசயன பெருமாள் கோலில்) எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடந்த காலத்தில் சைவமும், வைணவமும் இணைந்து இருந்த கடற்கரை கோவில் பொதுமக்கள் வழிபாட்டில் இருந்தது. பின்னர் தொல்லியல் துறை அக்கோவிலை எடுத்துக்கொண்ட பிறகு பூஜைகள், வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஊரின் மத்திய பகுதியில் கட்டப்பட்ட தலசயன பெருமாளை பொதுமக்கள், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வழிபட்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இக்கோவில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும். சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் அரசு விரைவு, குளிர் சாதன பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவில் (திருக்கடல்மல்லை) இத்திருக்கோவில் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களுள் 64 வது திவ்ய தேசமான இந்து வைணவ திருக் கோவிலாகும்.
தல வரலாறு
முன்பு காடாக இருந்த இப்பகுதியில் புண்டரீக மகரிஷி தவம் செய்து வந்தார். ஆயிரம் இதழ் கொண்ட அபூர்வ தாமரை மலர் ஒன்றைக் கண்ட மகரிஷி அதனை திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட நாராயணருக்கு சமர்ப்பிக்க எண்ணினார். அன்பின் மிகுதியால் கடல் நீரை வற்ற இறைத்து விட்டால் திருப்பாற்கடலை அடைந்து தாமரை மலரை இறைவனுக்கு அர்ப்பணித்து விடலாம் என்று கருதினார். கடல் நீரை கைகளால் இறைத்து வற்றச் செய்ய முயன்றார்.
திருமாலும் ஒரு முதியவர் வடிவம் கொண்டு, முடியாத இக்காரியத்தைச் செய்ய முயலுகின்றீரே, பசித்திருக்கும் எனக்கு உணவளியுங்கள் என வினவ, பசித்தோருக்கு உணவிட வேண்டிய கடமையையும் தமது சீரிய காரியத்தில் ஏற்பட்டுள்ள தடையையும் கண்டு திகைத்தார் மகரிஷி. வந்த முதியவர், மகரிஷி சென்று உணவு கொணரும் வரை தாம் அவரது பணியை மேற்கொள்வதாக உறுதி கூறி மகரிஷியை உணவு கொண்டுவர அனுப்பினார். உணவுடன் மகரிஷி திரும்புவதற்குள் தாமரை மலர் சூடி தரையிலேயே சயன கோலத்தில் பள்ளிகொண்டார் திருமால். திரும்பி வந்து தரிசனம் பெற்ற முனிவர் ஆனந்தத்துடன் வழிபட்டு மகிழ்ந்தார்.
இத்தலத்தில் திருமால் ஆதிசேசனில் பள்ளிகொள்ளாமல் பள்ளிகொண்டுள்ளார். திருப்பாதத்தின் அருகில் புண்டரீக மகரிஷி அமர்ந்துள்ளார். தாமரை மலரும் அமைந்துள்ளது.
தலத்தின் சிறப்புகள்
இத்தலமே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் பிறந்த அவதார திருத்தலம். உற்சவப்பெருமாள் கையில் தாமரை மலருடன் நிற்கும் ஒரே திருத்தலம். இத்திருக்கோவிலின் சித்திரை பிரம்மோற்சவ உற்சவத்திருவிழா சிறப்பானது. மாசி மகம் நாளன்று இத்திருத்தலத் தீர்த்தத்தில் நீராட இராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணியம் என்று குறிப்பிடப்படுகின்றது.
கோவில் நடை திறக்கும் நேரம் - காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாகவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்.
மூலவர்: வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்)
உற்சவர்: கள்ளபிரான் ,ஸ்ரீசோரநாதர்
தாயார்: வைகுண்டவல்லி, பூதேவி
உற்சவர் தாயார்: ஸ்ரீசோரநாயகி
தீர்த்தம்: பிருகு தீர்த்தம், தாமிரபரணி நதி
வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.
கோவில் அமைப்பு
9 நிலைகளும் 110 அடி உயரமும் கொண்டுள்ளது இக்கோவிலின் ராஜகோபுரம். மூலவர் வைகுண்டநாதர்; கோவிலுக்குள் இவர் சந்திர விமானத்தின் கீழ், ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் வைகுண்டநாச்சியார்.
உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார்; தாயார் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதியும், நரசிம்மர் சன்னிதி, கோதண்டர் சன்னிதியும் உள்ளன.
தல புராணம்
பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலசதீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம்புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.
சிறப்பு
இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார். இக்கோவிலில் உள்ள திருவேங்கடமுடையான் சந்நிதியில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை , ஐப்பசி மாதங்களில் 6 ஆம் நாளன்று சூரிய ஒளி வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற்போல கொடிமரம் சற்றே விலகி உள்ளது. ஆங்கிலேயருக்கு எதிராகக் கட்டபொம்மன் நடத்திய விடுதலைப் போரில் இக்கோவில் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது.
திருவிழாக்கள்
இங்கு நடைபெறும் திருவிழாக்களுள் முக்கியமானது கருடசேவைத் திருவிழா ஆகும். இவ்விழா தமிழ் மாதமான வைகாசியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. விழாவில் நவதிருப்பதிகளிலும் உள்ள 9 உற்சவப் பெருமாளும் கருடவாகனத்தில் எழுந்தருளுவதைக் காணலாம். நம்மாழ்வாரின் உற்சவர் திருவுருவச் சிலை அன்னவாகனத்தில் ஒவ்வொரு நவதிருப்பதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த தலங்களில், அந்தந்த தலங்கள் குறித்து அவர் பாடிய பாடல்கள் பாடப்படும்.
இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ தூரத்திலுள்ளது.

கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார்.
நடுநாடு என்று அழைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது விருத்தகிரீஸ்வரர் கோவில். இங்குள்ள இறைவனுக்கு பழமலைநாதர் என்கிற மற்றொரு பெயரும் உண்டு. சமய குறவர்களால் பாடல் பெற்று இத்தலம் நடுநாட்டு சிவதலங்களில் 9-வது திருத்தலமாக விளங்குகிறது.
பிரம்மனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய இத்தலம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்று சிறப்புகளையும் பெற்று இருப்பது மேலும் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் பழமலைநாதர் என்னும் விருத்தகிரீஸ்வரர் முன்காலத்தில் மலையாய் காட்சி கொடுத்துள்ளார். இதனால் விருத்தாசலத்துக்கு திருமுதுகுன்றம் என்கிற பெயரும் உண்டு.
மலையாய் காட்சி கொடுத்த இங்குள்ள மூர்த்திக்கு பழமலைநாதர், முதுகுன்றீஸ்வரர், பெரியநாயகர், விருத்தகிரீஸ்வரர் என பெயர் அமைந்துள்ளது. அம்மையை பெரியநாயகி, விருத்தாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். குருநமச்சிவாயத்துக்கு இளமையாக காட்சி கொடுத்ததால் பாலாம்பிகை என்றும் இளையநாயகி என்றும் அழைக்கின்றனர்.
புண்ணிய தலம், முக்திதலம் என்று போற்றப்படும் இந்த தல புராணத்தில், ‘இத்தலம் விட்டுக் காசியில் ஏகினும் இல்லை, தவப்பயன் முத்தியும் இல்லையே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் காசிக்கு மேல் வீசம் என்பதால் விருத்தகாசி எனவும் அழைக்கிறார்கள். இந்த தலத்தில் இறக்கின்ற எல்லா உயிர்களுக்கும் பழமலைநாதர் ஐந்தெழுத்து ஓதி முக்தி கொடுப்பதாகவும், பெரியநாயகி முந்தானையால் வீசி பிறப்பை அகற்றுவதாகவும் கச்சியப்பர் கந்தபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு புறமும் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். கோவிலின் நான்கு புறங்களிலும் விண்ணை முட்டும் உயரத்தில் 7 நிலைகளை உடைய பெரிய கோபுரங்கள் நிற்கிறது. சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இதை விளக்கும் விதமாக 28 லிங்கங்களை இத்தலத்தில் முருகபெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்த வரலாறு உண்டு. இந்த 28 லிங்கங்கள் தனி சன்னதியாக கோவிலில் அமைய பெற்றுள்ளது. இந்த லிங்கங்களுக்கு நடுவே விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகனும் காட்சி அளிக்கிறார்கள். உலகில் எந்த கோவிலிலும் இல்லாத பெருமையாக இது பார்க்கப்படுகிது. இக்கோவிலில் பலவித சிறப்புகளுக்கு உரியவர் பெரியநாயகர் என்று அழைக்கப்படும் விருத்தகிரீஸ்வரருக்கு பவுர்ணமி அன்று சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.
கோவிலில் முதன் முதலில் திருப்பணி செய்த விபசித்து முனிவருக்காக காட்சி கொடுக்கும் ஐதீக பெருவிழா மாசி மகப்பெருவிழாவின் 6-ம் நாள் நடைபெறுகிறது.
பஞ்சமூர்த்திகள் என்று கூறியவுடன் நினைவுக்கு வருவது விநாயகர், முருகன், சிவன், சக்தி, சண்டிகேசுவரர் ஆவார்கள். மாசி மக பெருவிழாவின் போது இந்த உற்சவ மூர்த்திகள் காலை, மாலை இரு வேளையும் எட்டு வீதிகளிலும் உலாவருவதை தற்போதும் காணலாம்.
கோவிலுக்கு உள்ளே பஞ்ச லிங்கமும் அமைந்துள்ளது. சிவபெருமான் பஞ்ச பூத வடிவில் உள்ளார் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டி இங்கு பஞ்ச லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது காற்று-காளகஸ்தி, மண்-காஞ்சி, ஆகாயம்-சிதம்பரம், நீர் -திருவானைக்காவல், நெருப்பு - திருவண்ணாமலை ஆகும்.
இந்த கோவில் வன்னியடி திருச்சுற்றின் தென்மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய 5 திருத்தலங்களும் சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிப்பட்டால், ஒவ்வொரு தலத்திலும் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும் என்பது பக்தர்கள் இடையே நம்பிக்கையாக இருந்து வருகிறது.
கோவிலில் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் காசியில் இருப்பது போன்ற வடிவமைப்பை கொண்டவர் ஆவார். பைரவர் கையில் வில் உள்ளது மற்றொரு தனி சிறப்பு ஆகும். அருணகிரியாரால் 3 பாடல்கள் பாடப்பட்ட முருக பெருமான் இங்கு எழுந்தருளி இருக்கிறார்.
இவ்வாறு பல சிறப்புகளை கொண்ட இந்த தலத்தை ஒருமுறையாவது சென்று தரிசித்து வாருங்கள்.

சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி பார்ப்போம்.
சென்னை நகரைச்சுற்றி ஏராளமான பிரசித்திபெற்ற திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலருக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் உள்ளிட்டவைதான் அதிகமாகத் தெரிந்திருக்கும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள மேலும் சில முக்கியமான கோவில்களைப் பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்ப்போம்.
காளிகாம்பாள் கோவில்: சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார். முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
திருநீா்மலை ரங்கநாதர்: தென் சென்னைப் பகுதியில் உள்ள குரோம்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருநீர்மலை. பல்லாவரத்தில் இருந்தும் 5 கிலோமீட்டர் சென்றால், இந்த ஊரை அடையலாம். திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த ஆலயம், மலைக் குன்றின் மீது அமைந்திருக்கிறது. மலையின் அடிவாரத்திலும் சிறிய கோவில் உள்ளது. இங்கு நீர்வண்ணப்பெருமாள் வீற்றிருக்கிறார். மலையின் மீதுள்ள ஆலயத்தில் ரங்க நாதர் அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு எதிரே ஒரு தீர்த்தக்குளம் அமைந்துள்ளது.
மருந்தீஸ்வரர் கோவில்: சென்னை, திருவான்மியூர் பகுதியில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோவில். இங்கு மூலவராக சிவபெருமான் வீற்றிருக்கிறார். நோய்களை தீர்க்கும் சக்தி படைத்தவர் என்பதால், இவருக்கு ‘மருந்தீஸ்வரர்’ என்று பெயர். அதோடு, அகத்திய முனிவருக்கு, தெய்வீக மருந்து முறைகளை உபதேசம் செய்ததாலும், இவருக்கு இப்பெயர் வந்தது. தேவாரப் பாடல்கள் பெற்ற 274 திருக்கோவில்களில் இந்த ஆலயமும் ஒன்று. இந்தக் கோவில் அமைந்த சாலை, அந்த காலத்தில் சோழ நாட்டை, பல்லவ நாட்டோடும், ஆந்திராவில் ஆட்சி செய்த சில ராஜ்ஜியங்களோடும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியதாக சொல்லப்படுகிறது.
ஜெகந்நாதர் கோவில்: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து விலகி, ரெட்டிக்குப்பம் சாலையில் கானாத்தூர் என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பூரிஜெகந்நாதர் கோவிலை போன்ற வடிவமைப்பிலேயே இந்தக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் உள்ளதுபோலவே, இங்கும் ஜெகந்நாதர், பலராமர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை தரிசிக்க முடியும். தெய்வங்களின் சிலைகளும், பூரியில் உள்ளது போலவே மரத்தால் செய்யப்பட்டவைதான். இதற்காக வேப்ப மரத் துண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரதான தெய்வங்களைத் தவிர யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் வெண் சலவைக் கற்களாலும், கருப்புப் பளிங்கு கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. பளிங்கு கருங்கல் காஞ்சிபுரத்தில் இருந்தும், வெள்ளை சலவைக் கல் ராஜஸ்தானில் இருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளன.
தேவி கருமாரியம்மன்: சென்னை புறநகர் பகுதியில் மேற்கு பக்கத்தில் உள்ளது திருவேற்காடு கருமாரியம்மன் கோவில். புராண காலத்தில் இந்தப் பகுதியில் மருத்துவக் குணம் மிகுந்த மூலிகை வனம் இருந்ததாக சொல்லப்படுகிறது. தெய்வீக மூலிகை (வேர்) நிறைந்த வனம் என்பதால், இந்த பகுதி ‘திருவேற்காடு’ என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். இந்த ஆலய அம்மன், குறி சொல்லும் பெண் வேடத்தில் சூரிய பகவானை பார்க்க அவரது இருப்பிடம் சென்றாள். ஆனால் அன்னையை அடையாளம் கண்டுகொள்ளாத சூரியபகவான், அவளுக்கு உரிய மரியாதை தராததோடு, அவமரியாதையும் செய்தான். இதையடுத்து சூரியனின் இடத்தில் இருந்து அன்னை புறப்பட்ட மறுநொடி, சூரியன் தன்னுடைய ஒளியை இழந்தான். இதனால் உலக உயிர்களும் துன்பத்தில் துவண்டன. தன் தவறை உணர்ந்த சூரியன், அன்னையிடம் மன்னிப்பு கோரினான் என்று தல வரலாறு சொல்கிறது. இதனால் சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் இந்த ஆலயத்தில் அருளும் கருமாரியம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்படு கின்றன.
சுப்பிரமணியர் ஆலயம்: சென்னையை அடுத்துள்ளது, பழமையும் பெருமையும் வாய்ந்த குன்றத்தூர். பல்லாவரத்தில் இருந்து மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில்இந்த ஊர் இருக்கிறது. இங்குள்ள முருகன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் உள்ள மூலவர், வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார். இந்த ஆலயம், இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்களின் வரலாற்றை எழுதிய சேக்கிழார் அவதரித்த தலமாக குன்றத்தூர் குறிப்பிடப்படுகிறது.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஜம்புகேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்ப்போம்.
மூலவர்: ஜம்புகேஸ்வரர்
உற்சவர்: சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
அம்மன்: அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்: வெண் நாவல்
தீர்த்தம்: நவ தீர்த்தங்கள், காவிரி
சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், தேவாரப்பாடல்கள் இடம்பெற்ற 274 சிவாலயங்களில் 60-வது தலம் ஆகும்.
சிவன் கட்டளைப்படி, அம்பாள் பூமியில் மானிடப்பெண்ணாக அவதரித்தார். அப்போது காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டார். அந்த லிங்கத்தில் எழுந்தருளி, சிவபெருமான் அம்பாளுக்குகாட்சிகொடுத்தார். இதனால் இத்தலம் பஞ்ச பூததலங்களில் ‘நீர் தலம்’ ஆனது.
இத்தல இறைவனான ஜம்புகேஸ்வரர், இங்கே சுயம்புமூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார்.
தனக்கு ஏற்பட்ட பாவத்தைப்போக்க பிரம்மதேவன் இத்தல இறை வனை வழிபட்டுள்ளார். அதேபோல் விலங்குகளில் யானை , சிலந்தி வழிபட்ட தலமாக இந்த திருத்தலம் உள்ளது.
அம்மனின் 51 சக்தி பீடங்களில், இத்தலம் ‘ஞான சக்தி பீட’மாக உள்ளது.
இங்குள்ள ஜம்புகே ஸ்வரரை , அம்பாள் அகிலாண்டே ஸ்வரி தினமும் உச்சிகாலப்பொழுதில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே அந்த நேரத்தில்
அம்மனுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை , கிரீடம், மாலை அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க, சிவன் சன்னிதிக்கு சென்று பூஜை செய்வார். இதனை அம்பாள் பூஜிப்பதாகவே கருதுகிறார்கள்.
சுவாமி சன்னிதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி, நின்ற நிலையில் வீணை இல்லாமல் காட்சி தருகிறார். அருகில் கார்த்திகை , ரோகிணியுடன் சந்திரன் வீற்றிருக்கிறார்.
இந்த ஆலயத்தில் ஆடிவெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும்.
நாவல் மரத்துக்கு ‘ஜம்பு’ என்று பெயர் உண்டு. அந்த மரத்தின் கீழ், அம்பாள் பிடித்த நீர் லிங்கம் அமைந்ததால், இத்தல இறைவன் ‘ஜம்புகே ஸ்வரர்’ ஆனார்.
ஜம்புகேஸ்வரர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தின் எதிரே வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் வழியாகத்தான் இறைவனை தரிசிக்க வேண்டும்.
குபேரன் பூஜித்த குபேரலிங்கம், ஜம்பு தீர்த்தங் கரையில் அமைந்துள்ளது. இவருக்கு ஆனி மாத பவுர்ணமி அன்று முக்கனியைக் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கணவன் - மனைவி ஒற்றுமைக்கு, நல்லவரன் அமைய, விவசாயம் செழிக்க , தண்ணீர் பஞ்சம் நீங்க இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபடுகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருவானைக்காவல் திருத்தலம்.

சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.
ஏகவுரி அம்மன் கோவில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு காளி கோவிலாகும். இக்கோவிலானது தஞ்சையிலிருந்து தஞ்சை-திருச்சி சாலையில் 12கிமீ தொலைவில் உள்ள வல்லம் என்னும் சிற்றூரிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ஆலக்குடிச் சாலையில் ஒரு கிமீ தொலைவில் உள்ளது.
பெயர்க்காரணம்
முன்னொரு காலத்தில் தஞ்சாசுரன் என்னும் அசுரன் தஞ்சையில் வாழ்ந்தான். சிறந்த சிவபக்தனான அவன் தனது தவபலத்தால் மனிதர், தேவர், மும்மூர்த்திகள் இவர்களிடமிருந்து உயிர் பிரியாத வரத்தைச் சிவபெருமானிடம் பெற்றான். பல கொடுமைகள் செய்து வந்த அவனைப்பற்றி மக்கள், தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவன் தன் துணைவியான சிவசக்தியை ‘ஏ கௌரி‘, என்றழைத்து, தஞ்சாசுரனை அழிக்க ஆணையிடுகிறார். எருமைக்கிடா உருவம் தாங்கிய அசுரனின் கழுத்தை வெட்டி தலையை ஒரு கையில் ஏந்துகிறாள்.
உடல் கீழே சாய்ந்ததும் அசுரன் எருமை உருவம் நீங்கி இறந்துவிடுகிறான். போர் புரிந்த இடத்தில் அம்மன் கோபமாக இருந்ததால் அப்பகுதியில் பஞ்சம், வறட்சி ஏற்பட்டது. சிவபெருமான் ஏகவுரி அம்மனிடம் தஞ்சாசுரனை அழித்ததால் கோபமாக உள்ளதைக் கூறி, கோபத்தைத் தணித்துக்கொண்டு அப்பகுதி மக்களுக்குத் தெய்வமாக இருந்து காப்பாற்றும்படி கூறுகிறார். வறட்சி, பஞ்சம் நீங்குகிறது. மக்கள் ஏகவுரி அம்மனை பூசை செய்து வணங்கினர். தஞ்சாசுரனை அழித்த நாளே ஆடி மாதக் கடைசி வெள்ளி அல்லது ஆடிக்கழிவு நாளாகும். பராந்தகசோழன் காலத்தில் வல்லத்துப்பட்டாரகி என்றும் இராஜராஜசோழன் காலத்தில் காளாபிடாரி கைத்தலைபூசல் நங்கை என்றும் இந்த அம்மன் அழைக்கப்பட்டுள்ளார்.
கோவில் அமைப்பு
தஞ்சைப் பிரகதீசுவரர் கோவில் கட்டுவதற்கு முன்பாகவே கட்டிய கோவிலாக இக்கோவில் இருந்துள்ளது. கோவிலின் நுழைவாயில் முதல் பெரிய சுற்றுப்பாதை ஒரு கோட்டையைப் போல பாதுகாப்பாக உள்ளது. கருவறையில் சுமார் 6 அடி உயரத்தில் சுடருடன் எட்டுத் திருக்கரங்களில் படைக்கலன் ஏந்தி, சுதை வடிவத்தில் ஏகௌரியம்மன் காட்சியளிக்கிறாள்.
திருவிழா
ஆடிப்பதினெட்டு அன்று வல்லம் கடைவீதியிலுள்ள மாரியம்மன் கோவில் விழாவோடு ஏகவுரி அம்மன் கோவில் திருவிழா நடத்தப்பெறுகிறது. ஏகவுரி அம்மன், மாரியம்மன், அய்யனார் ஆகிய உற்சவமூர்த்திகளைத் தனித்தனியே அலங்கரித்து வீதி உலா நடத்துகின்றனர். ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை ஆடிக்கழிவு திருவிழா நடைபெறுகிறது. தீமிதி, அம்மனுக்கு பகலில் சைவ பூசை, தொடர்ந்து இரவில் எருமைக்கிடா பூசை போன்றவை நடத்தப்பெறும். கோவில் காவல் தெய்வங்களுக்கு ஆடு,கோழி வெட்டி பூசை செய்கின்றனர். இத்திருவிழாவைக் காண வல்லம் அருகில் வாழும் மக்களும் ஈரோடு, இராமநாதபுரம், கோவை, பெங்களூர் ஊர்களிலிருந்து வரும் மக்களும் கலந்துகொள்கின்றனர்.
இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவில் தேவிக்கு நடத்தப்படும் சண்டி ஹோமம், திருவிளக்கு பூஜை, சித்ரா பௌர்ணமி விழா அடங்கும். சண்டி ஹோமம் செய்வதால் பராசக்தியின் வடிவங்களாகிய துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகள் மிகவும் மகிழ்ந்து வாழ்வில் உள்ள சூனியங்களை அழித்து சகல சுகங்களையும் பக்தர்களுக்கு அருள்வதாக நம்புகின்றனர்.

தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ‘மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்’ என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார். ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு :
இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.
முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.
அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார்.
ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.
அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.
அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.
சரயுபுஷ்கரணி :
தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.
பிரபையில் காளிங்கநர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் விளங்குகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும் பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன. மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர். இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார்.
அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
அமைவிடம் :
வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.