என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:
    மனித உடல் இறைவனால் பஞ்ச பூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாகும். பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தான் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களான மெய், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றின் மூலமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு விளைவிக்கும்போது ஏற்படும் பாவங்களால் கர்மவினைகள் உண்டாகிறது.

    எவ்வகையில் பாவம் செய்யப்பட்டதோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். ஐந்து விதமான சேவைகள் மூலம் பாவங்களை போக்க முடியும். அவை:

    1. யாதனம் : கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.
    2. சிரவணம் :- இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.
    3. கீர்த்தனம் :- இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.
    4. பூஜார்த்தனம் :- அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத் தியம் படைத்து பூஜை செய்தல்.
    5. ஸ்துதி - : இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.

    இந்த ஐந்து விதமான சேவைகளை செய்து வர கர்ம வினைகளால் உடல், உயிர் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் கிடைக்கும். இந்த வழிபாட்டை ஜென்ம நட்சத்திர நாளில் செய்யும் போது பலன் இரட்டிப்பாகும்.

    குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திர தினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும். அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரங்கள் ஆகும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.
    * ஆற்காடு என்னும் ஊருக்கு அருகில் காரை என்ற இடத்தில் ஒரு சமயம் கவுதம மகிரிஷி தன் மனசாந்திக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார். இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது. மகரிஷி கவுதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு கவுதமேஸ்வரர் என்று வழங்கப்பட்டது. இங்கு எழுந்தருளி உள்ள அம்பாள் கிருபாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள்.
    இங்குள்ள கோவிலில் ஒரே சமயத்தில் இறைவனையும் இறைவியையும் தரிசிக்கும் விதமாக உள்ளது. ஒரு சமயம் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் ஒரு பவுர்ணமி நாளில் கவுதம முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இதனால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் மகேஸ்வரனுக்கு ஏழு வகையான அபிஷேகமும் செய்கிறார்கள். இங்குப் பவுர்ணமி நாளில் கவுதமேஸ்வரரைத் தரிசனம் செய்தால் உடல் பிணியும், மனப்பிணியும் நீங்கும்.

    * சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலாத்ரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது. செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    * குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும் உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை. இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர். அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மலையாகி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும். பின் இந்த மலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேயத்துக் குளித்து வந்தால் குழந்தை இல்லாதவர் களுக்கும் குழந்தை பிறக்கும்.

    * தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப் படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது. இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது. பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.
    சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.
    சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலாத்ரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார்.

    இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது.

    செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.
    தொழிலிலோ, பதவியிலோ முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து அருள்பாலிக்கிறார் இரத்தினகிரி ஈசன்.
    திருச்சி மாவட்டம் குளித்தலைக்கும் மணப்பாறைக்கும் இடையில் உள்ளது ஐயர் மலை. இம்மலையில் குடிகொண்டிருக்கும் இறைவன் ரத்தின கிரீஸ்வரர் அம்பாள் அரும்பார் குழலி. ஒவ்வொரு பவுர்ணமியிலும் இங்குக் கிரிவலம் நடைபெறுகிறது. இம்மலையைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் செய்பவர்களுக்கு துயரங்களும், பிணிகளும் நீங்கி சகல நன்மைகளும் ஏற்படும். குறிப்பாக ஏழரை சனியின் கொடுமையாலும், சனி தசை இருப்பவர்கள் சனியின் கொடுமை விலகி சவுகரியம் ஏற்படும்.

    குற்றமுடைய, தோஷமுள்ள இரத்தினங்களை அணிந்து கொண்டு அதனால் துன்புறும் மக்கள் இரத்தினகிரி ஈசனை அணுகிப் பரிகாரம் காணலாம். தோஷமுள்ள இரத்தினத்தை ஈசன் திருவடிகளில் சமர்ப்பித்து, ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து, வலம் வந்து வணங்கினால் இரத்தின தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    இரத்தின வியாபாரிகளுக்கு ஒரு கண்கண்ட புண்ணியத் தலம் இரத்தினகிரி. முறையாக வழிபாடு செய்து, ஈசனை வலம் வந்து வணங்குவதால் அவர்கள் தங்கள் தொழிலில் உயர்ந்த நிலையை அடையலாம். தொழிலிலோ, பதவியிலோ முன்னேறத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்து அருள்பாலிக்கிறார் இரத்தினகிரி ஈசன்.

    சிலருடைய ஜாதகத்தில் சூரியன் நீச்சமடைந்தோ, அல்லது மற்ற பாவ கிரகங்களால் பார்க்கப்பட்டோ இருந்தால் அதனால் சூரிய குற்றங்களும், தோஷங்களும் ஏற்படும். அத்தகைய துன்பத்திற்கு ஆளானோர் ஞாயிற்றுக் கிழமைகளில் வலம் வர துன்பங்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.
    சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும்.
    திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை.

    இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும்.

    பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் இருக்கும் காளியம்மனை வணங்கும்போது அம்மனின் சாந்த சொரூப தரிசனத்தைக் காணலாம். இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.
    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற என்ற தலம் உள்ளது. இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள்.
    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னிவேடு என்ற என்ற தலம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இப்பெயர் ஏற்பட்டுள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.

    இவ்வாலயத்தில் உள்ள அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் மீது நின்று தவக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். பவுர்ணமி அன்று மாதா புவனேஸ்வரிக்கு லகுசண்டி ஹோமம் செய்கிறார்கள். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கடத்திலிருந்து (கலசத்திலிருந்து) நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள்.

    இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்ததாக ஐதீகம். பவுர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்களின்றிக் கட்டி முடிப்பார்கள்.
    முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது.
    ஒரு திருமணம் கூட நடக்காமல் திருமண வாழ்க்கைக்காக பலர் ஏங்கிக் கொண்டு இருக்கும் காலத்தில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்து விடுகிறது. முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.

    சிறு சிறு கருத்து வேறுபாட்டிற்கு பிரிய நினைத்தால் எத்தனை திருமணம் செய்தாலும் மண வாழ்க்கை கேள்விக் குறியாகவே இருக்கும். பலர் இது போன்ற காரணத்தினால் நல்ல வாழ்க்கைத் துணையை இழந்து பிறகு வருந்துகிறார்கள். அதேபோல் வாழ்க்கைத் துணையின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னை சரி செய்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும். அதீத எதிர்பார்ப்பு மற்றும் சகிப்புத்தன்மை இல்லாத பல திருமணங்களே இன்று நீதிமன்ற வாசலிலும், இணைய முடியாமல் வீட்டிலும் மனக்காயங்களுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள். மனமொத்து வாழ்வதுதான் வாழ்க்கை. ஆனால் மனமொத்துப் பிரிகிறார்கள் என்பது வேதனையான ஒன்றல்லவா?

    ஒரு பிரச்சினை என்று வரும் போது ஒருவர் பக்கம் மட்டுமே நியாயம் இருக்கும். அந்த பிரச்சினையில் கணவன், மனைவி தவிர்த்து 3-ம் நபரின் தலையீடு பிரச்சினையை பெரிதுபடுத்தும். குறிப்பாக தம்பதியினரின் பெற்றோர்கள், நண்பர்கள். இதில் எத்தனையோ நண்பர், நண்பிகளே வில்லி, வில்லனாக மாறுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. பிரிந்த பிறகு தவறை உணர்வதை விட வாழும் போதே விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிமையாகும். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் மரபு.

    பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோ‌ஷமாக இருந்தாலும் அந்தத் தோ‌ஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோ‌ஷம்தான். அந்த சந்தோ‌ஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

    திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.

    நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.

    ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படி யாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406

    செவ்வாய் வலிமையற்ற பெண்கள் பலருக்கு திருமணம் நடத்துவதில் சிரமம் இருக்கிறது. திருமணம் நடந்த பிறகு திருமணமே செய்யாமல் வாழ்வை கழித்து இருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
    பெண்களுக்கு மூன்று நிலைகளில் மட்டுமே செவ்வாய் கடுமையான பாதிப்பை தருகிறது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

    1. வக்ர செவ்வாய்

    செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள் மன நிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள். இவர்களுக்கு செவ்வாயின் தசாபுத்தி அந்தர காலங்களில் முன் கோபம் மிகுதியாகும். திட்டமிடுதலில்-ஆலோசகராக இருப்பதில் சாதனை புரிவர். ஆனால் செயல்திறன் இருக்காது. உடன் பிறந்த சகோதரர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்காது. வீடு, வாகனம், சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருக்கும். ரத்தம் தொடர்பன நோய்கள் எற்படும். வக்ர செவ்வாய் சனியுடன் சம்பந்தம் பெறும் போது விபத்து / காயம் ஏற்படும்.

    பரிகாரம்:- பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட வாழ்வின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகி மன நிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
    2 . கிரகச் சேர்க்கை

    செவ்வாய்+ சனி, செவ்வாய்+ ராகு, செவ்வாய்+ கேது ஆகிய கிரகச் சேர்க்கை திருமண வாழ்வை சிறக்கச் செய்யாது. செவ்வாய் + சனி சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் இவர்கள் இருவரும் இணைந்து எந்த வீட்டில் எந்த ராசியில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பிரச்சினைதான்.

    ஜோதிட சாஸ்திரத்திலேயே இந்த இரண்டு கிரகங்களின் கூட்டணிதான் மிகவும் சிக்கலானது, சவாலானது ஆபத்தானது. வாழ்க்கையில் மட்டுமல்லாமல், மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் இந்த இருகிரக சேர்க்கை பாதிப்பை உண்டு பண்ணும். குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து எந்த வீட்டில் செவ்வாயும் சனியும் சேர்ந்திருந்தாலும், சமசப்தமாய் பார்த்துக் கொண்டாலும் பூப்பெய்துதலில் இருந்து பிரச்சினைகள் தொடங்கும்.

    மாதவிடாய்க் கோளாறு, தைராய்டு பிரச்சினை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, அல்சர், நீண்ட வறட்டு இருமல், ஹீமோக்ளோபின் குறைதல், சிறுநீரகக் கோளாறு, முகத்தில் கண்ணுக்குக் கீழ் கருவளையம் என பல பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். கணவன்-மனைவி விவாகரத்துக்கான வாய்ப்புகளையே அதிகம் காட்டும் சேர்க்கை இது. மண வாழ்க்கையில் பிரச்சினையை சந்தேகத்தாலும் பிடிவாதத்தாலும், ஈகோ பிரச்சினையாலும், பொருளா தாரக் குறைபாட்டாலும் உண்டாக்கும். கோர்ட்டில் எனக்கேற்ற துணை இவரல்ல என்று குற்றம்சாட்டி பிரிய வைப்பதெல்லாம் இந்த சேர்க்கைதான்.

    செவ்வாய்+சனி கூட்டணியில் வேகம், விரைந்து முடிவெடுத்தல், தன் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது என்று நினைத்தல், முரட்டுத்தனம். இவையெல்லாம் செவ்வாய் தரும் குணங்கள். நான் சொன்னா சொன்னதுதான். அவரு வேணா இறங்கி வரட்டும். நான் ஏன் இறங்கிப் போகணும் என்று பேச வைப்பதும் செவ்வாய்தான். சனி என்பது, இதற்கு எதிர்மாறான தன்மைகளைக் கொண்டிருக்கும் கிரகம்.

    செவ்வாய் வேகமாகப் பேசி விரைந்து முடிக்கும் கிரகமென்றால், சனி எதிரே இருப்பவரின் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு நிதானம் தரும் கிரகம். சுறுசுறுப்பானவனும் மந்தமானவனும் சேர்ந்தால் எப்படியிருக்கும். செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள் எரிமலை போல வேகமாக உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். சனி ஆதிக்கமுள்ளவர்கள் வானமே இடிந்து விழுந்தாலும் எதுவும் நடக்காதது போல் இருப்பார்கள்.

    இந்த இரண்டு கிரகங்களுமே ஒரு ஜாதகத்தில் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் அனுபவிக்க முடியும். இந்த கிரகச் சேர்க்கை லக்னம், ஏழாம் வீட்டில் இருந்தால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து தோல்வியை சந்தித்து விவாகரத்துப் பெறுகிறார்கள். பிற வீட்டில் இருந்தால் பெற்றோர் நடத்தும் திருமணமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை கேள்விக்குறிதான். இந்த அமைப்பு திருமண வாழ்க்கைக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் கணவருக்கு தொழில் நெருக்கடி எப்பொழுதும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும் சேர்க்கையாகும்.

    பரிகாரம்:- திருமணத்திற்கு பின் ஆண், பெண் இருவருக்கும் செவ்வாய், சனி தசை சந்திப்பு இருக்க கூடாது. நரசிம்மர் வழிபாடு இந்த கிரகங்களின் கூட்டணியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பரிகாரமாகும்.

    செவ்வாய் + ராகு ஆண்களுக்கு உடன் பிறந்தவர் களுடனும், பெண்களுக்கு கணவருடனும் மன வேத னையை ஏற்படுத்தும் கிரகச் சேர்க்கை. பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தை தரும். திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரக சேர்க்கை. எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று கணவரை கவுவரப்படுத்தி சமுதாயத்தில் வலம் வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடம் இருந்து பிரிக்கும். கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது.

    பரிகாரம்:- செவ்வாய் தசை நடப்பவ ருக்கு ராகு தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெற வேண்டும்.

    செவ்வாய்-கேது மேஷம், சிம்மம், தனுசில் செவ்வாய் கேது சாரம் பெற்று நின்றால் அல்லது செவ்வாய் , கேதுவுடன் இணைந்து எங்கு நின்றாலும் 27 வயதிற்கு மேல் தான் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன பிறகு ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில் தான் வாழ்க்கை இருக்கும். கணவனை கடும் பகையாளியாக்கி நீதி மன்ற படி ஏறிய பெண்களே அதிகம். வெகு சில பெண்கள் குடும்பம், குழந்தைகள், மானம் , மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள். வெகு சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள்.

    பரிகாரம்:- செவ்வாய் தசை நடப்பவருக்கு கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. செவ்வாய் கிழமை விரதம் இருந்து வீரபத்திரரை வழிபட செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.

    3. பாவகர்த்தரி தோஷம்

    காரக கிரகத்திற்கு இருபுறமும் அசுப கிரகம் நின்று காரக கிரகத்தின் இயக்கத்தை மட்டுப்படுத்தும். உதாரணமாக செவ்வாய்க்கு ஒருபுறம் கேது மறுபுறம் சனி இருந்தால் செவ்வாயின் இயங்கும் தன்மை சனி மற்றும் கேதுவால் தடைபடுத்தப்படும். முதிர்கன்னியானப் பிறகு திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பை காணலாம்.

    உண்மையில் செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பல திருமண புரோக்கர்கள் 10 ரூபாய்திருமணப் பொருத்தம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு மக்களை படுத்தும் பாடு அளப்பரியது. தவறான செவவாய் தோஷ கணிப்பால் பலரின் வாழ்க்கை கேள்வியாகவே இருக்கிறது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும். செவ்வாய் தசை, புத்தி அந்தர காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவை இல்லை.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பசுவின் உடலில், முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே பசுவை வழிபட்டால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.
    பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். அது தரக்கூடிய மூன்றுவிதமான பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருளாக அமைகின்றன.

    எனவே வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன.

    பசுவின் உடலில், முப்பத்து முக்கோடி தெய்வங்களும் வசிப்பதாக ஐதீகம். எனவே பசுவை வழிபட்டால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.
    குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்லமுகூர்த்தமாக அமையும்.
    திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, பங்குனி மாதங்களில் திருமணம் செய்வது நல்லது. ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கடைசி 3 நாட்கள் விலக்கப்பட வேண்டும். இயன்ற வரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது.

    முகூர்த்த லக்கினத்துக்கு 1,7 2, 8-ம் இடங்களில் முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். முகூர்த்த லக்னத்தில் ராகு-கேது, குளிகன் அமரக் கூடாது. முகூர்த்த லக்னத்திற்கு முன், பின் ராசிகளில் பாவ கிரகங்கள் நிற்க கூடாது.

    ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற நேரங்களில் திருமணம் செய்யக்கூடாது. பல சுப முகூர்த்த கால அட்டவணையில் குளிகை நேரத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டு இருப்பதை காணலாம். பஞ்சகம் கூடிய, லக்ன சுத்தமான முகூர்த்த நாளாக இருந்தால் கூட குளிகை நேரத்தை தவிர்க்க வேண்டும். குளிகை நேரத்தில் செய்யும் செயல்கள் திரும்ப திரும்ப நடைபெறும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஒரு மனிதனுக்கு திருமணம் வாழ்வில் ஒரு முறை மட்டுமே நடைபெற வேண்டும்.

    சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் நாளிலும் அதற்கு முன், பின் 7 நாட்களிலும் திருமணத்தை தவிர்க்க வேண்டும். கிரகணம் நடந்த நட்சத்திரத்தில் திருமணம் நடத்தக் கூடாது.

    திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியம். மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 10, 14, 19, 22, 27, வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக் கூடாது. ஜென்ம, அனு ஜென்ம, திரி ஜென்ம நட்சத்திரங்களில் திருமணம் செய்யக் கூடாது. தாராபலம், சந்திரபலம் உள்ள நாட்கள் சிறந்த பலன் தரும். கரிநாளாக இருக்க கூடாது.

    திருமணம் நிகழ்த்தப்பட வேண்டியவரின் நட்சத்திரப் பட்சியும், முகூர்த்த நட்சத்திரப் பட்சியும் அன்றைய தினம் படு பட்சியாகவோ அல்லது முகூர்த்த நேரத்தில் அப்பட்சிகள் துயில், சாவு பணிகளை மேற்கொள்வதாகவோ இருக்கக்கூடாது. கவுரி பஞ்சாங்கப்படி சுபகோரை, சுபவேளையாக இருக்க வேண்டும். மணமகள் மாதவிலக்காக இருக்கும் நாட்களில் திருமணம் செய்யக் கூடாது.

    அஷ்டமச் சனியின் பிடியில் இருக்கும் பொழுது ஜாதகரீதியாக சனியினுடைய தசையோ புத்தியோ நடைபெறும் போது திருமணம் செய்யக்கூடாது. ஆனால் ஏழரை சனி வரும் காலத்தில் திருமணம் கட்டாயம் நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை. சனி என்பவர் திருமணத்தை முடித்துக் கொடுக்கும் கர்மகாரகன்.

    எண் கணித ஜோதிடத்தில் எட்டு என்பது மோசமான எண். திருமண தேதி எட்டாக இருக்கக் கூடாது. அதேபோல் 4, 5, 7 எண்கள் வரும் தேதிகளிலும் திருமணத்தை நடத்தக் கூடாது.

    குரு பலமும், சந்திரன் பலமும், தசா புத்திகளும் சரியாக அமையாதவர்கள் திருமண முகூர்த்தம் நாட்களைத் தள்ளிப்போடலாம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் லக்னத்திற்கு 11-ல் சூரியன் இருக்கும் நேரத்தை பயன் படுத்தலாம்.

    முகூர்த்த நேரம் என்பது ஒன்றரை மணி நேரமாகும். அந்த காலத்தில் நாழிகை கணக்கு வழக்கில் இருந்தது. ஒரு நாழிகை 24 நிமிடம். சுபநிகழ்ச்சிக்கான கால அளவு மூன்றே முக்கால் நாழிகை. மேலே கூறிய இந்த வழிமுறைகளின்படி சுபமுகூர்த்த நாள் கிடைக்குமா? என்று வாசகர்கள் கேட்பது புரிகிறது.

    மனிதர்கள் அனைவரும் வினைகளை அனுபவிக்க வந்திருக்கிறோம் என்பதால் பரிபூரண சுப நேரம் என்பது ஒரு விநாடி அளவு கூட இல்லை என்பதே உண்மை. மேலே கூறிய நிலைகளில் ஒரளவு பொருந்தி வந்தாலே மிகச் சிறப்பான முகூர்த்தமாக கருத வேண்டும்.

    ஒரு சுப காரியம் நிகழ்த்தும் நாள், திதி, நட்சத்திரம் மற்றும் முகூர்த்த நேர லக்ன சுத்தம் அமைந்தாலே ஒரு சுபகாரியம் பரிபூரண சுபத்தன்மை பெறும். குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் குறிக்கும் நேரம் நிச்சயம் நல்லமுகூர்த்தமாக அமையும்.
    12 ராசிக்காரர்களும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தடையில்லா வருமானத்தை பெற முடியும். அதைப் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.


    மேஷ ராசிக்காரர்கள் வாரம் ஒரு முறை செவ்வாய்க் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வருவதால் உங்களுடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். செல்வ செழிப்பு ஏற்படும்.

    ரிஷப ராசிக்காரர்கள் வேலைக்கு செல்லும் பொழுது வழியில் இருக்கும் பசுக்களுக்கு தானமாக ஏதாவது தீவனத்தை கொடுத்து விட்டு செல்லுங்கள். அருகில் இருக்கும் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தாலே போதும். உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும்.

    மிதுன ராசிக்காரர்கள் உங்கள் வருமானத்தில் இருக்கும் தடைகள் நீங்க அடிக்கடி பெருமாள் கோவிலுக்கு சென்று பச்சைப் பயறு தானம் செய்து வரலாம். அது போல் வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள், குங்குமம் கொடுத்து வழி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

    கடக ராசிக்காரர்கள் உங்கள் வீட்டில் வெளிப்புறமான இடங்களில் அல்லது மொட்டை மாடிகளில் மண் சட்டியில் தண்ணீரை எப்பொழுதும் நிரப்பி வையுங்கள். அதனை குடிக்க வரும் பறவைகளுக்கு தாகம் தீர்ந்தால் போதும். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும். சிவன் கோவிலுக்கு திங்கள் கிழமையில் பசும்பால் வாங்கி அபிஷேகம் செய்து வரலாம்.

    சிம்ம ராசிக்காரர்கள் இரவு தூங்கும் பொழுது தலைக்கு பக்கத்தில் ஒரு செம்பு சொம்பில் தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை உங்கள் வீட்டின் கிழக்குப் பகுதியில் தெளிக்க வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கி வருமானம் பெருகும் என்பது ஐதீகம். கிழக்கு பகுதியில் செடிகள் வைத்திருந்தால் அந்த செடிகளுக்கு ஊற்றலாம் நல்ல பலன் கிடைக்கும். செம்பு அல்லது பித்தளை மட்டும் பயன்படுத்துவது உத்தமம்.

    கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானுடைய பச்சை நிறத்தை புதன் கிழமைகளில் உடுத்திக் கொள்வது அதிர்ஷ்டத்தைத் தரும். புதனுடைய அனுகிரகம் இருந்தால் தான் வருமான தடைகள் நீங்கும். ஒரு சிறு கைகுட்டையாவது அன்றைய நாளில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. கோவிலில் இருக்கும் பசுக்களுக்கு வெல்லம் கலந்த கோதுமை மாவு கொடுப்பது செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

    துலாம் ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளில் வந்தாலும், வந்த வழியே சென்று விடும். இந்த சூழ்நிலை மாறி செல்வ செழிப்பு உண்டாக திங்கள் கிழமை தோறும் அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இளநீர், பசும்பால், பன்னீர் போன்றவற்றை உங்களால் முடிந்த அளவிற்கு தானம் செய்யலாம்.

    விருச்சிக ராசிக்காரர்கள் நிறைய வருமான ரீதியான பிரச்சினைகளை சந்தித்து இருப்பீர்கள். இனி வரும் நாட்களில் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாக, முருகன் கோவிலுக்கு சஷ்டி நாட்களில் அபிஷேகப் பொருட்கள் மற்றும் கடலை பருப்பு நைவேத்தியம் செய்வது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.

    தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் மஞ்சள் நிற உடை உடுத்தி, வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது, படிக்கத் தெரியாதவர்கள் அதனை பாடல்கள் மூலம் ஒலிக்கச் செய்வது நன்மை தரும். பின்னர் ஐந்து முக குத்து விளக்கு ஒன்றில் தாமரை தண்டு திரியை போட்டு, நெய் தீபம் ஏற்றிவர வருமானத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கும். பகைவர் தொல்லை நீங்கி செல்வ செழிப்பும் ஏற்படும்.

    மகர ராசிக்காரர்கள் துளசிச் செடியை வளர்ப்பது யோகம் தரும். கட்டாயம் இதை செய்யுங்கள். துளசிச்செடி இல்லாதவர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நல்லெண்ணை தீபம் ஏற்றி வரலாம். துளசி செடி வைத்திருப்பவர்கள் சனிக்கிழமைகளில் துளசி செடிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வர வருமானத்தில் இருக்கும் தடைகள் யாவும் நீங்கும்.

    கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையில் சனி பகவானை வணங்குவது மிகவும் விசேஷமானது. கோவிலுக்கு சென்று நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு நேராக நீர்க்காமல், ஒரு புறமாக நின்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து சனிக்கிழமையில் உங்களால் முடியும் பொழுது செய்து வந்தால் வருமான தடைகள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

    மீன ராசிக்காரர்கள் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவது விசேஷமானது. உங்கள் ராசிக்கு குரு மற்றும் தட்சிணாமூர்த்தி செல்வ செழிப்பை கொடுப்பார்கள். அன்றைய நாளில் மஞ்சள் நிற உடை அல்லது மஞ்சள் கைக்குட்டையாவது கையில் வைத்துக் கொண்டு, இவர்களுக்கு மஞ்சள் நிற நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வது யோகத்தை தரும்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

    விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு 5 தீர்த்தங்கள் உள்ளது. இதில் முதாலாவது மணிமுக்தாறு ஆகும். இது சிவனால் உருவாக்கப்பட்டது. அடுத்ததாக, பிரம்மா பழமலைநாதரை வழிபடுவதற்காக முன் செய்ய வேண்டிய நீராடலுக்கு உருவாக்கிய தீர்த்தமே அக்னி தீர்த்தமாகும். இது கோவிலின் நூற்றுக்கால் மண்டபத்துக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

    அடுத்ததாக சக்கர தீர்த்தம். இது திருமால் தன் சக்கரத்தால் உருவாக்கியதால் சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள நந்தவனத்தில் அமைந்து இருக்கிறது. இதில் திருமாலும், லட்சுமியும் நீராடி பழமலை நாதரை வழிபட்டனர்.

    பெரிய நாயகி கோவிலின் முன்பு குபேர தீர்த்தம் அமைந்துள்ளது. குபேரன் உருவாக்கியதால் இது இப்பெயர் பெற்றது. இது தற்போது கிணறு வடிவில் உள்ளது. வன்னியடி பிரகாரத்தின் தென்கிழக்கு பகுதியில் கிணறு வடிவில் நித்தியானந்த கூபம் என்கிற தீர்த்தம் உள்ளது. இது பிரம்மனால் படைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. நித்தியானந்தம் என்றால் வீடுபேறு என பொருளாகும். இந்த தீர்த்தம் தான் கோவிலின் எல்லா நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    ×