என் மலர்
தோஷ பரிகாரங்கள்
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது.
திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.
இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது.

ஆயுள் குறைவாக உள்ளவர்களை நீண்ட ஆயுளோடு வாழ வைத்ததும், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பித்து வரச் செய்த தலங்களுமாக பல தமிழ் நாட்டில் இருக்கின்றன.
ஆயுள் குறைவாக உள்ளவர்களை நீண்ட ஆயுளோடு வாழ வைத்ததும், மாண்டவர்களை மீண்டும் உயிர்ப்பித்து வரச் செய்த தலங்களுமாக பல தமிழ் நாட்டில் இருக்கின்றன. இந்த ஆலயங்களை புராணங்களும், அந்த ஆலய தல வரலாறுகளும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், அந்த ஆலயங்களுக்கான திருமுறை திருப்பதிகங்களை தொடர்ந்து படித்து வந்தால் கூட பலன் கிடைக்கும் என்கிறார்கள். சரி தமிழகத்தில் உள்ள ஆயுளை அதிகரிக்கச் செய்யும் ஆலயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
திருக்குறுக்கை :
யோக தட்சிணா மூர்த்தியின் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியால், மன்மதன் எரிந்து சாம்பலாகி விழுந்த இடம் திருக்குறுக்கை. இங்கு காம தகன வீரட்டேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. மன்மதனின் மனைவி ரதி திருக்குறுக்கையில் வீற்றிருக்கும் இறைவனைப் பூஜித்து, கணவனுக்கு உயிர் கொடுத்தருளுமாறு வேண்டினாள். அதன்படி மன்மதனை, ரதியின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் வகையில் ஈசன் உயிர்ப்பித்து அருளினார். இந்தத் திருத்தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
திருக்கடையூர் :
இந்தத் திருத்தலமும் மயிலாடுதுறைக்கு அருகில் தான் இருக்கிறது. இங்கு கால சம்கார வீரட்டேஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். 16 வயதில் இறப்பான் என்று எழுதப்பட்ட, மார்கண்டேயனின் உயிரைப்பறிக்க வந்தான் எமதர்மன். ஆனால் மார்கண்டேயன் தஞ்சமடைந்ததோ, இத்தல ஈசனின் திருவடியை. காலன் வீசிய பாசக்கயிறு மார்கண்டேயனோடு, சிவலிங்கம் மீதும் விழ, வெகுண் டெழுந்த ஈசன், எமதர்மனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் என்கிறது தல வரலாறு.
திருவாரூர் :
கன்றை இழந்த தாய்ப்பசு ஒன்று, ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. நீதி எல்லா உயிர்களுக்கும் பொது என்பதை உணர்ந்த மனுநீதிச்சோழ மன்னன், தவறு செய்த தன் ஒரே மகனை தேர் சக்கரத்தில் இட்டு மரண தண்டனை கொடுக்க உத்தரவிட்டான். ஆனால் அந்தத் தண்டனையை நிறைவேற்ற யாரும் முன்வரவில்லை. அதனால் சோழ மன்னனே, தன்னுடைய தேரின் காலில் மகனை படுக்கவைத்து அவனை கொன்றான். அப்போது தந்தை, தாய், சேய் என மூவுரு கொண்ட தியாகேசன், அங்கு திருக்காட்சி கொடுத்து இளவரசன், கன்று இருவரையும் உயிர்ப்பித்து அருளினார். இந்த தியாகேசர் அருளும் ஆலயம் திருவாரூர் தியாகேசர் திருக்கோவிலாகும்.
திருமருகல் :
இந்தத் தலத்தில் மாணிக்க வண்ணர் திருக்கோவில் உள்ளது. இங்கு இரவும் பகலும் ஈசனையே எண்ணி வாழ்ந்த ஒரு வணிகப் பெண் இருந்தாள். அவளது முறை மாப்பிள்ளை ஒரு முறை பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை இத்தல இறைவனை வேண்டி திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தருளினார். மேலும் அவர்கள் இருவருக்கும் திருமணமும் செய்து வைத்தார். திருவாரூருக்கு அருகே உள்ளது திருமருகல். இத்தல ஆலயத்தில் ஆயுள் வேண்டியும், திருமணத் தடை விலகவும் வேண்டிக் கொள்ளலாம்.

மயிலாப்பூர் :
சென்னை மையப்பகுதியில் உள்ளது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில். இங்கு வசித்த சிவ நேசன் என்பவரின் மகள் பூம்பாவை, பாம்பு தீண்டி இறந்து போனாள். அவளது சாம்பல், எலும்பு ஆகியவற்றை எடுத்து வைத்திருந்தார் சிவநேசன். ஒரு முறை திருஞானசம்பந்தர் கபாலீஸ்வரர் ஆலயம் வந்தபோது, தனது மகளின் நிலையை அவரிடம் சொன்னார், சிவநேசன். உடனே சாம்பலையும், எலும்பையும் ஆலயத்தில் வைத்து, திருப்பதிகம் பாடினார் சம்பந்தர். என்ன ஆச்சரியம் பூம்பாவைப் பெண் உயிர்ப் பெற்று திரும்ப வந்தாள்.
திங்களூர் :
அப்பூதி அடிகளது வீட்டுத் தோட்டத்தில், அவரது மூத்த மகன் பாம்பு தீண்டி இறந்து போனான். அவனை திருநாவுக்கரசர், திங்களூர் சோமநாதர் ஆலயத்தில் வைத்து பதிகம் பாடி உயிர்ப்பித்து அருளினார். திங்களூர் தலமானது சிவபெருமானை சந்திர பகவான் வழிபட்ட ஆலயம் ஆகும். இத்தல இறைவனுக்கு சோமநாதர், சந்திரசேகரர், சந்திரமவுலி உள்ளிட்ட பெயர்களும் உண்டு. இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும். மேலும் திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தைப் பாடினாலும் பலன் உண்டு.
அவிநாசி :
அவிநாசியில் உள்ளது அவிநாசியப்பர் ஆலயம். இந்தப் பகுதியில் வசித்த ஒருவரின் மகன் குளத்தில் நீராடச் சென்றான். அப்போது அந்தக் குளத்தில் இருந்த முதலை அச்சிறுவனை விழுங்கி விட்டது. ஒரு முறை அவிநாசியப்பரை வழிபட வந்த சுந்தரர், இந்த விஷயத்தை அறிந்து, ‘கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே’ பாடினார். அந்த பதிகத்தை அவர் முடிக்கும் தருவாயில், குளத்தில் இருந்து முதலை வெளிப்பட்ட அந்தச் சிறுவனை உயிருடன் உமிழ்ந்து விட்டுச் சென்றதாக தல புராணம் சொல்கிறது. அவிநாசி கோயம்புத்தூருக்கு அருகே உள்ளது. இறந்த பின் மீண்டும் உயிர்ப்பெற்று வாழ்ந்தவர்களில் ஏயர்கோன் கலிக்காம நாயனாரும் ஒருவர்.

நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு.
நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. நாள்பட்ட தீராத நோய்கள், முழுமையாக வளர்ச்சி பெறாத உடல், தீராத மனக்கவலை, நரம்பு தளர்வு, இளமையிலேயே முதுமையான முகத்தோற்றம் போன்றவற்றுக்கும் சனி பகவான் தான் காரணமாக இருக்கிறார்.
மனம் எப்போதும் துக்கத்திலேயே, ஒரு வித கலக்கத்திலேயே இருப்பதற்கும் இவர்தான் காரணம். ஆண்- பெண் இருவருக்கும் மலட்டுத் தன்மையை உருவாக்குபவர் சனி தான். விகாரமான அல்லது அருவறுப்பு தரக்கூடிய உடல், செம்பட்டையான, அழுக்கு படிந்த, தலைமுடிக்கும் சனிதான் காரணம் ஆவார்.
ஒருவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபடுவது, குளியல் அறையில் வழுக்கி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கும், சித்த பிரமை பிடிப்பதற்கும், இளம்பிள்ளை வாதம், உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் சனி பகவான் தான் காரணமாக திகழ்கிறார். மன அழுத்தம் காரணமாக ஒருவர் தற்கொலை செய்வதற்கும் சனியே தூண்டுதலாக இருக்கிறார். கெட்ட நடத்தையால் வரக்கூடிய நோய், வாகனங்களால் ஏற்படும் விபத்து, உடல் முழுவதும் வியர்த்து உடல் நடுக்கும் மன பயத்தைத் தருவது, வம்சாவழியாக வரும் நோய்கள், கெட்ட கனவுகள், கெட்ட குணங்கள் தோன்ற காரணமானவர் சனீஸ்வரன்.
பெரும் பணக்காரனைக் கூட கடனாளி ஆக்கி, நோய் போக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட வைக்கும் சக்தி சனிக்கு உண்டு. தீராத மலச்சிக்கல், மூல நோய், சாக்கடைகளால் வரும் நோய்கள், அசைவ உணவுகள் மூலம் உண்டாகும் நோய்கள், கண் திருஷ்டி, விதவை சாபம், ஒழுக்க நெறி தவறிய ஆன்மிக மடம், ஆலயங்கள் ஏற்படவும் சனியே காரணமாக இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு மனிதனின் ஆயுள் முடியும் அன்றைய தினம் முழுவதும் சனியே அந்த நபரை ஆதிக்கம் செய்கிறார்.
-ஆர். சூரிய நாராயணமூர்த்தி.

நோய் என்ற சொல்லுக்கு அதிபதியே சனி தான். நமது உடலில் வெளிப்படாத உள்நோய்களுக்கு காரணமாக இருப்பவர் சனி. சனி எந்த ராசியில் இருந்தால் என்ன நோய் தாக்கும் என்று பார்க்கலாம்.
* சனி பகை ராசியான கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிகளில் நின்று இருந்தால், உடல் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம். மனம் சங்கடத்தில் இருக்கக்கூடும். நோய்க்குரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதில் கூட நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். சின்ன காய்ச்சல் வந்தால் கூட மரண பயம் அப்பிக் கொள்ளும்.
* சனி நீச்ச ராசியான மேஷ ராசியில் நின்று இருந்தால், மூலநோய் வரக்கூடும். மலச்சிக்கல் வரும். ரத்தத்தை பார்த்தாலே மயக்கம் வரும். ஏழரைச் சனி அல்லது அஷ்டம சனி காலத்தில் இந்த ஜாதகருக்கு மரணம் அல்லது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் உண்டாகும். வாகன பயணத்தில் கவனம் தேவை.
* சனி பகை கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் இணைந்து எந்த ராசியில் இருந்தாலும், உடலில் பித்த நீர் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். போதை வஸ்துகள் பயன்படுத்தக் கூடாது. கை, கால் சோர்வு அடிக்கடி ஏற்படும். வேலைக்கு உடல் ஒத்துழைப்பு இல்லாமல் போய்விடும்.
* பகை கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் சனி நின்று இருந்தால், எந்த நேரமும் ஏதாவது உடல் உபாதை இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் முகம் சுழிக்கும் வகையில் ஏதாவது செய்து கொண்டு இருப்பார்கள். தன் உடலைப் பற்றியோ, நோயை பற்றியோ பெரிதும் அக்கறை காட்ட மாட்டார்கள். அடிக்கடி கால் இடறி விழுதல், கை, கால் எலும்பு முறிவுகள் உண்டாகும்.
* சனி குரூரர் என்பதால், அவர் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைவு பெறுவது நல்லது. என்றாலும் 6-ம் இடத்தை விட 8, 12 ஆகிய இடங்களில் நிற்பது மிகவும் நல்லது. 6-ம் இடத்தில் சனி நின்றால், அந்த நபர் நோய்க்காகவே பிறந்தவர் என்று தான் கூற வேண்டும். தொற்று நோய்கள் உடனே பிடிக்கும். ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில் உடலில் உள்ள அனைத்து நோய்களும் வெளிப்படும். சிலருக்கு மரணம் உண்டாகலாம்.
* சனி கிரகம் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது இதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பார். தொற்று நோய்கள் பருவகால நோய்கள் உடனே தாக்கக் கூடும். அந்த ஜாதகரின் ஆயுள் சராசரியாக எழுபது வயது வரை இருக்கலாம்.
* சனி கிரகம் லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் அல்லது பாதக ஸ்தானத்தில் இருந்தாலோ, பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகர் மன நோயாளி போல் நடந்து கொள்வார். உடலுக்கு ஆகாது என தெரிந்தும் அந்த உணவுகளையே உண்டு அவதிப்படுவார்.
* சனி கிரகமே லக்னத்திற்கு பாவியாக பாதகாதிபதியாக இருந்தால், சனியின் நிலையை பொறுத்தே பலன் எழுத வேண்டும் என்றாலும் சனி கிரகம் அவ்வப்போது ஏதாவது உடல் உபாதையை கொடுத்துக் கொண்டே இருக்கும்.
* சனி கிரகத்தின் மீது பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதி பார்வை ஏற்பட்டால், அந்த ஜாதகர் மூலிகை எண்ணெய், நோய்க்கு உதவாத மருந்துகள் எடுத்து அவதிப்படுவார். போதை வஸ்துகள் மூலம் நோய்கள் வரக் கூடும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்காது.

கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும் எளிய பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் பிரச்சனைகள் தீர வழிபிறக்கும்.

வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல்விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய்தீபம் ஏற்றி வழிபட கணவன் - மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி பூ சாற்றி அபிஷேகம் செய்து நெய்தீபம் ஏற்றி தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
இதனை தொடர்ந்து 5 வாரம், 7 வாரம், 9 வாரம், 11 வாரம் என செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு விரைவில் பலன் கிடைப்பதோடு, பிரிந்திருக்கும் தம்பதிகளும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், வான் மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் காலச் சக்கரத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை. இந்தக் காலச் சக்கரத்தை இயக்குபவர் கால பைரவர்.
பிரம்மதேவனின் அகந்தையை அடக்க, சிவபெருமான் ஆணைப்படி ருத்திரர், கால பைரவர் உருக்கொண்டு, பிரம்மனின் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். நவகிரகங்கள் அனைத்தும் கால பைரவருக்குள் அடக்கம். நவகிரகங்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் முதலானவை நீங்க கால பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு. பொதுவாக மக்களால் ஒதுக்கப்படும் அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும், கால பைரவரால் வழிபடப்படுவதால், அஷ்டலட்சுமியின் அருளும் பெற, அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபடுவது மேலும் சிறப்பு.
இப்படிப் பல்வேறு சிறப்புகளைப் பெற்ற மகாகால பைரவருக்கு செம்பாக்கம் என வழங்கும் வட திருவானைக்கா அருள்மிகு அழகாம்பிகை சமேத சம்புகேசுவரர் திருக்கோயிலுக்கு அருகில் தனிக்கோயிலும் அமைந்துள்ளது. இக்கோயில் திருப்போரூர் செங்கல்பட்டு வழித்தடத்தில் திருப்போரூரிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் அமைக்கப்பட்டதாக, பெருந்தண்டலம் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.
கார்த்திகை மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி மிகவும் சிறப்பு பெற்றது. இப்பெருவிழாவில் சிவன் அம்சமான மகா கால பைரவரை வழிபட்டால் கால சர்ப்பதோஷம், நவகிரக தோஷம் நீங்கி அஷ்டலட்சுமி கடாட்சமும் பெறலாம்.

கேரள மாநிலத்தில் உள்ள லவ-குச ஆலயத்தில் வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
ராமனின் மகன்களான லவன், குசன் ஆகியோருக்கு சீதாதேவியுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புடைய கோவிலாகக் கேரள மாநிலம், புல்பள்ளி என்ற இடத்தில் உள்ள ஆலயம் திகழ்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மலபார் பகுதியை ஆட்சி செய்த வீர கேரள வர்மா பழசிராஜா என்பவர், மூலக்கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாகச் சீதாதேவியுடன் லவன், குசன் ஆகியோரையும் சேர்த்துப் புதிய கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். அக்கோவிலேத் தற்போது புகழ் பெற்ற சீதாதேவி, லவன், குசன் கோவிலாக இருக்கிறது என்கிறது தல வரலாறு.
இக்கோவிலில் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலங்களில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி மகரம் (தை) மாதம் வரும் ரேவதி நட்சத்திர நாளில் கோவில் நிறுவப்பட்ட நாள் கொண்டாடப்படுகிறது. தனு (மார்கழி) மாதம் 18 முதல் 23 வரையிலான நாட்களில் ‘சுட்டு விளக்குத் திருவிழா’ எனப்படும் சிறப்புத் திருவிழா நடைபெறுகிறது.
சீதாதேவி, லவன், குசன் கோவிலில் தினமும் மூன்று வேளை பூஜைகள் செய்யப்படுகின்றன. சீதாதேவிக்கு வெள்ளை அரிசிச் சாதம் மற்றும் பாயசமும், லவன், குசனுக்கு இனிப்பு அப்பமும் படைக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. இங்கு வழிபடுபவர்களுக்கு குழந்தைப்பேறு உள்ளிட்ட அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதுடன், மனநிறைவும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
கோழிக்கோடு மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சுல்தான் பேட்டரி என்ற ஊரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், மீனங்காடி என்ற இடத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், கோழிக்கோடு-மனந்தாவடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள பனமரம் என்ற பகுதியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் புல்பள்ளி இருக்கிறது. இங்கு செல்ல ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

பலி பீடம் என்றதும் பலரும் தங்கள் மனதில், இது ஏதோ உயிர் பலியிடும் இடம்போல என்றுதான் நினைப்பார்கள். அப்படியல்ல.. அது நமது மனதில் உள்ள தீய எண்ணங்களை, குணங்களை பலியிடும் இடம் என்பதே சரியானது.
அனைத்து ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் நாம் பலி பீடத்தை மனதார வழிபட வேண்டும். பொதுவாக பலி பீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது, தாமரை மலர் வடிவம் போன்று அமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.
திருப்பதி போன்ற ஆலயங்களில் பலி பீடத்துக்கும் தங்க கவசம் போர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் கருவறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலி பீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.
பலி பீடம் என்றதும் பலரும் தங்கள் மனதில், இது ஏதோ உயிர் பலியிடும் இடம்போல என்றுதான் நினைப்பார்கள். அப்படியல்ல.. அது நமது மனதில் உள்ள தீய எண்ணங்களை, குணங்களை பலியிடும் இடம் என்பதே சரியானது.
அதெப்படி தீய குணத்தையும், தீய எண்ணத்தையும் பலியிடுவது?
மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் கெட்ட குணங்கள் இருக்கும். எவ்வளவுதான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும், அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவைகளில் ஏதாவது ஒன்றிரண்டு கெட்ட குணங்கள் நீக்க முடியாததாக இருக்கவே செய்யும்.
இப்படி கெட்ட குணத்துடனும், எண்ணத்துடனும் கருவறைக்குச் சென்றால், கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத்தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் சுத்தமாக, வெற்றிடமாக இருந்தால்தான் நமக்கு இறைவன் அருளை வழங்குவார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை கொண்டவர்கள்தான் கடவுளை அடையமுடியும். அவர்களின் அருகில்தான் கடவுளும் வருவார்.
எனவே நம் மனதில் உள்ள தீய குணங்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவுகளை பலி கொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் நம் மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டும் போது, நாம் நல்ல மனிதனாக மாறி விடுகிறோம்.
இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்ப்பலி இல்லாத இந்த ஆன்மிகப் பலி பீடுமானது உயர்வுக்குரியது. இந்த பலி பீடத்தை அமைப்பதற்கு என்று விதிகள் உள்ளன.
பலி பீடத்தின் உயரம், மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்க வேண்டும்.
பலி பீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன.
பலி பீடத்தை பொதுவாக ‘பத்ரலிங்கம்’ என்று அழைப்பார்கள். பலி பீடம் அருகில் இருக்கும் நந்தி எனும் ஆன்மாவில் உள்ள ஆணவ மலம், பலி பீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலி பீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். ‘நான்’ என்ற அகங்காரத்தை பலியிட வேண்டும்.

சிலர் ‘எல்லாமே நம்மால் தான் நடக்கிறது’ என்ற மாயையில் சிக்கித் தவிப்பார்கள். அகந்தையுடன் நடந்து கொள்வார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிட வேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தின் கருவறையானது வடக்கு, மேற்கு திசையை பார்த்தபடி இருந்தால், பலி பீடத்தின் இடது பக்கத்திலும், கருவறையானது கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இருந்தால் பலி பீடத்தின் வலது பக்கத்திலும் நின்று வணங்க வேண்டும்.
மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் போதோ அல்லது சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும் போதோ பலி பீடத்தை வழிபடுதல் கூடாது.
அதுபோல பலிபீட வழிபாட்டை ஒரு தடவை, இரண்டு தடவை மட்டும் செய்து விட்டு நிறுத்தி விடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்க வேண்டும். அந்த சமயத்தில் நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சர்யம் எனும் 6 கெட்ட குணங்களை பலியிடுவதாக மனதில் நினைத்து வணங்க வேண்டும்.
பலி பீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற நினைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த நல்ல மன நிலையுடன் கருவறை அருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும்; ஆசீர்வதிக்கும்.
பலி பீடத்துக்கு ‘பலி நாதர்’, ‘மாயச் சக்கரம் என்றும் பெயர் உண்டு. அதாவது நமது பிறப்பு - இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலி பீடத்தைக் கருதுகிறார்கள். இதை சுற்றி வந்து வழிபட்டால், ‘ஸ்தூல சூட்சம காரண சரீரங்களில் இருந்து என்னை விடுவித்து விடு’ என்று வேண்டுவதற்கு சமமாகும்.
பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலி பீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக் பாலகர்களை உணர்த்துகிறது.
இந்த 8 பலி பீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கு ஏற்ப கோவில் பிரகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்கு தலைமை பலி பீடமாக நந்தி பின்புறம் உள்ள பலி பீடம் அமையும். பொதுவாக தலைமை பலி பீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.
சில கோவில்களில் பலி பீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும், மிளகும் போட்டுச் செல்வார்கள். உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன் என்பதைச் சொல்லும் வழிபாட்டு முறை இதுவாகும்.
சக்தி தலங்களில் தலைமை பலி பீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலி பீடங்களும் அமைத் திருப்பார்கள். அந்த பலி பீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும்.
பலி பீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால் நம்மிடம் உள்ள தேவையற்ற காமம் போய் விடும். ஆசை போய் விடும். கோபம் போய் விடும். தீராத பற்று போய் விடும். நெறி பிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு - தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சகக் குணம் வரவே வராது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், பலிபீடம் மனிதனை மனிதம் கொண்டவனாக மாற்றுகிறது.
எனவே பலி பீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்கு கொண்டு வாருங்கள். அது உங்களை மேன்மைப்படுத்தும். கோவிலில் கோபுர வாசலுக்கும் கொடி மரத்திற்கும் இடையில் உள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும், அன்னம் (சாதம்) வைப்பர். இதை ‘பலி போடுதல்’ என்பர். இதனை தெய்வங்கள் சாப்பிட்டுச் செல்வதாக ஐதீகம். வழிபாட்டின் போது, பலிபீடத்தை தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது.

தடைகளும், தாமதங்களும் ஏற்படுபவர்கள் சுய ஜாதகத்தினை ஆராய்ந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற இயலும்.
பல குடும்பங்களில் தடைகளும், தாமதங்களும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவுகள் உருவாகிக் கொண்டே இருக்கும். யார் கொடுத்த சாபமோ இப்படி வாழ்க்கை இருக்கின்றதே என்று புலம்புவர்.
சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் எந்த சாபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியும். அதனைக் கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் ஓரளவேனும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற இயலும்.
பெற்றோர்களால் ஏற்படும் சாபங்கள் விலக பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும். அவர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பவர் என்பதால் அதற்கு முன்னறிவிப்பாக மூன்றுமுறை அவரது சன்னிதியில் மெதுவாகக் கைதட்டி அதன்பிறகு தகவலை எடுத்துரைத்துப் பிறகு அபிஷேகம் செய்வது நல்லது.
சகோதர சாபம் விலக அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக விஸ்வரூப நந்தி மற்றும் திசைமாறிய நந்தியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் எளிதில் விமோசனம் பெற இயலும்.
சுமங்கலி சாபம் விலக அதிகார நந்தியை திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். இதுபோன்று மற்ற சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. அவற்றைச் செய்தால் நிச்சயமாக சாப விமோசனத்தை நாம் பெற இயலும்.

கர்மாவினைகள் ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரங்களை செய்து வந்ததால் நலம் பெற முடியும்.
பொதுவாகவே, ஒருவரது செயல்களுக்கு அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம். இதில் மூன்று வகையான கர்மா வினைகள் உண்டு. தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் என்பது, தெய்வம் சார்ந்த வழிபாடுகள் வகையைச் சார்ந்தவையாகும்.
இதில் தன்னைச் சார்ந்த பரிகாரங்களுக்கு எல்லோருக்கும் பலன் அல்லது தீர்வு கிடைக்கிறதா? சிலபேர் சொல்வார்கள் நான் பரிகாரம் செய்தேன் சரியாகப் பலன் கிடைத்தது. என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன். ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள். இது எதனால்? இப்படி நடப்பதற்குக் கர்மவினைகளே காரணம். இந்தக் கர்மாவினைகளில் மூன்று வகைகள் உண்டு. அவை 'த்ருத கர்மா', தெரிந்தே செய்த பாவம், 'த்ருத அத்ருத கர்மா' தெரிந்தே செய்த தப்பு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, 'அத்ருத கர்மா' தெரியாமல் செய்த தவறு.
1. த்ருத கர்மா : இது மிகக் கடுமையான கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினை ஆகும். முற்பிறப்பில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது, பணத்துக்காகக் கொலை செய்தது, தாய் தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது, அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது. இதற்கு மன்னிப்பே கிடையாது. இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும், பலன் இருக்காது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குருவின் தொடர்போ, அல்லது பாகியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் தொடர்போ இருக்காது. அதை ஜாதகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கஷ்டங்கள் தொடர் கதையாக வந்துகொண்டு இருக்கும்.. அனுபவித்துதான் தீரவேண்டும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய ஏழைகளுக்கு அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
2. த்ருத அத்ருத கர்மா : மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்தவையாகும். அதாவது, தெரிந்து செய்த தவறு அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இதை வைத்து ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3. அத்ருத கர்மா : மிகவும் மன்னிக்கக்கூடிய சிறய குற்றங்கள் தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது. இது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.
ஆகவே மேற்கூறிய கர்மாவினைகள், ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்து நலம் பெறவேண்டும்.

செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம்.
இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது.
அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.
இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும்.
இலை மீது வாழை பூ வைக்கவும் மற்றும் பழம், வெற்றிலை பாக்கு பூஜை பொருட்கள் வைத்து, நிவேதனமாக துவரம்பருப்பில் செய்த வடை, அல்லது துவரம் பருப்பு பொங்கல் வைக்கவும். தீபத்திற்கு தீப ஆராதனை முடித்துவிட்டு வாழை பூவை கையில் எடுத்துக் கொண்டு தீபத்தை வலமிருந்து இடமாக 9 முறையும் இடமிருந்து வலமாக 9 முறையும் பிறகு வலமிருந்து இடமாக 9 முறையும் ஆக 27 முறை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.

கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு.
தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும் அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.
குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும். பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப் பலன்கள் ஏற்பட்டு விடும். என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.
நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம். 3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய ஆரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.