என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • முருகனும் ஹத்திதோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார்.
    • கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும்.

    கந்தசஷ்டியின் போது முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்த பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

    முருகனும் ஹத்திதோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார். இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்று அங்கு ஓடுகிறது.

    முருகன் இந்தத்தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் வெளி வந்தது. அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்தத்தில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார். அப்போது சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தன. உடனே முருகன் தன் அன்னை உலகமாதாவை வணங்கினார்.

    பின் வேண்டிக் கொண்டார். தாயே உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என்மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது. தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றார். உடனே பார்வதி தேவி இத்தலத்தின் எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள். இதனால் அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப் பெயர். இதனால் பிரம்மஹத்திகள் ஓடிப்போயின. முருகனும் தவத்தை முடித்து தோஷம் நீங்கி அருள் பெற்றார். இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.

    • 33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது.
    • பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும்.

    இந்தியாவில் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. பசுவினை கோமாதா என்றே அழைக்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் எகிப்து, க்ரீஸ், பண்டைய இஸ்ரேல் மற்றும் ரோம் நகரிலும் பசு புனித விலங்காக கருதப்படுகிறது. இந்து மரபின் படி, கோமாதா கொண்டிருக்கும் விஷேச சக்திகள் பின்வருமாறு.

    33 கோடி தேவர் தேவியரின் வல்லமை ஒரு பசுவினுள் உள்ளது. சுரபி லட்சுமி எனும் தேவி பசுவினுள் குடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஓர் இல்லத்தில் உள்ள பசுவினுடைய இருப்பு பலத்தரப்பட்ட நோய்களுக்கும் நிவராணமாக உள்ளது.

    எப்போது ஒரு பசுவானது நிறைவடைகிறதோ அப்போது அப்பசுவை கவனித்து கொண்டவர் நிறைந்த அரோக்கியம் செல்வம் வளம் அனைத்தையும் பெறுவதாக நம்பப்படுகிறது. மேலும் வாஸ்து தோஷம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதனை பசுவின் சாணம், கோமியம், நெய் ஆகியவற்றை கொண்டு அதற்கான நிவாரணத்தை காண முடியும். காலம் காலமாக முனிவர்கள், ரிஷிகள், அறிஞர்கள் புத்திவான்கள் அனைவரும் பசுவினை வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஒரு வார்த்தையில் சொல்வதனால், பசு என்பது நேர்மறை ஆற்றலின் பிறப்பிடமாகும். மேலும் பசுவிற்கு செய்யும் பணிவிடைகளின் மூலமும் நம் பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.


    ஒவ்வொறு நாளும் பசுவிற்கு உணவினை அளிப்பது ஒருவருக்கு நல்வாழ்வை வழங்கும் என சொல்லப்படுகிறது. கோவில்களில் இருக்கும் கோசாலைகளில் பலர் பசுவிற்கு கீரைகளை அர்ப்பணம் செய்வதை நாம் பார்க்கக்கூடும். ஜாதகங்களில் ஏற்படும் பிரச்சனைக்கு பரிகாரமாக இவை செய்யப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். மேலும், நீங்கள் எங்காவது ஒரு நல்ல காரியமாக செல்கிற போது பசுவினுடைய சப்தத்தை கேட்டால் அது அக்காரியம் வெற்றி என்பதை குறிப்பதாக கருதப்படுகிறது.

    மேலும் ஏதேனும் கண் திருஷ்டி ஏற்பட்டிருப்பின் புனித பசுவின் வால் பகுதியில் அமைந்துள்ள ஜடையை கொண்டு ஏழு முறை மந்திரிப்பதை போன்ற செயலை செய்கிற போது திருஷ்டிகளை களைய முடியும். பசுவினுடைய நெய்யும் பசுவினை போலவே புனிதத்துவம் பெற்றதாகும். பசுவினுடைய நெய்யினால் தீபம் ஏற்றப்பட்டால் அது பல நல்ல அதிருவ்களை ஈர்ப்பதாக அமையும். வீட்டின் பூஜையறையில் கிருஷ்ணர் பசுவினுடன் இருப்பதை திருவுருவ படத்தை வைத்து வழிபட்டால் தொடர்ந்து வரும் பிரச்சனைகள் விலகும் என்பது நம்பிக்கை. நலம், வளம், செல்வம் என அனைத்து செளபாக்கியங்களையும் பசுவினை வழிபடுவது நம் நல்வாழ்விற்கு பெரும் உதவியாக அமையும். மகிழ்வான வாழ்விற்கு கோமாதாவின் ஆசிகளை பெறுவது அவசியமாகும்.

    • ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார்.
    • வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம்.

    கார்த்திகை மாதம் முழுவதும் தினசரி சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் வீட்டுக்கு அல்லது ஆலயத்துக்கு அருகில் வீதியில் உயரமான தீபம் ஏற்ற வேண்டும். அல்லது வீட்டு மொட்டை மாடி போன்ற உயரமான இடத்திலும் தீபம் ஏற்றலாம். இந்த தீபத்துக்கு ஆகாச தீபம் என்று பெயர்.

    இதன் ஒளியானது எட்டு திசைகளிலும் பரவ வேண்டும். இன்று (புதன்கிழமை) மாலை சூரியன் மறைந்த பின் தீபம் ஏற்றி சுவாமி சன்னதியில் சங்கல்பம் செய்து கொண்டு மண்அகல் விளக்கில் நல்லெண்ணை விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள கோவிலோ தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தீபம் வைத்து வணங்க வேண்டும்.

    கார்த்திகை மாதம் முழுவதும் ஆகாச தீபம் ஏற்ற முடியாதவர்கள் கடைசி 3 நாட்களில் (நவம்பர் 21, 22, 23) ஏற்றலாம். ஒரு நாளாவது ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயம் சென்று தீபம் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஆகாச தீபம் ஏற்றப்பட்டால் மகாவிஷ்ணு சந்தோஷப்படுவார். இதனால் மகாவிஷ்ணு மனம் மகிழ்ந்து தீபம் ஏற்றுபவர்களின் அனைத்து துன்பங்களையும், கடனையும் விலக செய்வார் என்பது நம்பிக்கையாகும்.

    • இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும்.
    • மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வீட்டு மனை அல்லது வயல், தோட்டம் வாங்கும்போது முதலில் கவனிக்க வேண்டியது, மனையில் மண்ணின் தன்மை என்ன என்பதுதான். மண் என்ன நிறத்தில் உள்ளது. என்ன மணம் வீசுகிறது. பாறைகளுடன் கூடியதா, சிறுசிறு கூழாங்கற்கள் உள்ள இடமா, சாதாரண மண் அமைப்பா, சதுப்பு நிலமா அல்லது பெரிய மரங்கள் இருக்கும் காட்டுப் பகுதியா என்ற விஷயங்களைக் கவனிக்க வேண்டும். மனைப்பகுதியில் தாமரைக்குளத்தின் வாசனை, மாட்டுத் தொழுவ வாசனை போன்றவை இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

    வெளிர் நிறமண், சற்றே இள மஞ்சள், செம்மண், சற்றே கருப்பாக உள்ள மண், பழுப்பு நிற மண், விவசாயம் செய்த மண், அதிகமாகக் கூழாங்கற்கள் இல்லாதது ஆகியவை வீடுகள் கட்ட உகந்தவை. இடத்தின் மண்ணை எடுத்துத் தண்ணீர் தெளித்துவிட்டு சில மணி நேரம் கழித்துப் பார்க்கும்போது நுரையாக இருந்தால் பொருளாதார வளம் கொண்ட மண் அமைப்பாகவும், தயிர் வாசனை வீசினால் சமமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும், தேன் வாசனை வீசினால் முன்னேற்றமான வாழ்வு தரும் மண் அமைப்பாகவும் கருதலாம். நெய் வாசனை, மீன் வாசனை முதலியவை குறைந்த பலன்களைத் தரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

    இப்போதுள்ள நவீன கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எந்த விதமான மண்ணிலும் கட்டிடம் அமைக்க இயலும். இப்போது நடைமுறையில் உள்ள மண்ணின் பளு தாங்கும் திறன் சோதனை (LOAD BEARING CAPACITY TEST) மூலமாக நாம் அமைக்கும் கட்டிடத்தின் அளவுகளையும், உயரங்களையும் எளிதாக முடிவு செய்யலாம். பெரும் நீர்ப்பரப்பான கடலில் கூட உணவகங்கள், விமான ஓடுதளங்கள், தங்கும் விடுதிகள், போக்குவரத்திற்கான பாலங்கள் முதலியன தற்போது அமைக்கப்பட்டு உள்ளன.

    பழைய காலங்களில் நமது வாஸ்து சாஸ்திர வல்லுனர்கள் மண்ணின் வலு மற்றும் அதன் சாதகமான அம்சங்களைத் தெரிந்துகொள்ள பல்வேறு வழிகளைக் கையாண்டுள்ளனர். அதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இடத்தின் மையத்தில் ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம், ஒரு அடி ஆழம் உடைய ஒரு குழி பறிக்க வேண்டும். வெளியே எடுக்கப்பட்ட மண்ணை மீண்டும் அந்தக் குழிக்குள் போட்டுக் குழியை மூடினால், மூடப்பட்டது போக மண் மீதியாக இருந்தால் அந்த நிலம் கட்டிடம் அமைக்க உத்தமமான இடமாகும். மீதம் எதுவும் இல்லாமல் மூடப்படுவதற்கு மட்டுமே மண் சரியாக உள்ள நிலம் மத்திமமான இடமாகும். வெட்டப்பட்ட குழியில் வெட்டிய மண்ணைப் போட்டு மூடிய பிறகும் குழியானது நிரம்பாமல் இருந்தால், அந்த நிலமானது அவ்வளவு சரியானதல்ல என்பது முன்னோர்களின் கணிப்பு.

    மேலும் இடத்தின் மையத்தில் ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் குழி எடுத்து, அதில் சுத்தமான நீரை நிரப்பி வைத்து விட்டு 12 மணி நேரம் கழித்து வந்து பார்க்கும்போது, குழியிலுள்ள நீர் பாதிக்கும் மேலாக இருந்தால் அது நல்ல நிலமாகவும், நீரானது பாதிக்கும் குறைவாக இருந்தால் மத்தியமான நிலமாகவும், சுத்தமாக நீரே இல்லாமல் இருந்தால் அது அவ்வளவு சரியாக வராது என்றும் முடிவு செய்தார்கள். அவ்வாறு வெட்டப்பட்ட குழியில் சுத்தமான நீரை, ஒரு சுப ஹோரையில் நிரப்பிய பின்பு அதில் மலர்களைப் போடவேண்டும். அவ்வாறு நாம் போட்ட மலர்கள் வலமாகச் சுற்றினால் அதாவது கடிகாரமுள் சுற்றுவது போலச் சுற்றினால், அம்மனையில் நல்ல சக்திகள் ஆட்சி செய்கின்றன என்றும், அவ்வாறு போடப்பட்ட மலர்கள் இடமாகச் சுற்றினால், அம்மனையில் சுபமான சக்திகள் அவ்வளவாகப் பலம் பெறவில்லை என்றும் பொருள்.

    சரியான முடிவுகள் கிடைக்கப்பெறாத நிலங்களை ஆராய்ந்து பார்த்த அக்கால வாஸ்து சாஸ்த்திர நிபுணர்கள், அந்த நிலங்களின் பஞ்சபூத விகிதாச்சாரங்களில் ஏற்பட்ட குற்றம் குறைகளை, அதனதன் தன்மைக்கேற்ற விதங்களில் நிவர்த்தி செய்த பின்பே கட்டிட வேலைகளை தொடங்கி நல்ல விதமாகக் கட்டி முடித்தார்கள்.

    • கிரகண நேரத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம்.
    • கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.

    25.10.2022 அன்று மதியம் 2.28 மணி முதல் கிரகண அமைப்பு உருவாகத் தொடங்கினாலும், உச்ச பரிணாமமாகத் தெரிவது மாலை 5 மணிக்கு மேல்தான்.

    சூரிய கிரகண ஆரம்ப காலம் மாலை 5.14 மணி.

    சூரிய கிரகண மத்திய காலம் மாலை 5.42 மணி.

    சூரிண கிரகண முடிவு காலம் மாலை 6.10 மணி.

    கிரகணம் என்பது வானில் தோன்றுகின்ற ஒரு அதிசய, அற்புத நிகழ்வு. சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும் பொழுது ஏற்படுகின்ற நிகழ்வுதான் 'கிரகணம்' என்று சொல்வார்கள். ஆற்றல் நிறைந்த கிரகண காலத்தில் என்னென்ன செய்யலாம். என்னென்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஒவ்வொரு கிரகண காலத்திலும் கவனமுடன் இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் பற்றிப் பஞ்சாங்கம் மூலமாக எடுத்துரைத்திருக்கின்றார்கள்.

    தோஷம் பெறும் நட்சத்திரங்களுக்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்வது என்பதை நாம் அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

    பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் பொழுது இந்த சுபகிருது ஆண்டில் ஐப்பசி மாதம் 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை (25.10.2022) அன்று `பார்சுவ சூரிய கிரகணம்' ஏற்படுகிறது. அன்றைய தினம் சுக்லபட்சம் பிரதமை திதியில் ராகுவிற்குரிய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில், துலாம் ராசியில் கேது கிரகஸ்தம் கூடிய நேரத்தில் கிரகணம் ஏற்படுகிறது.

    இந்தக் கிரகணத்தால் தோஷம் பெறும் நட்சத்திரங்கள் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகியவை என்பதால், அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தோஷ நிவர்த்திக்குரிய வழிபாடு, பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

    கிரகணத்தை நேராகக் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகண ஆரம்பத்திற்கு முன்பே சாப்பிட்டு விடுவது நல்லது. அல்லது கிரகணம் முடிந்த பின்னால் குளித்து முடித்து உணவு அருந்துவது உத்தமம்.

    கர்ப்பிணிப் பெண்கள், கிரகண நேரத்தில் உடலில் சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது. ஏனென்றால் அந்த நேரத்தில் ஏற்படுகின்ற கதிர்வீச்சின் தாக்குதலால் வயிற்றில் உள்ள சிசுவிற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கிரகண நேரத்தில் உடலில் உள்ள ஜீரண பகுதிகள் வலிமை இழக்கும். எனவே அப்போது திட உணவுகளை சாப்பிடக்கூடாது. பசி உள்ளவர்கள் திரவ ஆகாரங்களை சாப்பிடலாம். உணவுப் பொருட்களில் கிரகண கதிர் வீச்சுக்களின் தாக்கம் இல்லாமல் இருக்க, தர்ப்பைப் புல் போட்டு வைப்பது நல்லது.

    உணவுப் பாத்திரம், தண்ணீர்ப் பானை போன்றவற்றின் மேல் தர்ப்பைப் புல் போட்டு வைக்கலாம். அல்லது வைக்கோல் துரும்பும் போட்டு வைக்கலாம். தர்ப்பைப் புல் எல்லாவிதமான தீய சக்தியில் இருந்தும் நம்மைக் காக்கும் தன்மை கொண்டது. விஷ முறிவுச் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெறும் பொருளாகவும் அது கருதப்படுகிறது. எனவே தர்ப்பைப் புல்லை கையில் உள்ள மோதிர விரலில் சுற்றி வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் தலையில் ஒரு தர்ப்பைப் புல்லை சொருகி வைத்துக்கொள்ளலாம்.

    இந்த கிரகண கால நேரம், ஒரு அருமையான நேரம் ஆகும். வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். கோவில்களில் நடை மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்ததும் நடை திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னா் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    கிரகண நேரத்தில் நமது இல்லத்தில் நமக்கு உகந்த தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம். இந்த வேளையில் இறை நாமத்தை ஒருமுறை நாம் சொன்னால் ஆயிரம் முறை சொன்ன பலன் நமக்குக் கிடைக்கும். முற்காலத்தில் எல்லாம் கற்றுத் தேர்ந்த நம்பிக்கை மிக்க சீடர்களுக்கு கிரகண காலத்தில் தான் குரு உபதேசங்களை வழங்குவார். குரு மூலம் தீட்சை கிடைக்கும் நேரமாக இந்த நேரம் கருதப்படுகிறது. இறையருள் சித்திக்கும் இந்த நேரத்தில் இல்லத்தில் இறை நாமங்களை உச்சரிப்பது நல்லது.

    இந்த நேரத்தில் எந்தெந்த நட்சத்திரங்களுக்குத் தோஷம் உருவாகிறதோ அந்த நட்சத்திரக்காரர்கள் கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்து ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். குளிக்கும் தண்ணீரில் கல்உப்பு ஒரு சிட்டிகை அளவு போட்டுக் குளிப்பது நல்லது. சூரிய கிரகணத்தால் உடல்நிலையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாதிருக்க கல் உப்புப் போட்டுக் குளிக்க வேண்டும். சூரிய கிரகணம் என்பதால் சூரியனுக்குரிய கோதுமையைத் தானம் கொடுப்பதோடு, ஒரு தாம்பாளத்தில் ராகுவிற்குரிய உளுந்து, கேதுவிற்குரிய கொள்ளு கொஞ்சம் வைத்து, அத்துடன் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு காணிக்கை வைத்து சூரியன் சன்னிதியில் தானம் கொடுத்து வழிபட்டு வருவது நற்பலன் தரும்.

    கடன் சுமையின் காரணமாக தடுமாறுபவர்கள் வாங்கிய கடனில் ஒரு சிறு தொகையை இந்த நேரத்தில் உரியவர்களிடம் கொடுத்தால் கடன் முழுவதும் தீர வழிபிறக்கும். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க உகந்த நேரம் இதுவாகும். கிரகண காலத்தில் மன ஒருமைப்பாடும், நேர்மறைச் சிந்தனையும் உங்கள் வாழ்வை வளப்படுத்தும். எண்ணங்களுக்கு வலிமை அதிகம் கிடைக்கும். இந்த நேரத்தை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

    பொதுவாக இந்த கிரகண நேரம் வலிமையான நேரம் என்பதால் இல்லத்தில் இருந்து நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தெய்வீக சக்தி அதிகரிக்கும். அதே நேரம் நுண்கிருமிகளின் தாக்குதல் ஏற்படாமல் இருக்கவும், கதிர்வீச்சின் தாக்கம் உடலில் ஏற்படாதிருக்கவும் உணவில் கட்டுப்பாடு செலுத்தி வீட்டிற்குள்ளேயே கிரகணம் முடியும் வரை இருப்பது நல்லது.

    'ஜோதிடக்கலைமணி' சிவல்புரி சிங்காரம்

    • இந்த பரிகாரத்தை முழு மனதோடு செய்ய வேண்டும்.
    • செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது.

    உங்களுடைய அத்தனை கடன் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிற எளிய பரிகாரம் ஒன்று உள்ளது. இந்த பரிகாரம் செய்யும் போது அந்த கடனை அடைத்து விடணும் என்று நீங்கள் முழு மனசோடு செயலில் இறங்கணும். அப்புறமா அந்த பரிகாரத்திற்கு சரியான நாள் செவ்வாய் கிழமை.

    செவ்வாய் கிழமைகள் பொதுவாகவே அம்பிகைக்கு உகந்த நாள். நவக்கிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் தான். இது தான் மங்கலகரமான கிரகம். செவ்வாய்க் கிழமையன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழுப்பலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான்.

    திங்கள், புதன், வியாழன், வெள்ளி நல்ல காரியங்களைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று நினைப்பார்கள். ஆனால் நல்ல நாளாக இருந்தாலும் பிரதமை, அஷ்டமி, நவமி திதிகள் வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய்கிழமையும் உகந்த நாள் தான். மெளன அங்காரக விரதம் ஒன்று உண்டு. தர்மசாஸ்திரத்தில் இதைப் பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று மெளனவிரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம் என்கிறது.

    அதாவது செவ்வாய்க் கிழமையன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். இயற்கையிலேயே செவ்வாய் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர். அன்றைய தினம் நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பித் தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். தொடர்ந்து மூன்று செவ்வாய் கிழமைகளில் உங்கள் கடனின் ஒரு பகுதியைக் கொடுத்து வர, கடன் விரைவில் அடைப்படும்.

    மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று கூறுவதுண்டு. இந்த நாளில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம் , சஷ்டி அப்த பூர்த்தி போன்றவற்றைச் செய்யலாம். மனையடி சாஸ்திரம் செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றே கூறுகிறது. பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம், செவ்வாயன்று இருந்தால் உறுதியான வெற்றியைத் தரும்.

    • 25-ம்தேதி பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை சூரிய கிரகணம் சம்பவிக்கப் போகிறது.
    • இந்த சூரிய கிரகணம் 2022-ம் ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம்.

    கிரகண காலத்திற்கு முன், பின் 7 நாட்கள் பூமிக்கு தோஷ காலமாகும்.கிரகண காலங்களில் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு சற்று கடுமையாக இருக்கும். சூரிய கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தந்தை வழி கர்மாவையும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள் தாய் வழிக் கர்மாவையும் அதிகம் சுமந்து பிறக்கும்.

    கிரகணம் சம்பவிக்கும் போது ராகு, கேது, சூரியன், சந்திரன் இணைவு பெறும் கிரகங்களும் அந்த சொந்த பாவகமும், நின்ற பாவகங்களும் பாதிக்கப்படும். கிரகணத்தில் பிறந்த ஜாதகருக்கு சூரியன் + ராகு, கேது அல்லது சந்திரன் + ராகு, கேது சேர்க்கை இருக்கும். இந்த கிரக இணைவை குரு பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலோ சூட்சம சக்திகள் இருக்கும் . தீய சக்திகள், பில்லி சூனியம், மாந்தரீகம், செய்வினை எளிதில் தாக்காது.

    புண்ணிய பலன் மிகுந்து கொண்டே இருக்கும். கிரகணத்தில பிறந்தவர்களுக்கு சூரியன் + ராகு, கேது சேர்க்கையுடன் சனி, செவ்வாய் தொடர்பு பெற்றால் உடல் ஊனம் நோய் தாக்கம், மன வளர்ச்சி குறைவு, ஆயுள் குறைவு, தீராத கடன், வறுமை, வம்பு வழக்கு, முன்னேற்றக் குறைவு, போதிய கல்வியின்மை, திருமணத்தடையாலும் பெரும் பாதிப்பை அடைகின்றனர். திருமணத் தடையை சந்திப்பவர்களில் தலைகீழாக நின்றும் திருமணமே நடக்காதவர்கள் சிலர் கிரகண காலங்களில் பிறந்தவர்கள். அப்படி என்ன பாவம் செய்து கிரகண காலத்தில் பிறந்தார்கள் என்ற கேள்வி வாசகர்களுக்கு இங்கே எழும்.

    மனசாட்சிக்குப் புறம்பான செயல்கள் மற்றும் பிரபஞ்ச நியதிக்கு எதிரான பின்வரும் காரியங்களில் ஈடுபட்டதன் வினைப் பதிவாகும். வட்டித்தொழில் செய்தவர்கள், காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது, அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது,பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது, கோவில் சொத்தை அபகரிப்பது, பசுக்களை, விலங்குகளை வதைப்பது, இயற்கையை மாசுபடுத்துவது, நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்றவையாகும்.

    கிரகண தோஷத்தை பாதிப்பை கிரகண கால வழிபாட்டின் மூலமே தீர்க்க முடியும்.

    ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான சுப வருடம் ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 திருக்கணித பஞ்சாங்கப்படி செவ்வாய்கிழமை அமாவாசையன்று பகல் 2.28 முதல் மாலை 6.32 மணி வரை மற்றும் சுவாதி நட்சத்திரத்தில் கேது கிரஹஸ்த சூரிய கிரகணம் காலபுருஷ 7-ம் இடமான துலாம் ராசியில் சம்பவிக்கப் போகிறது.

    இந்தியாவில் தெரியும் இந்த சூரிய கிரகணம் 2022-ம் ஆண்டின் மூன்றாவது சூரிய கிரகணம். சூரியன், சந்திரனுக்கு ராகு, கேது சம்பந்தம் இருப்பது கடுமையான பித்ரு தோஷம்.அந்த கிரகண நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் ஏழு தலைமுறை பித்ரு சாபம், பித்ரு தோஷம் நீங்கும்.

    ஜனன கால ஜாதகத்தில் கடுமையான சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷத்தால், கிரகண தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாக பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தால் சர்ப்ப தோஷம் நிவர்த்தியாகும். சூரிய கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வதால் ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் உண்டாகும்.

    • தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும்.
    • தங்கள் ராசிக்கு எந்த தொழில் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதை ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    பொதுவாக நம்மில் பலருக்கு தொழில் தொடங்க வேண்டும் என்றால் அதற்கு யோகம் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதற்காக யோகம் வரும் என்று நாம் அதற்கான காலத்தை எதிர்பார்க்க கூடாது. இருப்பினும் ஜாதக ரீதியாக நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் ராசிக்கு எந்த தொழில் தொடங்கினால் வெற்றி பெறலாம் என்பதை நன்கு ஜோதிடம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இருப்பினும் லக்னத்தில் இருந்து 11-ம் இடத்தில் எந்த கிரகம் இருந்தால் எந்த தொழில் மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றி விவரம் வருமாறு:-

    11-ல் சூரியன் இருக்கப் பெற்றவர்கள் தந்தை வழி தொழில்கள் மூலம் லாபம் பெறுவார்கள்.

    11-ல் சந்திரன் இருக்கப் பிறந்தவர்கள் வாகன சுக போக வாழ்வோடு வாழ்வார்கள். ஆண்களுக்கு திருமணத்திற்கு பிறகு புது மனைவியால் சொத்துக்கள் குவியும்.

    11-ல் செவ்வாய் இருக்க பிறந்தவர்கள் துணிச்சல் உள்ளவர்கள். பல வழிகளிலும் பொருள் கிடைக்கும். நினைத்த மிகப்பெரிய எண்ணங்கள் கைகூடும். சொந்த நிலமும் வீடுகளும் அமையும்.

    11-ல் புதன் இருக்கப் பிறந்தவர்களுக்கு மன வளமும் அறிவு வளமும் பெருகும். மாமேதையாக விளங்குவார்கள். பொறியியல், நிர்வாகம், ஆடிட்டர் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.

    11-ல் குரு இருக்கப் பிறந்தவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வார்கள். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

    11-ல் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள். பெரும் பகுதி ஊர் சுற்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். நாகரிக வஸ்துகள், வாசனைத் திரவியங்கள் விற்றுப் பொருளீட்டுவார்கள்.

    11-ல் சனி இருக்கப் பிறந்தவர்கள். பல ஆட்களை வேலைக்கு அமர்த்தி தொழில் செய்வார்கள். கட்டிடம், ஒப்பந்த தொழில்கள் கை கொடுக்கும்.

    11-ல் ராகு இருக்கப் பிறந்தவர்கள். ராணுவத்துறைக்குச் சென்று பொருளீட்டுவார்கள். அயல்நாடு சென்று பொருட்களை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் லாபம் பெறுவார்கள்.

    11-ல் கேது இருக்கப் பிறந்தவர்கள். திடீர் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். ஏழையாகப் பிறந்தவரும் திடீர் லாபத்தைப் பெறுவார்கள். தர்மகாரியம் செய்வார்கள்.

    • வில்வ மரத்தை வலம் வருவது, மகாலட்சுமியை வலம் வருவதற்கு நிகரானது.
    • சிவாலயங்களில் வில்வ மரம் இருப்பதை காண முடியும்.

    பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ மரம் இருப்பதை காண முடியும். அதனை தரிசித்து வந்தாலே வாழ்வில் உண்டாகும் பெரும் துன்பங்களில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் அதே வில்வ மரத்தை நாமே வளர்த்தோம் என்றால், நாம் செய்த பாவங்கள், நாம் பெற்ற சாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்து. இதுபற்றி பார்ப்போம்..

    வில்வ விதைகளை நல்ல சுப நாளில் வாங்கி, அதை ஒரு மண் தொட்டியில் போட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். உரமாக நீரில் பசுஞ்சாணம் சிறிது கலந்து தெளிக்க வேண்டும். இதையடுத்து சில நாட்களில் வில்வ கன்று விதையில் இருந்து துளிர்க்கும்.

    விதையை நட்டதில் இருந்து சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை தினமும் ஜெபித்து வர வேண்டும்.

    வில்வ மரம் ஒரு அடி வளர்ந்ததும் அவரவருக்குரிய ஜென்ம நட்சத்திர நாளில், ஏதாவது ஒரு சிவன் கோவிலில் அந்த வில்வக் கன்றை நட்டு வைத்து, நன்கு பராமரிக்க ஆட்களை நியமிக்கலாம். வில்வ மரம் 6 அடிக்கு மேல் வளர்ந்து விட்டால் அது தானாகவே தழைக்கும். நாம் வளர்த்த மரத்தின் இலைகளைக் கொண்டு சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், அனைத்து தீயபலன்களும் விலகும். தலைமுறை தாண்டிய சாபமும், பாவமும் நீங்கும்.

    சிவன் கோவில்களில் வில்வ கன்றை வைக்க முடியாவிட்டால், கோவில் அருகில் வைத்து வளர்க்கலாம். வில்வ மரத்தை வலம் வருவது, மகாலட்சுமியை வலம் வருவதற்கு நிகரானது.

    • மாவிளக்கு பூஜை செய்வது சாலச் சிறந்தது.
    • நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கலகாரியங்களும் சித்திக்கும்.

    சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி. திருமணமாகாத பெண்கள், இந்தப் புரட்டாசி மாத நாட்களில் தினமும் திருமாலை வழிபட்டு வந்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து கல்யாண வரம் பெறுவார்கள் என்பது உறுதி.

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து, பூஜை அறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, பூ வைத்து, பெருமாளின் திருஉருவத்துக்குப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். பிறகு சுத்தமான பச்சரிசியை சன்னமாக இடித்து மாவெடுத்து, அத்துடன் வெல்லம் கலந்துப் பிடித்துவைக்க வேண்டும். இதில் திரி-நெய் இட்டு விளக்கேற்றி, மலர், துளசி, அட்சதை கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரின் திருநாமங்களை மனதாரச் சொல்லி வழிபட வேண்டும். அப்படிச் செய்தால் அந்த இடத்தில் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதீகம்.

    ஆண்டின் எல்லா நாட்களிலும் திருப்பதியில் இப்படி ஒரு வழிபாட்டினை, பல பெண்கள் கோவிலின் பல இடங்களில் செய்வதைப் பார்க்கலாம். திருமண வரம் பெற இது அற்புதமான வழிபாடு என்று பெரியோர்கள் கூறுவார்கள். புரட்டாசி மாதத்தில் காலை நேரத்தில், வீடுகளில் திருவிளக்கு மாவு கொண்டு பெருமாளை வழிபட்டுவிட்டு, மாலையில் கோவிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால், மிகவும் சிறப்பு என்கின்றனர்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் புரட்டாசி சனிக் கிழமைகளில், நரசிம்மர் திருவீதி உலா நடை பெறுவது விசேஷம். அவ்வேளையில் மாவிளக்கு பூஜை செய்வது சாலச் சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமன்றி, எல்லா சனிக்கிழமைகளிலும் வெல்லம் கலந்த அரிசி மாவில் நெய்விளக்கிட்டு, நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கலகாரியங்களும் சித்திக்கும், வளங்கள் பெருகும்.

    • மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு ஏற்படும்.
    • இன்று செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலனைத் தரும்.

    செவ்வாய்க்கிழமையும், அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக சேரும் நாள் பவுமாஸ்வினி எனப்படும். இன்று (செவ்வாய்க்கிழமை) செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பல மடங்கு அதிகமான பலனைத் தரும்.

    குறிப்பாக ஸ்ரீ மகாவிஷ்ணு அருள் பெறுவதற்காக தயிர் சாதத்தை ஊறுகாயுடன் சேர்த்து ஆழ்வார்கள் சன்னதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வழங்கலாம்.

    இதனால் மகாவிஷ்ணு அருளால் சிறந்த கல்வி அறிவு ஏற்படும். ஜாதகப்படி சனி கிரகத்தால் ஏற்படும் கஷ்டங்கள் விலகி நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் உண்டாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும்.
    • கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    சென்னை :

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள், அதாவது ஐப்பசி மாதம் 8-ம் நாள் 25.10.2022 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.10 மணி முதல் 5.45 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    இந்த கிரகணமானது இந்தியாவில் தென்படும். ஆகையால் கோவிலில் பூஜை செய்யும் நமது சமூக சொந்தங்கள் அன்று மாலை கோவில்களை மாலை 6.15 மணிக்குமேல் திறந்து வழக்கமான பூஜைகளை செய்யலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

    மேலும் முருகன் கோவில் பிரதானமாக உள்ள கோவில்கள் சூரசம்ஹார கொடியேற்றத்தினை மாலை 6.30 மணிக்கு மேல் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

    கிரகண காலத்தில் திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களும், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம் ராசிக்காரர்களும், சாந்தி செய்வது உத்தமம். மற்ற ராசிக்காரர்கள் நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு கோதுமை, சிகப்பு ஆடை, சர்க்கரைப் பொங்கல், அரளிப்பூ சகிதம் அர்ச்சனை செய்யலாம்.

    சாந்தி செய்யக்கூடியவர்கள் மட்டைத்தேங்காய், அரிசி, வெற்றிலைப்பாக்கு, பூக்கள், மேலுள்ளவைகளை சேர்த்து சகிதம் அர்ச்சனை செய்து கொள்ளலாம்.

    மாலை 4.30 மணி முதல் 6.15 மணி வரை அனைத்து மக்களும் நீராகாரம் உள்பட எதுவும் அருந்தக்கூடாது. கர்ப்பிணிகள் வீட்டிலேயே அமைதியான சூழலில் படுத்து இருக்க வேண்டும்.

    பொதுமக்கள் அருகில் உள்ள கோவில்களில் தர்ப்பை பெற்று வீட்டின் வாசற்கால் மற்றும் மளிகை, காய்கறி, பொருட்கள், தயிர், பாலில் போடலாம். மதியம் உணவு அருந்தக்கூடாது.

    ×