என் மலர்
கோவில்கள்
காரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருச்செங்காட்டங்குடி.
மரகத முனிவரின் மனைவி விபுதை, அசுர குலத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு அசுர குணம் கொண்ட கஜமுகாசூரன் பிறந்தான். அசுரத் தன்மையோடு வளர்ந்த அவன், சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த ஈசன், கஜமுகாசூரனின் முன்பாகத் தோன்றினார்.
ஈசனிடம், ‘என்னைக் கொல்பவன் மனிதனாகவும் இருக்கக்கூடாது; மிருகமாகவும் இருக்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல வரங்களைப் பெற்றான், கஜமுகன்.
அந்த வரத்தினால் ஏற்பட்ட அகந்தையால், தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினான். அதை அறிந்த சிவபெருமான், திருக்கயிலாய மலையில் ஏழு கோடி மந்திரங்கள் அடங்கிய ஒரு சித்திர மண்டபத்தில் பார்வதியோடு எழுந்தருளினார். அங்கு ஏழு கோடி மந்திர சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே ‘சமஷ்டிப் பிரணவம்’, ‘வியஷ்டிப் பிரணவம்’ என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன.
சிவபெருமானும் பார்வதியும் அந்த இரண்டு பிரணவங்களையும் நோக்க அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடனும், மனித உடலுடனும் விநாயகர் அவதரித்தார். ‘சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து விநாயகரை பெற்றெடுத்தனர்’ என்று மகா புராணங்களில் ஒன்றான ‘லிங்க புராணம்’ கூறுகிறது.
ஒரு முறை சிவபெருமானும் அம்பிகையும் திருக்கயிலையில் அமைந்துள்ள பிரணவ மண்டபத்திற்கு எழுந்தருளுகின்றனர். அச்சமயம் திருச்சுவற்றில் உள்ள ஒரு யானை வடிவ சிற்பத்தின் மேல் இறைவன்- இறைவி இருவரின் திருப்பார்வையும் ஒரு சேரப் பதிகின்றது. சிவ-சக்தியின் திருப்பார்வை கடாட்சத்தையேக் கொண்டு அச்சிற்பத்தில் இருந்து விநாயகர் வெளிப்பட்டு அருளினார் என்கிறது விநாயக புராணம்.
இந்நிகழ்வினையே திருஞானசம்பந்தர், திருவலிவலத் திருப்பதிகத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
‘பிடியதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே'
இதன் பொருள், ‘சிவபெருமானும் பார்வதியும் ஆண்-பெண் யானைகளின் திருவடிவம் தாங்கிய பின்னர், அவ்விருவரின் திருப்பார்வை சங்கமத்தால், இடர்களை நீக்கும் கருணைக் கடலாக விநாயகர் அவதரித்து அருளினார்' என்பதாகும். பிரணவ வடிவினரான விநாயகரின் காது, அகன்ற யானைத் தலை, வளைந்த துதிக்கை ஆகியவை ‘ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் வடிவத்தைக் குறிக்கும். ‘யாராக இருந்தாலும் ஒரு செயலைத் தொடங்குமுன் முதலில் உன்னை வணங்கி விட்டு ஆரம்பிக்க வேண்டும். அப்போது தான் அந்தக் காரியம் பூர்த்தி ஆகும். அவ்வாறன்றி உன்னை வணங்காமல் ஆரம்பிக்கும் செயல் முற்றுப் பெறாது' என்று விநாயகப் பெருமானுக்கு சிவபெருமானும், பார்வதி தேவியும் அருளினார்கள்.
இந்த நிலையில் தான் கஜமுகாசூரனின் தொல்லையை பிரம்மா, விஷ்ணு புடைசூழ திருக்கயிலாயம் வந்த தேவர்கள், சிவபெருமானிடம் கூறி முறையிட்டனர். உடனே சிவபெருமான், விநாயகரை அழைத்து கஜமுகாசூரனை வென்று தேவர்களைக் காத்திடுமாறு அருளினார். விநாயகப்பெருமானும் கஜமுகா சூரனை வென்று தேவர்களைக் காத்தார்.
கஜமுகாசூரனை அழித்ததால் விநாயகப்பெருமானுக்கு தோஷம் பற்றிக்கொண்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பூலோகத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதையடுத்து அவரது தோஷம் நீங்கியது. கணபதியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்ட இறைவன் என்பதலால், அவருக்கு ‘கணபதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. இத்தலத்திற்கு ‘கணபதீச்சரம்’ என்று பெயர். விநாயகப்பெருமான் இங்குதான் கஜமுகாசூரனை வதம் செய்ததாகவும், அசுரனின் செங்குருதி (ரத்தம்) பெருகி, காட்டாறாக பெருகியதால் இத்தலத்திற்கு ‘திருச்செங்காட்டங்குடி’ என்னும் திருப்பெயரும் உண்டு.
ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்தால், மூலவரான ஆத்திவன நாதர் என்னும் கணபதீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாய் கிழக்குப் பார்த்த வண்ணம் அருள்கிறார். சிறுத்தொண்டருக்காக இத்தல ஈசன் பைரவர் வடிவில் வந்து அருளியதால் ‘உத்தராபதீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். மூலவரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் உத்தராபதீஸ்வரர் தனி விமானத்துடன் உற்சவ மூர்த்தியாக உள்ளார். திருக்கரங்களில் உடுக்கை, திருவோடு, திரிசூலத்துடன் காணப்படுகிறார். தினமும் இவருக்கு பச்சைக்கற்பூரமும், குங்குமப்பூவும் சார்த்தப்படுகின்றது.
தன் பக்தை ஒருத்திக்காக பிரசவம் பார்த்த இத்தல அம்பாளின் திருநாமம் ‘சூளிகாம்பாள்’ என்பதாகும். இத்தல அம்பாளை வழிபட தாய்மை அடைந்த பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்கிறார்கள். பி்ரம்மஹத்தி தோஷங்கள், கொடிய பாவங்கள், குலசாபம் அகல இத்தல கணபதி, ஈசன், அம்பாள், பைரவர் ஆகியோரை வழிபடுவது சிறப்பு.
இத்தல கணபதீஸ்வரர் கருவறையில் பசு நெய் சேர்த்து வழிபட்டு, அன்னதானம் செய்தால், பாவங்கள் விலகும் என்கிறார்கள். இங்கு சங்கடகர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, சதயம் நட்சத்திர நாட்களில் வாதாபி கணபதி, கணபதீஸ்வரர் மற்றும் அம்பாளை வழிபட தோஷங்கள், தடைகள் அகன்று செல்வ வளமும், உடல்நலமும் கை கூடும். இங்கு சம்பந்தரும், பிள்ளையாரும் ஒரே சன்னிதியில் உள்ளது சிறப்பம்சமாகும்.
இத்தல ஈசனை திருநாவுக்கரசர், ‘உருகு மனத்தடியவர்கட்கு ஊறுந்தேன்' என்கிறார்.
ஆம்! பக்தர்கள் மனதில் என்றும் ஊறும் தேனாய் விளங்கும் திருச்செங்காட்டங்குடி ஈசனையும், விநாயகரையும் கண்டு வழிபடுவோம்.
சிறுதொண்ட நாயனார் :
நரசிம்ம பல்லவனிடம் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சிறந்த சிவ பக்தர். இவர் மன்னனின் ஆணைப்படி வடக்கே உள்ள வாதாபியைக் கைப்பற்றி, அங்கிருந்த கணபதி சிலையின் மேல் காதல்கொண்டு அக்கணபதியை எடுத்து வந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்தார். பின் தினமும் அந்த ‘வாதாபி கணபதி’யையும், அத்தல ஈசன் கணபதீஸ்வரரையும், அம்பாள் சூளிகாம்பாளையும் வழிபட்டு வந்தார். பின்னாளில் பரஞ்சோதி தன் தளபதி பதவியைத் துறந்து தன் மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், பணிப்பெண் சந்தன நங்கையுடன் தன் ஊரான திருச்செங்காட்டங்குடியிலேயே சிவத்தொண்டை மேற்கொண்டார். இந்த பரஞ்சோதி, வேறு யாரும் அல்ல.. அடியவர் வேடத்தில் வந்து பிள்ளைக் கறி கேட்ட இறைவனுக்கு தன் குழந்தையையே சமைத்துக் கொடுத்த சிறுதொண்ட நாயனார் தான் இவர்.
சிறுதொண்டரின் சிவ பக்தியை சோதிப்பதற்காக இறைவன் பிள்ளைக் கறி கேட்க, தன் பிள்ளையையே சமைத்துக் கொடுத்தவர். சிறுதொண்டர் அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, குழந்தை சீராளன், பணிப்பெண் சந்தன நங்கை ஆகிய நால்வருக்கும் முக்தி அளித்தவர், திருச்செங்காட்டங்குடி திருத்தல இறைவன்.
பொதுவாக சிவனடியார்களுக்கு ஈசன் உமையுடன் ரிஷபத்தின் மேல் அமர்ந்து காட்சி கொடுப்பார். ஆனால் சிறுதொண்டருக்கு மட்டுமே முருகப்பெருமானுடன் சேர்ந்து காட்சி கொடுத்தார். சிறுதொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை நால்வருக்கும் திருச்செங்காட்டங்குடி ஆலயத்தில் சன்னிதி உள்ளது.
அமைவிடம்
காரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது திருச்செங்காட்டங்குடி. இத்தலத்தின் மிக அருகில் திருசீயாத்த மங்கை, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர் ஆகிய திருத்தலங்களும் அமைந்துள்ளன.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவர் திருப்பெயர் : குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : தர்மசம்வர்த்தினி.
ஸ்தல வரலாறு :
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் சுமார் 25,200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலமாகும். வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. கோவிலுக்கு முன்னால் திருக்குளத்தையொட்டி ஒரு பதினாறுகால் மண்டபம். ஒரு தூணுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா வெளிச்சம் போட்டுக் குட்டியா ஒரு சந்நிதி. தூணில் இருக்கார் சரபேஸ்வரர்.
சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு “குறுங்காலீஸ்வரர்’ என்ற பெயர் உண்டானது. “குசலவம்’ என்றால் “குள்ளம்’ என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.
சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள்.
குறுங்காலீஸ்வரர் திருக்கோயில் ஒரு காலத்தில் வால்மீகி முனிவர் ஆசிரமமாக இருந்தது. அங்கே லவன் - குசன் என்ற தன் குழந்தையுடன் சீதை வாழ்ந்தாள். வனவாசம் முடிந்து இராவணனுடன் போரிட்டு வெற்றி அடைந்தாயிற்று. சீதையை மீட்டுக் கொண்டு அயோத்தி திரும்பியாயிற்று. பட்டாபிஷேகமும் நடந்தாயிற்று. இவ்வளவுக்கு பிறகு நாட்டு மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய ஆசைப்பட்டார் ராமர். ஒரு ஒற்றனை அழைத்தார். ‘நாடு நகரம் முழுவதும் சுற்றிவா, மக்கள் நம்மைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து வா” என்றார். புறப்பட்டு போன ஒற்றன் சில நாட்கள் கழித்து திரும்ப வந்தான். ‘சொல்…. மக்கள் என்ன நினைக்கிறார்கள்” என்று கேட்டார் ராமர்.
‘சுவாமி அது ஒரு துணி வெளுக்கும் தொழில் செய்யும் குடும்பம். மனைவி ஒரு நாள் இரவு நேரத்தில் சூழ்நிலை காரணமாக தன் கணவனைப் பிரிந்து வெளி இடத்தில் தங்க நேர்ந்தது. மறுநாள் காலையில் கணவனிடம் திரும்பி வந்தாள். அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் ஒன்றும் ராமன் இல்லை. பல நாட்கள் தன்னை விட்டுப் பிரிந்திருந்த சீதையை அவர் சேர்த்துக் கொணடது போல் உன்னை சேர்த்துக் கொள்ள நான் தயாராக இல்லை” என்றான். குடிமகனின் குரலுக்கு மதிப்பளிக்க எண்ணி ராமர், தனது சகோதரன் லட்சுமணனை அழைத்து, ‘சீதையை அழைத்துப் போய் காட்டில் விட்டு வா” என்று கூறினார்.
அன்று சீதை காட்டில் விடப்பட்டார். அந்த காட்டில் வால்மீகி முனிவர் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். நிஷ்டையில் இருந்த அவர் கானகத்தின் அசைவுகளைக் கொண்டே மனித சஞ்சாரம் நிகழ்ந்துள்ளதை அறிந்து கொண்டார். சீதையைக் கண்டார். அவள் கர்ப்பவதியாக இருப்பதை அறிந்து, உடனே தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார். சீதையின் புதல்வர்களான லவன் - குசன் என்கிற இரு குழந்தைகளும் காட்டிலேயே வளர்ந்து அவர்கள் ஞானக்கல்வியும், வீரக் கல்வியும் கற்றனர். ஒருநாள் கம்பீரமாக குதிரை ஒன்றுடன் சில வீரர்கள் காட்டைக் கடக்க முயன்ற போது அவர்களை லவனும் - குசனும் தடுத்து நிறுத்தினர்.
‘இது அஸ்வமேத யாகத்திற்காக தன்னை வெற்றிகொள்ள யாருமில்லை என்பதை அறிவிக்கும் விதமாக ஸ்ரீராமர் அனுப்பி வைத்த குதிரை” என்றனர் வீரர்கள். ’அட அப்படியா? என்று ஆச்சரியப்பட்ட சகோதரர்கள், அந்த வீரர்களுடன் போரிட்டு அவர்களை விரட்டி விட்டு, குதிரையைப் பிடித்து கட்டி வைத்தனர். குதிரையை மீட்க வந்தவர்களை லவ குசர்கள் தோற்கடித்து விரட்டினர். அனுமான் வந்து விஸ்வரூபமாய் நின்றார். அவரை ராமநாமம் சொல்லி இயல்புக்கு வரவழைத்து தியானத்தில் மூழ்கடித்து வீழ்த்தி விட்டனர். கடைசியில் ராமரே வந்தார். வந்திருப்பது யார் என்பதை அறியாத லவ குசர்கள் அவரை எதிர்த்து உக்கிரமாய் போரிடவே தகவல் வால்மீகிக்கு போனது.
ஒடோடி வந்து அவரிடையே புகுந்து சமாதானம் செய்து வைத்ததுடன் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைத்தார். தந்தையை எதிர்த்து போரிட்ட காரணத்தால் லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க வழி கூறுமாறு வால்மீகியிடம் வேண்டினார் லவ-குசர்கள். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும் என்றார் முனிவர். அதன்படி தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர்.
லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்று பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
நவக்கிரக சன்னதியின் தரைப் பகுதி மஞ்சள், கீழ்பீடம் வெள்ளை, தாமரை பீடம் சிவப்பு, இரதம் கருப்பு, தெய்வங்கள் பச்சை என பஞ்ச நிறத்தில் இருப்பது வித்தியாசமான தரிசனம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம். கோபுரத் திற்கு கீழே கபால பைரவர், வீரபத்திரர் இருக்கின்றனர்.
தெட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னதியின் பின்புறத்தில் லிங்கோத்பவரின் இடத்தில் இருக்கிறார். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. அதன் தூண்களில் ராமாயணக் காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஸ்ரீசரபேஸ்வரர் காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. இவர் அருகில் அணையா தீபம் இருக்கிறது.
சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர். இத்தலத்தை ‘ஆதிபிரதோஷத்தலம்” என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.
கோயிலின் பிரதான அர்த்தமண்டபம் 40 தூண்களுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அதில்தான் குசலவபுரிஸ்வரர் என்கிற குறுங்காலீஸ்வரர் சுவாமி சன்னதியும், அறம் வளர்த்த நாயகி எனப்படும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சன்னதியும் அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. கோயில் நந்தவனத்தில் இரு வில்வ மரங்களுக்கு இடையே வேப்ப மரம் ஒன்று பிணைந்து இணைந்து நிற்கின்றது. அரிய அமைப்பிலான இந்த விருட்சங்களை வழிபடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
சிறப்புக்கள் :
வால்மீகி முனிவர், பகவான் ராமனின் மகன்கள் லவன், குசன் ஆகியோர் வழிபட்ட புண்ணியஸ்தலமாக இந்த கோவில் விளங்கி வருகிறது. அம்பாள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். இக்கோயில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது.
இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம் என்கிறார்கள்.
காசி புண்ணிய க்ஷேத்திரம் இருக்கும் வட திசையை நோக்கி குறுங்காலீஸ்வரர் வீற்றிருப்பதால், இந்தத் தலம் காசிக்கு இணையான தலம் என்ற பெருமை உடையது.
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
போன்: +91-44 - 2479 6237
அமைவிடம் மாநிலம் :
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில், புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாக விளங்குகிறது பஞ்சநதீஸ்வரர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில், புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றன பஞ்சநதீஸ்வரர் கோவில் மற்றும் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் ஆகியவை. இந்த ஆலயம் பெரம்பலூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் துறையூர் செல்லும் சாலையில் குரும்பலூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு அரணாக பச்சைமலை உள்ளது. குரும்பலூர் பச்சை மலையினால் சூழப்பட்டு காட்சி தருகிறது.
தல வரலாறு :
சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன் காலத்தில், விராடராஜன் என்ற குறுநில மன்னன் இப்பகுதியை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்துள்ளான். அந்த சமயத்தில் 10-ம் நூற்றாண்டில் பஞ்சநதீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. இதற்கான சான்றாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், விராடராஜன் தலைமையில் கோவில் நிர்மாணிக்கப்பட்டதை தெரிவிக்கின்றன.
தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்த பச்சை மலையில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, புலிகள் அதிகம் வாழ்ந்துள்ளன. பெரும்புலிகள் காட்சி அளித்த ஊர் ‘பெரும்புலியூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே நாளடைவில் ‘பெரம்பலூர்’ என்று மருவியதாகவும் சொல்லப்படுகிறது. இதே போலத்தான் குறும் புலிகள் வாழ்ந்த ஊர் ‘குரும்புலியூர்’ என்றும், அதுவே மருவி ‘குரும்பலூர்’ என்றும் ஆனதாக கூறப்படுகிறது.
விராடராஜ மன்னன் அன்றாட முக்கிய பணிகளை தொடங்கும் முன், திருவையாறு சென்று அங்கு அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பனை தரிசித்துவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் மழைக்காலத்தில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கின் காரணமாக, அந்த நாளில் விராடராஜ மன்னனால், திருவையாறு சென்று ஐயாறப்பரை தரிசிக்க முடியவில்லை. இதனால் மன்னன் பெரும் வருத்தம் அடைந்தான்.
அன்று இரவு மன்னனின் கனவில் தோற்றிய இறைவன், தனக்கு குறும்புலியூரிலேயே (குரும்பலூர்) கோவில் அமைக்கும்படி கூறினார். அதன்படியே குரும்பலூரில் ஈசனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது. வியாக்ரபாத முனிவர் என்று அழைக்கப்பட்ட புலிப்பாணி சித்தர், குறும்புலி உருவில் வாழ்ந்து வழிபட்ட தலம், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில் ஆகும். இந்தப் பகுதியில் சித்தர்கள் அதிகமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 12, 13, 14 ஆகிய தினங்களில் சூரிய உதய நேரத்தில், இறைவனின் கர்ப்ப கிரகத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசயம் நிகழ்கிறது. சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறுபெற்றதாக சொல்லப்படுகிறது.
ஐந்து ஆறுகள் சூழ்ந்த பகுதியில் இருப்பவர் என்பதால் திருவையாறு தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ‘ஐயாறப்பர்’ என்றானது. அந்த இறைவனின் அருளாசியால் உருவான ஆலயம் என்பதால் இந்த ஆலயத்தில் உள்ள இறைவனும் அதே பொருள்படும் படியாக ‘பஞ்சநதீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி என்பதாகும். அதாவது அறம் வளர்த்த நாயகி என்பது அன்னையின் திருப்பெயர். கேட்ட வரங்களைத் தரும் கருணைத் தாயாக இந்த அன்னை காட்சியளிக்கிறாள்.
இங்கு கல்யாண விநாயகர், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர், சூரியன், சந்திரன், 63 நாயன்மார்கள், நால்வர், பஞ்சலிங்கம், பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, 7 அடி உயர கம்பீர கணபதி, ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 12 கைகளுடன் கூடிய முருகப்பெருமான், விஸ்வநாதர், விசாலாட்சி, விஷ்ணு துர்க்கை, சண்டிகேஸ்வரர், நடராஜர் - சிவகாம சுந்தரி, பைரவர், நவக்கிரகங்கள் போன்ற திருமேனிகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருவையாறில் நடைபெறுவது போல பூஜை முறைகளும், சிறப்பு உற்சவங்களும் இங்கு நடைபெறுகிறது. நீள் மதில்கள் சூழ 5 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ‘அண்டத்தில் (பேரண்டம்) உள்ளது பிண்டத்திலும் (மனித உடலில்) உள்ளது’ என்று சித்தர்கள் கூறுவார்கள். அதன்படி பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களை விளக்கும் வகையில் நீர் (திருவானைக்காவல்), நிலம் (காஞ்சீபுரம்), ஆகாயம் (சிதம்பரம்), வாயு (காளகஸ்தி), அக்னி (திருவண்ணாமலை) ஆகிய பஞ்சலிங்க சிலைகள் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தினமும் 4 கால பூஜை, கார்த்திகை சோம வார வழிபாடு, மார்கழி திருவெம்பாவை வழிபாடு, திருவாதிரை, ஆடி கிருத்திகை பிரதோஷம், அஷ்டமி பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.
பைரவர் சக்தி மிக்க தெய்வங்களில் ஒருவர் ஆவார். இத்தல கால பைரவருக்கு 11 வாரம் முறைப்படி சகஸ்ரநாம வழிபாடும், விஷ்ணு துர்க்கைக்கு 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வழிபாடும் செய்தால் ராகு- கேது தோஷங்கள் அகலும். மேலும் திருமண தடை நீங்கும். மனதில் சஞ்சலங்கள் மறையும். மன பயம் விலகும், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தல கல்யாண விநாயகரை வழிபட்டு வருவதாலும், ஆண்டுதோறும் திருவாதிரை விழாவில் நடக்கும் சிவன்- அம்பாள் திருக்கல்யாணத்தின் போதும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடந்தேறுகிறது. அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அடுத்த ஆண்டு புதுமணத் தம்பதிகளாக ஆலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்திச் செல்கிறார்கள்.

தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் அப்பர் என்னும் திருநாவுக்கரசரும், தென் தமிழ்நாட்டில் திருஞானசம்பந்தரும், சமணர்களை வென்று சைவ சமயப் பேரெழுச்சியை உண்டாக்கினார்கள். அந்த எழுச்சியின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் சிவபெருமானுக்குக் குடைவரை கோவில்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான் திருக்கோளக்குடியில் உள்ள திருக்கோளபுரீசர் ஆலயம் ஆகும்.
இந்த ஆலயம் கட்டும் பணி 8-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் இருக்கும் பல கல்வெட்டுகள் மாறவர்மன் திருப்புவனச் சக்கரவர்த்தி குலசேகரதேவன் என்னும் பாண்டிய மன்னன் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டுக் காண்பிப்பதாக இருக்கிறது. எனவே திருக்கோளக்குடி ஆலயத்தின் திருப்பணிகள், 13-ம் நூற்றாண்டில் முழுமை பெற்றிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
திருக்கோளபுரம் என்று வழங்கப்பெறும் இத்தலம் முல்லைக்குத் தேர் தந்த வள்ளலான பாரி வேந்தன் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியிருக்கிறது. மேலும் பூங்குன்ற நாட்டில் ‘யாதும் ஊரே.. யாவரும் கேளிர்’ என்று 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே, உலக ஒருமைப்பாட்டையும், மனித நேயத்தையும் ஏற்றமிகு குரலில் எடுத்து முழங்கிய கணியன் பூங்குன்றனார் பிறந்த மகிபாலன்பட்டிக்கு வடக்கில் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்ல பூங்குன்றநாடு, கோனாடு, கானாடு, கல்வாயில்நாடு என்னும் நான்கு நாடுகளுக்கும் நடுவில் அமைந்துள்ளது. அந்த நான்கு நாட்டாரும் வந்து வழிபடும் சிறப்பு பெற்ற ஆலயம் என்பதால், இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை ‘நானாட்டீசர்’ என்று தல புராணம் போற்றிப் புகழ்கிறது.
திருக்கோளக்குடி கிராமத்தின் மேற்கு எல்லையில் பெரியனவும், சிறியனவுமான கோளப்பாறைகளை சுமந்தபடி எழுந்து நிற்கிறது ஒரு குன்று. அதன் நடுவில் பெரியதொரு கோளக்குன்று அமைந்துள்ளது. அதில் தான் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது திருக்கோளக்குடி மலைக்கோவில். இந்தக் குன்றின் வடக்கு பக்கத்தில் ‘உலக்கைக் குன்று’ என்ற பெயரிலும், தென்கிழக்கு பகுதியில் ‘பிச்சூழிப்பாறை’ என்ற குன்றும் காணப்படுகின்றன. இந்தக் குன்றின் பாறைக் கோளங்கள் எந்த தருணத்தில் கீழே உருண்டு விழுமோ? என்று காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்த மலை மீது 4 ஆலயங்கள் இருக்கின்றன. அடிவாரம் ‘பொய்யாமொழீசர் ஆலயம்’, அதற்கு சற்று மேலே ‘சிவ தருமபுரீசர் ஆலயம்’, மேல் பகுதியில் ‘திருக்கோளபுரீசர் கோவில்’, அதற்கும் கொஞ்சம் மேலே ‘முருகப்பெருமான் ஆலயம்’ ஆகியவை காணப்படுகின்றன. ஒரு மலை மீது 4 ஆலயங்கள் அமைந்திருக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகவும் திருக்கோளக்குடி உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதியை ‘சிவபுரம்’ என்றும், ‘திருக்கோளபுரம்’ என்றும், ‘கன்னிமாநகரம்’ என்றும் அழைத்திருக்கிறார்கள்.
புண்ணியம்மிகுந்த பாண்டிய நாட்டில் ஏராளமான சிவதலங்கள் இருக்கின்றன. பாண்டிய நாட்டிற்குள் இருந்து தொடங்கும் பொதிகை மலைக்கு, திருக்கோளக்குடியில் உள்ள கன்னி மலையே மூல இடமாக விளங்குகிறது. பொதிைக மலையை விடவும், கன்னி மலையில் உள்ள சிவதருமபுரம் மிகவும் பெருமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பூமி, அந்தரம், சொர்க்கம் என மூன்று நிலைகளில், பரமனின் அந்தரங்க இடமாக இந்த திருக்கோளக்குடி விளங்குகிறது. கயிலை மலைக்கு ஒப்பான திருத்தலம் இது என்றும், மூவுலகத்திலும் இதற்கு ஈடான பெருமை கொண்ட தலம் இல்லை என்றும் சொல்கிறார்கள். இத்தலத்தில் பெயர் களைச் சொன்னாலே, அனைத்து வினைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
ஓர் உருவும் இல்லாத இறைவனை, அகத்தியர், புலத்தியர் என்று இருபெரும் முனிவர்கள் பலா மர வடிவம் கொண்டு வழிபட்டது இத்தலத்தின் பெருமையாகும். இரண்டு முனிவர்களும் நான்கு யுகங் களாக மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆன்மா, சூரியன், சந்திரர் என எட்டு வடிவங்களில் இறைவனை நினைத்து வழிபாடு செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தில் அமர்ந்து உணவு உண்பது, வேள்வி செய்வதற்கு ஒப்பானதாகும். இங்கு உறக்கம் கொள்வது, சிவ யோகம் செய்வது சமமானது. அதே கோவிலை வலம் வருவது திருவிழா நடத்தியதற்கு சமமானதாகும்.
கொலை செய்தவர், பிறர் பொருளைக் களவு செய்தவர், பசுவை கொன்றவர், வேதத்தை பழித்தவர், கற்புடைய பெண்களுக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள், இத்தல இறைவனை வழிபட்டால், அவர்கள் திருந்தி வாழும்படியாக அவர்களை இறைவன் ஆட்கொள்வார் என்று கூறுகிறார்கள். இத்தல இறைவனை வழிபடுபவர்களை எந்த தீங்கான செயலிலும் ஈடுபடாதவாறு இறைவன் தடுத்தாட் கொள்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் அடிவாரத்தில் பொய்யாமொழீசர் ஆலயம் இருக்கிறது. இங்கு கருவறையில் லிங்கத் திருமேனியில் இறைவன் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அன்னை மரகதவல்லியம்மை நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தின் திருப்படிக்கு முன்பாக ‘திருப்பாறை’ என்ற பெயரில் ஒரு சிறு பாறை நிலத்திற்குள் இருந்து, சுமார் 10 சதுர அடி பரப்பளவில், ஓர் அங்குல உயரத்திற்கு வெளிப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்தப் பாறை இறைசக்தி கொண்டது என்றும், பக்தர்களுக்கு முறையீடுகளுக்கு நீதி வழங்கும் ஆற்றல் கொண்டது என்றும் சொல்கிறார்கள். பொய்யாமொழீசரின் திருவருள் இந்தப் பாறையில் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் பாதையில் 60 படிகளைக் கடந்த நிலையில் காணப்படுகிறது, சிவதருமபுரீசர் திருக்கோவில். இந்த ஆலயம் இறைவனின் பூமி, அந்தரம், சொர்க்கம் ஆகிய நிலைகளில் நடுநிலையான அந்தரம் என்று சொல்லப்படுகிறது. இத்தல மூர்த்தியான சிவதருமபுரீசர் லிங்க வடிவத்தில் உள்ளார். இவர் சுயம்புமூர்த்தியாவார். இந்த இறைவனுக்கு பின்புறத்தில் ‘தவளை படாதச்சுனை’ என்ற பெயரில் தீர்த்தம் ஒன்று உள்ளது. அதன் அருகே உட்சரிவான பாறையின் நெற்றிப்பரப்பில் மிகப்பெரிய தேன் கூடு வடிவில் சப்த கன்னியர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. ஆலயத்தில் கிழக்கு பார்த்தபடி மலைமூர்த்தி விநாயகர் உள்ளார். இவருக்கு பல பெயர்கள் உண்டு. அதில் முக்கியமானது ‘வீரகத்தி விநாயகர்’ என்பதாகும். இவரை வழிபடுபவர்களுக்கு வீரமும், பொறுமையும் கிடைக்கும் என்பது ஐதீகம். சிவதருமபுரீசர் கோவிலின் வடக்கே கிழக்கு நோக்கியபடி சிவகாமவல்லியம்மை தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார்.
மலையின் மேல் பகுதியில் திருக்கோளபுரீசர் வீற்றிருக்கும் குடவரைக் கோவில் உள்ளது. இத்தல இறைவன் ககோளபுரீசர் என்ற திருநாமத்துடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவன் சன்னிதியை பார்த்தபடி இருக்கும் பாறையிலேயே நந்தியின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. கரு வறையில் உள்ள சிவலிங்கத் திருமேனி பாறையிலே வடிவமைக்கப்பெற்றது. முகப்பு மண்டபமும், விமான அமைப்புடன் கூடிய கருவறையும் கொண்ட அழகிய ஆலயம் இது. தனிச் சன்னிதியில் அன்னை ஆத்ம நாயகி (ஆவுடைநாயகி) அருள்பொழியும் திருமுகத் தோடு நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
இதற்கு மேல் பாறையில் படி அமைக்கப்பட்ட பாதைகள் உள்ளது. மேலே சென்றால் ஆறு திரு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, வள்ளி- தெய்வானையுடன் மயில் வாகனத்தில் அருள்பாலிக்கும் சுப்பிரமணியரை தரிசனம் செய்யலாம். இவர் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அதற்கு பக்கத்தில் குன்று ஒன்று இருக்கிறது. அதில் ஒரு மண்டபம் உள்ளது. அதற்குள் ‘அன்ன லிங்கம்’ என்ற பெயரில் ஒரு சிவலிங்கம் கிழக்கு பார்த்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தெற்கேயுள்ள உயரமான நீண்ட கோளப்பாறையின் உச்சியில், திருக்கார்த் திகைத் தீப மண்டபம் உள்ளது. இந்த தீப மண்டபம் தான் திருக்கோளகிரியின் சிகரமாகும்.
தவளை இல்லாத தீர்த்தம் :
சிவபெருமான் திருமுடியில் இருந்த நாகம், திருமாலின் வாகனமான கருடனைப் பார்த்து ‘கருடா சுகமா?’ என்று கேட்டது. அந்தக் கேள்விக்கு கருடன், ‘எவரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எந்தக் குறையும் வராது’ என்று பதிலளித்தது.
நாகத்தின் கர்வத்தை உணர்ந்த சிவபெருமான், அதனை பூலோகத்தில் வாழும்படி சாபம் கொடுத்தார். உடனே நாகம் தன்னுடைய சாபத்தை நீக்கியருளும்படி வேண்டியது.
ஈசன், ‘நீ! ககோளபுரம் சென்று தவமிருந்தால், உன்னுடைய சாபம் நீங்கும்’ என்றார்.
அதன்படி நாகம் இத்திருத்தலத்திற்கு வந்து தவம் செய்து கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த சுனையில் இருந்த தவளைகளை, பறவைகள் பிடித்துச் சென்று கொன்று தின்பதைப் பார்த்தது. அதைக் கண்டு வருந்திய நாகம், இறைவனை மனமுருக வேண்டியது.
உடனே ஈசன், ‘இன்று முதல் இந்தச் சுனையில் தவளைகள் இல்லாமல் விலக்கினோம்’ என்று அருள் புரிந்தார்.
தவளைகள் இல்லாத சுனைத் தீர்த்தம் என்பதால் இதற்கு ‘தவளைபடாதச் சுனை’ என்று பெயர் வந்தது. தவிர சிவகங்கை, நெல்லியடித் தீர்த்தம், ககோளத் தீத்தம், தேன் தீர்த்தம், சப்த கன்னிமார் தீர்த்தம், சிவதரும தீர்த்தம் என்ற பெயர்களும் இந்தச் சுனைக்கு உண்டு. இந்த தீர்த்தக் கரையில் இருந்து சிவபூஜை செய்தாலோ, பித்ரு கடன் செய்தாலோ சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் இந்தத் தீர்த்தத்தை பருகி இத்தல இறைவனை வழிபடுவோர் இன்பமான வாழ்வைப் பெறுவார்கள்.
இந்த ஆலயத்தில் ஆனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் தேரோட்டம், சுவாமி வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பு வாய்ந்தவை. மார்கழி திருவாதிரை, தைப்பூசம், பிரதோஷம், சங்கடகர சதுர்த்தி, பவுர்ணமி, சிவராத்திரி போன்ற நிகழ்வுகளும் சிறப்பு மிக்கவை.
அமைவிடம் :
புதுக்கோட்டையில் இருந்து ராங்கியம் வழியாக 40 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோளக்குடி உள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் செவ்வூர் வழியாகவும் ஆலயத்திற்கு செல்லலாம்.

காசியைப் போல காயாரோகணேஸ்வரர் கோவிலில் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் ‘கடல்நாகை’ எனும் நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார்.
ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவனுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார்.
மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த மீனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த ஈசன், அதிபத்தருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்தது ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் ஆகும். நாகப்பட்டினம் நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில் அதிபத்தருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. அதிபத்தருக்கு ஈசன் அருள் செய்த நிகழ்வை, ஆவணி ஆயில்ய நாளில் திருக்கோவில் அருகில் உள்ள கடலில், படகு மற்றும் மீன் வலையுடன் சென்று நடத்திக் காண்பிக்கிறார்கள்.
ஆவணி ஆயில்ய நாளின் மாலை நேரத்தில், ஆலயத்தில் இருந்து நீலாயதாட்சி அம்மனுடன் காயாரோகணேஸ்வர சுவாமி புறப்படுகிறார். அவரோடு நாகை புதிய கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான அடியவர்களும் வருவார்கள். அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.
பொதுவாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது.
காசியைப் போல இத்தலத்திலும் முக்தி மண்டபம் உள்ளது. இத்தல ஈசனையும், அம்பாளையும் வழிபடுவதால் இறப்பிற்கு பின் முக்தி நிச்சயம். வாழும்போது பக்தியுடன் வாழ்ந்தால், நம் வாழ்க்கைக்குப் பிறகு சிவபதம் நிச்சயம். இறந்தவர்களின் ஆன்மா முக்தி பெற, இத்தல ஈசனுக்கு ‘மோட்ச தீபம்’ ஏற்றியும் வழிபடலாம்.
நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், ‘கடல் நாகைக் காரோணம்’ என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் ‘காயாரோகணேஸ்வரர்’. அன்னையின் திருநாமம் ‘நீலாயதாட்சி’ என்னும் ‘கருந்தடங்கண்ணி’. ‘காயம்’ என்றால் ‘உடம்பு’ என்று பொருள்படும். ‘ஆரோகணம்’ என்பதற்கு ‘உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்ளல்’ என்று அர்த்தம். இங்குள்ள ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘காயாரோகணர்’ என்றும், இத்தலத்திற்கு ‘காயாரோகணம்’ என்றும் பெயர் வந்தது.
மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாக இவ்வாலயம் திகழ்கிறது. மூலவருக்கு அருகில் தியாகராஜர் சுந்தர விடங்கராய் உள்ள சன்னிதியும் இருக்கிறது. கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் உள்ளன. அஷ்ட நாகங்களில் ஒன்றான ஆதிசேஷன் மகா சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. நாக தோஷங்கள் அகல, இத்தல ஈசன் வழிபாடு நமக்குத் துணை நிற்கும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரரின் பாடல் பெற்ற தலம் இதுவாகும். சுந்தரருக்கு இத்தல ஈசன் நவமணிகள், முத்துமாலை, பட்டு முதலியன வழங்கியுள்ளார்.
இத்தல ஈசன் அகத்தியருக்கு தனது திருமணக் காட்சியை இங்கும் காட்டி அருளியுள்ளார். கோவிலின் உள்ளே சென்றதும் ஐந்து தலை நாகம் குடை பிடிக்க ‘நாகாபரணப் பிள்ளையார்’ உள்ளார். இவருக்கு பின்னால் சுதை வடிவில் பெரிய நந்தி இருக்கிறது. நந்திக்கு தென்புறம் முக்தி மண்டபம் உள்ளது. ஆலயப் பிரகாரத்தில் வல்லப கணபதி, அகோர வீரபத்திரர், பஞ்சமுக லிங்கம், ஆத்ம லிங்கம், மாவடிப் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், பழனி ஆண்டவர், இடும்பன், சூரியன், கஜலட்சுமி, அறுபத்து மூவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர் சன்னிதிகள் இருக்கின்றன.
இத்தல அம்பாள் நீலாயதாட்சியின் கண்கள் கருநீலத்தில் அழகானது. நான்கு திருக்கரங்களுடன் நின்றத் திருக்கோலத்தில் அம்பாள் காட்சி தருகிறார். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமளா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகளால் அலங்கரிக்கப்பட்ட வள் இந்த அன்னை. இங்குள்ள நீலாயதாட்சி அம்மன், கன்னியாகுமரி பகவதி அம்மனைப் போலவே கன்னியாக காட்சித் தருகிறாள்.
இரட்டை நோக்கு நந்தி :
அம்பாள் இங்கு கன்னியாக இருப்பதால், ஈசன் நந்தியை அவளுக்குப் பாதுகாப்பாக அனுப்பினார். ஆனால் நந்தி, ‘தான் அனுதினமும் ஈசனையும் தரிசிக்க வேண்டும்’ எனக் கேட்டார். உடனே ஈசன், அம்பாள் சன்னிதியில் இருந்து கொண்டே தம்மை வழிபடும்படி கூறினார். இதனால் அம்பாள் எதிரில் உள்ள நந்தி தன் கழுத்தை முழுமையாக திருப்பி, சிவன் சன்னிதியைப் பார்த்த படி உள்ளது. நந்தி தனது இடது கண்ணால் ஈசனையும், வலது கண்ணால் அம்பாளையும் பார்த்தபடி இருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சம். இதனை ‘இரட்டை நோக்கு நந்தி’ என்கிறார்கள். இந்த நந்திக்கு அருகம்புல் மாலை அணிவித்து, ஈசன், அம்பிகை, நந்தி என முறைப்படி தேன் அபிஷேகம் செய்து, 5 நெய் தீபங்கள், 5 சந்தனாதி தைல தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.
வழிபாட்டு பலன் :
இவ்வாலயத்தில் உள்ள அகோர வீரபத்திரரை, பவுர்ணமி நாளில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் வறுமை அகலும். இத்தல வெண்ணெய்பிரான், காசி விஸ்வநாதர், அருணாசலேஸ்வரர் சன்னிதிகள் இரட்டிப்பு பலன்களை அளிக்கவல்லவை. இங்குள்ள பைரவரை வெள்ளி மற்றும் அஷ்டமி நாட்களில் முந்திரி மாலை அணிவித்து வில்வ அர்ச்சனை செய்து, நறுமண மலர்மாலை சூட்டி 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் அகலும். இங்குள்ள சனீஸ்வரர், தசரதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்கிறார்கள். இவரை 9 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால் சகல விதமான சனி தோஷங்களும், சிவராத்திரி நாளில் இத்தல ஈசனை வழிபட்டால் நாக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷத்தில் பெருமாள் :
சிவன் கோவில்களில் பிரதோஷத்தின் போது ஈசனும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வார்கள். ஆனால் இத்தலத்தில் மோகினி வடிவில் பெருமாளும் அவர்களுடன் புறப்படுகிறார். இவரை பிரதோஷத்தின் போது மட்டுமே தரிசிக்க இயலும். மற்ற நாட்களில் பெருமாள், காயாரோகணேஸ்வரர் சன்னிதியிலேயே இருக்கிறார். பிரதோஷத்தின்போது மோகினி வடிவில் பெருமாள் புறப்பாடாகும் சிவதலம் இது ஒன்றேயாகும்.
நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

கேது பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்.
கேது பகவான் வழிபட்டுப் பேறு பெற்ற தலம், ஈழ நாட்டின் தேவாரப்பாடல் பெற்ற தலம், திருமால், இந்திரன், ராமன், ராவணன் என பலரும் வழிபட்டு வணங்கிய கோவில், இலங்கை நாட்டின் பஞ்சேஸ்வரங்களில் முக்கிய தலம், பாலாவி என்ற பிரம்மாண்ட தீர்த்தம் கொண்ட ஆலயம், இந்திய அரசின் பொருளுதவியால் எழும்பும் பழம்பெரும் ஆலயம், கருங்கல்லில் சுவாமி, அம்பாள், கருவறை அமைந்துள்ள கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்டதாக திகழ்கிறது, இலங்கை மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கேத்தீச்சரம் திருக்கோவில்.
இத்தல இறைவன் திருப்பெயர் கேதீசரநாதர். தன்னை வணங்கும் அடியாரின் பெயரால், தன் பெயரை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் இறைவன், கேது வழிபட்டுப் பேறு பெற்றதைப் பெருமைப்படுத்தும் விதமாக ‘கேதீசரர்’ ஆனார்.
மகாதுவட்டா என்ற தேவதச்சன் வணங்கி திருப்பணி செய்ததால், இத்தலம் ‘மகாதுவட்டாபுரம்’ என்றும் வழங்கலானது. மகாதுவட்டா, ராமருக்கு முற்பட்டவராகக் கருதப்படுவதால் இது ராமேஸ்வரத்திற்கும் முன் தோன்றிய கோவிலாகப் போற்றப்படுகிறது.
தொன்மைச் சிறப்பு:
கி.பி. ஆறாம் நூற்றாண்டு கலிங்கநாட்டு இளவரசன் விஜயன் என்பவன் காலத்தில் இத்தலம் சிறப்பு பெற்று விளங்கியதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. பழங்காலத்தில் திருக்கேதீச்சரம் இரட்டை அகழியால் சூழப்பெற்று, 1120 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது.
போர்த்துக்கீசியர்கள் காலத்தில் இவ்வாலயம் முழுவதுமாக தகர்க்கப் பட்டு, இதன் சொத்துகள் கொள்ளை யிடப்பட்டதை வரலாறு சொல்கிறது. இங்கே தொல்பொருள் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட ரோம, அரேபிய, எகிப்திய, இந்திய நாணயங்கள் மற்றும் சீனக் களிமண் பொருட்கள், இந்நகரின் தொன்மையையும், சிறப்புக்களையும் நமக்கு உணர்த்துகிறது.
இந்நகரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியதையும், காந்தக்கோட்டை இருந்ததையும் அறிய முடிகிறது. இந்த ஆலயம் பெரிய மாடவீதிகள் கொண்டு விளங்கியதை இங்கு கிடைத்த தொல்லியல் சான்றுகள் உணர்த்துகின்றன. இத்தலத்தின் அருகேயுள்ள மாளிகைத்திடல் என்ற ஊரும், அங்கே கிடைத்த சோழர்காலக் கல்வெட்டும் இதனை உறுதி செய்கிறது. அந்த கல்வெட்டுகள் தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ளன.
கி.பி. 1545-ல் கடல் சீற்றத்தினால் மாதோட்டத்தின் சில பகுதிகள் கடலில் மூழ்கின. கி.பி. 1585-ல் மன்னாரில் வந்திறங்கிய போர்த்துக்கீசியர்கள், இந்து ஆலயங்களில் உள்ள பொன் பொருளைக் கொள்ளையடித்தனர். திருக்கோவில்களைத் தகர்த்தனர். அந்த வகையில் திருக்கேதீச்சரம் ஆலயமும் சூறையாடப்பட்டது.
கி.பி. 1872-ல் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், இவ்வாலயம் பற்றி சிறு குறிப்புகள் மூலம் சைவ சமய மக்களுக்கு நினைவுபடுத்தி, இதன் பெருமைகளை எடுத்துக்கூறினார். அவரது காலத்திற்குப் பின்பு 21 ஆண்டுகள் கழித்து ஆலயத் திருப்பணி கைகூடியது.
கொழும்பில் வணிகம் செய்து வந்த நகரத்தார், முன் முயற்சி செய்து யாழ்ப்பாணத்து பக்தர்கள் ஆதரவோடு, 43 ஏக்கர் நிலப்பரப்பை 3100 ரூபாய்க்கு அரசிடம் இருந்து ஏலத்தில் எடுத்தனர். அதன்மூலம் ஆறுமுக நாவலரின் கனவு நனவானது.
சிவபாதசுந்தரம், சீமான் கந்தையா வைத்தியநாதன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் பெருமுயற்சியால், புதையுண்ட விநாயகர், மகாலிங்கம், சுப்பிரமணியர், நடராசர், சண்டிகேஸ்வரர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, கி.பி. 1960-ல் ஆலய கும்பாபிஷே கம் நடந்தேறியது. ஆலயத்தை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆலயமாக்கிய பெருமை கந்தையா வைத்தியநாதன்அவர்களையே சாரும். 1976-ல் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1983-ல் ஐந்து தேர்கள் வீதியுலா வந்தன.
இந்நிலையில், உள்நாட்டுப் போரினால் 1990 முதல் 2003 வரை இத்திருக்கோவில் மீண்டும் பாதிப்பை சந்தித்தது. இதன்பின் 2003-ம் ஆண்டு திருப்பணி சபையின் பெரும் முயற்சியால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
ஈழ நாட்டின் தேவாரப் பாடல்பெற்ற தலங்களாக, திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் ஆகியவை விளங்குகின்றன. இதில் திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தராலும், சுந்தரராலும் பதிகம் பெற்ற தலமாகும்.
மா சந்தையாக (பெரிய சந்தை) விளங்கிய இப்பகுதி, ‘மாசந்தை’ என்று பெயர்பெற்றது. அதுவே மருவி ‘மாந்தை’யானது. சங்ககால, பல்லவர் கால இலக்கியங்களிலும் இத்தலம் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
இத்தலம் குறித்து, கந்தபுராணத்திலும், தட்சிண கயிலாய மான்மியம் என்ற சமஸ்கிருத நூலிலும் குறிப்புகள் காணப்படுகின்றன.
திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர், கின்னரர், கேது பகவான், துவட்டா, ராமபிரான், அகத்தியர், ராவணன், மாலியவான், அர்ச்சுனன் முதலானோர் வழிபட்டுப் பேறு பெற்ற தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டு எழிலாக அமைந்துள்ளது. அருகே காண்டாமணியும், மண்டபமும் அமைந்துள்ளன. எதிரில் நந்திதேவர் மண்டபத்தினுள் சுவாமி தரிசனம் செய்தபடி அமர்ந்துள்ளார். உள்ளே மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என அனைத்தும் ஒருங்கே அமைந்திருக்க, கருவறையில் மூலவர் திருக்கேதீசரநாதர் வீற்றிருக்கிறார். இவர் கி.பி. 1903-ல் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட திருமேனி ஆவார். தற்போது ஆலயத்தின் சுற்றுப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம், பூமியைத் தோண்டும் போது கிடைத்த, சிறிது சேதம் ஏற்பட்ட திருமேனியாகும். இவர், பழைய மூலவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இதேபோல, அன்னை கவுரியம்பாள் சிலையும் உருவாக்கப்பட்டு தென்திசை நோக்கி நிறுவப்பட்டுள்ளது.
சூரியன், சந்திரன், சண்டேஸ்வரர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், கேது பகவான், சமயக்குரவர், சேக்கிழார், சந்தானக்குரவர், சுந்தரர் மற்றும் மேற்கு பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், மகாவிஷ்ணு, பூமியைத் தோண்டிய போது கிடைத்த மகாலட்சுமி, பஞ்சலிங்கம், மகாலிங்கம், சுப்பிரமணியர் ஆகியோர் திருவுருவங்கள் தனித் தனியே நிறுவப்பட்டுள்ளன. இது தவிர, வடக்குப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகப்பெருமான், சோமாஸ்கந்தர், பள்ளியறை, கிழக்குப் பிரகாரத்தில் கருவூலம், யாகசாலை, பைரவர் சன்னிதி ஆகியவை அமைந்துள்ளன.
ஆலயத்தின் வெளியே பிரம்மாண்ட திருஞானசம்பந்தர்- சுந்தரர் மடம் கலைநயத்துடன் புதிதாக எழுப்பப்பட்டுள்ளது. இதில் தங்குமிடம், அன்னதானக் கூடம் என அனைத்தும் உள்ளடங்கி இருக்கிறது.
பாலாவி தீர்த்தம் :
இத்தலத்தின் தீர்த்தமாக, மிகப்பெரிய பாலாவி தீர்த்தம் அமைந்துள்ளது. சுந்தரரின் தேவாரத்திலும், இப்பாலாவி தீர்த்தம் குறித்து பாடப்பட்டுள்ளது. சுந்தரர் தமது பதினொரு பாடல்களில், பத்து பாடல்களில் ‘பாலாவியின் கரைமேல்’ என இத்தீர்த்தத்தைப் புகழ்கின்றார். பழங்காலத்தில், பாலாவி ஆற்றின் முகத்துவாரத்தில் திருக்கேதீச்சரம் இருந்துள்ளது. அந்த ஆறே, இன்று திருக்குளமாக உருமாற்றம் பெற்றுள்ளதாக வரலாறு கூறுகிறது.
தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம்.
அமைவிடம் :
இலங்கை நாட்டின் வடக்கு மாகாணம், மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகரில் இருந்து கிழக்கே, யாழ்ப்பாணம் செல்லும் பிரதான சாலையில், 10 கிலோமீட்டர் தொலைவில் திருக்கேதீச்சரம் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து வடக்கே 320 கிலோமீட்டர் தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் கல்வி, தொழில் முன்னேற்றம் அடையும். மகப்பேறில் இருக்கும் தடைகள் நீங்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும்.
வெங்கனூர் பகுதியை குறுநில மன்னனான லிங்க ரெட்டியார் ஆட்சி செய்து வந்தார். இவரது மகன் அண்ணாமலையார். இருவருமே சிறந்த சிவ பக்தர்கள். தந்தையும், மகனுமாக விருத்தாசலத்தில் கோவில் கொண்டிருக்கும் பழமலைநாதரிடமும், பெரியநாயகி அம்மையாரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருந்தனர். லிங்க ரெட்டியார் தனது மகனுடன் ஒவ்வொரு பிரதோஷ காலங்களிலும் விரதம் இருந்து, பழமலைநாதரின் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வருவார். வழிபாட்டை முடித்த பிறகே இருவரும் அன்றைய தினம் உணவு அருந்துவார்கள்.
ஒரு முறை பிரதோஷ வழிபாட்டிற்காக குதிரையேறி தந்தையும், மகனும் பழமலைநாதர் ஆலயத்திற்குச் சென்றனர். வழியில் வழக்கமாக குறுக்கிடும் வெள்ளாற்றில், அன்று வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. காட்டாற்று வெள்ளம். அந்த வெள்ளத்தில் மறுகரையைக் கடப்பது என்பது இயலாத காரியம். குதிரைகள் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி முன்னே செல்ல முரண்டு பிடித்தன. இதனால் இறைவனை வழிபடுவதில் தடை ஏற்பட்டு விடுமோ என்று லிங்க ரெட்டியார் வருந்தினார்.
பின்னர் ‘நான் சிவபெருமானுக்கு உண்மை தொண்டராயின், இந்த நதி எங்களுக்கு வழி விடட்டும். இல்லாவிட்டால் இதில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வேன். எம்பெருமானே! உங்களை தரிசிக்க முடியாத நிலை ஏற்பட்டால், இந்த உயிர் இருந்து எந்த உபயோகமும் இல்லை. இதோ என் உயிர் நீத்து உன் பாதம் வந்தடைகிறேன்’ என்றபடி குதிரையோடு ஆற்றில் இறங்க எத்தனித்தார்.
என்ன ஆச்சரியம்.. நதி இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. லிங்கரெட்டியாரும், அவரது மகன் அண்ணாமலையாரும் மறுகரைக்குச் சென்று, பழமை நாதரை வழிபட்டனர். பின்னர் பெரும் மழை காரணமாக இரவு ஆலயத்திலேயே தங்கினார்கள்.
அன்றிரவு லிங்கரெட்டியார் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘இனி மேல் நீங்கள் என்னை தரிசிப்பதற்காக இங்கே வந்து செல்ல வேண்டியதில்லை. நீங்கள் வரும் வழியில் உங்கள் ஆளுமைக்கு உட்பட்ட திருவெங்கை (இன்றைய வெங்கனூர்) நகரிலேயே நான் திருவுருவம் கொண்டு வீற்றிருக்கிறேன். அதை அறிந்து அங்கு ஆலயம் அமைத்து வழிபடுங்கள். அப்படி ஆலயம் அமைக்கும் போது வட நாட்டில் இருந்து சில சிற்பிகள் வருவார்கள். அவர்களால் உங்களின் திருப்பணி பூர்த்தியாகும்’ என்று சொல்லி மறைந்தார்.
இறைவனின் கட்டளைப்படி, குறிப்பிட்ட இடத்தில் தேட, அங்கே இரண்டு லிங்கத் திருமேனிகளும், அம்பிகை முதலான சிலை வடிவ மூர்த்தகங்களும் இருப்பதைக் கண்டு லிங்க ரெட்டியார் ஆனந்தக் கடலில் மூழ்கினார். பின்னர் அவரது தலைமையில் ஒரு திருப்பணிக் குழு அமைந்தது. கோவில் அமைக்கும் பணி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வட தேசத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சிற்பிகள் சிலர் தென்னாட்டை நோக்கி புறப்பட்டு வந்தனர். அவர்கள் திருவெங்கை வழியாக செல்லும் போது, அதை அறிந்த லிங்க ரெட்டியார், அந்த சிற்பிகளைக் கொண்டு ஆலய திருப்பணிகளை முடிக்க நினைத்தார்.

மன்னனின் வேண்டுகோளுக்கு சிற்பிகளும் தலைசாய்த்தனர். காலங்கள் ஓடின. லிங்கரெட்டியார் சிவபதம் அடைந்து விட்டார். தந்தை விட்டுச் சென்ற பணியை, அண்ணாமலையார் எடுத்து செய்தார். சிற்பிகளுக்கு தங்க இடம், உணவு அனைத்தும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். சிற்பிகளின் தலைவனுக்கு சிற்பிகள் அனைவரும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி ஆலயத்தை முடித்துக் கொடுத்தனர். அவர்களுக்கு மன்னர் தக்க பரிசுகளை வழங்கினார் என்பது கோவில் வரலாறு.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு பழமலைநாதர், விருத்தாசலேஸ்வரர், விருத்தபுரீஸ்வரர், விருத்தகிரீஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அதுபோல் இறைவிக்கு பெரியநாயகி, விருத்தாம்பிகை, பாலாம்பிகை, இளமைநாயகி, விருத்தகிரீஸ்வரி ஆகிய பெயர்கள் உண்டானது.
ஆலய அமைப்பு :
கர்ப்ப கிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் திருச்சுற்று மாளிகை வெளிப்பிரகாரம் என ஆலயம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. மூன்று நிலை கோபுர வாசல் உள்ளது. கர்ப்ப கிரகம் ஓம் என்ற பிரணவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள தேவ கோட்டச் சிற்பங்களில் லிங்கோத்பவர், கருடாழ்வார் மற்றும் வைணவச் சிற்பங்களாக கண்ணன், நரசிங்க பெருமாள், கண்ணன் வெண்ணெய் திருடுதல் போன்ற திருமேனிகள் அமையப்பெற்றுள்ளன.
மூலவர் சன்னிதியையும், அம்மன் சன்னிதியையும் சுற்றி அழகிய நிலையில் திருச்சுற்று மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இங்கே காணப்படும் சிற்பங்களான புலியுடன் வீரன் போரிடுதல், கிளி, பூனை, எலி, ஓணான் என ஜீவராசிகள் அனைத்தும் இறைவனின் படைப்பே என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. அது பூமியின் கீழ் தோண்டப்பட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை ‘ஆழத்துப்பிள்ளையார்’ என்று அழைக்கின்றனர்.
இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால் கல்வி, தொழில் முன்னேற்றம் அடையும். மகப்பேறில் இருக்கும் தடைகள் நீங்கும். காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும் என்று சொல்லப்படுகிறது.
அமைவிடம் :
பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் பேருந்தில் ஏறி வெங்கனூரில் இறங்கியவுடன் கோவில் உள்ளது. அதுபோல் சேலத்திலிருந்து 57 கி.மீட்டர் தூரத்தில் வெங்கனூர் அமைந்திருக்கிறது.

விருத்தாசலேஸ்வரர், பெரியநாயகி

திருப்பதிக்கு வேண்டுதல் செய்து கொண்டவர்கள் தங்கள் காணிக்கைகள் இந்த கோவிலில் செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிரவாகமாக பெருக்கெடுத்து வரும் காவிரி அன்னையின் மடியில், திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.
குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருப்பதி ஏழுமலையானிடம் நீங்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறி விட்டது. ஆனால் அந்த வேண்டுதலை நிறைவேற்ற உடனே திருப்பதி செல்ல முடியாத சூழ்நிலை. ஐயோ, தெய்வகுற்றம் ஆகிவிடுமே என்று கவலைப்படாதீர்கள்.
வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும் வள்ளல் வெங்கடாஜலபதிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்த உங்களுக்கு அருகாமையிலேயே ஒரு புண்ணியஸ் தலம் உள்ளது. என்ன, ஆச்சிரியமாக இருக்கிறதா. நம் குணசீலம் ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில்தான் அது.
ஸ்ரீதால்பிய முனிவரின் அன்பைப் பெற்ற, அருந்தவ குணம் கொண்ட சீடர் குணசீல மகரிஷி, ஒரு சமயம் ஏழுமலைக்கு சென்ற குணசீலர் வேண்டியவருக்கு வேண்டு வதை அருளும் வேங்கட முடையான் ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசனம் செய்தார். வெங்கடாஜலபதியின் அருளில் மூழ்கிப்போன குணசீல மகரிஷி, அவரை விட்டு அகல முடியாது.
பிரிந்து வாழ முடியாது என்று எண்ணினார். தன் உள்ளக்கிடக்கையை எம்பெருமானிடம் கோரிக்கையாக கொட்டித்தீர்த்தார். தன் ஆசிரமத்துக்கு எழுந்தருளி, என்றென்றும் தனக்கும், மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்று வரம் வேண்டினார்.
பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பரமாத்மா, தாம் திருவேங்கட மலையில் அர்ச்சாவதாரமாக இருந்து குபேரனிடம்தான் வாங்கிய திருமண கடனை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், கடன் தீரும் வரை தாம் அங்கிருந்து வர முடியாது என்றும் கூறினார்.
மேலும் குணசீலர் காவிரிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் புரிய வேண்டும் என்றும், வைகுண்டத்திலிருந்து ஸ்ரீவாசுதேவன்-ஸ்ரீலட்சுமியுடன் பிரசன்ன வெங்கடேசனாக தாம் அங்கு எழுந்தருளுவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி குணசீல மகரிஷியும் காவிரி வடகரையில் ஆசிரமம் நிறுவி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் எழுந்தருள கடும் தவம் புரிந்தார்.
அவரின் தவத்தை மெச்சி வெங்கடாஜலபதி பெருமாளும் கிருதயுகம், புரட்டாசி மாதம், சனிக்கிழமை, சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், தனுர் லக்னத்தில், சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் வேளையில் எம்பெருமான் திவ்ய மங்கள சொரூபராக பிரசன்னம் ஆகி குடி கொண்டார்.
இவ்வாறு எழுந்தருளிய பிரசன்ன வெங்கடாஜலபதியை குணசீல மகரிஷி 3 யுகங்கள் தன் ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்களுடன், எவ்வித குறைபாடும் இன்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் குணசீல மகரிஷி குரு ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.
தன் ஆத்மார்த்த சீடர் குணசீலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம். இதை தம் தவ வலிமையால் உணர்ந்த குணசீலருக்கு பெரும் குழப்பம். தவமிருந்து, கிடைத்தற்கரிய செல்வமாய் பெற்ற பிரசன்ன வெங்கடா ஜலபதியை விட்டுப் பிரிவதா? தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் தல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை.
விடை காணமுடியாமல் தவித்த குணசீலர், தனக்கு நல்லதொரு முடிவு தருமாறு எம்பெருமான் பிரசன்ன வெங்கடேசனையே வேண்டினார். பெருமாளும் குணசீலரே, பத்ரிகாசிரமத்திலும் யாமே குடிகொண்டுள்ளோம். குருபக்தி குறைய வேண்டாம். தல்பியருடன் சென்று உம் சேவை தொடரட்டும் என்று அருள்பாலித்தார்.
எம்பெருமானின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் புறப்படும் முன் குணசீலர் இறைவனிடம் ஒரு வாரம் வேண்டினார். `வேண்டிய வருக்கு வேண்டியதை அருளும் வெங்கடேசா! தங்கள் கட்டளைப்படியே தல்பிய முனிவருடன் பத்ரிகாசிரமம் சென்று குருசேவையை தொடருகிறேன்.
இந்த புண்ணியஸ்தலம் இனி என் பெயரால் விளங்க வேண்டும். தங்களை நாடிவந்து வேண்டுவோரின் முன் `வினைப்பயன்கள் அனைத்தும் நீங்க வேண்டும். தீராத நோய்கள் எல்லாம் தீர வேண்டும். குறிப்பாக சித்தப்பிரமை உடையவர்கள் இங்கு வந்தால் தெளிவு பெற்றுச் செல்ல வேண்டும்.
கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும். தென்திருப்பதி என்று மக்கள் போற்றி, பிரார்த்தனை தலமாக விளங்க வேண்டும் என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.
`நீர் வேண்டிய படியே நடக்கும். யாம் சங்கு-சக்கரம் தரித்து, செங்கோலுடன் இங்கு காட்சி தருவோம். சகல நோய்களும் தீரும்' என்று அருள்பாலிக்க, குணசீல மகரிஷி பத்ரிகாசிரமம் புறப்பட்டு சென்றார். குணசீலர் போகும்முன்பு எம்பெருமானுக்கு சேவை செய்ய தன்சீடர்களில் ஒருவரை நியமித்து சென்றார்.
ஆற்றில் வெள்ள அடிக்கடி வந்ததால் பயந்துபோன சீடர் வெங்கடேசப் பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார். வனம் நிறைந்த இந்த குணசீலம் அருகில்தான் மன்னர் ஞானவர்மாவின் கோசாலை இருந்தது.
கோசாலையில் இருந்து குணசீலம் வனத்தில் மேய்ந்து விட்டு சென்ற மாடுகளிடம் யாதவர் கள் பால் கறந்து புற்று அருகே சற்று இளைப்பாறி விட்டு அரண்மனைக்கு அனுப்புவது வழக்கம். ஒரு சமயம் அந்த மாடுகளிடம் இருந்து கறந்து குடங்களில் ஊற்றப்பட்டிருந்த பால் புற்று அருகே யாதவர்கள் ஓய் வெடுத்தபோது மாயமாய் மறைந்தது.
திடீரென்று மன்னரிடம் பயந்தபடி இதை சொன்னார்கள். நம்ப மறுத்த அரசர் வந்து நேரில் பார்த்த போதும் இதேபோல் பால் மாயமாய் மறைந்தது. அரசரும் திகைத்தார். அப்போது அந்த வழி வந்த ஒரு அந்தணர், அருள் வந்து வைகுண்டவாசனை நாம் பிரசன்ன வெங்கடேசனாக இங்கு சுயம்பு வடிவில் எழுந் தருளியுள்ளோம்.
புற்றை பால் ஊற்றி அபிஷேகம் செய்தால் உண்மை புரியும்' என்று பிரசன்னம் சொன்னார். அதன்படி மன்னர் உத்தர விட, புற்றின் மீது குடம் குட மாக பால் அபிஷேகம் செய்ய புற்று கரைந்து, சங்கு சக்கர தாரியாய், ஆனந்த சொரூப னாய் காட்சியளித்தார்.
அன்று இரவில் அவரது கனவில் பிரச்சன்னமான வெங்கடேசன் தான் இருந்த இடத்தில் ஒரு ஆலயம் நிர்மாணிக்கும்படி கட்டளையிட, அதை தனக்கு கிடைத்த பாக்கியமாய் எண்ணி மன்னரும் ஆலயம் கட்டினார். இந்த ஆலயம்தான் இன்றைக்கு தென்திருப்பதிஎன்னும் சிறப்புடன் திவ்யதேசமாக புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது.
திருப்பதிக்கு வேண்டுதல் செய்து கொண்டவர்கள் தங்கள் காணிக்கைகள் இங்கு செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளலாம். இங்கு பிரார்த்தனை செய்தவர்கள் வேறுபெருமாள் கோவில்களில் வேண்டுதலை நிறைவேற்ற முடியாது. அப்படி காணிக்கை செலுத்தினாலும், இங்கு எழுந்தருளியிருக்கும் பிரசன்ன வெங்கடேசபெருமாள் தனக்கு வர வேண்டிய காணிக்கையை வசூலித்து வருவார் என்று கதைகள் கூறுகின்றன.
சித்த பிரமை உடையவர்களும், பில்லி-சூனியம் போன்ற தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குணமாகும். புத்திர பாக்கியமில்லாதவர்கள் இங்கு வந்து நியமத்துடன் விரதமிருந்து கஞ்சி வடிக்காத அன்னத்தை ஒரு வேளை மட்டும் உண்டுவர நல்ல பிள்ளைப்பேறு கிடைக்கும்.
வரனுக்கு நல்ல கன்னிகையும், கன்னிப்பெண்களுக்கு நல்ல வரனும் அமையும். ஊமைகள் பேசுவார்கள், கண் தெரியாதவர்கள் பார்வை பெறுவார்கள், தீராத வியாதிகள் தீரும்' என்று ஞானவர்ம மன்னருக்கு எம்பெருமான் காட்சியளித்த போது திருவாய் மலர்ந்தது போல் இன்றும் அருள்பாலித்து வருகிறார்.
போக்குவரத்து வசதி:
சென்னையில் இருந்து பஸ் மூலம் திருச்சி சென்று பின் அங்கிருந்து சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி சென்று பின் அங்கிருந்து அரசு பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். இத்திருத்தலம்திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம்

தாணுமாலய சுவாமி கோவில் அமைந்திருக்கும் சுசீந்திரம் ஊருக்கு முன்பு அமைந்திருக்கிறது துவாரகை கிருஷ்ணன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் பழமையான தாணுமாலய சுவாமி கோவில் அமைந்திருக்கும் சுசீந்திரம் ஊருக்கு முன்பு அமைந்திருக்கிறது அருள்மிகு துவாரகை கிருஷ்ணன் திருக்கோவில். கோவிலின் ஒருபுறம் பழையாறும், ஒருபுறம் வயல்வெளிகளும் என இயற்கை எழில் சூழ மன அமைதி தரும் விதத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. கோவில் முன்மண்டபம் ஓட்டுப்பணியால் ஆனது. சுற்றாலை மண்டபம் ஒரு பிரகாரம், நடுவில் ஸ்ரீகோயில், கருவறை, அர்த்தமண்டபம், சோபனப்படி, விமானம் என அமைந்துள்ளது.
கருவறை சிறியது. கல்மண்டபம், மூலவர் கிருஷ்ணன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கல்வெட்டுகளில் காணப்படும் மூலவர் ஆழ்வார் எனப்படுகிறார். பரிவாரா தெய்வங்களாக விநாயகரும், சாஸ்தாவும் அமைந்துள்ளனர். இத்திருக்கேவிலில் 4 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழி இக்கோவிலின் பழமையானது தெரியவருகிறது. கோவிலின் சபை இக்கோவிலுக்கு நித்திய பூஜைக்கு கொடுத்த பொருட்கள் பற்றியும், விளக்கு நிபந்தத்தையும் கூறுகிறது. மேலும் இக்கோவிலுக்கு இரண்டு குளங்கள் சொந்தமாக இருந்ததாகவும், கோவில் 13ம் நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டதாகவும் அறியமுடிகிறது.
கோயில் கருவறை அருகே உள்ள பாறையில் காணப்படும் 1239ம் ஆண்டு கல்வெட்டில், “இக்கோயிலில் வடதிருவிதாங்கூரை சேர்ந்த வேதவிற்பன்னரான ஸ்ரீகோவிந்த ப்ரஞ்படரார் ஸ்ரீகான ராமபகவான் என்ற ஞானி இருந்தார். இவரிடம் மாணவர்கள் வேதம் பயின்றனார் அவர்களும் இக்கோயில் அருகில் தங்கியிருந்தனர்.” என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், 13ம் நூற்றாண்டில் இது வேதபாடசாலையாக இருந்திருப்பதை அறியமுடிகிறது. ஆனால், இக்காலத்தில் இது வழிபாட்டு கோயிலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு பூஜைகள் :
காலை 6 மணி திருநடை திறப்பு, 6.30 மணி பூஜை, அபிஷேகம், 10 மணி பூஜை. மாலை 5 மணி திருநடை திறப்பு, 6.30 மணி பூஜை, 8 மணி பூஜை, திருநடை அடைப்பு. இக்கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா சிறப்பாக நடக்கிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை விஷேசமானது.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இறைவனை வழிபட்ட அடியார்கள் பலரும், தாங்கள் அடைந்த பரவசத்தையும், அனுபவத்தையும் பாடல்களாக பாடினர். அப்படிப் பாடிய அடியாளர்களில் சமயக் குரவர்களாக போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலமே திருப்பாதிரிபுலியூர் பெரியநாயகி சமேத பாடலேஸ்வரர் திருக்கோவில்.
பாதிரி மர வனமாக இருந்த பகுதியில் பூத்து குலுங்கிய பலவகை பூக்களை, இறைவழிபாட்டிற்காக பறிக்க விரும் பினார் வியாக்ரபாதர். மரங்களில் ஏறி பூக்களைப் பறிப்பதற்காக இறைவனிடம் வேண்டி புலிக்கால்களைப் பெற்றார். இதனால் இவர் ‘புலிக்கால் முனிவர்’ என்றும் அழைக்கப்பட்டார். ஊரின் பெயரும் புலியூர் ஆனது. சிதம்பரத்திற்கு ஏற்கனவே ‘பெரும்பற்ற புலியூர்’ என்ற பெயர் இருந்ததால், பாதிரி மரங்கள் நிறைந்த இந்த ஊர் ‘திருப்பாதிரிபுலியூர்’ என்றானது. இந்த ஊர் தற்போது கடலூர் நகரின் ஒரு பகுதியாக உள்ளது.
இத்தலத்தில் உள்ள இறைவனின் பெயர் பாடலேஸ்வரர். இவர் கன்னிவனநாதர், தோன்றா துணையுடைய நாதர், கடைஞாழலுடைய பெருமான், சிவகொழுந்தீசர், உத்தாரேண்யேஸ்வரர், பாடலநாதர், கரையேற்றும்பிரான் என்ற பெயர்களாலும், இறைவி பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவ நாயகி, பிரஹன்நாயகி என்ற பெயர்களாலும் அழைக்கப்படு கிறார். தலவிருட்சம் பன்னிரண்டு வகையான பூக்களை பூக்கும் பாதிரி மரமாகும். இத்தலத்தில் சிவகரை, பிரம்மதீர்த்தம் (கடல்), சிவகரதீர்த்தம் (குளம்), பாலோடை, கடிலநதி மற்றும் தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் உள்ளன.
தல வரலாறு :
உலகத்து உயிர்கள் நலம் பெறுவதற்காக, பரமன் அவ்வப்போது பல திருவிளையாடல்களை நிகழ்த்துவதுண்டு. அதில் ஒன்றுதான் பார்வதியுடன் சேர்ந்து இறைவன் சொக்கட்டான் என்னும் பகடைக் காய் விளையாடியது. விளையாடுவதற்காக அன்னையின் தோழிகள் மாணிக்கக் கல், மரகதப் பலகை, வைரத்தாலான பகடை கருவிகள் தந்து பகடையாடச் செய்தனர். ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அம்பிகையே வெற்றி பெற்றார். ஆனால் ஈசனோ, தான் வெற்றி பெற்றதாகக் கூறினார்.
அருகில் இருந்து ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த திருமால், உண்மையை கூறினால் மற்றொருவரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் எனக்கருதி ஆட்டத்தைக் கவனிக்கவில்லை எனக் கூறிவிட்டார்.
இறைவிக்கு கோபம் எழுந்தது. ‘இறைவன் திருக்கண்களை மறைப்பேன். அதைத்தாண்டி ஒளி தந்தால் இறைவன் வெற்றி பெற்றதாகவும், ஒளி தராவிட்டால் நான் வெற்றி பெற்றதாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி இறைவனின் கண்களை மூடினார். அடுத்த நொடி அண்டசராசரங்களும் இருளில் மூழ்கின. அனைத்து இயக்கங்களும் செயல்களும் நின்று போயின. உயிர்கள் ஓலமிட்டன. ஒரு கணமே நீடித்த இந்த நிகழ்வு, தேவர்களுக்கும் முனிவர்களுக்கு பல யுகங்களாக நீடித்தது.
பதறிப்போன இறைவி, சிவனின் கண்களில் இருந்து கரத்தை எடுத்துவிட்டு தன் செயலால் ஏற்பட்டுவிட்ட விபரீதத்திற்கு மனம் வருந்தினாள். தன்னை மன்னித்து அருளும்படி ஈசனிடம் வேண்டினாள்.
இறைவனோ, ‘நீ பூலோகம் சென்று அங்குள்ள 1008 சிவ தலங்களை தரிசித்து வா. அப்படி நீ தரிசிக்கும் போது, எந்த தலத்தில் உனது இடது கண்ணும், இடது தோளும் துடிக்கின்றதோ அந்த தலத்தில் உன்னை நான் ஆட்கொள்வேன்’ என்று அருளினார்.
அதன்படி பார்வதிதேவி ஒவ்வொரு சிவாலயமாக தரிசித்தபடி வந்தாள். ஒரு கட்டமாக பாதிரி வனமாக திகழ்ந்த இந்தத் தலத்திற்கு வந்து இறைவனை தரிசித்தபோது, அன்னையின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. அந்த தலத்தில் அன்னை தவம் இயற்றினாள். அரூபமாக இருந்து இறைவனை பூஜித்து வந்தாள். இறைவியின் பூஜைக்கு சப்தமாதர்கள் உதவி புரிந்தனர்.
பாடலேஸ்வரர் ஆலயத்தில் மூலவரின் கருவறையைச் சுற்றி வரும்போது கஜலட்சுமி சன்னிதி காணப்படும். அதை யடுத்து துர்க்கை கோஷ்டமூர்த்தம் உள்ள இடத்தில் அம்பிகை அரூப வடிவில் தவம் செய்த இடம் தனிச்சன்னிதியாக இருக்கிறது. இது அருந்தவநாயகி சன்னிதி என்று அழைக்கப்படுகிறது. இறைவியின் அரூப நிலையை உணர்த்தும் பொருட்டு இந்த சன்னிதியில் உருவம் ஏதும் இல்லை. பீடம் மட்டுமே உள்ளது.
இறைவி தவம் செய்து தன் மணாளனை கரம் பற்றிய தலம் என்பதால், பிரிந்த தம்பதியினர் இத்தலம் வந்து வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமை சிவகர தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்குவோர் நினைத்தது கைவரப்பெறுவர். செவ்வாய்க்கிழமைகளில் 108 தாமரை மலர் கொண்டு, 108 திருவிளக்கிட்டு அம்பிகையை வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்கு பக்கத்தில் சிவகர தீர்த்தம் உள்ளது. முன் மண்டபமும் அதையடுத்து ஏழு நிலை ராஜகோபுரமும் இருக்கிறது. கோபுரத்தில் ஏராளமான சுதை சிற்பங்கள் உள்ளன. வாசலைக் கடந்து உள்ளேச் சென்றால் உயரத்தில் பலிபீடம், செப்புக் கவசமிட்ட கொடிமரம், மற்றும் நந்தியம்பெருமானை தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் சன்னிதிகள் ஏதுமில்லை. வெளிப்பிரகார வலம் முடித்து துவார விநாயகர், துவார சுப்பிரமணியர் ஆகியோரை வணங்கி, இரண்டாவது வாசலைக் கடந்து இடப்புறமாகத் திரும்பினால் உள் சுற்றில் சந்திரனும், திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தமும், மூல மூர்த்தமும் தனித்தனி சன்னிதிகளாக உள்ளன. திருநாவுக்கரசரை உட்கார்ந்த நிலையில் இவ்வாலயத்தில் மட்டுமே காண முடியும்.
உட்பிரகாரம் சுற்றி வரும்போது அறுபத்துமூவர் சன்னிதியை தரிசிக்கலாம். அடுத்து தல விநாயகரான கன்னி விநாயகர் அருள்கிறார். அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் காட்சி தருகிறார். உள் சுற்றில் உற்சவத் திருமேனிகளின் சன்னிதி, வியாக்ரபாதர், அகத்தியர் முதலியோர் பூஜித்த லிங்கங்கள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னிதி, வள்ளி- தெய்வானை சமேத ஆறுமுகர் சன்னிதிகள் இருக்கின்றன. துவாரபாலகரைத் தொழுது உள்ளே சென்றால் பாடலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சன்னிதிக்கு அருகில் இருக்கும். இறைவன் இறைவியின் சன்னிதிக்குச் செல்வது நடைமுறை. பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. ஆனால் பள்ளியறை இறைவனின் திருச்சன்னிதியில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இறையருள் பெற்ற மாணிக்கவாசகர் :
உலக உயிர்கள் நலம் பெறுவதற்காக, இத்தல இறைவன் பதினாறு வயதினராய் சித்தர் வடிவில் இங்கு வந்தார். இத்தல ஆலயத்தில் உள்ள சிவகரை தீர்த்தம், சித்தராக உருக்கொண்டு வந்த ஈசன் கை வைத்ததால் உருவானது என்று கூறப்படுகிறது. இதில் கங்கையின் ஒரு பகுதி கலந்துள்ளதாக ஐதீகம். ஈசான்ய மூலையில் இந்த தீர்த்தம் இருப்பதால், இந்த தீர்த்தத்துக்கு சக்தி அதிகம். சித்தர் வடிவில் வந்த சிவனின் திருவடிகளில் வேதங்களும் ஆகமங்களுமே பாதுகைகளாக விளங்கின. இவரைப்பார்த்த குருடர்கள் கண் பெற்றனர். செவிடர்கள் கேட்கும் திறன் பெற்றனர். ஊமைகள் பேசும் திறன் பெற்றனர். தீரா நோயுடையோர் நலம் அடைந்தனர்.
மாணிக்கவாசகர் திருப்பாதிரிபுலியூர் பெருமானை தரிசிக்கச் சென்றார். அப்போது கெடிலநதியில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. இதனால் அங்கேயே மூன்று நாட்கள் காத்திருந்தார். வெள்ளம் வடியவில்லை. தன் நிலையைக் கூறி பெருமானை வழிபட, சித்தராகத் தோன்றிய சிவன், மாணிக்கவாசகரை நீர்மேல் நடந்துவருமாறு பணித்தார். ஆனால் பயத்தால் மாணிக்கவாசகர் அப்படியே நின்றார். உடனே சிவன், மாணிக்கவாசகரை கண்களை மூடும்படி கூறிவிட்டு, பிரம்பு ஒன்றை ஏவி பாடலவனத்தில் வராமல் அந்த நதியை திசை திருப்பி ஓடச் செய்தார். கண் விழித்த மாணிக்கவாசகர், இறைவனின் கருணையை நினைத்த படியே திருத்தலம் வந்து வழிபட்டார்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கடலூர் ரெயில் நிலையத்தின் அருகில் திருப்பாதிரிபுலியூர் பாடலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அனைத்து ஊர்களில் இருந்தும் கடலூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊரில் உள்ளது சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆதி கயிலாயத்தில் கொலுவிருக்கும் சிவபெருமான், தினமும் உலக மக்களுக்கு படி அளக்கிறார். ஈசன் படி அளப்பதன் மீது சந்தேகம் கொண்ட பார்வதி, அவரை சோதனை செய்ய எண்ணினாள். அதற்காக ஒரு எறும்பை பிடித்து சிமில் கூண்டிற்குள் அடைத்தாள். சிவபெருமான் படி அளந்துவிட்டு வந்ததும், அவரிடம் ‘நீங்கள்ல்லா உயிர்களுக்கும் பட்டினி இல்லாமல் படி அளந்து விட்டீர்களா?’ என்று கேட்டாள் பார்வதி.
அதற்கு சிவபெருமான் ‘ஆமாம்’ என்று கூறினார். அப்போது பார்வதி, சிமில் கூண்டிற்குள் அடைத்து வைத்து இருந்த எறும்பை பார்த்தார். அந்த எறும்பு ஒரு திணை அரிசியை தனது வாயில் கவ்விக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி வந்தது. உடனே பார்வதி, சிவபெருமானிடம் ‘சுவாமி! நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்று வேண்டினாள்.
சிவபெருமானும் தவறை மன்னிப்பதாக கூறினார். அப்போது பார்வதி தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் ‘கயிலாயத்தில் உள்ள 32-வது தூணில், நீ சேலையின் முந்தானையை ஏந்தி தவம் செய்தால் உனக்கு குழந்தை கிடைக்கும்’ என்றார்.
பார்வதியும் அவ்வாறே செய்தார். அந்த தவத்தின் மூலம் அவருக்கு ஆண் குழந்தை கிடைத்தது. அந்த குழந்தைக்கு ‘சுடலைமாடன்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள் பார்வதி. சுடலை மாடன் சைவ கயிலாயத்தில் மாமிசத்தை கலந்தார். உடனே சிவபெருமான், சுடலைமாடனை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் என்றும், பூலோகத்திற்கு வந்த சுடலைமாட சுவாமி பக்தர்களை காக்கும் காவல் தெய்வமாக வலம் வருகிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சீவலப்பேரி கோவில் :
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊர். இங்கு தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகிய 3 நதிகளும் இணைகின்ற திருவேணி சங்கமம் என்ற இடம் உள்ளது. இதை ‘முக்கூடல்’ என்றும் அழைத்து வந்தனர். ஒரு முறை வறட்சியான காலத்தில் மாசானக்கோனார் என்ற 12 வயது சிறுவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு சுடலைமாட சுவாமி சன்னியாசி வேடத்தில் வந்து சிறுவனிடம், தனக்கு பசியாக உள்ளது, தனது பசியை தீர்க்க ஒரு ஆட்டை காட்டி அதில் பால் கறந்து தரவேண்டும் என்று கேட்டார்.
உடனே சிறுவன் ‘அது ஒரு மலட்டு ஆடு’ என்றான். இருந்தாலும் சன்னியாசி தன்னிடம் இருந்த திருவோட்டை கொடுத்து, அதில் ஆட்டுப் பால் கறந்து தரக் கூறினார்.
சன்னியாசி சொல்வதைத் தட்ட மனமில்லாத சிறுவன், மலட்டு ஆடு மடுவின் கீழ் திருவோட்டை வைத்தான். மடுவில் இருந்து தானாக பால் சுரக்க ஆரம்பித்தது. பாலை அருந்தி விட்டு சுவாமி தன் தோற்றமான சுடலை வடிவில் காட்சி அளித்தார். இதைக் கண்டு சிறுவன், சுவாமியை வணங்கினான். சுவாமி சிறுவனிடம் ‘நீ என்னை கோவில் கட்டி வழிபடு. நான் உன் வம்சத்தையும், ஊர்மக்களையும் காத்து அருள்கிறேன்’ என்று கூறினார்.
அதற்கு அந்தச் சிறுவன் ‘நான் உன்னை கோவில் வைத்து வழிபட்டால், எனக்கு ஒரு வரம் தரவேண்டும்’ என்று கேட்டான். சுடலைமாடனும் ஒப்புக்கொண்டார்.
‘பிறக்கும் பிள்ளைக்கும்.. கறக்கும் கன்றுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் மண்டையில் பத்து பூசாமல் பாதுகாத்து கொடுக்கவேண்டும்’ என்றான். வரம் அளித்ததற்கு அடையாளமாக மாசானக்கோனாரின் நாக்கில் ‘அ’ என்ற அச்சாரத்தை சுடலைமாடசாமி எழுதினார்.

24 வயது இளைஞனாக மாசானக்கோனார் தனது ஊரான சீவலப்பேரிக்கு நீள சடைமுடியுடன் வந்தார். இதை கண்ட ஊர்மக்கள் அவரை ‘சன்னியாசி’ என்று அழைத்தனர். அன்று முதல் மாசானக்கோனார் என்ற அவருடைய பெயர் மருவி ‘வாலகுரு சன்னியாசி’ என்று விளங்கியது.
முக்கூடலில் சுடலைமாடசாமி காட்சி அளித்த இடத்திற்கு வாலகுரு சன்னியாசி வந்தார். அந்த இடத்தில் சுடலைமாடசாமி, சுயம்புலிங்க சொரூபமாக காட்சி அளித்தார். அந்த இடத்தில் கோவில் கட்டி அதற்கு உரிய பூஜைகளை முறையாக செய்து வணங்கி வழிபட்டு வந்தார். இது 600 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது. இன்னும் அந்த சுயம்பு லிங்கம், சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி சிலை உள்ள பீடத்திற்கு கீழ் இருக்கிறது. சுடலைமாடசாமிக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்ய சத்திவாக்கு பெற்ற வாலகுரு சன்னியாசிக்கும் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சுடலைமாட சுவாமி எதிரே ஒரே கல்லில் புதிய சுவாமி சிலையும், முண்டசுவாமி சிலையும் உள்ளது. புதிய சுவாமி மேற்கு நோக்கியும், முண்டசுவாமி கிழக்கு நோக்கியும் உள்ளனர். முண்டசுவாமி முன்பாக ஆடு, கோழி, பன்றி பலியிடக்கூடிய இடம் உள்ளது. இதில் கோவில் கொடைவிழா நடைபெறும் சித்திரை மாதம் 1-ந்தேதி ஏராளமான ஆடு, கோழி, பன்றிகள் பலியிடப்படும். தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சுடலைமாட சுவாமி கோவில்கள், இந்த கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து சென்று கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவிலின் சிறப்பு :
இந்தக் கோவிலில் சுடலைமாட சுவாமி, நான்கு கைகளுடன் காட்சி அளிக்கிறார். வலது கையில் சங்குடனும், இடதுகையில் அக்னியுடனும் அருள்கிறார். இதன் விளக்கம் சங்கு - ஆற்றல் சக்தி வாய்ந்தது. அக்னி - அழித்தல் சக்தி வாய்ந்தது. இந்த இரண்டும் கயிலாயத்தில் சிவபெருமான் சுடலைமாடசாமிக்கு கொடுத்த வரமாகும்.
இந்தக் கோவில் தோன்றிய நாளில் இருந்து இதுவரை இருவேளை ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி இந்த கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்தக் கோவிலில் வழங்கப்படும் விபூதி, மயானக்கரை பகுதியான கழுவன்திறடு என்ற இடத்தில் இயற்கையாகவே உற்பத்தியாகிறது. அங்கிருந்து அந்த மண்ணை எடுத்து வந்து பக்தர்களுக்கு விபூதியாக வழங்குகின்றனர். அந்த மண் விபூதி அந்த இடத்தில் அள்ள அள்ள குறையாமல் விளைந்து கொண்டே இருக்கிறது.
இந்த கோவிலில் செய்யப்படுகின்ற சத்தியபிரமாணம் சிறப்பு மிக்கதாகும். சீவலப்பேரி சுடலை மீது சத்தியம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள். பொய்சத்தியம் செய்தால் சுடலைமாட சுவாமி அவர்களை தண்டித்து விடுவார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் கொடைவிழாவில் நையாண்டி மேளம், வில்லிசை, கணியான்கூத்து ஆகியவை முக்கியபங்கு வகிக்கும். கணியான் தனது கையை கத்தியால் வெட்டி சுவாமிக்கு ரத்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி சுடுகாட்டிற்கு சென்று பிணத்தை உண்ணும் நிகழ்ச்சியும், சோற்றில் ஆடு, பன்றி ரத்தத்தை கலந்து வானத்தை நோக்கி விசுகின்ற திரளை பலி என்ற நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கோவில் இல்லாத ஊரே கிடையாது.
சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதற்கு சிவபெருமான் ‘ஆமாம்’ என்று கூறினார். அப்போது பார்வதி, சிமில் கூண்டிற்குள் அடைத்து வைத்து இருந்த எறும்பை பார்த்தார். அந்த எறும்பு ஒரு திணை அரிசியை தனது வாயில் கவ்விக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி வந்தது. உடனே பார்வதி, சிவபெருமானிடம் ‘சுவாமி! நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்று வேண்டினாள்.
சிவபெருமானும் தவறை மன்னிப்பதாக கூறினார். அப்போது பார்வதி தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கேட்டாள். உடனே சிவபெருமான் ‘கயிலாயத்தில் உள்ள 32-வது தூணில், நீ சேலையின் முந்தானையை ஏந்தி தவம் செய்தால் உனக்கு குழந்தை கிடைக்கும்’ என்றார்.
பார்வதியும் அவ்வாறே செய்தார். அந்த தவத்தின் மூலம் அவருக்கு ஆண் குழந்தை கிடைத்தது. அந்த குழந்தைக்கு ‘சுடலைமாடன்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள் பார்வதி. சுடலை மாடன் சைவ கயிலாயத்தில் மாமிசத்தை கலந்தார். உடனே சிவபெருமான், சுடலைமாடனை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார் என்றும், பூலோகத்திற்கு வந்த சுடலைமாட சுவாமி பக்தர்களை காக்கும் காவல் தெய்வமாக வலம் வருகிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சீவலப்பேரி கோவில் :
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊர். இங்கு தாமிரபரணி, சித்ரா நதி, கோதண்டராம நதி ஆகிய 3 நதிகளும் இணைகின்ற திருவேணி சங்கமம் என்ற இடம் உள்ளது. இதை ‘முக்கூடல்’ என்றும் அழைத்து வந்தனர். ஒரு முறை வறட்சியான காலத்தில் மாசானக்கோனார் என்ற 12 வயது சிறுவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான். அப்போது அங்கு சுடலைமாட சுவாமி சன்னியாசி வேடத்தில் வந்து சிறுவனிடம், தனக்கு பசியாக உள்ளது, தனது பசியை தீர்க்க ஒரு ஆட்டை காட்டி அதில் பால் கறந்து தரவேண்டும் என்று கேட்டார்.
உடனே சிறுவன் ‘அது ஒரு மலட்டு ஆடு’ என்றான். இருந்தாலும் சன்னியாசி தன்னிடம் இருந்த திருவோட்டை கொடுத்து, அதில் ஆட்டுப் பால் கறந்து தரக் கூறினார்.
அதற்கு அந்தச் சிறுவன் ‘நான் உன்னை கோவில் வைத்து வழிபட்டால், எனக்கு ஒரு வரம் தரவேண்டும்’ என்று கேட்டான். சுடலைமாடனும் ஒப்புக்கொண்டார்.
‘பிறக்கும் பிள்ளைக்கும்.. கறக்கும் கன்றுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் மண்டையில் பத்து பூசாமல் பாதுகாத்து கொடுக்கவேண்டும்’ என்றான். வரம் அளித்ததற்கு அடையாளமாக மாசானக்கோனாரின் நாக்கில் ‘அ’ என்ற அச்சாரத்தை சுடலைமாடசாமி எழுதினார்.
அதன்பின் சிறுவன் முறையான வழிபாட்டு முறைகளை கற்பதற்காக, சுந்தரமகாலிங்க சுவாமி அருளும் சதுரகிரி மலைக்கு சென்றான். அங்கு கோரக்க சித்தரின் சீடரான சுந்தரமூர்த்தி முனிவருக்கு சேவை செய்து சீடராக பணியாற்றினான். 12 ஆண்டுகள் தான் செய்த தவத்தை முடித்து காசிக்கு அந்த முனிவர் செல்லும்போது மாசானக்கோனாரிடம், ‘நீ உன் இடத்திற்குச் சென்று, உன் இறைவன் சுடலைக்கு பூஜை செய்வாயாக’ என்று கூறினார். மேலும் மாசானக்கோனாருக்கு ‘வாலகுரு’ என்ற பெயரையும் சூட்டினார்.

பேச்சியம்மன், பிரம்ம சக்தி, சுடலைமாட சுவாமி
முக்கூடலில் சுடலைமாடசாமி காட்சி அளித்த இடத்திற்கு வாலகுரு சன்னியாசி வந்தார். அந்த இடத்தில் சுடலைமாடசாமி, சுயம்புலிங்க சொரூபமாக காட்சி அளித்தார். அந்த இடத்தில் கோவில் கட்டி அதற்கு உரிய பூஜைகளை முறையாக செய்து வணங்கி வழிபட்டு வந்தார். இது 600 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது. இன்னும் அந்த சுயம்பு லிங்கம், சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், பிரம்மசக்தி சிலை உள்ள பீடத்திற்கு கீழ் இருக்கிறது. சுடலைமாடசாமிக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்ய சத்திவாக்கு பெற்ற வாலகுரு சன்னியாசிக்கும் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சுடலைமாட சுவாமி எதிரே ஒரே கல்லில் புதிய சுவாமி சிலையும், முண்டசுவாமி சிலையும் உள்ளது. புதிய சுவாமி மேற்கு நோக்கியும், முண்டசுவாமி கிழக்கு நோக்கியும் உள்ளனர். முண்டசுவாமி முன்பாக ஆடு, கோழி, பன்றி பலியிடக்கூடிய இடம் உள்ளது. இதில் கோவில் கொடைவிழா நடைபெறும் சித்திரை மாதம் 1-ந்தேதி ஏராளமான ஆடு, கோழி, பன்றிகள் பலியிடப்படும். தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான சுடலைமாட சுவாமி கோவில்கள், இந்த கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து சென்று கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கோவிலின் சிறப்பு :
இந்தக் கோவிலில் சுடலைமாட சுவாமி, நான்கு கைகளுடன் காட்சி அளிக்கிறார். வலது கையில் சங்குடனும், இடதுகையில் அக்னியுடனும் அருள்கிறார். இதன் விளக்கம் சங்கு - ஆற்றல் சக்தி வாய்ந்தது. அக்னி - அழித்தல் சக்தி வாய்ந்தது. இந்த இரண்டும் கயிலாயத்தில் சிவபெருமான் சுடலைமாடசாமிக்கு கொடுத்த வரமாகும்.
இந்தக் கோவில் தோன்றிய நாளில் இருந்து இதுவரை இருவேளை ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி இந்த கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்தக் கோவிலில் வழங்கப்படும் விபூதி, மயானக்கரை பகுதியான கழுவன்திறடு என்ற இடத்தில் இயற்கையாகவே உற்பத்தியாகிறது. அங்கிருந்து அந்த மண்ணை எடுத்து வந்து பக்தர்களுக்கு விபூதியாக வழங்குகின்றனர். அந்த மண் விபூதி அந்த இடத்தில் அள்ள அள்ள குறையாமல் விளைந்து கொண்டே இருக்கிறது.
இந்த கோவிலில் செய்யப்படுகின்ற சத்தியபிரமாணம் சிறப்பு மிக்கதாகும். சீவலப்பேரி சுடலை மீது சத்தியம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள். பொய்சத்தியம் செய்தால் சுடலைமாட சுவாமி அவர்களை தண்டித்து விடுவார் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் கொடைவிழாவில் நையாண்டி மேளம், வில்லிசை, கணியான்கூத்து ஆகியவை முக்கியபங்கு வகிக்கும். கணியான் தனது கையை கத்தியால் வெட்டி சுவாமிக்கு ரத்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி சுடுகாட்டிற்கு சென்று பிணத்தை உண்ணும் நிகழ்ச்சியும், சோற்றில் ஆடு, பன்றி ரத்தத்தை கலந்து வானத்தை நோக்கி விசுகின்ற திரளை பலி என்ற நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கோவில் இல்லாத ஊரே கிடையாது.
சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்வதற்கு திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
‘குழல்இனிது யாழ்இனிது என்பர் தம்மக்கள் மழலை சொல் கேளாதவர்' என்பது வள்ளுவன் வாக்கு. அதாவது குழலின் இசையும், யாழின் இசையும் இனிது என்பவர்கள், அவர்தம் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவர்களே என்கிறார் திருவள்ளுவர். குழந்தை பாக்கியம் இல்லாமை என்பது தசரதர் காலத்திலேயே இருந்திருக்கிறது. தன்னுடைய குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி, தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணம் கூறுகிறது.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் மற்றும் புத்திர ஸ்தானத்தைக் குறிப்பதாகும். குழந்தைகளின் எதிர்காலம், தந்தை செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த புண்ணியம், முன்னோர்கள் செய்த பாவம், கல்வி, புத்திக்கூர்மை, சாஸ்திர ஞானம் முதலியவற்றையும் இந்த ஐந்தாம் இடத்தின் மூலமாகவே அறிந்துவிட முடியும்.
மனிதன் தன்னுடைய கர்ம வினைகளின் காரணமாகவே பிறக்கிறான். கர்மா தீர, புத்திரன் வேண்டும் என்று திருமணம் செய்துகொள்கிறான். நாம் முற்பிறப்பில் சேர்த்து வைத்த புண்ணியம் தான் குழந்தையாகப் பிறக்கும் என்பார்கள். தன் தகப்பனின் ஆத்மாவை ‘புத்’ எனும் நரகத்தில் இருந்து காப்பாற்றுபவன் என்பதால் ‘புத்திரன்’ என்கிறார்கள்.
அபிராமி பட்டர் பதினாறு வகைப் பேறுகளை திருக்கடையூர் அபிராமி அன்னையிடம் வேண்டும்போது, ‘தவறாத சந்தானம் வேண்டும்’ என்று கேட்கிறார். அதாவது மற்றப் பேறுகள் எல்லாம் தவறினாலும் பாதகமில்லை; குழந்தைப் பாக்கியம் எனும் சந்தானப் பிராப்தி தவறாமல் கிடைக்க அருள்செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.
குழந்தை இல்லாதவருக்கு இரண்டு வகையான தோஷம் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அவை சயன தோஷம், புத்திர தோஷம் என்பனவாகும். இந்த தோஷங்கள் இருப்பவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உடனடியாக கிடைப்பதில்லை. கரு உருவாதல், உருவான கரு நிலையாக இல்லாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்.
இப்படிப்பட்ட சகல தோஷங்களுக்கும் சிறப்புமிகு பரிகார தலமாக இருப்பது தொட்டமளூர் நவநீத கிருஷ்ணன் திருக்கோவில். இங்கு கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணரின் திருஅவதார திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கண்ணன் தவழ்ந்து வரும் அழகைக் காண, அவனைப் பெற்ற தேவகிக்குக் கூட கொடுத்து வைக்கவில்லை. காரணம்.. அவள் சிறையில் இருந்தாள். நள்ளிரவில் சிறையில் கண்ணன் பிறக்க, அங்கிருந்து அன்றே ஆயர்பாடியின் யசோதையிடம் இடம் பெயர்ந்து வளர்க்கப்பட்டான். அதனால்தான் சிறுவயதில் கண்ணன் தவழும் திருக்கோலத்தை யசோதையும், அங்கிருந்த ஆயர்பாடி மக்களுமே கண்டு தரிசித்து நற்பேறு பெறும் பாக்கியம் பெற்றனர்.
ஆயர்பாடியில் கண்ணன் சிறுகுழந்தை வடிவில் தவழும் அதே திருக்கோலத்தில் தொட்டமளூர் திருத்தலத்தில் தவழ்கிறான் கண்ணன். நான்காம் நூற்றாண்டில் ராஜேந்திர சிம்ம சோழன் எனும் மன்னன் இந்தக் கோவிலைக் கட்டி உள்ளார். ராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டுகளும் இங்கு காணப் படுகின்றன. ராமானுஜர், ராகவேந்திரர், வியாசராஜரும் இங்கு வழிபட்டுள்ளனர்.
கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால், மூலவர் தரிசனத்தைக் காணலாம். இங்கு மூலவராக மூன்றடி உயரத்தில் சாளக்கிராமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட ராமஅப்ரமேயர் எழுந்தருளி உள்ளார். இந்தப் பெருமாளை ராமர் வழிபாடு செய்துள்ளாராம். அதனால் தான் ‘ராம அப்ர மேயர்’ என்று பெயர். ‘அப்ரமேயன்' என்ற சொல்லுக்கு ‘எல்லையில்லாதவன்' என்று பொருள்.
ஆலயத்தின் தென்மேற்கில் தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம் அரவிந்தவல்லித் தாயார் அருள்பாலிக் கிறார். ஆலயத்தின் வடமேற்கில் உள்ள விஷ்ணு தீர்த்தத்குளத்தில் சுயம்புவாய் தோன்றியவர் இத்தல தாயார் என்கிறார்கள். இவரை வெள்ளிக் கிழமை தோறும் செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. நவராத்திரி, வரலட்சுமி விரதம் முதலிய நாட்களில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அரவிந்தவல்லித் தாயாரை வில்வார்ச்சனை செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் தரித்திரம், பீடை, வறுமை அகலும்.
அடுத்து பிரகார வலம் வருகையில் வடமேற்கில் கிழக்குப் பார்த்தவண்ணம் கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு குழந்தை கிருஷ்ணன் தலையை திருப்பி, தவழும் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். சுருட்டைத் தலை முடி, கழுத்தில் முத்துமாலை, அதில் புலிநகம், மாங்காய் கம்மல், வளையல், மோதிரம், இடுப்பில் அரைஞாண் கயிறு, கால்களில் கொலுசு அணிந்து, திருப்பாதங்களில் சங்கு, சக்கர ரேகைகளுடன் கருடபீடத்தில் இந்த நவநீத கிருஷ்ணன் அருள்கிறார்.
சாளக்கிராமக் கல்லில் உருவான இத்தல நவநீத கிருஷ்ணனை, மகான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்துள்ளார். ராகவேந்திரர் இங்கு வந்து தங்கி வழிபாடுகள் செய்துள்ளாராம். மகான் புரந்தரதாசர் தொட்டமளூர் தவழும் குழந்தை கண்ணனை தரிசிக்க வந்தபோது, கோவில் மூடப்பட்டிருந்தது. அதனால் அவர் வெளியில் இருந்தபடியே ‘ஜகத்தோதாரணா அடிசிதள யசோதா' என்னும் கீர்த்தனையைப் பாடினார். ஆச்சரியம்.. கோவில் கதவு திறந்து கொண்டது. அப்போது நவநீத கிருஷ்ணன் சன்னிதியில் உள்ள கண்ணன், உள்ளிருந்து தமது தலையை திருப்பி புரந்தரதாசரை எட்டிப்பார்த்தான். அதனால்தான் இன்றும் இத் திருத்தல தவழும் கண்ணன் சன்னிதியில் கண்ணன் தவழும் நிலையில் தலையை திருப்பி பார்த்தவண்ணம் உள்ளாராம்.
நவநீத கிருஷ்ணன் சன்னிதி வாசல் அருகில் துலாபாரம் அமைக்கப்பட்டு உள்ளது. புத்திர பாக்கியத் தடை உள்ளவர்கள், இங்கு வந்து நவநீத கிருஷ்ணனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து வேண்டி வழிபடுகிறார்கள். புத்திர பாக்கியம் கிட்டியதும் மீண்டும் இங்கு வந்து குழந்தையின் எடைக்கு எடை வெல்லம் துலாபாரம் செலுத்தி வழிபடுகிறார்கள். தங்கம், வெள்ளி, மரத்தினால் ஆன தொட்டில்களையும் கண்ணன் சன்னிதியில் நன்றியுடன் சமர்ப்பித்து மகிழ்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் கோகுலாஷ்டமி, ராம நவமி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசியில் விழாக்களும், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், தீபாவளி, சங்கராந்தி, மாதாந்திர ரோகிணி நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகளும், திருமஞ்சனமும் நடைபெறுகிறது. இன்றும் அர்த்தஜாமத்தில் இங்கு கபில மகரிஷியும், கண்வ மகரிஷியும் வழிபாடு நடத்துவதாக நம்பப்படுகிறது.
அமைவிடம் :
பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சென்னப்பட்டினா என்னும் ஊர். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தொட்டமளூர் அமைந்து உள்ளது.