என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பெண்கள் விரும்பிய வாழ்க்கை துணை கிடைக்க சில தெய்வங்களை விரதம் இருந்து வழிபட வேண்டும். இவர்களை விரதம் இருந்து வழிபாடு செய்தால் அன்பான, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவது உறுதி.
    இந்த உலகத்தின் கண்கள் நான்கு வயதாகி, ஒருவரை காதலிக்கும்போது, ​​எதுவும் சொல்ல முடியாது. நேசிப்பது எளிது, ஆனால் அதை அடைவது சமமாக கடினம். இந்த விஷயத்தில், உங்கள் கிரக விண்மீன்களுக்கும் ஒரு பெரிய பங்களிப்பு உள்ளது. ஆனால் அவர்கள் விரும்பிய அன்பால் மகிழ்ச்சியாகக் காணக்கூடிய சில தெய்வங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வணங்கும் அதே கடவுள்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். அவர்களின் ஆசீர்வாதம் பெற்று நீங்கள் விரும்பிய அன்பைப் பெறுவோம். எனவே அந்த கடவுள்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    மன்மதன்

    காமா என்றால் காதல், ஆசை, ஆசை மற்றும் பாலியல். தேவ் என்றால் தெய்வீக அல்லது பரலோக. அதர்வ வேதத்தில், காமா ஆசைகளுக்காகவே தவிர பாலியல் இன்பத்திற்காக அல்ல என்று கூறப்படுகிறது. மன்மதன் பெரும்பாலும் கிரேக்க கடவுளான ஈரோஸுடன் ஒப்பிடப்படுகிறார். அவை சில சமயங்களில் மேற்கத்திய நாடுகளில் நிலவும் மன்மதனாகக் காட்டப்படுகின்றன. காமதேவா நம் ஆசைகள், அன்பு மற்றும் காமத்திற்கு காரணமான கடவுளாக கருதப்படுகிறார். இளம் மற்றும் அழகான மன்மதன் பிரம்மாவின் மகனாக கருதப்படுகிறார். அவர் மன்மதன் அல்லது காமா என்று அழைக்கப்படுகிறார்.

    பகவான் கிருஷ்ணர்

    கிருஷ்ணர் இந்து நம்பிக்கைகளுக்கு ஏற்ப ராசா மற்றும் காதல் கடவுள். அவர்கள் அன்பு மற்றும் ஆவிக்காக வணங்கப்படுகிறார்கள். பகவான் கிருஷ்ணரையும் ராதாவையும் வணங்கும் தம்பதியினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணா-ராதாவைப் போல ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள்.

    ரதி

    காதல் தேவி, ஹஸ்ரத், காமம் மற்றும் பாலியல் இன்பம். பிரஜாபதி தக்ஷாவின் மகள் என்று நம்பப்படுகிறது. அவள் காமதேவருக்கு உதவியாளர். பெண்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் ரதியை அன்பு மற்றும் உடல் தொடர்புக்காக வணங்குகிறார்கள்.

    சிவபெருமான்

    சிவன் பார்வதி பிரபஞ்சத்தின் மிகவும் அன்பான ஜோடி, இது அவரது முதல் காதல் திருமணமாகவும் கருதப்படுகிறது. ஒரு நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற பெண்கள் சிவனை வழிபடுகிறார்கள். இதற்காக சிவனை மகிழ்விக்க நாடு முழுவதும் ஒரு பாரம்பரியம் உள்ளது. மகாசிவராத்திரி மற்றும் திங்கட்கிழமைகளில், பெண்கள் விரும்பிய வாழ்க்கை துணையை கேட்கிறார்கள்.

    சந்திரன் மற்றும் சுக்கிரன்

    சந்திரன் என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரன் எப்போதும் அன்பின் அடையாளமாக இருந்து வருகிறது. அவருடன் அன்பின் எத்தனை உருவகங்கள் உருவாக்கப்பட்டன என்று தெரியவில்லை. எத்தனை கவிதைகள் எழுதப்பட்டன. இது பல காலமாக நடந்து வருகிறது. சந்திரனை வணங்குவது நீங்கள் விரும்பும் அதே அன்பைத் தருகிறது. மூலம், சந்திர தேவ் மற்றும் சுக்கிரன் மனதின் நுட்பமான உணர்வுகளின் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள்.

    வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும்.
    பெண் தெய்வ வழிபாட்டிற்கு பெருமை சேர்க்கும் மாதம், ஆடி மாதமாகும். கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாத வழிபாட்டில் கிடைக்கும் அற்புதப் பலன், வேறு எந்த மாதங்களுக்கும் கிடைப்பதில்லை. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடியாகும். கடகம் என்பது சந்திரனுக்கு சொந்த வீடு. மனதுகாரகன் சந்திரனுக்குரிய வீட்டில், ராஜகிரகமான சூரியன் சஞ்சரிக்கும் போது நாம் மனதில் எதை நினத்து வழிபடுகின்றோமோ அந்த வழிபாட்டால் வாழ்வில் வளம் கிடைக்கும். இதை நம் முன்னோர்கள் கண்டறிந்துதான் ஆடி மாதம் அம்பிகை வழிபாட்டிற்கென்று ஒதுக்கி இருக்கிறார்கள். ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபட்டால் கோடி கோடியாய் நற்பலன்கள் கிடைக்கும்.

    ‘ஆடிச் செவ்வாய் தேடிப்பிடி’, ‘ஆடிப்பட்டம் தேடி விதை’, ‘ஆடிப்பெருக்கு கோடியாய் பெருகும்’ என்பதெல்லாம் முன்னோர் வாக்கு. தமிழ் வருடத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ணிய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை அலங்கரித்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும்.

    ஆடி மாத செவ்வாய்க்கிழமை அன்று, செட்டி நாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் வழிபடும் அவ்வையார் பூஜை பிரசித்தி பெற்றது. ஒரு சந்திக் கொழுக்கட்டை நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வார்கள். இதன்மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்கு தொழில் மேன்மையும் அமையும் என்பது நம்பிக்கை.

    ஆடி வெள்ளிக்கிழமை அன்று குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுத்தால் நல்ல பலன்கள் வந்து சேரும். ஆடி அமாவாசை அன்று கடல் அல்லது நதியில் நீராடி முன்னோர் களுக்கு திதி கொடுத்தால், அவர்களுக்கு ஆசி கிடைக்கும். அதன்மூலம் இல்லத்தில் உள்ள தடைகள் அகன்று சுப காரியங்கள் முடிவடையும்.

    ஆடி வெள்ளியன்று லட்சுமியை வழிபட்டால் நாம் பண மழையில் நனையலாம். ஒரு மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் வளம் கொடுப்பவளை ‘லட்சுமி’ என்றும், ‘திருமகள்’ என்றும் வர்ணிக்கிறோம். எட்டு வகை லட்சுமியின் அருள் இருந்தால் நாம் திட்டமிட்டபடி வாழ்க்கை நடத்த இயலும். அப்படி வரம் தரும் லட்சுமியை ‘வரலட்சுமி’ என்று அழைத்து, விரதம் இருந்து வழிபட ஏற்ற நாள் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து கோலமிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்டி லட்சுமிக்குரிய தாமரைக் கோலமிட்டு ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம்.

    பூஜை அறையில் லட்சுமி படத்தைப் பலகையின் மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்துமுக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி, பஞ்சமுக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி, அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பிவைக்க வேண்டும். பூச்சூட்டிய குடம், மாவிலை, தேங்காய் போன்றவற்றை சேர்த்து வைக்க வேண்டும். சந்தனம், குங்குமம் பொட்டு குடத்திற்கு வைத்து தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இனிப்பு பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம், லட்சுமி வருகைப் பதிகம் பாடி வழிபாடு செய்தால் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    “அன்றாட வாழ்க்கையினில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் இன்றோடு விலக வேண்டும்” என்று சொன்னால் லட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைக்கும். அவளது அருள் இருந்தால் வறுமை விலகும், வளங்கள் குவியும். மறுமலர்ச்சியால் வாழ்க்கை மலரும்.

    அஷ்டலட்சுமி படத்தை இல்லத்தில் வைத்து லட்சுமிக்குரிய வருகைப் பதிகம் படித்தால், இமயத்தில் இருந்தாலும் சமயத்தில் கைகொடுத்து உதவுவாள். எல்லா தெய்வங்களுக்கும் போற்றிப் பதிகம் பாடலாம். ஆனால் லட்சுமியை வழிபடும்போது மட்டும் வருகைப் பதிகம் பாடி வழிபடுவதே நல்லது. லட்சுமி இல்லத்தில் அடியெடுத்து வைத்தால் நம்முடைய கலக்கம் அகலும். கவலை விலகும். அந்த அம்பிகையை ஆடிவெள்ளி தோறும் வழிபடுங்கள், வளமான வாழ்வு அமையும்.
    ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் வரும் பவுர்ணமி அன்று எந்த தெய்வத்தை விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    * சித்திரை மாத பவுர்ணமி எமதர்மனின் கணக்கரான சித்ரகுப்தன் அவதரித்த நாள். அது ‘சித்ரா பவுர்ணமி’ என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மோட்சம் கிடைக்கும்.

    * வைகாசி மாத பவுர்ணமி முருகப்பெருமான், ஆறுமுகங்களுடன் அவதரித்த நாள். இந்த நாளில்தான் ‘வைகாசி விசாகம்’ வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய தினம் விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும்.

    * ஆனி மாத பவுர்ணமியன்று, காரைக்கால் அம்மையாரின் மாங்கனித் திருவிழா நடத்தப்படும். இந்த நாளில் விரதம் இருந்தால் இறை தரிசனம் சித்திக்கும்.

    * ஆடி மாத பவுர்ணமி என்பது கஜேந்திர மோட்சம் நடைபெற்ற நாள். அம்மனை வழிபட உகந்த நாள். அன்றைய தினம் அம்மன் ஆலயத்தில் மாவிளக்கு வைப்பது மங்கள வாழ்வை தரும்.

    * ஆவணி மாத பவுர்ணமி அன்று விரதம் இருப்பது சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும்.

    * புரட்டாசி மாத பவுர்ணமியும் சிறப்புக்குரிய நாள்தான். அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்தால் அவர்களின் ஆசியைப் பெறலாம்.

    * ஐப்பசி மாத பவுர்ணமி அன்று அன்னாபிஷேக திருநாள். அன்றைய தினம் விரதம் இருந்தால் வறுமை அகலும்.

    * கார்த்திகை மாத பவுர்ணமியில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும்.

    * மார்கழி மாத பவுர்ணமியில் வருவது ஆருத்ரா தரிசனம். அன்றைய தினம் நடராஜனின் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.

    * தை மாத பவுர்ணமியில் தைப்பூசத் திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருள் கிடைக்கும்.

    * மாசி மாத பவுர்ணமியில்தான் மாசி மக திருநாள் வரும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் உலகத்தை ஆளும் வாய்ப்பு உண்டாகும்.

    * பங்குனி மாத பவுர்ணமியில்தான், பங்குனி உத்திரப் பெருவிழா நடத்தப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான், முருகன் - வள்ளி திருமணம், சிவ -பார்வதி திருமணம், சீதா- ராமர் திருமணம் என தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அன்றைய தினம் வழிபாடு செய்தால் வரன்கள் வாசல் தேடி வரும். இந்த நாளில் குலதெய்வ வழிபாடும் சிறப்புக்குரியது. இதனால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
    சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஒரு ஐந்து வகையான பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
    சிவபெருமானுக்கு உகந்த வழிபாடுகளில் பிரதோஷம், பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. அப்படிப்பட்ட பிரதோஷம் 20 வகையாக உள்ளன. அவற்றில் ஒரு ஐந்து வகையான பிரதோஷத்தைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கந்தப் பிரதோஷம்:- சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் ‘கந்தப் பிரதோஷம்’. இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

    சட்ஜ பிரபா பிரதோஷம்:- ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

    அஷ்டதிக் பிரதோஷம்:- ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்டதிக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

    நவக்கிரகப் பிரதோஷம்:- ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது ‘நவக்கிரகப் பிர தோஷம்’. இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அரு ளோடு நவக்கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

    துத்தப் பிரதோஷம்:- அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.
    பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
    மங்கலங்கள் நிறைந்த மாதம் என்று பங்குனி மாதத்தைப் போற்றுவார்கள். புராணத்தில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் பெரும்பாலும் அரங்கேறியிருக்கின்றன என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.

    மலைமகள் உமையவளை சிவபெருமான் மணம் புரிந்த மாதம் பங்குனி என்கிறது புராணம். இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் சிலாகிக்கிறார்கள்.

    பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்! சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி. அதேபோல் அரங்கனைப் போற்றுகின்ற மாதமாகவும் திகழ்கிறது பங்குனி மாதம். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    ‘இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?’ என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

    விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும் புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

    மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கினால், மகா புண்ணியம் என்றும் பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களையும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    அதேபோல், பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்! 
    சிவராத்திரியில் ஐந்து வகை இருக்கின்றன. அவை. நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரிகளைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
    சிவபெருமானை வழிபடும் முக்கியமான விரதங்களில் ஒன்று சிவராத்திரி. மாதந் தோறும் சிவராத்திரி வரும் என்றாலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே, ‘மகா சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி வரும். சதுர்த்தசி திதியானது, சிவபெருமானுக்கு உரியது. சிவராத்திரியில் ஐந்து வகை இருக்கின்றன. அவை. நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரிகளைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.

    நித்திய சிவராத்திரி:- ஒரு வடத்தில் வரும் 24 சிவராத்திரிகளும், அதாவது தேய்பிறை சதுர்த்தியில் 12 சிவராத்திரி, வளர்பிறை சதுர்த்தசியில் 12 சிவராத்திரி ஆகியவை ‘நித்திய சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகின்றன.

    யோக சிவராத்திரி:- திங்கட்கிழமையில் வரும் சிவராத்திரியை ‘யோக சிவராத்திரி’ என்று அழைப்பார்கள். இதிலும் நான்கு வகை உள்ளன. 1) திங்கட்கிழமை முழுமையில் அதாவது பகல் இரவு முழுமைக்கும் அமாவாசையாக இருக்கும். 2) திங்கட்கிழமை சூரிய அஸ்தமனம் முதல், 4 ஜாமமும் (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை) தேய்பிறை சதுர்த்தசி திதி இருக்கும். 3) திங்கட்கிழமை இரவின் நான்காம் ஜாமத்தில் (நள்ளிரவு 3 மணி முதல் காலை 6 மணி வரை) அரை நாழிகையாவது அமாவாசை இருப்பது. 4) திங்கட்கிழமை அன்று இரவு நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி அரை நாழிகையாவது இருப்பது என இவை அனைத்தும் ‘யோக சிவராத்திரி’யில்தான் வரும்.

    பட்ச சிவராத்திரி:- தை மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் தொடங்கி, 14-வது நாளான சதுர்த்தசி வரை கடைப்பிடிப்பது ‘பட்ச சிவராத்திரி’ ஆகும். பிரதமை முதல் 13 நாட்கள் வரை ஒரு வேளை மட்டும் உணவருந்தியும், 14-வது நாளான சதுர்த்தசியில் முழு வேளையும் உணவருந்தாமலும் உபவாசம் இருப்பது ‘பட்ச சிவராத்திரி’ எனப்படும்.

    மாத சிவராத்திரி:- மாதம் தோறும் அமாவாசை தினத்திற்கு முன்தினம் வரும், சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

    மகா சிவராத்திரி:- மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி அன்று வருவது ‘மகா சிவராத்திரி’ எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.

    இந்த ஐந்து வகை சிவராத்திரியில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்தாலே, பக்தர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும். ஐந்தையும் தவறாது கடைப்பிடித்து வருபவர்கள், சிவயோக பதவியை அடைவார்கள்.
    பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சிறந்த மதமாக இருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் போன்று இந்த பங்குனி மாதம் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக இருக்கிறது.
    பங்குனி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.

    இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

    இன்று இந்தப் பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு கூடியவரையில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறு உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.
    எந்தெந்த கிழமையில் வரும் சிவராத்திரிகளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திங்கள்: சோம்பேறியாகத் திரியும் பிறவி எடுக்க மாட்டார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள்.கோவில் கட்டக் கூடிய பாக்கியம் கிடைக்கும்;

    செவ்வாய்: அரசாங்க வேலை கிடைக்கும்;சட்டமன்ற உறுப்பினர்,பாராளுமன்ற உறுப்பினர்,மாநில அரசின் மந்திரி அல்லது மத்திய அரசின் மந்திரி பதவி கிடைக்கும்;(இப்பிறவியில் இப்பதவிகளில் இருப்பவர்கள் கடந்த ஐந்து பிறவிகளாக தொடர்ந்து இந்தக் கிழமையில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தவர்களே!!!)

    புதன்: திருமாலை பார்த்த பலன் கிட்டும்;அதாவது,திருமால் சங்கு சக்கரத்துடன் சாம கானம் ஓத, காட்சி அளித்து ஆசி கொடுப்பார்;

    வியாழன்: குரு கிட்டுவார்;குருவுடன் சேர்ந்து திருப்பணி செய்ய வாய்ப்பு கிட்டும்;சித்தர்கள் அனைவரும் ஆசி கூறுவார்கள்.

    வெள்ளி: ஆத்மவிசாரம் செய்வார்கள்;தான் யார் என்பதை உணர வெள்ளிக்கிழமைகளில் வரும் சிவராத்திரியன்று பூஜை+விரதம் இருக்க வேண்டும்;
    வெள்ளிக்கிழமையும் சிவராத்திரியும் வரும் இரவில் தனியாக அண்ணாமலை கிரிவலம் வந்தால் ஆத்மவிசாரம்(நான் யார்? என்பதற்கான விடை) கிட்டும்;

    சனி: சனிபகவானால் ஏற்படும் துயரங்கள் முழுமையாக விலகும்; சனிக்கிழமையன்று வரும் சிவராத்திரி விரதம்+பூஜை செய்தால் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனியால் வரும் துயரம் சிறிதும் வராது;நெருங்காது;

    ஞாயிறு: சூரியதேவனாகப் பிறக்கலாம்;சூரியப் பதவி கிடைப்பது என்பது மிகவும் அரிதிலும் அரிதான அதிசயம்
    புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
    யோகினி என்றால் யார்? இவர்கள், அம்பிகையான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் தேவதைகள் ஆவர்.

    முன்னொரு காலத்தில் மகிஷாசுரன், அரக்கர்களுக்கே உரிய கொடூரத்துடன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை வேண்டி தங்களைக் காத்தருளும்படி வேண்டினர்.

    ஆதிசக்தியும் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய உடலிலிருந்து துர்க்கை என்னும் சக்தியைத் தோற்றுவித்தார். இந்த துர்க்கை தன் உடலிலிருந்து எட்டு சக்தியரைத் தோற்றுவித்தாள். அவர்களே யோகினிகள் ஆவர்.

    இப்படித் தோன்றிய ஒவ்வொரு யோகினியும் எட்டு எட்டு யோகினிகளாகப் பிரிந்தனர். இந்த 64 யோகினிகளும் மகிஷாசுரவதத்துக்கு உதவி செய்து மகிஷாசுரனின் சகோதரர்கள், கம்பன், நிசும்பன் மற்றும் அரக்கர் சேனை அழிவுக்குக் காரணமாய் இருந்தார்கள்.

    இவர்கள் மிகவும் அதீதமான சக்தி படைத்தவர்கள். இவர்களை வழிபடுவதன் மூலம் மனிதர்களுக்கு அபாரமான சித்திகள் கிடைத்தன என்று புராணங்கள் விவரிக்கின்றன.

    இந்த யோகினி விரத வழிபாட்டை, தாந்த்ரீக வழிபாடு என்று குறிப்பிடுவார்கள். இதில் அதிகமாக பெண்களே ஈடுபட்டனர். புலன்களை அடக்கி, பிரம்மச்சரிய விரதம் இருந்து ஆண்களும் பெண்களும், இந்த யோகினிக்களை வழிபட்டால், அவர்களுடைய அருளால், பில்லி சூன்யம், ஏவல் போன்ற தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

    இந்த யோகினி வழிபாடு வட இந்தியாவிலும், புத்த மதம் அதிகமாக பரவிய திபெத், சீனா, ஜப்பான், பர்மாவிலும் (இன்றைய மியான்மர்) காணப்பட்டது. இந்த 64 யோகினிகளுக்கும் வட இந்தியாவில் தனித்தனியாக கோவில்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ‘நிர்ஜலா’ என்ற பெயருடைய ஏகாதசிக்கு, ‘பீம ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு. அதற்கு ‘பீம ஏகாதசி’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்குப்பின்னால் ஒரு சிறு கதை உள்ளது. அதனைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    பெருமாளை வழிபடும் பக்தர்களால் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் ஒன்று ‘ஏகாதசி.’ வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். இதில் ஆனி மாதத்தின் வளர்பிறையில் வரும் ‘நிர்ஜலா’ என்ற பெயருடைய ஏகாதசிக்கு, ‘பீம ஏகாதசி’ என்றும் பெயர் உண்டு. அதற்கு ‘பீம ஏகாதசி’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்குப்பின் ஒரு சிறு கதை உள்ளது. அதனைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    ஒரு முறை வியாச முனிவரைச் சந்தித்தார், பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரர். அவரை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து வந்து சகல மரியாதையையும் செய்து, சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டார்.

    அப்போது “முனிவரே.. மனிதர் களுக்கு ஏராளமான துன்பங்கள் ஏற்படுகின்றன. இனி வரும் கலியுகத்தில் அது அதிகரிக்கவே செய்யும். அதுபோன்ற தருணங்களில் துன்பங்களில் இருந்து சுலபமாக விடுபடுவதற்கான வழியை சொல்லுங்கள்” என்று கேட்டார், யுதிஷ்டிரர்.

    அதற்கு வியாசர், “எல்லா துன்பங்களையும் நீக்கக்கூடிய மகிமை, ஏகாதசி விரதத்திற்கு மட்டுமே உண்டு. அந்த தினத்தில் உபவாசம் இருந்து பெருமாளை பூஜித்து வருவதைத் தவிர இதற்கு வேறு வழி எதுவும் இல்லை” என்றார்.

    இதைக் கேட்டுக் கொண்டிருந்த பீமன், “முனிவர்களில் சிறந்தவரே.. நீங்கள் சொன்ன விரதத்தை இங்கிருக்கும் அனைவருமே கடைப்பிடித்து விடுவார்கள். அவர்களால் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் உணவருந்தாமல் இருந்து விட முடியும். ஆனால் என்னால் உணவருந்தாமல் ஒரு வேளை கூட இருக்க முடியாது. அதிலும் வருடம் முழுவதும் பல ஏகாதசிகள் அப்படி இருப்பதென்றால் இயலாத காரியம். ஏனெனில் என்னுடைய வயிற்றில் ‘விருகம்’ என்னும் தீ எரிந்துகொண்டே இருக்கிறது. அது என் பசியைத் துண்டிக் கொண்டே இருக்கிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் விரதம் இருந்து, நீங்கள் சொன்ன பலனை அடைய வழி இருக்கிறதா?” என்று கேட்டான்.

    அப்போது வியாசர் சொன்ன பதில், பீமனுக்கு நிம்மதியைக் கொடுத்தது. “பீமா.. கவலைப் படாதே. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து வா. நீர்கூட அருந்தாமல் இருக்கும் விரதம் என்பதாலேயே அது ‘நிர்ஜலா’ என்று அழைக்கப்படுகிறது. அந்த ஒரு ஏகாதசியை கடைப்பிடித்தாலே, அனைத்து ஏகாதசியையும் கடைப்பிடித்த பலன் கிடைத்து விடும்” என்று கூறினார்.

    இதையடுத்து பீமன், நிர்ஜலா ஏகாதசி அன்று மட்டும் உணவு, நீர் ஆகியவற்றைத் துறந்து, மறுநாள் துவாதியில் உணவை உட்கொண்டான். பீமனால் கடைப்பிடிக்கப்பட்ட விரதம் என்பதால் இது ‘பீம ஏகாதசி’ என்று பெயர் பெற்றது.
    ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷ விரதம் கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள், ஞாயிறு. இதனால் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையானது, ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலத்தில் வரும். இதனாலும் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சக்தி வாய்ந்ததாக உள்ளது.

    எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் நேரத்தில், நாம் சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். இந்தக்கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலம், சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும், சூரிய தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு-கேது தோஷம், கிரகண தோஷம் அகலும். தந்தை - மகன் உறவில் சுமுகம் ஏற்படும்.

    இருதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் விலகும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.
    தங்கள் கணவர், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும்.
    14-3-2021 காரடையான் நோன்பு

    மந்திரதேசத்தை ஆட்சி செய்த அசுவபதி என்ற மன்னனின் மகள், சாவித்திரி. அசுவபதி தன்னுடைய மகளுக்கு, கணவனை அவளே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளித்திருந்தார். பருவ வயதை எட்டிய சாவித்திரி ஒருமுறை வனத்திற்குச் சென்றபோது, அங்கு சத்தியவானைக் கண்டாள். சத்தியவானின் தந்தை சாளுவதேசத்து மன்னன் துயமத்சேனன். அவர் சிறப்பான ஆட்சியை தந்த போதிலும், வயோதிகத்தால் கண்பார்வை குன்றியது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எதிரிகள், அவரிடம் இருந்து நாட்டை பறித்துக் கொண்டு சத்தியவானையும், அவனது பெற்றோரையும் காட்டிற்கு துரத்திவிட்டனர்.

    சத்தியவானுக்கு தந்தை இழந்த நாட்டைத் திரும்பப் பெற்று அரசாளவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வயதான பெற்றோர்களை தனித்து விட்டுச் செல்ல விரும்பாததால், அவர்களுக்கு பணிவிடை செய்தவாறு காட்டிலேயே காலத்தைக் கழித்தான். சத்தியவானைப் பற்றி அறிந்ததும், அவன் மீது சாவித்திரிக்கு காதல் உண்டானது. அவனை திருமணம் செய்வது பற்றி தன்னுடைய தந்தையான அசுவபதியிடம் சொன்னாள். அவரும் திருமண ஏற்பாடுகளைச் செய்து, மணம் முடித்து வைத்தார்.

    திருமணத்திற்குப் பின் கணவனுடன் வாழ வேண்டும் என்ற நியமத்திற்கு இணங்க, சத்தியவானுடன் காட்டிலேயே வசிக்கத் தொடங்கினாள், சாவித்திரி. அரண்மனையில் பல பணியாளர்களுக்கு மத்தியில் வாழ்ந்தவள் என்பதால், காட்டில் சில சிரமங்களைச் சந்தித்தாலும், மனதளவில் கணவனோடு மகிழ்ச்சியாகவே இருந்தாள். தன் கணவனின் ஆயுளுக்காகவும், தன் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், பல விரதங்களை அவள் கடைப்பிடித்து வந்தாள்.

    இருப்பினும் விதி யாரை விட்டது. ஒரு நாள், விறகு சேகரித்து வருவதற்காக காட்டிற்குச் சென்றான், சத்தியவான். சாவித்திரியும் அவனோடு சென்றிருந்தாள். வேலைக்கு நடுவே நண்பகல் வேளையில் இளைப்பாறுவதற்காக மரத்தடியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தான், சத்தியவான். அப்போது எமதர்மன் வந்து சத்தியவானின் உயிரைப் பறித்துச் சென்றான். அவனது ஜாதத்தில் குறுகிய காலமே வாழ்வான் என்று விதி இருந்ததால், எமன் தன் வேலையை செய்தான். அப்போது சாவித்திரி, தன்னுடைய கற்புத் திறத்தால், எமதர்மனின் உருவத்தைக் கண்டாள். உடனே கணவனின் உடலைக் கீழே கிடத்திவிட்டு, எமனைப் பின் தொடர்ந்தாள்.

    இதைக்கண்டு அதிர்ந்த எமதர்மன், அவளைத் திரும்பிப் போகும்படி வலியுறுத்தினார். எதிர்பாராதவிதமாக எமனின் காலில் விழுந்தாள் சாவித்திரி. தன் காலில் விழுந்தது ஒரு பெண் என்ற அளவில், அவளை ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்திவிட்டார், எமதர்மன். அப்படி வாழ்த்திய பிறகே அவருக்குப் புரிந்தது, தான் அவளது கணவனின் உயிரைத்தான் பறித்து வந்தோம் என்பது.

    “நீங்கள் வாழ்த்தியது உண்மையானால் அதன்படி நான் வாழ அருள்புரியுங்கள். நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும்” என்று கேட்டாள்.

    சாவித்திரியின் புத்திசாலித்தனத்தை ரசித்த எமதர்மர், “இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது. எனவே நீ கேட்பதை என்னால் செய்ய இயலாது. அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருகிறேன்” என்றார்.

    சாவித்திரி சமயோசிதமாக, “என் மாமனார், மாமியார் மீண்டும் கண் பார்வை பெறவேண்டும். இழந்த நாட்டை திரும்பப் பெற்று ஆட்சிபுரிய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்” என்றாள்.

    சற்றும் யோசிக்காத எமதர்மன் அவள்கேட்ட அனைத்து வரங்களையும் தருவதாக வாக்களித்தார். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாவித்திரி, “எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே. ஆகவே அவரது உயிரை திரும்பக் கொடுங்கள்” என்று யாசித்தாள்.

    சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், “இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ, என்னைப் பார்த்தது மட்டுமின்றி, என்னிடமே வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில், உன் கணவன் பிழைப்பான். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு உன் ஆசி கிடைக்கட்டும். அந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், மனமொத்த தம்பதியராக வாழ்வார்கள்” என்று அருளாசி கூறி மறைந்தார்.

    சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழிப்பதுபோல் சத்தியவான் விழித் தெழுந்தான்.

    அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள். சாவித்திரியும் சத்தியவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்தியவானின் பெற்றோர் கண்பார்வை பெற்றதுடன் இழந்த நாட்டையும் திரும்பப் பெற்றனர்.

    எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், தங்கள் கணவர், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும்.
    ×