என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க, பல்வேறு சிறந்த பரிகாரங்கள் உள்ளது. சிறந்த பலனை தரும் எளிய பரிகாரத்தை பார்க்கலாம்.
    வீடு, அலுவலகத்தின் மீது திருஷ்டி படாமல் இருக்க, பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி, கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிவப்பு மீன்களை வளர்க்கலாம்.

    காலை, மாலை நேரங்களில் வீடு, அலுவலகத்தில் விஷ்ணு சகஸ்ஹர நாமம், காயத்திரி மந்திரம், சாந்தி மந்திரம், திருக்கோளாற்று பதிக பாராயணம் ஒலிக்க செய்யலாம்.

    வீட்டு வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம்.

    போட்டி, பொறாமையால் வியாபாரத்தில் தொய்வு, கடன் தொல்லை இருந்தால் செவ்வாய்க்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சனை செய்யுங்கள். மேலும் குலதெய்வத்திற்கு நெய் தீபம் ஏற்றி, மல்லிகை பூவினால் அர்ச்சனை செய்ய வியாபாரம் விருத்தியாகும்.

    வியாபாரம், தொழில் நிறுவனங்களில் திருஷ்டி நீங்க வெள்ளிக்கிழமைகளில் ஒரு எலுமிச்சம் பழத்தை வெட்டி, ஒரு பகுதியில் குங்குமத்தையும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியையும் தடவி வைக்கலாம்.

    வளர்பிறை செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

    முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை, பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ தெளிக்க தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
    கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும்.
    கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், பொருள் இழப்பு, வரவுக்கு மீறிய செலவு இருந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சினை தீருவதற்குள், அடுத்த பிரச்சினை கதவைத் தட்டும்.

    பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன் -மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, வெளியே சொல்ல முடியாத கஷ்டம், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கண்டறிய முடியாத கஷ்டம் இருக்கும்.

    சுப நிகழ்வுகளில் தடை, மருத்துவச் செலவு, உணவை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் போன்றவை உண்டாகும்.
    ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.
    ஒரு மனிதன் இந்த பூமியில் பிறப்பதற்கு, அவன் முற்பிறவியிலே செய்த ‘பாவமும், புண்ணியமும்’ தான் காரணம். அதனால் நாம் வாழும் பூமிக்கு ‘தர்ம, கர்ம பூமி’ என்று பெயர்.

    ஒரு சிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்து விடுகிறார்கள். ஒரு சிலர் நினைத்ததை திட்டமிட்டு செய்கிறார்கள். ஒரு சிலரோ எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. இதற்கு எல்லாம் தனது பிறந்த நேரமே காரணம் என்று நடைமுறையிலே சிலர் பேச நாம் கேட்டிருக்கலாம்.

    ஜாதகத்திலே 9-வது இடம் தான் ‘உயர்வானதை அடைவது’, அதாவது நாம் இந்த உலகத்தில் வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதி. அந்த 9-வது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பு இருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார்; எண்ணியதையும் அடைந்து விடுகிறார்.

    ஒன்பதிலே மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இருக்கும்படி பிறந்தவர், தடுமாறுகிறார்; போராடுகிறார்; இலக்கை அடைவதற்கு அதிகமாக கஷ்டப்படுகிறார். ‘எந்த பாவமும் செய்யாத எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது’ என்பது பலருடைய ஆதங்கம். அதற்கு என்ன காரணம் என்று பார்க்கலாம்.

    ‘தோஷம்' என்றால் ‘குற்றம் அல்லது குறை’ எனப்படும். ஒருவர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் வினையின் எதிர்வினை தான் தோஷம். இந்த தோஷம் 2 காரணங்களால் உருவாகுகிறது. அதாவது கோபம், சாபம்.

    ‘கோபம்’ என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை, பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக சொன்னால் ‘கோபம்’ என்பது பாதிக்கப்பட்டவர் அதற்கு காரணமானவர் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

    ‘சாபம்’ என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர், வேதனையுடன் கண்ணீருடன் வெளிப்படுத்தும் எதிர்மறை வார்த்தைகள்.

    கோபம் நான்கு வகையாக இருக்கிறது.

    1. ஒரு நொடிப்பொழுதில் தோன்றி மறைந்து விடும்.
    2. 2 நாழிகை, அதாவது 48 மணி நேரம் நீடிக்கும்.
    3. கோபம் - ஒரு நாள் முழுவதும் நீடிக்கும்.
    4. கோபம், அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்து, பகையை உள்ளுக்குள் வளர்த்து விடும்.

    கோபத்தில் இருந்து அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல் போன்ற 8 தீய குணங்கள் தோன்றுகின்றன.

    ஜோதிட சாஸ்திரத்தில் கோபத்தின் வெளிப்பாடாக நாம் கூறும் கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி. 1-ல் சூரியன் சுட்டெரிக்கும் கோபம். நியாயமான செயலுக்கு மட்டுமே வரும். நம் ஆத்ம காரன் சூரிய பகவானே. 1-ல் செவ்வாய் அடக்க முடியாத ஆணவம் நிறைந்த கோபம். நம் உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர் செவ்வாய். 1-ல் சனி இருப்பது நியாயத்தை நிலை நாட்டும் கோபம். நம் கர்ம காரகன் சனி பகவான். அதனால் தான் அவர் துலாத்தில் உச்சம் அடைகிறார்.



    சனி, செவ்வாய் இருவரும் ராகு-கேது, மாந்தியுடன் ஏற்படும் இணைவு சாபத்தை ஏற்படுத்துகிறது. திரிகோணாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும், சாபமும், ஜாதகருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மறைவு ஸ்தானாதிபதிகளுடன் தொடர்பு பெறும் கோபமும் சாபமும் ஜாதகரால் மீள முடியாத தாக்கத்தை உருவாக்கும்.

    எத்தகைய தோஷமானாலும் விமோசனம் உண்டா? இல்லையா? என்பதே கேள்வி. நியாயமான சாபம் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு, மீள முடியாத விளைவை தருகிறது. ‘ஆறுவது சினம்’ என்ற அவ்வை பாட்டியின் கூற்றிற்கு ஏற்ப, கோபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு வடிகால் உண்டு. சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு விமோசனம் கிடைப்பது எளிதல்ல.

    கண்ணுக்கு தெரிந்த, தெரியாத பல்வேறு தோஷங்கள் இருந்தாலும், பிரதானமாக ஜாதகத்திலும், பிரசன்னத்திலும் 21 வகையான தோஷங்கள் கண்டறியப்படுகின்றன.

    காற்றை மாசு படுத்துதல், சுத்தமான காற்றைத் தரும் விருட்சங்களை அழித்தல், மழை நீர் பூமியில் புக முடியாமல் கழிவு பொருட்களை பயன்படுத்தி பூமியை மாசு படுத்துவது, நீர் நிலைகளை அழித்து குடியிருப்பு பகுதியாக்குவது போன்ற இயற்கை பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு இயற்கை நிச்சயம் பதிலடி கொடுக்கும்.

    புனித யாத்திரை செல்லும் பயணிகள் புண்ணிய புனித தீர்த்தங்களில் தங்கள் உடைகளை விடுவது, சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி நீர்நிலையை அசுத்தம் செய்வதும் நிச்சயம் கர்மவினையைத் தரும். வினைப்பயனை குறைக்க தவறான வழிமுறையை பயன்படுத்தினால், அது கூடுதல் வினையை சேர்த்த பலனையே கொடுக்கும்.

    பசுவதை செய்பவர்களுக்கு ‘கோ சாபம்’ ஏற்படும். பறவைகளை கூண்டில் அடைத்து வேடிக்கை பார்ப்பவர் களுக்கு ‘பட்சி சாபம்’ ஏற்படும். சக மனிதனின் கோப சாபத்தை விட, இயற்கை விடும் சாபத்திற்கும், ஐந்தறிவு ஜீவன் விடும் சாபத்திற்கும் வலிமை அதிகம்.

    ஒரு உயிர் தாயின் கருவறையில் உருவாகி, இடுகாடு செல்வது வரை அனைத்து நிகழ்வுகளும் பிரபஞ்சத்தின் விருப்பப்படியே நடக்கிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த உலகம் பிரபஞ்சத்தால் கட்டுப்படுத்தப்படுவதால் தான் இறந்தவருக்கு உயிர் கொடுக்க முடியவில்லை.

    சக மனிதருக்குள் உருவாகும் கோபமும் சாபமுமே மறு பிறவி. கோபமும் சாபமும் இல்லை என்றால் மறுபிறவி என்பதே என்ற ஒன்று கிடையாது. கோபத்தையும் சாபத்தையும் உருவாக்கியவனும், உருவாகச் செய்தவனும் பிறவி எடுத்து தங்கள் கோபத்தையும், சாபத்தையும் தீர்த்துக் கொள்ளும் போதே அந்த தோஷம் நிவர்த்தி ஆகிறது.

    எவ்வளவு பூஜை செய்தாலும், வரம் பெற்றாலும், மாந்த்ரீகம் செய்தாலும் ஒரு நல்லவரை அழிக்க முடியாது. ஆனால் ஆற்ற முடியாத அழுகையால், ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும் போது, அது எப்பேர்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.

    - பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி.
    மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்களுக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.
    மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்கள் ஆகியோருக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.

    * இதில் பரிகாரம் என்பது செம்பு வெள்ளி தங்கம் முதலிய உலோக தகடுகளில் சக்கரம் அல்லது கோடுகளைக் கீறி அந்த கட்டங்களுக்குள் மந்திர எண்எழுத்துக்களை பதித்து சிறு குழாயினுள் செலுத்தி பாதிப்புற்றவர்களின் உடலில் கை, கால்கள், இடுப்பு, புஜம், கழுத்து முதலிய இடங்களில் கட்டுவதாகும். இதனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், கிரகதோஷம், நோய் இவற்றினால் வந்த பாதிப்பு நீங்கும், மற்றும் வசியம் உட்பட அஷ்ட கர்மங்கள் சித்தியும் ஆகும், தீயசக்தி விலகி செல்வசெழிப்பு உண்டாகும்.



    * நஞ்சு முறிவிற்காக சில தெய்வீக மூலிகை வேர்களை தாயத்தில் அடைத்து மாந்திரீகம் செய்வோர், விஷக்கடி வைத்தியர், பாம்பாட்டிகள் ஆகியோர் தமது உடலில் அணிந்து கொள்வதாகும், இது தங்களை பாதுகாத்து கொள்வதற்கும், கடி விஷங்களை இறக்குவதற்கும் பயன்படுத்துவர்.

    * கொடிக்குளிசம் என்பது சிறு குழந்தைகளுக்கு தொப்புள் கொடியை உலர்த்தி தாயத்தில் அடைத்து இடுப்பில் கட்டிவைத்தல், குழந்தைக்கு உடல்நிலை கோளாறோ அல்லது மாந்திரீக கோளாறோ ஏற்படும்போது அந்த தொப்புள் கொடியை பாலில் உரைத்து ஊட்டவோ அல்லது புகை போட்டு நாசியில் இழுக்க செய்யவோ பயன்படுத்துவர்.

    * காப்புகட்டுதல் என்பது தெய்வீக மூலிகைகளின் சாப நிவர்த்திக்காகவும், அவற்றின் முழுபயனை பெறுவதற்காகவும் மந்திர சாஸ்திரப்படி அவற்றிற்கு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுவதாகும்.
    கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், பொருள் இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    கண் திருஷ்டி நீங்குவதற்கு, ஒற்றைப் படை எண்ணிக்கையில் கற்பூரங்களை தலையைச் சுற்றி வீட்டு வாசலில் ஏற்றலாம்.

    தேங்காயில் கற்பூரம் ஏற்றி தோஷம் இருப்பவர்களின் தலையை சுற்றி, ஊர் எல்லையில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிதறுகாய் உடைக்கலாம்.

    வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

    திருமணம், கிரகப்பிரவேசம், பிறந்த குழந்தையயும், தாயையும் வீட்டிற்கு அழைத்தல் போன்ற வைபவங்களில் கண் திருஷ்டியை குறைக்க ஆரத்தி எடுத்து திலகம் இட வேண்டும்.

    சுப நிகழ்வுகளின் போது குலை தள்ளிய வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். அது திருஷ்டி தோஷம் வாழை மரத்தால் ஈர்த்துக் கொள்ளப்படும் என்பதால் தான். சுப நிகழ்வு முடிந்ததும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத இடத்தில் உடைப்பதும் நல்ல பரிகாரம் தான். திருஷ்டி தோஷம் மிகுதியாக இருந்தால் மகா கணபதி, மகா சுதர்சன ஹோமம் செய்ய வேண்டும்.

    பிறந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை, திருஷ்டி தோஷத்தால் உடல் நலக்குறை இருந்து கொண்டே இருக்கும். கண்ணத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுடன், கருப்பு கயிற்றில் நவக்கிரக ஸ்லோகம் ஜெபித்து 9 முடித்து போட்டு வலது காலில் கட்டிவிடுங்கள். அதோடு கணபதி ஹோம மையை நெற்றியில் வைக்க நோய் தாக்கமே இருக்காது.
    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பரிகாரங்கள் செய்தால் நவக்கிரகங்களின் தோஷம், திருமண தடைகள் அகலும்.
    சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது. அத்துடன் அன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.

    நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிரகங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.

    ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிட்டும். பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.

    பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித் தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.

    கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது? என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.
    கண் பார்வையால் ஏற்படும் தோஷத்தை ‘திருஷ்டி’ என்பார்கள். ‘திருஷ்டி’ என்பதற்கு ‘பார்வை’ என்று பொருள். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.

    பார்வையை, சுப பார்வை, அசுப பார்வை என வகைப்படுத்தலாம். சித்தர்கள், ஞானிகள், ஆன்மிகவாதிகளின் பார்வை பலம் நிறைந்தது. அவர்களின் பார்வை படுபவர்களுக்கு சுப பலன் கிடைக்கும். சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. அதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும்.

    கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது? என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.

    * ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.

    * லக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும்.

    * லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு.

    * லக்னாதிபதி 8-ல் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து, அல்லது உயிர் பயம் இருந்து கொண்டே இருக்கும்.

    * லக்னத்திற்கு 2, 12-ல் மாந்தி, சனி, ராகு-கேதுக்கள் இருப்பின், அவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.
    உடல்ரீதியாக குறைபாடு அடைந்த நபர்கள் கவலை கொள்ளாமல் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து சில எளிய பரிகார வழிபட்டு முறைகளை செய்தால் சீக்கிரம் சிறந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்.
    இக்காலத்தில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சரியான வரன் பார்த்து திருமணம் செய்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதிலும் உடலில் குறைபாடு அடைந்த நபர்களும், அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் அடையும் வேதனை வெளியில் சொல்ல முடியாதது. இப்படிப்பட்ட நபர்களும் வெகு விரைவில் இல்லற வாழ்க்கை அமைய பெறுவதற்கான பரிகாரங்களை பார்க்கலாம்..

    தற்காலத்தில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நிலை காரணமாக திருமண வயது வந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த காலங்கடந்தே திருமணம் செய்கின்றனர். மேலும் பலருக்கு காலங்கடந்தே பொருளாதார காரணங்களால் சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தாமதமாகிறது. இதில் பிறவியிலேயோ அல்லது விபத்திலேயோ உடல் குறைபாடு அடைந்த மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்கள் கல்வி, பொருளாதார தகுதி போன்றவை இருந்தும் பலர் திருமணம் ஆகாமலே வாழும் பரிதாப நிலை பரவலாக காணப்படுகிறது.

    இப்படி உடல்ரீதியாக குறைபாடு அடைந்த நபர்கள் கவலை கொள்ளாமல் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து சில எளிய பரிகார வழிபட்டு முறைகளை செய்தால் சீக்கிரம் சிறந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். மாற்றுத்திறனாளி திருமணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் 9 சனிக்கிழமைகள் சனீஸ்வரர் சந்நிதியில் கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, உங்களின் திருமண தடை நீங்க வேண்டும் என மனதார நினைத்து சனி பகவானை வழிபட்டு வர திருமண வரன் சீக்கிரம் அமையும் வாய்ப்பை சனி பகவான் வழங்குவார்.

    வாரத்தின் எந்த ஒரு கிழமையிலும் எம கண்ட நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று, சிவனை வழிபட்டு சிவனின் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள கொடிமரத்தை வணங்க வேண்டும், பிறகு சிவபெருமானுக்கு எதிராக அமர்திருக்கும் நந்தி பகவானின் வாலை தொட்டவாறு ” “ஓம் நமசிவாய நமக” என்று 9 முறை சொல்ல வேண்டும். பின்பு நந்தியின் காதில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என 9 முறை கூறி வணங்க வேண்டும்.

    மேற்கண்ட முறையில் தொடர்ந்து ஒன்பது கிழமைகள் அன்று எமகண்ட நேரத்தில் வழிபடும் நபர்களுக்கு 90 நாட்கள் காலத்திற்குள் திருமணம் வரன் அமைந்து, திருமணம் இனிதே நடக்கும். 
    பழைய ராமேசுவரம் கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும்.
    திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம். இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இக்கோவில் ராமேசுவரம் கோவிலுக்கு முந்தைய கோவில் என்பதால் ‘பழைய ராமேசுவரம்’ என்று அழைக்கப்படுகிறது.

    ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் ஏராளமானவர்கள் இங்கு வந்து ஜடாயுத்துறையில் தர்ப்பணம் கொடுத்துவிட்டு, இத்தல இறைவனையும் வழிபடுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள கல் விளக்கில் இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் கலந்து ஊற்றி விளக்கு ஏற்றினால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் புனித நீராடிவிட்டு ராமலிங்க சுவாமியையும், பிண்ட ராமரையும் வழிபட்டால், நமது குடும்பத்தில் உள்ள 27 தலைமுறையினர் செய்த பாவங்களும், தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பித்ரு தோஷம் உள்ளவர்கள் இந்த ஜடாயுத்துறைக்கு வந்து தர்ப்பணம் கொடுத்து சுவாமியை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் அடையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கும், ராமருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ராமநாதபுரம் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் கோவிலில் திருமண தடை, கால சர்ப்ப தோஷத்திற்கு பிரார்த்தனைகள், பரிகாரங்கள் நடைபெறுகிறது.
    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் மாறந்தை என்னும் கிராமத்தில் ஆதி லட்சுமி வராகப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் முக்கியமான 2 பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.

    ஒன்று காலசர்ப்ப தோஷம் நிவர்த்தி, மற்றொன்று திருமணம் கைகூட பெருமாள் மற்றும் தாயாருக்கு மாலை சமர்ப்பித்தல். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டி தோஷ நிவர்த்தியடைகின்றனர். திருமணம் கைகூட வேண்டுபவர்கள், இரண்டு மாலைகளுடன் திருக்கோவிலுக்கு வர வேண்டும்.

    அந்த மாலைகள் பெருமாள் மற்றும் தாயாரிடம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்து ஒரு மாலையைத் திருப்பித் தரப்படும். அதை பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும். இந்த பிரார்த் தனையை தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் மேற்கொள்ள வேண்டும். முடிவில் ஆனந்தமான செய்தி உங்களை வந்தடையும்.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்- சாயல்குடி இடையில் கடலாடி அமைந்துள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்கினால் சனியின் தாக்கம் குறையும்.
    ஆஞ்சநேயரை தரிசித்து வந்தால் கஷ்டங்கள் வராது. ஏழரைச்சனி திசை நடப்பவர்கள் ஆஞ்சநேயரின் பாதத்தை தொட்டு வணங்கினால் சனியின் தாக்கம் குறையும். ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு ஏற்றலாம்.

    வடைமாலை அணிவிக்கலாம். செந்தூரக்காப்பு அணிவிக்கலாம். வெண்ணை காப்பு சாத்தலாம். வெற்றிலை மாலை அணிவிக்கலாம். ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதி ஸ்ரீரா நாம மாலை அணிவிக்கலாம். இவற்றால் நன்மைகள் பல கிடைக்கும்.

    மாணவ- மாணவிகள், பெண்கள் ஆகியோர் ஸ்ரீராமஜெயம் அல்லது ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று 108முறை எழுதி அதை மாலையாக தொடுத்து ஆஞ்சநேயருக்கு அணிவிப்பார்கள்.
    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.
    தமிழகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில். நகரின் மையத்தில் அமைந்த மலைக்கோட்டைக்கு மேற்கே நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது.

    இந்த கோவில் இங்குள்ள ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார். 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்டவெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    அருள்மிகு நரசிம்மர் -நாமகிரி தாயார் கோயில் நாமக்கல் மலையின் (மலைக்கோட்டை) மேற்கு புறம் உள்ளது. கணிதமேதை ராமானுஜர் நாமகிரி தாயாரின் பக்தர். நரசிம்மரின் சிலை மலையை குடைந்து வடிக்கப்பட்டுள்ளது. நாமகிரி தாயாரின் கோயில் மலையை குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது.

    இது ஓரு குடைவரை கோயில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. புகழ்மிக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், நரசிம்மர் நாமகிரி தாயார் கோயிலுக்கு நேர் எதிரே உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. உயர்ந்த ஆஞ்சநேயர் சிலைகளுள் இச்சிலையும் ஒன்று.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, சந்தன காப்பு, வெண்ணை காப்பு, வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள் இங்கு சிறப்பு. புதிதாக வாகனங்கள் வாங்கும் போதும், மக்கள் வெளி ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போதும் வாகனங்களுடன் வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு புறப்படுவது வழக்கம்.

    இங்கு உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீர பலம், கீர்த்தி, அஞ்சாமை, பயமின்மை, நோயின்மை, தளர்ச்சி இன்மை, வாக்கு சாதுர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும். நவக்கிரக தோஷங்கள் நீங்குகின்றன. தவிர கடன் தொல்லைகள், விரோதிகள் தொல்லைகள் நீங்குகின்றன. நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டால் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைகின்றன.

    நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    நாமக்கல் மலைக் கோட்டையின் கிழக்கு புறம் அருள் மிகு அரங்கநாதன் கோயில் உள்ளது. இங்கு திருவரங்கன், 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடன் மீது படுத்தவாறு பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இது ஒரு குடைவரை கோயில். இது பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயமாகும். 
    ×