என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    மயில் முருகப்பெருமானின் வாகனம். அதுமட்டுமல்ல நமது தேசியப் பறவையும் ஆகும். மழை மேகம் பார்த்தால் மயில் தோகை விரித்தாடும். அங்ஙனம் ஆடும் பொழுது ஒருசில இறகுகள் கீழே விழும்.

    அங்ஙனம் கீழே விழுந்த இறகுகளை எடுத்து வந்து வீட்டு பூஜையறையில் வைத்தால் வாஸ்து தோஷம் போகும். வீட்டின் முன்பகுதியில் சொருகி வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும்.

    காவடியில் மயிலிறகு வைப்பது வழக்கம். வீட்டில் மயிலிறகு, அருகம்புல், துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. 
    தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரிபூரண குணம் பெற மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.
    ‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள். நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் ஒரு இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது.

    ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது. கருவறையில் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

    தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரிபூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை.

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கபள்ளம். 
    நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இந்த குருகிரக பதிப்பால் வரக்கூடிய நோய்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான்.

    குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். கட்டுமஸ்தான உடல்வாகு தரக்கூடியவர் குரு. நிரந்தரமான வெற்றி மகுடத்தை சூட்ட வைப்பவர். மறைந்த பின்பும் சிலையாக இருந்து மரியாதை செய்ய வைப்பவர். விசுவாசம் மிக்க உறவுகள் மனைவி, குழந்தைகள் கொடுப்பார். உயிரை கொடுக்கும் நண்பர்களை தருபவர்.

    ஒருவர் ஜாதகத்தில் குரு யோகம் பெற்றிருந்தால், அந்த நபரை அரசியலில் உயர் பதவிகள் தேடி வரும். சட்ட நுணுக்கம் தெரிவதும், கோவில் வேத ஆகம விதிப்படி பூஜை புணஸ்காரம் செய்யும் நுணுக்கமான கலைகள் கற்று இருப்பதற்கு குருவே காரணம். வழக்குகள் சாதகமாக அமைய வைப்பது குருவே. அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக்கியம் தருவதும் குரு தான்.

    எல்லா இன்பங்களையும் துறந்து துறவரம் மேற்கொள்ளும் வைராக்கியமான மனதை கொடுப்பவரும் குரு தான். எதையும் தாங்கும் இதயம் என்று சொல்லக்கூடிய, மன உறுதியைத் தருபவர். உடலையே மறைக்கும் அளவில் தங்கம் தரக்கூடியவர். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கும் பாக்கியம் தருபவர். விருதுகள் பெற வைப்பது குருவே; செய்த தர்மங்களால் துன்பங்கள் வராமல் காத்து நிற்கும் புண்ணியத்தைத் தருபவரும் குருவே. குழந்தைகள் மேன்மை அடைந்து அவர்கள் மூலம் ஆதாயம் பெற வைப்பதும் குருவே, மனக்கவலை இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவதும் குரு பகவான் தான்.

    னி குரு கிரகத்தால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்ப்போம்.

    குருகிரக பதிப்பால் வரக்கூடிய நோய்கள்

    உச்சிமூளையில் கட்டிகள் உண்டாவது, பெரிய மூளை செயல் இழப்பது, மூளைக்காய்ச்சல் போன்றவற்றிற்கு காரணமானவர் குரு பகவான். நமது மூளையின் சக்தி தரும் அறிவு, அதன் செயல்பாடுகளை குறித்து கூறுவதும் குரு தான். தசை பிடிப்புகள், தசை வலிகள், உடல் வலி இருந்து கொண்டே இருப்பதற்கும் குரு தான் காரணம். கண்கள் கோணல் மாணலாக இருப்பதற்கும், பெருத்த குண்டான உடலுக்கும், மேல் பற்கள் உதட்டிற்கு வெளியே நீட்டிக் கொண்டிருப்பதும் குருவின் ஆதிக்கத்தால் தான். பெண்கள் கர்ப்பம் தரித்து சிசு வளர்வதற்கு பொறுப்பானவர் குரு தான்.

    ஒருசிலருக்கு நோய் தீர்க்க போதிய காலம், நேரம், சூழ்நிலை இல்லாமல் போவது, நோய்கள் போக்க பணம் இன்றி தவிப்பது, புளித்த ஏப்பம், கெட்டவாடையோடு வரக்கூடிய ஏப்பத்திற்கு குருவே காரணம். அடிக்கடி ஞாபக மறதியைத் தருபவரும் குரு தான். மனக்கவலை, நிலையான வாழ்க்கை இல்லாமை, மனதிற்கு பிடிக்காத சம்பவங்களாக நடப்பது அனைத்திற்கும் குரு தான் காரணமாக இருக்கிறார்.

    குரு பாதிப்பு விதிமுறைகள்

    * குரு பகை ராசிகளில் நின்று இருந்தால், அந்த ஜாதகருக்கு நோய்களால் மன உளைச்சல் உண்டாகும். உடல் வலிகள், தசை பிடிப்புகள் இருக்கும். ஏதாவது நோய்க்கு மருந்து சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இவர்களது குழந்தைகள் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பர். தாய் தந்தை மனம் அறிந்து நடக்க மாட்டார்கள்.

    * குரு நீச்ச ராசியான மகர ராசியில் நின்று இருந்தால், ‘ஏன் இந்த பிறவி எடுத்தோம்’ என்று வருந்தும் அளவிற்கு நோய்கள் தொல்லை கொடுக்கும். உடல் கெட்டு போக ஜாதகரே ஒரு காரணமாக இருப்பார். அஜீரண கோளாறு இருக்கும். இவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் இருக்காது. அப்படியே குழந்தை இருந்தாலும், அவர்களால் பயன் இருக்காது.

    * குரு தன்னுடைய பகை கிரகங்களுடன் சேர்ந்திருந்தால், சுப கிரகமான புதன், சுக்ரன் சேர்ந்து இருப்பது நோய்களின் வீரியத் தன்மையை குறைக்கும் என்றாலும், சர்க்கரை நோய், நரம்பு தளர்வு, ரத்த அழுத்தம் போன்ற பெரிய நோய்கள் தாக்க கூடும். இவர்களது குழந்தைகள் கலைகளில், அறிவில் பெரிய புகழ் அடைவார்கள்.

    * குரு தன்னுடைய பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகரின் முகத்தில் மருகு, வடுக்கள் வரலாம். பற்கள் சீராக இல்லாமல் இருக்கும். வயிற்றில் கட்டிகள் தோன்றி மறையும். புதிய நோய்கள் வரக்கூடும். குழந்தைகளின் போக்கும் செயலும் கவலை தரக்கூடும்.

    * குரு லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்றிருந்தால், சிறுவயதில் ஞாபக மறதி வரக்கூடும். உடல் வலிமை இருக்காது. விந்து அணுக்கள் குறைவாக இருக்கும். அஜீரண கோளாறு, கல்லீரல் கோளாறு இருக்கும். இவர்களது குழந்தைகள் அன்பு, பாசம், பரிவு இல்லாமல் இருப்பார்கள்.

    * குரு 6, 8, 12 ஆகிய இடங்களின் அதிபதியுடன் இணைந்து இருந்தாலோ, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, உடலில் கட்டிகள் தோன்றி மறையும். பற்கள், ஈறுகளில் ரத்த கசிவு, பற்கள் சிதைவு உண்டாகும். மூளை கெட்டு போன நிலையில் என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பார்கள். தன்னுடைய உடலையே வெறுப்பார்கள்.

    * குரு லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ நோய்களின் வீரியம் அதிகமாகும். உடலை பற்றியும் நோய்களை பற்றியும் போதிய அக்கறை இருக்காது. உயிர்கொல்லி நோய், குடல் இறக்கம் என்னும் நோய்கள் வரக்கூடும். குழந்தைகளுக்கு ஆயுள் கண்டம் வரக்கூடும். அடிக்கடி தொற்றுநோய்கள் தாக்கும்.

    * குருவே லக்னத்திற்கு பாதகாதிபதியாக இருந்தாலோ, பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ உடல் வலி, எலும்பு முறிவு, முதுகு தண்டுவடம், எலும்புகள் விலகுதல், கணையம், மண்ணீரல் பாதிப்பு அடையும்.

    * குருவை பகை கிரகங்கள் மற்றும் பாதகாதிபதி கிரக பார்வை இருந்தால் தொற்று நோய்கள் வரக்கூடும். உடலில் கட்டிகள், வலிகள் இருக்கும். ஜாதகர் செய்யும் தவறுகள் மூலம் சில நோய்கள் வரக்கூடும்.

    ஆர். சூரிய நாராயணமூர்த்தி. 
    கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருச்சேறை கோவில் கடன் பிரச்சனை தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
    தென்கரையில் அமைய பெற்ற 127 தலங்களுள் 95வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கே உள்ள கடன் தீர்க்கும் ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் மிகவும் விஷேசமானது.

    ஆனால் அதை மட்டும் வணங்கினால் போதாது கருவறையில் இருக்கும் செந்நறியப்பர் என்று சொல்லப்படும் சாரபரமேஸ்வரையும் சேர்த்து வணங்க வேண்டும். ஆலயத்தில் அருளாட்சி செய்யும் ஞானவல்லி எனப்படும் ஞானாம்பிகயை கும்பிட வேண்டும். இங்குள்ள பைரவர் மிகவும் விசேஷமானவர். இவர் சிவனை வழிபட்டவர்.

    அதற்கு அடையாளமாக இவரது இடது மேற்கரத்தில் சூலம் போட்ட மணியினை தாங்கியிருக்கிறார். கடன்கள், பிறவி கடன்கள் முதலியவை நீங்க அருள் செய்வதால் இத்தலத்தை கடன் நிவர்த்தி தலம் என்கிறார்கள்.
    கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியான கோனியம்மனை வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
    வளமையும், பெருமையும் மிக்க கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோவில், பேட்டை ஈசுவரன் கோவில் என்ற இரண்டு சிவாலயங்களுக்கு மத்தியில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில். 3 கோவில்கள் 3 கண் போலவும் அதில் கோனியம்மன் திருக்கோவில் நடுவில் உள்ள நெற்றிக்கண் போலவும் அமைந்துள்ளது. கோவை மாநகரின் மையமாகவும் கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக கோனியம்மன் விளங்கி தன்னை வணங்குவார்க்கு தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வரியா மனந்தரும் என்ற அபிராமி அந்ததி கூறும் முறையில் திருவருட்செல்வம் வழங்கி வருகின்றாள்.

    கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாகவும், காவல் கடவுளாகவும், வணங்கி வழிபாடு செய்வோர்க்கு அருளும் திருவருட் சக்தியாகவும், சாந்தி துர்க்கா பரமேஸ்வரியாகவும் கோனியம்மன் திருவருட் பொலிவுடன் விளங்குகின்றாள்.
     
    கோனி அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர். பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

    அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.

    இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர். நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.
     
    துன்பம் வரும்போது, இறைவனை நாடிச் சென்று முறையிடுவோரின் எண்ணிக்கை ஏராளம். தடை, தாமதங்களுக்கு இங்கு எளிய பரிகாரம் தரப்பட்டுள்ளது.
    மனித வாழ்வு ஏற்றத்தாழ்வு நிறைந்தது. எல்லோரும் எப்போதுமே மகிழ்ச்சியாகவும் இருந்து விடுவதில்லை. துன்பத்தில் சிக்கி அல்லல்படுவதும் இல்லை. இன்பத்தையும், துன்பத்தையும் மாறி, மாறி அனுபவிப்பதே மனிதவாழ்வு. ஆனால் துன்பம் வரும்போது, இறைவனை நாடிச் சென்று முறையிடுவோரின் எண்ணிக்கை ஏராளம். தடை, தாமதங்களுக்கு இங்கு எளிய பரிகாரம் தரப்பட்டுள்ளது.

    துன்பங்கள் நீங்க..

    ஏதாவது ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பசுவுக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்து வர வறுமை நீங்கும். செல்வ நிலை உயரும்.

    தொழில் விருத்தியாக..

    கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சைப் பழம் ஒன்று வாங்கி, கடை மற்றும் அலுவலகம் முழுவதும் சுற்றி விட்டு, வெளியில் நின்று நான்கு துண்டாக நறுக்கி, தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். இவ்வாறு செய்வதால், கடை மற்றும் அலுவலகத்தில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும். இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்வது நல்லது.

    திருமணத்தடை விலக..

    திருமணத்தடை இருப்பவர்கள், நல்லெண்ணெய் தேய்த்தும், கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்தும் குளிக்கவும். பின்னர் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும். வறுமை நீங்குவதற்கும், வேலைவாய்ப்பு கிடைக்கவும் கூட இதைச் செய்யலாம். ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தைச் செய்யவும். 
    திருச்சி ஊட்டத்தூரில் உள்ள ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டால் சிறுநீரக நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
    திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ளது அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலத்தில் உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற ஒரே கல்லால் ஆன "பஞ்ச நதன நடராஜர்" அருள்புரிகிறார்.. இத்தல நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டால் சிறுநீரக நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    ஆசியாவிலேயே மிகவும் அரிதான, பஞ்சநத கல்லில் செய்யப்பட்ட நடராஜர் திருமேனி. இந்த கற்கள் சூரியனில் இருந்து வெளிவரும் ஆரோக்கிய கதிர்வீச்சினை சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையன. இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது.

    சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

    சிவகாமி அம்மையும் அழகோ அழகு.வெட்டிவேர் மாலையை நடராஜருக்கு சாற்றி பூஜை செய்து அந்த மாலை எடுத்து வந்து 48 நாட்கள் சாப்பிட
    சிறுநீரக நோய்கள் தீரும் அனுபவ உண்மையாகும்.

    சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.

    சிவகாமி அம்மையும் அழகோ அழகு.வெட்டிவேர் மாலையை நடராஜருக்கு சாற்றி பூஜை செய்து அந்த மாலை எடுத்து வந்து 48 நாட்கள் சாப்பிட
    சிறுநீரக நோய்கள் தீரும் அனுபவ உண்மை...
    இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சனி பகவான் பரிகாரத் தலம் ஆகும். ஏழரைச்சனியின் துன்பத்தை நீக்கும் பரிகார தலம் இதுவாகும்.
    இலத்தூர் அறம்வளர்த்த நாயகி சமேத மதுநாத சுவாமி திருக்கோவில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்தது. சனி பகவான் பரிகாரத் தலம் இது. நவக்கிரகங்களுள் ஒன்றான சனீஸ்வர பகவான் தனிச்சன்னிதி கொண்டு தெற்கு நோக்கி வீற்றிருக்கும் ஒரே தலம் இலத்தூர் ஆகும்.

    மனிதர்கள் மட்டுமல்லாமல் சிவனையே சனி பகவான் சில காலங்களில் பிடித்து ஆட்டிப் படைத்துள்ளார். சிவன் விஷமுண்டது கண்டகச்சனி காலத்திலும், தட்சனிடம் அவமானப்பட்டது அஷ்டமச்சனி காலத்திலும், குளத்தில் உள்ள கருங்குவளை மலருக்கடியில் ஏழரை நாழிகை மறைந்திருந்தது ஏழரைச்சனி காலத்திலும் ஆகும். அத்திருக்குளம்தான் இத்திருக்கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளதாக தல வரலாறு சொல்கிறது.

    அகத்தியருக்கு ஏழரைச்சனி ஆரம்பித்ததும், பொதிகை மலையில் இருந்து புறப்பட்டு, ஏழரை ஆண்டுகள் வடதிசை சென்று திரும்பும் வழியில் அனுமன் நதி பாயும் இத்திருக்குளத்தில் நீராடிவிட்டு புளிய மரத்தடியில் உள்ள சிவனை வழிபட்டு, அருகிலேயே ஈசனின் இருப்பிடமான கயிலாயத்தை (வடக்கு) நோக்கி அமர்ந்து சனிபகவானை நினைத்து, சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடினார். இதையடுத்து அவருக்கு சனீஸ்வர பகவான் காட்சியளித்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்திருந்ததால் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அகத்தியருக்குக் காட்சியளித்தார்.

    குளத்தில் இருந்த கருங்குவளை மலருக்கடியில் ஈஸ்வரன் மறைந்திருந்ததாலும், ஏழரைச்சனி போக்கின்போது அகத்தியர் இக்குளத்தில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசித்ததாலும் இக்குளம் அகத்தியர் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    ஏழரைச்சனி விலகுபவர்கள் மட்டும் இதில் நீராடிவிட்டு சனி பகவானை தரிசிக்க வேண்டும். மற்றவர்கள் நேரடியாக கோவிலுக்குள் சென்று வணங்கலாம். இங்கு பொங்கு சனியாக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சனீஸ்வர பகவான் பிரசாதத்தை வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.

    திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது இலத்தூர். சென்னை, மதுரை, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்கு பேருந்து வசதிகளும், ரெயில் சேவையும் உள்ளது. 
    நவக்கிரகங்களில் கல்வியை உயர்த்தி வழங்கும் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.
    புதன் கிரக பாதிப்பால் உண்டாகும் நோய்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    நமது உடலில் தலை முதல் பாதம் கடைசி வரை செல்லும் நரம்புகளுக்கு எல்லாம் ஒட்டு மொத்த அதிபதி புதனே ஆகும். நரம்புகளில் ரத்தம் உறைவதும், ரத்தம் கசிவுகளுக்கும் புதனே காரணமாக உள்ளார். தலைக்கு செல்லும் ரத்தம் குறைந்தாலும், அதிக ரத்தம் சென்றாலும் அதற்கும் புதன் தான் காரணம். வலிப்பு நோய், கை- கால் முடக்கம், மனநிலை பாதிப்பு, திருநங்கையாக மாறுதல் ஏற்பட, தாய் வழி, தாய்மாமன் வழி, பரம்பரை நோய்கள் வருவது போன்றவற்றிற்கு புதனே காரணம் ஆவார். தூசி, மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், உடலில் வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்து பிடிப்பது போன்றவற்றிற்கு புதனே பொறுப்பு.

    தனிமையில் சுயஇன்பம் காணும் ஆவலை தூண்டும் கிரகம் புதன் ஆகும். ஓரினச் சேர்க்கைகள் மூலம் உண்டாகும் நோய்கள், பறவைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மூலம் உண்டாகும் நோய்கள், விஷ வாயு தாக்கி கை, கால்கள் செயல் இழப்பு மற்றும் மூளை சாவு, அறிவுக்கும் புத்திக்கும் தெரிந்தே செய்யும் செயல்களால் வரக்கூடிய நோய்கள் அனைத்துக்கும் புதனே காரணமாக திகழ்கிறார்.

    ஜாதகத்தில் புதன் தரும் பலன்

    * புதன் கிரகம் தனது பகை ராசியான கடகத்தில் நின்று இருந்தால், நரம்பு தளர்வு, பக்கவாதம், முடக்கு வாதம் போன்ற நோய்கள் வரலாம்.

    * புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதியில் வலி இருக்கும்.

    * புதன் பகை கிரகமான சந்திரனுடன் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், அந்த நபருக்கு திக்கு வாய் ஏற்பட வாய்ப்புண்டு. காலநிலைக்கு ஏற்றவாறு தொற்று நோய்கள் வரலாம். போதை வஸ்துகளாலும் நோய்கள் வரக்கூடும்.

    * புதன் பகை கிரகமான சந்திரனின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த ஜாதகர் உடலில் கெட்ட நீர் சேரும். எந்த நேரமும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பதால், புத்தி சுவாதீனம் இல்லாதவர் போல நடந்துகொள்வார். அடிக்கடி தலைவலி வரும்.

    * புதன், லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால், புதன் மறைவைக் குறிப்பதாகும். இதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு நரம்புக்குழாயில் கெட்ட கொழுப்பு அடைப்பு, உடல் சோர்வுகள், மயக்க நிலை, புது வகையான நோய்கள் தென்படும்.

    * புதன் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியுடன் இணைந்து, அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், அந்த நபரின் புத்தியும் செயலும் கெட்ட வழியில் சென்று நோய்களை தேடிக்கொள்பவர்களாக இருப்பார்கள்.

    * புதன் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ ஜாதகருக்கு நரம்பில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. வாத நோய் உண்டாகும். பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். தலை உச்சியில் நரம்பு முடிச்சில் பாதிப்பு வரக்கூடும்.

    * புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்களையும் உண்டாக்குவார். சோம்பேறியாக இருப்பதுடன் நோய் நீங்குவதற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.

    * புதன் பகை கிரகங்கள் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது பாதாதி பதியுடன் பார்வை இருந்தால் புதிய தொற்று நோய்கள் தாக்கக்கூடும். நோய் விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்வார்கள்.

    -ஆர்.சூரியநாராயணமூர்த்தி 
    யார் ஒருவர் மனதார கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் குங்கும அர்ச்சனை செய்கிறாரோ, அவர்களது குடும்பத்து குறைகள் எல்லாம் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும்.
    கொல்லூர் மூகாம்பிகை அருளைப் பெற 64 விதமான வழிபாடுகள், சேவைகள் இருக்கின்றன. அவற்றில் சில வழிபாடுகளை பக்தர்கள் மிகவும் விரும்பி ஆத்மார்த்த உணர்வுடன் செய்வதுண்டு.

    அந்த வகையில் மூன்று வழிபாடுகள் பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் திகழ்கிறது. அவை 1. சண்டி ஹோமம். 2. தீபம் ஏற்றுதல், 3. குங்கும அர்ச்சனை.

    இந்த மூன்றில் சண்டி ஹோமத்துக்கு ரூ. 8 ஆயிரமும், தீப கம்பத்தில் விளக்கு ஏற்ற ரூ.3 ஆயிரமும் செலவிட வேண்டும். ஆனால் முப்பதே ரூபாயில் குங்கும அர்ச்சனையை நடத்தி விடலாம்.

    சிறிய தொகை வசூலிக்கப்படுவதால் குங்கும அர்ச்சனையை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். உங்கள் வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் அனைத்தையும் நிறைவேற்றி தரும் அற்புத ஆற்றல் இந்த குங்கும அர்ச்சனைக்கு உண்டு. யார் ஒருவர் மனதார கொல்லூர் மூகாம்பிகை தலத்தில் குங்கும அர்ச்சனை செய்கிறாரோ, அவர்களது குடும்பத்து குறைகள் எல்லாம் நீங்கி விடும் என்பது ஐதீகமாகும்.

    மகத்துவம் நிறைந்த இந்த குங்கும அர்ச்சனையை செய்வது எப்படி தெரியுமா?

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்குள் நுழைந்ததும் வடக்குப் பகுதியில் உள்ள நுழைவுச் சீட்டு கவுண்டர்களுக்கு சென்றால் பல்வேறு விதமான சேவைகளுக்கு அனுமதி சீட்டு தருவார்கள். அங்கு கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த சீட்டை பத்திரமாக வைத்துக் கொண்டு ஆலயத்துக்குள் செல்ல வேண்டும்.

    கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னை மூகாம் பிகையை கண் குளிர பார்த்து விட்டு இடது புறமாக உள்பிரகாரத்துக்கு வருவீர்கள். அந்த உள்பிரகாரத்தில் பக்தர்கள் அமரும் வகையில் மண்டபம் உள்ளது.



    அந்த மண்டபத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஆலய புரோகிதர் ஒருவர் குங்கும அர்ச்சனை செய்ய தயாராக இருப்பார். அவரிடம் அனுமதி சீட்டை காட்டினால் அவர் அருகில் அமர சொல்வார்.

    அவர் அருகில் அமர்ந்து “சங்கல்பம்” செய்து கொள்ள வேண்டும். முன்னதாக அந்த புரோகிதரிடம் உங்களது கோத்திரம், குலம், குடும்ப உறுப்பினர்களின் நட்சத்திர விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

    உதாரணத்துக்கு நீங்கள் சிவ கோத்திரத்தை சேர்ந்தவர் என்றால் சிவ கோத்திரம் என்று சொல்லி, பிறகு உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், ஜென்ம நட்சத்திரத்தை சொல்ல வேண்டும். அதை அந்த புரோகிதர் திருப்பிச் சொல்லி அம்மனுக்கு குங்கும அர்ச்சனையை நடத்துவார். சில புரோகிதர்கள், சில குறிப்பிட்ட மந்திரங்களை நம்மையும் சொல்ல சொல்வார்கள். இது நாமே அன்னை மூகாம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்வதாக அர்த்தம்.

    குங்கும அர்ச்சனை பூஜை முடிந்ததும் புரோகிதர் நம் மீது அட்சதையைத் தூவி வாழ்த்துத் தெரிவிப்பார். அவருக்கு நாம் உரிய தட்சணை தொகை வழங்க வேண்டும்.

    பிறகு நாம் அந்த உள் பிரகாரத்தில் இருந்து வெளியில் வர வேண்டும். நீங்கள் குங்கும அர்ச்சனைக்காக எந்த இடத்தில் அனுமதி சீட்டு வாங்கினீர்களோ.... அதன் அருகிலேயே மற்றொரு கவுண்டரில் அனுமதி சீட்டை கொடுத்தால் குங்கும பிரசாதம் கொடுப்பார்கள்.

    அந்த குங்குமம் தினமும் அன்னை மூகாம்பிகையின் காலடியில் அர்ச்சனை செய்யப்படும் குங்குமமாகும். அந்த குங்குமத்தைத்தான் நமக்கு பிரசாதமாகத் தருகிறார்கள். எனவே அன்னை மூகாம்பிகையை மனதில் நினைத்தப்படி அந்த குங்குமத்தை வாங்குங்கள்.

    சில பக்தர்களுக்கு நிறைய குங்குமம் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் தோன்றும். அதற்கு எளிய வழி ஒன்று உள்ளது. கூடுதலாக 4, 5 அனுமதி சீட்டுகளை வாங்கி இருந்தால் அதிக அளவு குங்குமத்துடன் வீடு திரும்ப முடியும்.

    கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்துக்கு செல்லும் போது, நீங்கள் எந்த வழிபாடு செய்கிறீர்களோ, இல்லையோ, மறக்காமல் குங்கும அர்ச்சனை செய்து விடுங்கள். அது நிச்சயமாக உங்கள் குறைகளை விரட்டி விடும்.
    துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.
    மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை.

    அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவே புராணங்களும் பல விஷயங்களைக் கூறுகின்றன. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

    ஆரோக்கியத்துடன் வாழ..

    * தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
    * ஔஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி.
    * பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
    * மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
    * மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
    * வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
    * வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில்.

    பெண்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண..

    * தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
    * பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
    * மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

    செல்வ வளம் சேர...

    * அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
    * அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசன்ட்நகர், சென்னை.
    * கயிலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
    * பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
    * மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

    கல்வி வளம் பெருக...

    * கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
    * தேவநாதசுவாமி திருக்கோவில், திருவந்திபுரம், கடலூர்.
    * மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர், பூந்தோட்டம்.
    * வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம். 
    துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் இன்று வீடு, மனை சங்கடங்கள் தீர வழிபாடு செய்ய வேண்டிய பரிகார ஸ்தலங்களை பற்றி பார்க்கலாம்.
    மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் இன்று வீடு, மனை சங்கடங்கள் தீர வழிபாடு செய்ய வேண்டிய பரிகார ஸ்தலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    * அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.

    * தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.

    * பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

    * வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல், காஞ்சீபுரம்.
    ×